ராமதாஸ் மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வளவு கேவலமாக சென்றுவிடுவார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை . அதுவும் இலங்கை மண்ணில் .. இது நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது .. தற்போதுதான் என் கவனத்திற்க்கு வந்தது .இன்று தூக்கம் வருமா என்று தெரியவில்லை..
ராமதாஸ் என்னும் பெயரை வீரர்கள் பட்டியலில் பார்த்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி இவ்வாறு ஆகும் என எனக்கு தெரியவில்லை? ஒரு ஈரிலக்க ஒட்டங்கள் எடுத்திருந்தாலும் பரவாயில்லை .. தொடக்க ஆட்டக்காரராக எவ்வளவு நம்பிக்கையுடம் மேற்கிந்திய அணி அவரை அனுப்பியது .. 9 பந்துக்களை சந்தித்து 1 ஓட்டம்தான் எடுக்கமுடிந்ததா அந்த ராமதாஸ் ர்யானுக்கு ..இது கேவலமில்லையா? நம்பிக்கை துரோகம் இல்லையா? எத்தனை கோடி இந்தியர்கள் மற்றும் மேற்கிந்திய சகோதரர்களை
ஏமாற்றியிருக்கிறார் . ஒரு 4 இல்லை.. ஒரு 6 இல்லை.. ரன்னும் ஆக குறைந்து. Strike Rate எல்லோரையும் விட குறைவு ...
R Ramdass b Maharoof 1 9 0 0 11.11
சுட்டி இங்கே ...
பின்னூட்டமிடுகிறவர்க்கு ஒரு டெம்ப்லேட் ..
மருத்துவர் மீதான ஊடக வன்முறையை பற்றி ஏற்கவவே இங்கு கூறியுள்ளேன் ..
அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள் என்று சமீபத்தில் 1958யில் என் நண்பர் ரங்காச்சாரியிடம் கூறினது இப்போது நியாபகம் வந்தது . இது என்ன ஹைப்பர்லிங் என்று தெரியவில்லை .
உங்களை போன்றோரின் ஆதரவினால் சந்திரமுகி இன்று வெற்றிகரமான 112.75-ஆவது நாளை எட்டியுள்ளது ..
ராமதாஸ் செய்த கேவலம்..
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நிறைய மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்திருப்பார்கள் தர்ம அடி போடலாம் என...சே தாசு இப்படி ஏமாத்திட்டிங்களே!
தர்ம அடிக்கு பயந்து ஹி ஹி :-) எல்லாம் போட்டுவிடுகின்றேன்..
:)
Template super!
உங்களை போன்றோரின் ஆதரவினால் சந்திரமுகி இன்று வெற்றிகரமான 113-ஆவது நாளை எட்டியுள்ளது ..
ராமதாசு அவர்கள் செய்த காரியங்களைப் பார்த்தீர்களா? கிரிக்கெட்டில் ரன் எடுக்கவில்லை, பேத்திகளைத் தமிழ் பள்ளியில் சேர்க்கவில்லை, பிரஸ்டீஜ் பத்மனாபனை டார்ச்சர் செய்தார். நவாப்பிடம் பணம் வாங்கி ராமர் கோவில் கட்டினார். இன்னும் என்னெல்லாம் செய்ய போகிறாரோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
`
டோண்டு அவர்களே..
//பிரஸ்டீஜ் பத்மனாபனை டார்ச்சர் செய்தார். நவாப்பிடம் பணம் வாங்கி ராமர் கோவில் கட்டினார்//
இந்த ராமதாசுக்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் .. ..
ஞானபீடம்... உங்களை ஒருவர் வலைவீசி தேடுகிறார் .. உங்கள் முத்திரையை(.) அங்கு பதித்துவிட்டீர்களா ??
தாசு அவர்களே,
பிரஸ்டீஜ் பத்மனாபனைத் தெரியாதா? வியட்னாம் வீடு என்று தன் வீட்டிற்கு பெயர் வைத்தாரே? அவரைப் பற்றி சமீபத்தில் 1970-ல் படம் வந்ததே, சிவாஜி கூட நடித்தாரே?
பக்த ராமதாசரை பற்றி கேள்விப் பட்டதில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு:
இப்பின்னூட்டத்தை நான் உங்களுக்கு தனி மின்னஞ்சலிலும் அனுப்பி விட்டேன். ஆகவே இதை மறுபடி என் தனிப்பதிவில் போடப் போவதில்லை.
நீங்கள் கூறுவதும் நியாயமே. பின்னூட்டங்கள் மிகவும் அதிகரித்திருப்பதால் பதிவு திறக்க நேரம் எடுக்கிறது. இன்னொரு பதிவை இதற்காகத் துவங்க எண்ணம் இருக்கிறது.
டோண்டு ராகவன்
பக்த ராமதாசரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ...'வியட்னாம் வீடு' படத்தில் சிவாஜி பெயர் ராமதாஸா ?? நான் பழைய பட்ங்களை அதிகம் பார்த்ததில்லை ..;)
Steps to make flight announcements in Tamil
//ஞானபீடம்... உங்களை ஒருவர் வலைவீசி தேடுகிறார் .. உங்கள் முத்திரையை(.) அங்கு பதித்துவிட்டீர்களா ?? //
அங்கே சென்று முத்திரை பதித்தது மட்டுமல்லாது, அவருடைய layout-ஐ காலி பண்ணும் விதமான ஒரு பின்னூட்டத்தையும் போட்டுவிட்டேன்.
அதற்கும் மேலாக, என் வலைப்பக்கத்தில் ஒரு பதிவும் கூட போட்டு, நானும் இருக்கிறேன் என்று காட்டிவிட்டேன்.
comment posted by
ஞானபீடம்
பிரஸ்டீஜ் பத்மனாபனாக சிவாஜி நடிக்க அவரை டார்ச்சர் செய்பவராக வில்லன் நடிகர் ராமதாஸ் நடித்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
hahahaha SUPER LL DAASU !!
neenga LL daasa illai nakkal DAASA?
How I Missed this!
super kalakkal!
வாங்க வாங்க வீ.எம் மற்றும் 'அசத்தல்' சுரேஷ் (எப்படியெல்லாம் பொய் சொல்லவேண்டியிருக்கு . மார்க்கெட்டிங்கில் இதல்லாம் சகஜம் என்று நினைக்கிறேன். மீனாக்ஸைத்தான் கேட்க வேண்டும்) .
ராமதாஸை திட்டி எழுதிய பதிவை சூப்பர் என சொல்ல என்ன தைரியம் வேண்டும்?.. குழலியிடம் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா? ஆட்டோ ஆட்களே பரவாயில்லை என சொல்லுமளவுக்கு இருக்கும்
அங்கொருத்தர் நயந்தாராவின் நீலப்படம்னு சொல்லி வெறும் நீல நிற சேலை+ரவிக்கையை காட்டுறார், இங்க என்னான்னா, நம்ம ராம்தாஸ் கேவலம்னு கிரிக்கட் வெளையாட்ட பத்தி எழுதறீங்க.
இன்னா எல்லாரும் எங்கிருந்து இப்படி கும்பலா கெளம்பி வந்திருக்கீங்க?
தர்ம அடி போடலாம்னு ஆச ஆசையா மூச்சு எறைக்க ஓடி வந்த என்னை இப்படி ஏமாத்தி பூட்டீங்களே!
நீங்க மட்டும் எங்கையிலே கெடைச்சீங்கன்னா, கந்தல்தான்.
வர்ரேன்!!!!
:-)
Masila ,
This is old post , published in Aug 2005 .. Anyways thanks for your comments
-L-L-D-a-s-u said //Masila ,
This is old post , published in Aug 2005 ..//
ஓஹோ, அப்படியா?
இந்த முறை தப்பிச்சிட்டாரு,
அடுத்த முறை உட்டானே பாருங்க!
Post a Comment