கோயாபல்'சோ'வும் காந்துகளும்

துக்ளக்கில் பலமுறை படித்திருந்ததினால் வி.காந்தின் , முதல்வர் கருணாநிதி மேலான 'பாவாடை நாடா' குற்றச்சாட்டின் மேல் ஒரு அதிர்ச்சியும் இல்லை. இது தெரிந்ததுதானே என்றுதான் தோன்றியது. ஆனால் அதற்கு பிந்தைய வக்கீல் நோட்டிஸ்களும், வி.காந்த் தரப்பிலிருந்து வந்த மலுப்பல்களை பார்த்தபிறகு , கருணாநிதி மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை கோயபல்'சோ' செய்து வந்திருக்கிறார் என புரிந்தது .துக்ளக் படித்துவிட்டு உளறிய வி.காந்த் பாவம் ..


அடுத்து கருணாநிதி ஜோஸ்யம் பார்ப்பார் என யாரோ மேடையில் சொன்னதாகவும் அதற்கு கருணாநிதி மறுப்பு சொல்லவில்லை எனவும் துக்ளக்கில் , அடுத்தடுத்த வாரங்களில் வந்த செய்தி / கிண்டல் . தலைவர் ஜோஸ்யம் பார்ப்பார் என கூறியது விழாத்தலைவர் பற்றி எனவும் , அதை அதே மேடையில் அந்த தலைவர் மறுத்துள்ளார் எனவும் ஒரு செய்தி . தலைவர் என குறித்தது கருணாநிதியைத்தான் என நினைப்பது இயல்பு ஆனாலும் அதே மேடையில் அதற்கான விளக்கத்தை அறிந்த பின்பும் அதை செய்தியாக்குவது என்ன வகை நியாயம் ?

ர.காந்த் முதல்வரானால் தமிழ்நாடு குஜராத் ஆகுமாம் . தமிழ்நாட்டின் மேல் என்ன வெறுப்போ இவருக்கு ? பாஜகா, ர.காவின் ஆன்மீக முகமூடியுடன் தமிழ்நாட்டில் நுழைய எத்தளிப்பது புரிகிறது . ;) மோடிதான் சிறந்த நிர்வாகியாம் .குஜராத் கொலைகளுக்கு மோடி குற்றவாளி இல்லை என கொண்டாலும் ,பலநூறு கொலைகளை தடுக்கமுடியாதவர் எவ்வாறு நல்ல நிர்வாகியாக முடியும் ?

கீழே உள்ளதை படித்துவிட்டு வாய்வழியாகவாவது சிரித்து ...விடுங்கள்

16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..

கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீக்ஷிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள் .

அதே பத்திரைகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை . பிறகு ஏன் பிரச்சினை?

,

8 comments:

said...

'ரஜினி'ஐ 'ஹீரோ' போல காட்டியது சினிமாக்காரன் என்றால், அவனை ஜோக்கராக்குவது இந்த 'சோ'தான். இதனை தொடர்ந்து செய்துவருகிறான் அவன். ரஜினிக்குப் பிறகு சினிமாவில் அடியெடுத்து வைத்த 'நேற்று மொளச்ச காளான்'கள் எல்லாம் (அதான் கருப்பு எம்.ஜி.ஆரும்?!, சமத்துவ நாயகனும்?! தான்) நாளைய முதல்வராக!! முயற்சிக்கையில் ரஜினியைத் தூக்கிப்பிடித்தால் ஈசியாக போனியாகலாம் என்பது 'சோ'வின் கணக்கு.


பல நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களால் அடிமைப்பட்டுக்கிடந்த நமது தமிழக பிழைப்புவாதிக‌ளெல்லாம் தந்தை.பெரியாரால் கொஞ்சம் சொரனை ஏற்றப்பட்டு சுயமரியாதையுள்ள மனிதனாக மாறினான். அதனால் கிடைத்த அற்ப வாழ்வின் மூலம் மேல்நிலையாக்கமடைந்ததினால் மீண்டும் பார்ப்பன அடிமைத்தொழில் செய்யத் தொடங்கிவிட்டான். அவர்களில் பெரும்பாலனவர்கள் தான் இன்று ஆர்.எஸ்.எஸ்.க்கு அடியாள்வேலைக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அந்தகூட்டத்தைச் சேர்ந்த அடிமைகள் தான் இந்த ரஜினி,விஜயகாந்த்,சரத்குமார் போன்ற அரசியல் காமெடியன்களும்.



///மோடிதான் சிறந்த நிர்வாகியாம் .குஜராத் கொலைகளுக்கு மோடி குற்றவாளி இல்லை என கொண்டாலும் ,பலநூறு கொலைகளை தடுக்கமுடியாதவர் எவ்வாறு நல்ல நிர்வாகியாக முடியும் ?///


இது உங்க‌ளுடைய‌ க‌ருத்தாக‌ இருக்குமானால் 'TEHELKA' என்ற‌ ஆங்கில‌ புல‌ணாய்வு இத‌ழ் வெளியிட்டுள்ள‌ செய்திக‌ளைச் ச‌ற்று பாருங்க‌ள், மேற்க‌ண்ட‌ குஜ‌ராத்தின் அனைத்து ச‌ம்ப‌வ‌ங்க‌ளுமே 'மோடி'யின் நேர‌டி க‌ண்கானிப்பிலேயே நடைபெற்றுள்ளது ப‌ல‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் விவ‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவர்கள், குஜ‌ராத்தை 'இந்து ராச்சிய‌மாக‌' மாற்றுவ‌த‌ற்கு முன்னாலேயே உச்ச‌நீதிம‌ன்ற‌த்தை இந்துத்துவ‌ கூடார‌மாக‌ மாற்றிவிட்ட‌ன‌ர். அத‌னால் தான் இவ்வ‌ள‌வு ஆதார‌ங்க‌ள் கிடைத்த‌பின்னும் அந்த‌ 'பேடி' இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டாம‌ல் வெளியே திரிகிறான் சுத‌ந்திர‌மாக‌.


தமிழ்நாடு குஜராத்தாக ஆவதெல்லாம் இருக்கட்டும், இப்பத்தான் தமிழ்நாடு, தமிழ்நாடாவே ஆகத் தொடங்கியிருக்கிறது. இப்போது சிதம்பரத்தில் தெரிவது தான் உண்மையான தமிழ்நாட்டின் முகம். இது மேலும் பரவி தமிழகமெங்கும் பல அதிர்வுகளைக் கிளப்பும். அதன் வீச்சில் பார்ப்பனீயம் புதைகுழிக்குள் தள்ளப்பட்டுவிடும். இது உறுதி. தொட‌ர்ந்து ச‌ந்திப்போம்.


(மேலும், குஜ‌ராத் முத‌ல் சித‌ம்ப‌ர‌ம் வ‌ரை அனைத்து த‌க‌வ‌லும் கீழ்க‌ண்ட‌ வ‌ளைத‌ள‌ங்க‌ளில் தொட‌ர்ந்து எழுத‌ப்ப‌ட்டு வ‌ந்துள்ள‌து. http://poar-parai.blogspot.com, http://kedayam.blogspot.com)

said...

//துக்ளக்கில் பலமுறை படித்திருந்ததினால் வி.காந்தின் , முதல்வர் கருணாநிதி மேலான 'பாவாடை நாடா' குற்றச்சாட்டின் மேல் ஒரு அதிர்ச்சியும் இல்லை. இது தெரிந்ததுதானே என்றுதான் தோன்றியது. ஆனால் அதற்கு பிந்தைய வக்கீல் நோட்டிஸ்களும், வி.காந்த் தரப்பிலிருந்து வந்த மலுப்பல்களை பார்த்தபிறகு , கருணாநிதி மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை கோயபல்'சோ' செய்து வந்திருக்கிறார் என புரிந்தது .துக்ளக் படித்துவிட்டு உளறிய வி.காந்த் பாவம் .. //

நல்ல பாயின்ட்தான்!

ஆனால் இதே வக்கீல் நோட்டீஸை ஏன் கலைஞர் சோவிற்கு அனுப்பவில்லை?வாலியின் கலைஞர் குறித்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதாலா?இல்லை வேறு ஏதாவது அண்டர்கிரவுண்ட் டீலிங்கா?

Anonymous said...

ராஜகோபாலாச்சாரியார் தி.மு.க. ஆட்சி வந்த பின் தமிழ்நாடு தம்மைப் போன்றோர் வாழ்த் தகுதியில்லாத இட்மாகி விட்டது என்று சொன்னார்.உடனே எல்லோரும் எப்போது பயணம் என்று கேட்டவுடன் மூடிக்கொண்டார்.
இப்போது சோமாரி மூட்டை முடிச்சுக்களுடன் மோதிபுரத்துக்குப் போகிறாராம்.எப்போது பயணம்.உங்கள்
பிச்சை பாத்திரத்தில் நாங்கள் போடும் கடைசிக் காசாக உங்கள் அனைவருக்கும் டிக்கட் வாங்கித் தருகிறோம்,போய்த் தொலையுங்கள்.s

Anonymous said...

அனானி, நான் ஏற்கனவே வெளியேறிவிட்டேன்..தருவதாக சொன்ன டிக்கெட் பனத்தை M.O செய்கிறாயா? இப்போது நீ மூடிக்கொள்வாய் என்று எனக்கு தெரியும்.

Anonymous said...

படிப்பதை ஒழுங்காகப் படிக்க வேண்டியதுதானே.
போகப் போவோருக்கு டிக்கட் வாங்கித் தருகிறேன்,மோதியிடம் போய்த்தொலை என்று சொன்னால் நான் முன்பே போய் விட்டேன் என்பதா?
போகப் போகிறவர்களுக்குக் கட்டாயம் டிக்கட் வாங்கித் தருகிறேன்.இந்தப் பதிவாளரோ அவர் சொல்பவரோ நடுவராக இருக்கட்டும்.

said...

தாஸு,
என்ன திடீர்னு வரீங்க, திடீர்னு காணாம போயிடறீங்க ? பிஸியோ ?

குஜராத் கலவரத்தின்போது மோதி உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை (அல்லது அதற்கு துணை போனார்) என்பதை மறுக்க முடியாது. அந்த மோசமான நிகழ்வுக்குப் பின் அவர் சற்று சுதாரித்துக் கொண்டு, (ஊழலற்ற) நல்ல நிர்வாகம் தந்தார் என்பதிலும் உண்மை இருக்கத் தானே செய்கிறது. குஜராத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் மோடியின் பங்கு நிறைய இருக்கிறது.

எனது இந்தப் பதிவை வாசிக்கவும்:
http://balaji_ammu.blogspot.com/2007/11/star3.html

//16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..

கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீக்ஷிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள் .

அதே பத்திரைகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை . பிறகு ஏன் பிரச்சினை?
//
இதுக்கு டோ ண்டு தான் பதில் சொல்லணும் ;-)

Anonymous said...

The reason why karuna sent notice to vijayakanth and not to Cho is reachability.

cho reaches pappara people only whereas vijayakanth?

said...

//16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..

கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீக்ஷிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள் .

அதே பத்திரைகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை . பிறகு ஏன் பிரச்சினை?
//
இதுக்கு டோ ண்டு தான் பதில் சொல்லணும் ;-).\
===
எ.அ.பாலா அவர்கள் வேண்டுகோளின் படி;), இந்த கேள்விடோண்டு அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது .