சினிமா ...சிலை... கூத்து

சிவாஜி வேடத்தில் நாடகத்தில் ஒருவர் நடித்தாராம்.. மிகவும் நன்றாக நடித்தாராம்.. கண்டிப்பாக நனறாக நடித்திருப்பார். அவரை புகழ்ந்து பேசிய ஒருவர் அவரை 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினாராம் . ஆதலால் அவர் பெயர் சிவாஜி கணேசனாம்.. 'சிவாஜி' நாடகத்திற்கு பிறகு அவர் பாகப்பிரிவினை , தெய்வமகன் போன்ற படங்களில் பல வேடங்களில் சிறப்பான வேடங்களை வழங்கவில்லையா? அந்த வேடங்கள் பெயரில் அவர் பெயர் ஏன் மாறவில்லை . இதில் ஆரம்பித்தது.... கேப்டன் பெயர் வைத்த படத்தில் நடித்ததில் கேப்டன் என்ற பட்டம் வந்து சேர்ந்து விட்டது . அவர் 'கூலிக்காரன்' என்றொரு படத்திலும் தான் நடித்தார் . ஏன் அந்த பட்டம் வந்து சேரவில்லை ? சொரிந்து விட்டவர்களுக்கு தெரியாதா எந்த இடத்தில் சொரிந்துவிட்டால் சுகமாக இருக்குமென்று?

ரசிகர் மன்றம் வைப்பது சாமான்யர்கள் செய்யும் வேலை.. அரசாங்கம் அதனை விட பெரியது இல்லையா.. ஆதலால், சிலை வைக்கிறார்கள் .. மாமனிதராம் ..மஹாத்மாவாம்.. ம்ம்.. தெய்வமாவது எப்போதென்று தெரியவில்லை ? இனிமேல் மணிமண்டபம் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரும் . அதற்கும் இந்த அரசாங்கம் செவிசாய்க்கும்.. சாதனைப் பட்டியலிலும் அது இடம் பெறும். இதைத்தானே இந்த அரசாங்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன.. வள்ளுவருக்கு பெருமை சேர்க்க கோட்டம் கட்டினார்களாம், சிலை வைத்திருக்கிறார்களாம் .. வள்ளுவனுக்கு பெருமை , தமிழனுக்கு பெருமை திருக்குறள்தானே தவிர கோட்டம் இல்லை . சிலை இல்லை .

மக்களின் பணத்தை விவேகமாக செலவு செய்வது அரசாங்கத்தின் கடமை இல்லையா? அதனை ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பதையும் வெட்டி செலவு செய்வதையுமா மக்கள் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்?

இதில் வேறு நட்பின் இலக்கணமாக சிலை வைக்கிறார்களாம். நட்பின் இலக்கணததை காண்பிக்கவேண்டுமென்றால். தன் பணத்தில் , தன் சொந்த இடத்தில் , தங்க சிலையையே வைக்கலாமே? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்களாம் . இதுதான் நட்பாம். வெட்கமாயில்லை .

சிலை வைக்கவேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், மேடையில் பேசியவர்கள், இந்த விழாவிற்கு வந்து தியாகம் செய்தவர்கள், ரசிக மகாஜனங்கள் இவர்கள் பணம் கொடுத்து, வசூல் செய்து சிலையை, தங்கள் சொந்த இடத்திலோ, தனியார் இடத்தை பணம் கொடுத்து வாங்கியோ, தங்கள் அன்பை காண்பித்திருக்கலாமே? பணம் இல்லாதவர்களா இவர்கள்? பஞ்ச பரதேசிகளான மக்களின் வரிப்பணம்தானா இவர்களுக்கு கிடைத்தது.?

மகாநடிகர் கணேசன். அவருக்கு சிலை வைத்தாயிற்று . ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் அவருக்கும் ஒரு சிலை. . சிரித்தால் குழிவிழும் பிரபுவுக்கு. அவருக்கு ஒரு சிலை . இரும்பு உடம்பு சரத்குமாருக்கு. அவருக்கு ஒரு சிலை. தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்து கதாநாயாகனாய் ஆனதற்காக தனுஷுக்கு ஒரு சிலை. அறுபதிலும் தலைகீழாய் உதைப்பதற்காக விஜய்காந்திற்கு சிலை.... போங்கடா நீங்களும் உங்க சிலையும் ...

26 comments:

said...

:D

said...

:E

said...

போட்டு தாக்குங்க. எனக்கென்னமோ கருணாநிதியின் கதை வசனத்தை
நன்றாக பேசியவர்களுக்கெல்லாம் சிலை வைக்கிறாரோ என்று தோன்றுகிறது.

சிவாஜி குடும்பம் சொந்த செலவில் ஒரு மெமொரியலே கட்டலாம். அதில் அவர் நடித்த
படங்கள் போட்டோக்கள் வைக்கலாம். இது காக்கையை தவிர வேறு யாருக்கும
் பிரயோசனம் இல்லை.

said...

இப்டில்லாம் எமோசனலா ஆவக்கூடாது...உடம்புக்கு நல்லதுல்ல...ச்சரியா...கூல்டவுன்..ஹி..ஹி..

Anonymous said...

:F

said...

கேள்விகள் எல்லாம் நல்லா கேட்டுக் இருக்கீங்க.
பதில் தான் ஹிஹி......

said...

:F

said...

ரொம் நாளா அரிப்பொடுத்த கேள்விகள் ஏதோ உங்க தயவுல..

said...

இதைப் பற்றி நானெழுதிய ஆறு வார்த்தை கதை.

போராட்டம் முடிந்தது. இனி சிவாஜி தலையிலும் எச்சம்!

said...

//போராட்டம் முடிந்தது. இனி சிவாஜி தலையிலும் எச்சம்! //

கொத்ஸ் இப்போ கதை வேறயா?/
கலக்குற போ....
(ஆஹா இது கூட ஆறு வார்த்தைக் கதை மாதிரி இருக்குதே..)


:D--மாயவரத்தான்
:E--உங்கள் நண்பன்
:F--அனானி& சீமாச்சு

ABCD... சொல்லித்தர ஆங்கில சிறப்பு வகுப்புகள் எதாவது ஆரம்பிச்டீங்களா என்ன?

ராஜா said...

இதே போல் பல கேள்விகளை, திரு ஜோ அவர்களின் "மகா கலைஞன் நினைவாக : ஜோ / Joe" பதிவில் இட்டேன்..

ஆனால் என்ன காரணமோ, அவர் அதை வெளியிடவில்லை...

எல்லா சராசரி நடிகரை போல தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து தமிழக முதல்வர் நாற்காலிக்கு கனவு கண்டவர் தான் இவர்..

இவர் நடித்த சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களுக்கு சம்பள்ம் வாங்கி கொண்டு தான் ந்டித்தார்.. எனக்கு தெரிந்த வகையில் அவர் தமிழுக்கோ, தமிழருக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை...

சிவாஜி ஒரு தீவிர சாதிப்பற்று உடையவர்.. அவரது குடும்பத்தி உற்று நோக்கினால் அவர் சாதிப்பற்று விளங்கும்...

சிவாஜி சிறந்த நடிகராக இருக்கலாம்.. சிலை வைப்பதெல்லாம் டூ மச்...
தமிழனின் சினிமா மாயை இன்னும் தீரவில்லை....

said...

சிலருக்கு காக்கைக்கூட்டம் (அவர் மொழியிலே) அருகிலிருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு . காக்கைகளுக்கு சோறு இருக்குமிடமே சொர்க்கம். தைரியலக்ஷ்மியிடமிருந்து சாணக்கியனை நோக்கிவர ஒரு வாய்ப்பு. அதற்குமேல் இந்த கருமத்தைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

said...

டேய் தாஸு நீ என் மனசுல ஆயிட்டடா பாஸூ போட்டு தாக்கு தாக்குனு தாக்குறியே உக்காந்து யோசிப்பியோ. சிவாஜி வள்ளல்னு நம்ம தாத்தா பெனாத்துனது எல்லாம் கமாய், எவ்ளோ அமுக்குனானுங்களோ, அடுத்து வடிவேலுக்கு வைப்பாய்ங்க,
அது சரி நம்ம துட்டுல மங்களம் பாடுனானுன்ங்ளே நம்மாண்ட ஒரு வார்த்தை கேட்டானுங்களா.
அந்தம்மா தோழிக்கு செலை ரெடி பண்றதா கேள்வி உண்மையா இருக்குமோ?
சினேகிதா நீ எழுதிகினே இரு நான் பட்சிகினே வரேன். வர்ட்டா

said...

---'கூலிக்காரன்' என்றொரு படத்திலும் தான் நடித்தார் . ஏன் அந்த பட்டம் வந்து சேரவில்லை ---

லபக்கு மாதிரி வெளிப்படையான பெயர் வைத்துக் கொள்ள, அவர் என்ன இணையத்திலா குப்பை கொட்டுகிறார்? அலுவலில் 'இந்த மாத சிறப்பு ஊழியர்' போன்ற கவனிப்புகளும் ஊதிய உயர்வு, பதவியின் தலைப்பு கொடுப்பது போல் சினிமாக்காரர்களுக்கு அடைமொழி. குறைந்த பட்சம், கிசுகிசு எழுதும்போது பயன்படுகிறதே!

---ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பதையும் வெட்டி செலவு செய்வதையுமா---

சுற்றுலாவை மேம்படுத்தும் சில விஷயங்களும் இதில் பொதிந்திருக்கலாம். சிவாஜி சிலை அருகே ஸ்டிக்கர். சிவாஜி பாடல் புத்தகம், இன்ன பிற விற்பவன்; ஜிகிர்தண்டா போடுபவன்; சிவாஜி போஸ்டருடன் புகைப்படம் எடுத்துக் கொடுப்பவன் ஆகிய சிறுதொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் பெருகும்.


----ரஜினிகாந்த் . . பிரபுவுக்கு. சரத்குமாருக்கு. தனுஷுக்கு விஜய்காந்திற்கு சிலை----

தாங்கள் ஏன் ஆணாதிக்கத்தை நிலை நாட்டுகிறீர்கள்! பத்மினி, காஞ்சனா, மஞ்சுளா, பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, பானுப்ரியா, சிம்ரன், அசின், கோபிகா ஆகியோருக்கு சிலை வைக்காத தமிழ் சமூகத்தையும் அரசியல் கயவர்களையும் சாடலாமே ;-))

said...

என்னங்க, வீரபாண்டியனுக்கு இடிந்த கோட்டையையே பாஞ்சாலங்குறிச்சியில் அரசுபணத்தில் கட்டியவர் , அந்த வீரனாக நடித்து உயிர்கொடுத்த நடிகர்திலகத்திற்கு சிலை எடுப்பது அதிசயமா இல்லை அதிக செலவா ? கோட்டைகளும் கோட்டங்களும் கட்டுவதால்தானே தமிழன் தரணியில் முன்னணி எய்தமுடியும் ?

said...

உங்களுக்கு பின்னூட்டமிட்டுருக்கிறேன்ல,
அதனால எனக்கும் அப்படியே மெரீனால ஒரு சிலை வைக்க ஏற்பாடு செஞ்சீங்கன்னா புண்ணியமா போகும்...


அன்புடன்...
சரவணன்.

said...

//தாங்கள் ஏன் ஆணாதிக்கத்தை நிலை நாட்டுகிறீர்கள்! பத்மினி, காஞ்சனா, மஞ்சுளா, பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, பானுப்ரியா, சிம்ரன், அசின், கோபிகா ஆகியோருக்கு சிலை வைக்காத தமிழ் சமூகத்தையும் அரசியல் கயவர்களையும் சாடலாமே ;-))//

naaan ithai aamothikkiren... nadigar thilagathukku (??) silai vachanuga... naan potrum nadigayar thilagam saavithrikku silai vaikkalikyeee... :-)

said...

சிவாஜிக்கு சிலை வைக்கும் அளவுக்கு என்ன செய்தார்...

சுதந்திர போராட்ட தியாகியா???

மொழிபோராட்ட தியாகியா???

தெருவில் இறங்கி, தமிழருக்காகவும், தமிழகத்துகாகவும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக போராடினாரா????

சமுதாய சேவை செய்தாரா????

தன் சொத்தையெல்லாம் தான தர்மம் செய்தாரா????

நன்றாக நடித்து,பெரும் பணம் மற்றும் புகழை சம்பாதித்தார்.. அதனால் தமிழகம் அடைந்த நன்மையென்ன???

குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவது போல், கலைஞர் சிலை வைத்து விளையாடுகிறார்...

said...

// ABCD... சொல்லித்தர ஆங்கில சிறப்பு வகுப்புகள் எதாவது ஆரம்பிச்டீங்களா என்ன?//

என்ன தைரியம் உங்களுக்கு ? தமிழ் வளர்க்க பெயரிலேயே தார் அடித்திருக்கிற வலைப்பூவில் வந்து என்ன கேள்வி கேட்கிறீர்கள்? ;) ;)

//சுற்றுலாவை மேம்படுத்தும் சில விஷயங்களும் இதில் பொதிந்திருக்கலாம். சிவாஜி சிலை அருகே ஸ்டிக்கர். சிவாஜி பாடல் புத்தகம், இன்ன பிற விற்பவன்; ஜிகிர்தண்டா போடுபவன்; சிவாஜி போஸ்டருடன் புகைப்படம் எடுத்துக் கொடுப்பவன் ஆகிய சிறுதொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் பெருகும்//

உங்கள் கிண்டல் புரிகிறது . தனியாக ஒரே ஒரு கட்டிடம் எழுப்பி, அல்லது இப்போது இருக்கிற மண்டபம், கோட்டம் எதிலாவது எல்லோருடைய சிலையையும் வைத்து, அதனை பார்க்க விரும்புவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அது ஓரளவு சுற்றுலா மேம்படுத்தும் எண்ணம் அரசுக்கு இருக்கிறது எனக்கூறலாம் .

என்னுடைய கேள்விகளும், அதிலுள்ள நியாயங்களையும் புரிந்துகொண்டு, இங்கே பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

said...

நான் உங்கள் கருத்தில் ஒத்துப் போகவில்லை. கலைஞர்களுக்கு சிலை வைப்பது என்பது கலைக்கு செய்யும் மரியாதையே அன்றி வேறில்லை.

said...

//சீனு said...
நான் உங்கள் கருத்தில் ஒத்துப் போகவில்லை. கலைஞர்களுக்கு சிலை வைப்பது என்பது கலைக்கு செய்யும் மரியாதையே அன்றி வேறில்லை.
///

so உங்களுக்கு தெரிந்த முதல் கலை சினிமா...உங்களுக்கு தெரிந்த முதல் கலைஞன் சிவாஜி...

வேறு சிறந்த கலையும் கலைஞர்களும் தமிழகத்தில் இல்லையா????

ஓ அவர்கள் கலைஞருக்கு நண்பரில்லையோ... என்னய்யா சொல்கிறீர்...

said...

நட்பா!! ஒன்று, காககைக்கூட்டம் தன் பக்கம் என ஊருக்கு அறிவிக்கவேண்டும்.
இரண்டு, நாளைக்கு , 'சிவாஜிக்கு சிலை வைத்தவன் நான்' என தேவர் கூட்டத்தில் பேசவேண்டும் . கணேசனை அப்படியே 'தேவர்குல' நடிகர் என சுருக்கியும் 'உள்குத்து' விடலாம். நட்பாவது, கற்பாவது .

said...

http://theyn.blogspot.com/2006/07/blog-post_115380135968294368.html

இங்கே நான் இட்ட பின்னூட்டத்தை பாருங்கள்

said...

லார்டு லபக்கு தாஸின் கேள்வியினை ஒரேடியாக விலக்கி விட முடியாது. சிவாஜி ஒரு மிக பெரிய கலைஞன் என்பதிலும் மிகுந்த பாராட்ட பட வேண்டியவர் என்பதிலும் சந்தேகமில்லை. மக்கள் வரிபணத்தில் தான் வைக்க வேண்டுமா, இவர்களிடம் இல்லாத காசா, சொந்த பணத்தில் தான் வைக்கலாமே! என்றும் அவர் கேட்டுள்ளார். செய்திருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மக்கள் வரி பணத்தில் சினிமா காரர்களின் பணமும் இருக்கிறது என்பதை மறந்து விட கூடாது. சிவாஜியினால் தமிழகத்திற்கு பெருமையே.அவருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. மக்கள் பணத்தில் வைத்ததும் தவறு இல்லை. ஆனால் மக்கள் வரிபணத்தில் சிறந்த நடிகர், நடிகை என்று வருடா வருடம் வாரி இறைப்பதை தவிர்க்கலாமே!!!

said...

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கலைங்கருக்கு நன்றி

Anonymous said...

சிவாஜிக்கு மட்டுமல்ல காந்திக்குக் கூட சிலை வைத்தது தவறுதானா?

அதுமட்டுமல்ல புள்ளயாரு,சிவனு,கிருஷ்ணான்னு ஏகப்பட்ட சிலைகளையும் வச்சிக்கிட்டு மணியடிச்சிட்டு இருக்கிற நாம யாருக்கு சிலை வைத்தாலும் ஆதரிக்கவேண்டும்.

கிருஷ்ணாரு போன்ற கருமாந்திரங்களைவிட வடிவேலு எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை.