ஒட்டகத்தை கட்டிப்போடு

சென்னை சென்றிருந்தபோது , என்னிடம் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் நலம் விசாரித்த அறுபது வயது பெண் , தமிழச்சிதான் என தெரிந்து அதிர்ந்துதான் போனேன் . தமிழரிடையே ஆங்கிலத்தில் பேசினால் காரியமும் எளிதாகும் மரியாதையும் கிடைக்கும் என்பதும் சில அனுபவங்களில் தெரிந்தது . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ளோம் . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ள நாம் ஏன் ஹிந்தி ஒட்டகத்தை தொழுவத்திலிருந்தே விரட்டி விட்டோம்? குதிரையோ ஒட்டகமோ அதற்குரிய இடம் தொழுவம்தானே . ஒட்டகத்தை கூடாரத்திற்குள் விடுபவனும் மூடன் . குதிரையை கூடாரத்திற்குள் வைத்துள்ளோம் என்றெண்ணி , ஒட்டகத்தை கலாயத்தில் கட்டாமல் விரட்டிவிட்டு , பாலைவன பயணத்தை வெறுப்பவனும் மூடனே .
தமிழ் பேசினால் கௌரவம் என்ற மனநிலை தமிழனுக்கு இருந்தால் அவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தமிழுக்கு அழிவில்லை. தமிழ் பேச கூச்சப்படுபவனுக்கு , ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியவேண்டியதில்லை சைகை மொழியே போதும், தமிழை அழிக்க. விரட்ட வேண்டியது ஹிந்தியையோ ஆங்கிலத்தையோ இல்லை, தமிழரின் மனநிலையைத்தான் .
வட இந்தியர் தமிழ் கற்காத போது நாம் ஹிந்தி கற்பது 'இளிச்சவாய்த்தனம்' என்பது , மொழியை ஊடகமாக பார்க்காமல் , மரியாதையை அதனுடன் இணைத்து பார்க்கும் போக்குதான். அவர்கள் தமிழ் கற்காமல் இருப்பது அவர்கள் இழப்புதான் . அதனால் அவர்கள் சில வாய்ப்புகளை இழக்கிறார்கள் . அதனால் நானும் சில வாய்ப்புகளை இழப்பேன் என்பது புத்திசாலித்தனம் இல்லையே . விரும்புகிறோமோ இல்லையோ ஹிந்தி பெரும்பான்மையான மாநிலங்களில் புரியப்படும் மொழியாக உள்ளது . அதனால் தான் அதை கற்பது தெலுங்கு , கொரிய மொழிகளை படிப்பதை விட புத்திசாலித்தனம் .
நான் ஹிந்தி வழி கல்வியை ஆதரிக்கவில்லை. அறிவியலை , வரலாறை நாம் நம் தமிழிலே கற்கலாம் .. அல்ல .. கற்கத்தான் வேண்டும் . ஹிந்தியை அதற்குரிய இடத்தில் முன்றாவது மொழியாக வைப்பதில் தவறில்லையே .ஹிந்தியை மூன்றாம் மொழியாக உள்ள கர்னாடக்கத்திலோ கேரளாவிலோ மொழிகள் அழிந்தாவிட்டது? அங்கே இலக்கியம் வளரவில்லையா? ஹிந்தி மட்டுமே நம் வளர்ச்சிக்கு தேவை என்று நான் சொல்லவில்லை . நம்முடைய திறமைகளால் இமயம் அளவு நாம் முன்னேறியிருந்தாலும் , ஹிந்தியும் தெரிந்திருந்தால் ஒரு இன்ச் அளவு அதிகமாக நாம் முன்னேறியிருப்போமே?
எனக்கு ஆயிரம் வழிகள் உள்ளது என அந்த ஆயிரம் வழிகளில் ஒன்றில் நுழைந்த அதிர்ஷ்டசாலிகளே , நான் பேசுவது அடுத்த ஆயிரத்தி ஒன்றாவது வழி பற்றி . நம்மை போல ஆயிரத்தில் ஒரு வழியில்கூட நுழைய முடியாதவனுக்காக , ஆயிரத்தியோராவது வழிக்காக , படித்தால் நஷ்டமில்லாத, அந்த ஹிந்தியை படித்தால் என்ன.?. நம்மவர்க்குத்தானே ‘ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடும்’ சிந்தனை இருந்தது .

நமக்கு தலைவனுக்கும் நடிகனுக்கும் வித்தியாசமும் தெரியவில்லை .மதத்திற்கும் மடத்திற்குமுள்ள வித்தியாசமும் தெரியவில்லை . மொழிக்கும் மரியாதைக்கும் சம்பதந்தமில்லை என்பதும் தெரியவில்லை .
நம்மை சுய இன்பத்தில் திலைக்க விட்டுவிட்டு ‘அவர்கள்’ போகிற பாதையை பார்த்தும் நாம் உணரவில்லையே?

முடியுமா முடியாதா ? (சிங்லீஷ் ..)

நாம் புது இடத்திற்கு வரும்போது , புதிய மொழி மற்றும் வட்டார வழக்கு மொழியினாலும் நாம் படும் மற்றும் படுத்தும் அவஸ்தைகளை நினைப்பதே ஒரு சுகம்தான் . சிங்கப்பூரில் உள்ள வட்டார வழக்கு ஆங்கிலம்- சிங்லிஷ்

நான் வந்த புதிதில் , என் சூபர்வைசர் 'Add a row' என்று கூற நான் ஒரு 'Table row' வை சேர்த்தேன் . அவர் டெண்ஷனாகி 'No I want to add a row' .. அதை தானே நான் செய்துள்ளேன் ...அவர் திருப்பி திருப்பி அதையே சொல்ல நான் புரியாமல் விழிக்க, நொந்தவராக, 'row – R O L E ' என கூற.. அப்பாடா ..

'Can' என்ற ஒரு சொல்லுக்கு Do you understand? ' , 'Can you do this?' ,'Is it enough?', 'Are you Ok?' 'Is it OK?'… என பல அர்த்தங்கள் இங்கு உண்டு . "can or canno(t)?' இந்த வார்த்தையைக் கேட்காமல் சிங்கப்பூரில் ஒருநாள் கூட இருக்கமுடியாது . 'Can also can . Cannot also can' என்ற சொற்றொடரையும் அடிக்கடி கேட்கலாம் .ஒருமுறை , புதிதாக திருமணமாகி வந்தநண்பரின் மனைவி தேங்காய் தூள் வாங்கும்போது , கடைகாரர் 'இது போதுமா?' என்ற அர்த்தத்தில் "Can?' என , நண்பரின் மனைவி , 'டப்பா'(Can-Container) என புரிந்து கொன்டு 'கேனில் வேண்டாம் . பாக்கெட்டில் தாருங்கள்' என சொல்ல அங்கு ஒரே கன்ஃப்யூஷன் , நாங்கள் இடையில் புகுந்து அவர் பாஷையில் 'Ca..n' என சொல்லவும்தான் அவர் அடங்கினார் .

சீன நண்பர் '10 மணிக்கு ஆஃபிஸ் வந்துவிடுவேன்' என்பதற்கு கூறியது "I come to office 10'oclock (al)ready" .

ஒரு பங்களா(Bangladeshi) ஊழியர் 'கடுமையான வெயிலாய் உள்ளது' என்பதற்கு கூறியது "many many sun coming ' .

நானும் மற்றவர்கள் அவரவர் மொழியில் வலைப்பூக்கள் எழுத என்னாலான உதவியை
செய்துள்ளேன். மலையாளி நண்பர்களிடம் அவர்கள் மாதிரி ஆங்கிலம் -கோஃபி , சோ(saw) - பேச முயன்று நான் சொன்னது 'ஐ சோ ஹிம் இன் த கோர்டன்' - (I saw him in the garden).

ஒரு தெலுங்கு நண்பன் "What did you bring for lunch?' என கேட்க நான் சொன்னது 'Rice and garbage' ..சொல்ல நினைத்தது 'rice and cabbage' .

டெல்லியில் , என்னுடைய கிழிந்த சட்டையை தைக்க டெய்லரிடம் செல்லும்போது , நான் ஹிந்தி பண்டிட் என நினைத்திருந்த நண்பனை , உதவிக்கு அழைத்து சென்றிருந்தேன் . அவன் டெய்லரிடம் அதே கலர் நூலில் தைக்க அறிவுறுத்தி சொன்னது 'Brown நூல் கரோ' . (கரோ- செய்)


நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது எனக்கு வந்த ஒரு forward mail .

This is funny......even an Englishman could not concoct sentences using numeric, which is exclusive only to Singaporeans .

Lim Ah Lek was asked to make a sentence using 1,2,3,4,5,6,7,8,9 and 10. Not only did he do it 1 to 10, he did it again from 10 back to 1. This is what he came up with......

"1 day I go 2 climb up a 3 outside a house to peep. But couple saw me, so I panic and 4 down. The man rush out and wanted to 5 with me. I run until I fall 6 and throw up. So I go into 7 eleven and grab some 8 to throw at him.Then I took a 9 and try to stab him. 10 God he run away. So, I put the 9 back and pay for the 8 and left 7 eleven. Next day, I call my boss and say I am 6. He said 5, tomorrow also no need to come back 4 work He also ask me to climb a 3 and jump down. I don't understand, I so nice 2 him but I don't know what he 1".

அதுசரி கடைசியாக ஒரு கேள்வி , எத்தனை பேர் என்னைப் போல 'Supervisor' யை
'சூப்ரவைஸர்' என கூறி நாக்கை கடித்துக்கொள்கிறீர்கள் ?

அடையாளம்

பத்தாண்டுகளுக்கு முன்னால் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு நேர்முகத் தேர்வுக்காக போபால் சென்றிருந்தேன் . அந்த நேர்முகத்தேர்வு இரண்டு, மூன்று நாட்களுக்கும் மேல் நடக்க இருப்பதாக தெரிந்தது . இதை தத்தம் வீட்டிற்க்கு தந்தி அனுப்பி தெரியப்படுத்த, நானும் , வந்த இடத்தில் நட்பாகிய தமிழ் நண்பனும் போஸ்ட் ஆஃபிஸ் செல்ல முடிவெடுத்தோம். போஸ்ட் ஆஃபிஸ் எங்கே என ஆங்கிலத்திலும், சைகையிலும் ரோட்டோரம் சென்றவர்களிடம் கேட்டோம் . யாருக்கும் புரியவில்லை . போஸ்ட் ஆஃபிஸ் என்ற ஆங்கிலமே தெரியாதது ஆச்சரியம்தான் . உண்மையிலேயே புரியவில்லையா அல்லது ‘தார்’ அடித்ததற்காக பழி வங்கினார்களா என்றும் தெறியவில்லை.(அண்ணாத்துரையின் , பெரிய துளையான ஆங்கிலத்தால் இந்த சிறு பூனைக்கு அங்கு ஒரு பயனுமில்லை) . சோர்வோடு நாங்கள் நடக்கையில் , கொஞ்ச தூரத்தில் ஒரு சினிமா போஸ்டர் ஒட்டியிருந்தது தெரிந்தது . நாங்கள் ஒரு முடிவோடு, மகிழ்ச்சியாக, வேகமாக சென்று பார்த்தோம் . ஆம்.. அது தமிழர் பகுதிதான் ....

காவிரி காமெடி

ஒரு ஃப்ளாஷ் பேக் .. கபிணி அணைகட்டுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு ஒருபுறம். …ஜே ஜே உண்ணாவிரதம் இருந்து ‘காவிரி கொண்ட கலைத்தாய்’ என்ற பட்டம் வாங்கியதும், வாழப்பாடி ராஜிநாமா செய்து அம்மாவின் அருளாசி பெற்ற கூத்துக்கள் என அரசியல்வாதிகள் கூத்துக்கள் ஒருபுறம் இருக்க .. இரு வருடங்கள் முன்னால் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என சினிமாக்காரர்கள் பண்ணிய கூத்து இருக்கே..(அது சரி .. சினிமாவையும் தமிழக அரசியலையும் பிரிக்க முடியுமா என்ன?)
கன்னட நடிகர்கள் தமிழ் படங்கள் பெங்கலூரில் ஓடுகிற வெறுப்பில் , ராஜ்குமார் ( பாபா படம் மட்டும் ரிலீஸ் பண்ண ரஜினி இவர் காலில் விழுந்தது கவனத்துக்கு உரியது) தலைமையில் ஊர்வலம் போனதில் ஆரம்பித்த காமெடி , தமிழக சினிமாக்காரர்களால் (அரசியல்வாதிகளின் இயக்கத்தில்) , இனிதே நடந்து , காவிரி பிரச்சினையே , அதில் மறைந்து போய் விட்டது .
முதலில் , கன்னட நடிகர்கள் தமிழ் படங்களை எதிப்பதால் வந்த வெறுப்பினாலும் , தமிழ் சமுதாயம் கேள்வி (தமிழ் சமுதாயம் தீர்வுகளை சினிமாக்காரர்களிடமே கேட்டு பழகி போய்விட்டது ) கேட்குமே என்றுதான் நெய்வேலி போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் . ரஜினி, கர்நாடகத்திலுள்ள தன் சொத்துகளுக்கு ஆபத்து வரும் என்ற பயத்தினாலோ , பாபா படத்திற்க்கு பங்கம் வரும் என்ற எண்ணத்தினாலோ அல்லது உண்மையான சகோதர பாசத்தினாலோ இதை எதிர்க்க இந்த காமெடியில் சூடு பிடித்துவிட்டது .
ரஜினியை ‘தமிழின துரோகி ‘ என கூறி ஓரம் கட்டலாம் என்ற அம்மாவின் ப்ளான் ஒர்க்-அவுட் ஆக நெய்வேலி போராட்டம் – கமல் சிம்ரன் காதல், ராஜேந்தர் கொதிப்பு , விஜய்க்காந்தின் கூட்டம் சேர்ப்பு, அதனால் சரத்தின் கொதிப்பு, ஸன் - ஜே ஜே டீவீக்கள் சண்டை , பாரதிராஜாவின் ‘க(த)ன்னி ‘ பேச்சு என, தமிழ் சினிமாவில்கூட காண கிடைக்காத சுவாரஷ்யமான மசாலாக்களோடு - முடிந்தது . ரஜினி அவுட்…ரஜினி ரசிகர்கள் ரஜினி கொடும்பாவி எரிப்பதாக செய்தி ..இமேஜ் போய் விட்டதாக ஒரு மாயை. என்ன செய்வது ? இமேஜையும் காப்பாற்ற வேண்டும் , சகோதரர்கள் மற்றும் ராஜ்குமாரிடம் கெட்ட பெயரும் வாங்க கூடாது .. என்ன செய்யலாம்? உண்ணாவிரதம் இரு ..கூட்டம் சேர்..பிரச்சினையை திசை திருப்பு .. நடக்கவே நடக்காத, நடந்தாலும் , இப்போ பசியை தீர்க்க உதவாத நதி இணைப்பை பேசு .. அதற்கு ஒரு கோடி என சொல்லி நல்ல பேர் வாங்கு ..என அந்த உண்ணாவிரத கூத்தும் முடிந்தது .
இதற்கிடையில் நதிநீர் இணைப்புக்காக ரஜினி டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று ஏதோ ‘கங்கை கொண்டான்’ , ‘கடாரம் கொண்டான்’ என்ற ரீதியில் பேசப்பட்டு , ஆனால் அவர் இமயமலை சென்று திரும்பும்போது , 30 வருஷ தன் பேரான ‘ரஜினி’ யை மறந்து ‘இந்த விஜயகாந்த் நினைத்தால் ..’ என்று பன்ச் டயலாக் விட்டது தனி காமெடி ட்ராக் .
ஒன்றரை ஆண்டுகள் கழிந்து , தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ‘அவுட்கோயிங்’ பிரதமரிடம் பேசியதோடு , ராமதாஸ் , சந்திரமுகி , பொண்ணு கல்யாணம் என்று போய்விட்டார் . அரசியல்வாதிகள் வழக்கம் போல அடுத்த தேர்தல் மற்றும் சண்டைகளில் இறந்கி விட்டார்கள் , பத்திரிக்கைகள் ஜெயலெக்ஷ்மி , செரீனா என்று அடுத்த ஸ்கூப் தேடி போய்விட்டன .. நாமும் நல்ல ஒரு காமெடி பார்த்த திருப்தியில் சங்கராச்சியார் ஷோ பார்த்து கொண்டிருக்கிறோம் .
இந்த போட்டியில் ஜே ஜே ஜெயித்தாரா? கருணாநிதி ஜெயித்தாரா ? ரஜினி ஜெயித்தாரா ? பாரதிராஜா , விஜயகாந்த் ஜெயித்தார்களா? அல்லது கன்னட சினிமா கூட்டம் ஜெயித்ததா? என உறுதியாக சொல்ல முடியாது . ஒன்று மட்டும் உறுதி .. ஜெயித்தது விவசாயிகள் அல்ல.. நடந்ததும் காவிரி போராட்டம் அல்ல.

இராஜேந்திர சோழன்

அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராஜேந்திர சோழன்.

இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்க்கு வெளியே வென்று , கடல் கட்ந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராஜேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .

கடாரம் - மலேயா , சுமத்ரா, ஜாவா , போர்னியோ , பிலிப்பைன்ஸ் , பார்மோஸா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது . 3000 KM க்கும் மேல் இப்படியொரு படையெடுப்பு மனித வரலாற்றில் நடந்ததாக தெரியவில்லை .ஜூலியஸ் சீஸர் , அலெக்ஸான்டர் , தாமூர் , செங்கிஸ்கான் போன்றோர் தரை வழியாகாவோ அல்லது நதிகளை தாண்டியோதான் படையெடுத்தனர் .

ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராஜேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .

கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை இராஜேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .

இதை மெய்க்கீர்த்தி,

" அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,
ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .."

என குறிப்பிடுக்கிறது .

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராஜேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை . கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்காத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான் .


நன்றி .(இதயம் - 1/6/1999 )தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் - முனைவர் .இ.ஜே. சுந்தர் .


பின்குறிப்பு :

'தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன்' என்ற புத்தகத்தை படித்தவுடன் , இந்த வரலாற்று செய்திகளை, உலகிற்கு ...அல்ல..அல்ல.. இந்தியாவிற்கு... அல்ல.. தமிழகத்து தமிழர்க்கு கூட தெரியப்படுத்த இந்த தமிழ் காப்பார்கள் ஒரு அடி கூட எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் copyright -ட்டைக் கூடப் பற்றி கவலைப்ப்டாமல் (ஆசிரியர் மன்னிக்கவும்) எழுதியது. இதில் ஏதேனும் குறை இருந்தால் சுருங்க சொல்லுகிறேன் பேர்வழி என்று நான் சுருக்கியதில் உள்ள குறையாக இருக்கும் .

தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் ?- ஒவ்வொரு சாமான்யத் தமிழனும் படிக்கவேண்டிய புத்தகம் ..





ராமதாசுக்கு ஒரு ஸ்கோப் .

சூப்பர் ஸ்டார் , மெகா ஸ்டார் , கேப்டன் என்னும் பட்ட பெயர்களை தமிழில் (சூப்பர்க்கு தமிழ் இன்னாபா?) மாற்ற போராடி தமிழை காக்கலாம்

கமலுக்கு ஒரு Suggestion

உங்கள் அடுத்த படத்துக்கு ‘திரு . ராமகிருஷ்ண லீலை‘ என பேர் வைக்கலாம் .

நிறைவேறுமா?

தமிழர்கள் திறமையானவர்கள் , படிப்பாளிகள் , தன்முனைப்பு கொண்டோர் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை . ஆனால் நாம் ‘அரசியல் முட்டாள்கள்’ என்ற வருத்தமும் உள்ளது . படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? எதிர்கால முதல்வர்களாக எதிர்பார்க்கபடுவோரும் ரஜினி , விஜய்காந்த் என்று சினிமாக்காரர்கள் கூட்டமாக உள்ளது ஏன்? சினிமா முதல்வர்களிடமிருந்தும் ஜாதி கட்சி தலைவர்களிடமிருந்தும் நாம் எப்போது நம்மை விடுதலை ஆக்கி கொள்வோம் ? நாம் ‘பொறாமை’ கொள்ளக்கூடிய அளவுக்கு சினிமா ஆசை கொண்ட நம் சகோதரர்கள் தெலுகர் கூட என்.டி.ஆரோடு சினிமா முதல்வர்களை முடித்துக்கொண்டுள்ளனர் .
எனக்கு ஒரு கனவு உண்டு . நான் ஒரு நாளாவது நாம் தேர்ந்தெடுத்த சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு முதல்வரால் ஆளப்பட வேண்டும் . நடக்குமா ?

தமிழும் திருமாவளவனும்

தமிழ் வளர திருமா தமிழில் கணிணி மென்பொருள், தமிழ் OS , தமிழ் SMS செய்ய என்ன செய்வது என்று பேசினால் பாராட்டலாம். அவர் என்றைக்காவது அந்த முயற்சி செய்வோரை பாராட்டியது உண்டா? முயற்சி செய்வோரின் பெயர் தெரியுமா அவர்க்கு ?தமிழ் வளர்க்க இந்த முறை உள்ளது என்றாவது தெரியுமா?

தமிழை theater- ல் மட்டும் தேடுவது தமிழனுக்கு வெட்கம் . ஏன் நாம் முதல்வர்களையும் , தமிழையும் Theater-ல் தேடுகிறோம்.

அது சரி. ஏன் உங்கள் திருமா. Sun TV பேர் மாற்ற சொல்லவில்லை . Sun என்ன தமிழா?

http://www.vikatan.com/av/2005/feb/13022005/av0102.asp

'தமிழில் பேசுங்கள் ... சினிமா தலைப்புகளை நாங்கள் மாற்றச் சொல்வதையும் ஏதோ பப்ளிசிட்டி ஸ்டண்ட் போல ...' . இது தமிழ் காவலர் திருமா பேசிய வசனங்கள். ...Cinema , Publicity , Stunt இவை தமிழ் இல்லை என யாராவது அவரிடம் சொல்லுங்கள் ..


G K Mani ஜே ஜே விடம் வாங்கிய அடிகள் போதுமா?

தமிழை வளர்க்கும் முறைகள் ..

1)ஹிந்திக்கு தார் ஊற்றினால் தமிழ் தானே வளறும் .

2)தமிழ் வளர்த்தது , வளர்ப்பது சினிமாக்காரன் மட்டுமே என்று நம்ப வேண்டும் .

3)தமிழர்கள் =(தொண்டர்கள்+ ரசிகர்கள்) ‘தமில் வாள்க’..’அலிவது நாமாகிலும் வாள்வது தமிலாகட்டும்’ என்று கத்தினால் தமிழ் வளரும் .

4) அச்சு பிச்சு என்று கட்சி பத்திரிக்கையில் கவிதை எழுதுகிறவனுக்கு ‘முத்தமிழ் காவலன்’..என பட்டம் கொடுக்க வேண்டும் .

5) ‘தமிழர் வாழ…..’ ஐயோ நினைத்தாலே தமிழ் அழிந்துவிடும் . எனவே ‘தமிழர் முன்னேற்றம்’ என்ற கெட்ட வார்த்தை மட்டும் கனவிலும் நினைக்க கூடாது .

பின் குறிப்பு ; தமிழ் வளர்ப்பவன் தன் பிள்ளைக்கும் , பேரனுக்கும் – ஹிந்தி சொல்லி கொடுக்க வேன்டும்.. அப்படியென்றால்தான் அவன் டெல்லியில் மந்திரி ஆகும் போது முக்கிய இடம் கொடுக்க முடியும் .. மற்றும் தமிழ் வளர்ப்பவன் தன்னோட கம்பனிக்கு இங்கிலிஷ்-லதான் பேர் வைக்கனும் … சன் , மிஷன் மாதிரி ….

தொடங்குகிறேன்...

இது எனது முதல் போஸ்ட் . எனது எண்ணங்களையும் , கோபங்களையும் எழுத நினைக்கிறேன் . இது எனது கையாலகத்தினாலா என்னவோ? இந்த எண்ணங்கள் தொடரும் என எண்ணுகிறேன் .. விரும்புகிறேன் ..