முன்னொரு காலத்துல சொன்ன பச்சோந்தி, நாயி, சிங்கம் , கொரங்கு, நரி,கழுதப்புலி கதைகளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ..கணேசன் பதிவிலயும்,குயிலி பதிவிலயும் ஒரு அனானிமசு நண்பர் நம்மல குப்பயிலே கிடக்கிற மாணிக்கம்னு (LLTrashu) சொன்னதால ஒரேதா புல்லரிச்சுப்போயி அவரு நம்பிக்கைய எப்படிடா காப்பாத்துறதுன்னு ஒரே ரோசனைப்பண்ணி, மூளய கசக்கி , இத எழுதறேன் .
முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வச்சுக்கிச்சாம் . முயல் வேகமா முன்னேறி ஓடிக்கிட்டு இருக்கும்போதே ' நாமதான் ரொம்ப வேகமா ஒடுரமே.. நம்மல எங்கே இந்த ஆமை முந்த போகுதுன்னு நினைச்சுக்கிட்டு, அங்கினக்குள்ளயே படுத்து தூங்கிடுச்சாம் .. மெதுவா ஊர்ந்து போன ஆமை வெற்றிக்கோட்டைத் தாண்டி ஜெயிச்சிருச்சாம் ..
நீதி : நாம எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும் , எடுத்த செயலை முடிக்குமளவுக்கும் தடம் மாறிடக்கூடாது .
முயல் தன்னோட தப்ப உணர்ந்துச்சாம். அது , ஆமைக்கிட்டே போய் இன்னொருதடவை போட்டிக்கு அழைச்சுச்சாம் . இந்த போட்டியில, முயல் ஓட ஆரம்பிச்சு , எல்லைக்கோட்டைத் தாண்டும் வரை வேற சிந்தனையே இல்லாம , ஜெயிக்கனும்கிற குறிக்கோளோட ஓடி முதல்ல வெற்றிக்கோட்டை சேர்ந்துருச்சாம் .
நீதி : ' நாம செஞ்ச தப்புக்களிலிருந்து பாடம் படிச்சுக்கிட்டு அதை திருத்திக்கிட்டோம்னா வெற்றி நமக்குத்தான்'.
இப்ப ஆமை யோசித்துச்சாம்.. நாம எத்தன தடவ தரையில பந்தயம் வச்சாலும் தோத்துருவோம் . அதனாலே இப்ப தண்ணியில(குளம், ஆறுல இருக்கிற தண்ணிங்க!!) பந்தயம் வைக்கலாம்னு நினைச்சு முயல போட்டிக்கு கூப்பிட்டிச்சாம் .. முயலும் வந்து தண்ணிக்குள்ள நீச்சலடிக்க முடியாமே,தரையிலேயே தவிக்க, ஆமை நீந்தி ஜெயிச்சிருச்சாம் .
நீதி : 'ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் , நம்மோட திறமை என்னான்னு கண்டுபிடிச்சு அதனை ஒழுங்கா செஞ்சா நமக்கு வெற்றி நிச்சயம்' .
இருவருக்குமுள்ள தனித்திறமையை இருவரும் புரிஞ்சுக்கிட்டு, ரெண்டு பேரும் ஆலோசனை செஞ்சு , தரையிலே பிரயாணம் செய்றப்போ முயல் ஆமையை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும், தண்ணியில நீஞ்சிரப்போ ஆமை முயலை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும் போகலாம்னு முடிவு பண்ணிட்டு , அப்படியே செஞ்சு சந்தோஷமாக நட்போட இருந்துச்சுங்களாம் ..
நீதி : இதுதாங்க கூட்டுப்பணி (Team work) . ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களோட திறமையை அங்கீகரிச்சு அதனோட பயனை அனுபவிச்சு, சண்ட போடாம(சாத்தான் வேதம்!!), சந்தோசமாக வாழனும்ங்க ..
குப்பயிலே மாணிக்கம்..??
Labels: பொது
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
லாடு,
நீ என்ன வேனா சொல்லு, என்ன வேனா எழுது. ஆனா அய்யிரு சார்பா எழுதுனே... மவனே உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்!
கதை நல்லா இருக்கு, கருத்தும் தான்.
தாசு எனக்கு தொடர்ச்சியா இன்னொரு கதையும் ஞாபகம் வருது, முயல் முழிச்சிக்கிச்சு அதனால எப்படியாவது அதை தோற்கடிக்கனும்னு ஆமை முடிவு செய்தது, ஆமைகள் பார்க்க ஒரே மாதிரி இருப்பதால் ஆங்காங்கே ஓடுகளத்தில் மற்ற சில ஆமைகளை மறைவாக நிறுத்தி வைத்தது ஒவ்வொரு முறையும் ஆமையை முந்தும் முயல் ஆனால் கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் முயலின் முன்னே ஆமை ஓடிக்கொண்டிருக்கும், கடைசியில் முயல் தோற்று ஆமை வெற்றிபெறும், ஆமையின் புத்திசாலித் தனத்தை கூறும் கதை வெகு நாட்களுக்கு முன் பூந்தளிரிலோ, கோகுலத்திலோ படித்தது.
இதற்கும் இந்த பதிவிற்கும் அரசியலுக்கும் சத்தியமாக தொடர்பில்லை, ஏதோ இந்த முயல் ஆமைக்கதையை படித்தவுடன் அது தொடர்பான மற்றொரு கதையும் தோன்றியது.
நல்லாருக்கு! வாழ்த்துக்கள் LLDasu.
இந்த முயல், ஏன் இன்னோரு முயல் கூட போட்டி போட மாட்டேங்குதுன்னு யார்க்காச்சும் தெரியுமா ;-))
\/\/\/\/\/
//இதற்கும் இந்த பதிவிற்கும் அரசியலுக்கும் சத்தியமாக தொடர்பில்லை,...// - posted by Kuzhali
அப்போ இந்த பதிவிற்குத் தொடர்பிருக்குன்னு சொல்றீங்க, அப்டித்தானே...?
- ஞானபீடம்.
ஆமை, முயல் படங்கள் இல்லாமல், டிஸ்க்ளெய்மர் கொடுக்காமல் நேரடியாக அரசியல் செய்தி கொடுக்கும் தாஸை வன்மையாக கண்டிக்கிறேன்...
// ஆங்காங்கே ஓடுகளத்தில் மற்ற சில ஆமைகளை மறைவாக நிறுத்தி வைத்தது ஒவ்வொரு முறையும் ஆமையை முந்தும் // ஏதோ ஒரு கட்சியோட தேர்தல் யுத்தி மாதிரியில்ல தெரியுது...
அட, இது ரொம்ப வித்தியாசமா ரொம்ப நல்லாயிருக்கே. பாராட்டுக்கள்.
புல்லரிச்சுப்போயி அவரு நம்பிக்கைய எப்படிடா காப்பாத்துறதுன்னு ஒரே ரோசனைப்பண்ணி, மூளய கசக்கி , இத எழுதறேன் .
கூக்ள்-ல தேடினா ஈசியா கடைச்சு இருக்குமே, ஏன் கஷ்டப்பட்டு எழுதினீங்க, உம்?
http://www.jobcyclone.com/articles/haretortoise.php
:-)
சும்மா, ஜோக். சீரியசா எடுத்துக்(க மாட்டீங்கன்னு நம்பிதான் இப்படி சொன்னேன்)காதீங்க. நல்ல இயல்பான தமிழ்க்கதை மாதிரியே இருக்கு, மொழி பெயர்ப்பு மாதிரியே தெரியலை. தொடர்ந்து புதுமையாக இப்படி அடிக்கடி ஏதாவது பண்ணவும்.
வந்தோருக்கெல்லாம் நன்றி ..
கலை அக்கா (தங்கச்சி) .. குட்டித் தேவதைக்கு இந்த கதையை சொல்லுங்கோ .. உங்களைப்போன்றோருக்காக போட்ட பதிவு , முகமூடி, குழலி, ஞானபீடம் போன்ற அரசியல்வாதிகளால் திசைமாற்றப்பட்டுவிட்டது ...
அனியாயத்த பாருங்க க்ரூபா .. எழுதி ரெண்டு நாளுதான் ஆகுது .. அதுக்குள்ள காப்பி பண்ணிட்டாங்க.. கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி.. சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டும் .. இப்பக்கூட முகமூடி பதிவுக்காக திருச்சியிலே கணேசன்னு ஆட்டோ ரிப்பேர் பண்ற பையனுக்கும், சுஷ்மிதாங்கிற பொன்னுக்கும் நடக்கிற ஒரு 'காதல்' கதை எழுதிருக்கேன். சாதிப்பிரச்சினையினால அவங்களால வாழமுடியாம அந்த பையன் பைத்தியமாக மாறும் க்ளைமாக்ஸ் கூட இப்பதாங்க முடிச்சேன் .. அதக்கூட திருடிருவாங்களோன்னு பயமாயிருக்கு..
பாண்டி...
ஒரே ஊர்க்கார்ங்களுக்கு ஒரே மாதிரியான கற்பனை(!!!) வர்றதுள்ள என்ன ஆச்சரியம் இருக்கு..
யோவ் தாஸ்,
கொங்கு நாட்டுக்கும் உமக்கும் என்னையா சம்பந்தம்? குழப்பாம தனி மடல்லயாவது சொல்லவும்.
அந்த வரலாற்று நிகழ்வை இவ்வளவு சாதாரணமா கேட்டுட்டீங்களே.. ;) ஒன்னுமில்ல நான் பிற்ந்த இடம் பொள்ளாச்சி .. தாய்நாடு கொங்கு .. மற்றபடியெல்லாம் செ$#டிநாடு (சாதிப்பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது ;) )தான் .
மேலே உள்ளது என்ன? விளம்பரமா?? இல்லா வேற எதுவுமா? இத படிக்கிற அளவுக்கு பொறுமை இல்ல.. அழிச்சிடலாமா?
" --L-L-D-a-s-u--- said...
மேலே உள்ளது என்ன? விளம்பரமா?? இல்லா வேற எதுவுமா? இத படிக்கிற அளவுக்கு பொறுமை இல்ல.. அழிச்சிடலாமா?"
மேலே உள்ளது எரிதமே. அதை அழித்து விடலாம். ஆனால் முழுமையாக அழித்தால் உங்கள் இப்பதிவுக்கு புது பின்னூட்டங்கள் வரும்போது தமிழ்மணம் அவற்றை இற்றைப்படுத்தாமல் போகும் அபாயம் உள்ளது. ஆகவே லிங்கை அப்படியே வைத்து பின்னூட்டத்தை மட்டும் அழியுங்கள். எரிதம் போட்டவரும் புரிந்து அமைதி காப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு அவர்களே.. 'எரிதம்' என்றால் விளம்பரமா? நன்றாக உள்ளது ..
Hello to you. May I say that you have an excellent Blog and well worth the visit. I will definitely come back again as I found it of interest.
equity line site covering equity line related stuff.
'ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் , நம்மோட திறமை என்னான்னு கண்டுபிடிச்சு அதனை ஒழுங்கா செஞ்சா நமக்கு வெற்றி நிச்சயம்'
சரியா சொன்னீங்க
உதாரணம் : எல் எல் தாஸ¤
Post a Comment