கருணாநிதி.. ஜெயலலிதா.. கிறிஸ்தவம்

'கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகக்கூடாது' என்று சிந்தித்த கருணாநிதி நாத்திகர் என சொல்லிக்கொள்வது ஒரு முரண்பாடுதான் . இதே சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கு வந்தது.. அவர் இயேசு.. அவருக்கு கோபம் வந்ததாக பைபிளில் கூறப்படும் ஒரே இடம் அதுதான் . இறைவனின் இடத்தை கள்வரின் குகைகளாக்காதீர் என கோபப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .எப்போதும் அப்படித்தான் .. கள்வர்கள் குடியிருக்கும் இடம் கோவில்தான் போலிருக்கிறது .. இயேசு காலத்திலும் .. கருணாநிதி காலத்திலும் ..

ஒரு கிறிஸ்தவனாக நான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல நினைத்த ஒரு சட்டம் . கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் . ஒரு போப் சொல்ல வேண்டியதை .. கிறிஸ்தவ மதகுருமார்கள் கடைபிடிக்க வேண்டியதை, ஜெயலலிதா செய்துள்ளார் . 'பல்லுக்கு பல் ..கண்ணுக்கு கண் ' என்ற சட்டத்தை கடிந்து , 'இறைவனையும் மனிதனையும் அன்பு செய்வதே' தன் சட்டமாக்கி , அந்த நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க சொன்ன இயேசுவை பின்பற்றுவதாக சொல்லும் இந்த கிறித்துவ மத குருமார்கள் 'மதமாற்றம்' என்பதை இயேசுவே சொன்னதுபோல் திரித்து அலைவது இயேசுவிற்கு செய்யும் பெரும் துரோகம் .. கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிய பவுல் கூட , அவர் பல பிற்பட்ட சட்டங்களை வலியுறுத்தியிருந்தாலும் , மதமாற்றத்தையல்ல மனமாற்றத்தைத் தான் வலியுறுத்தியுள்ளார் . கிறிஸ்தவர்கள் தன் வாழ்வியல் நடைமுறைகளால் , மற்றோரை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார.. ஆனால் பல அரசியல்களில் சிக்குண்ட கிறிஸ்தவ மதங்கள் , கிறிஸ்துவை பின்பற்றுவதாக சொல்லும் பல போலிக்கள் இன்று பல அரசியல் காரணங்களுக்காக மதமாற்று வைபவத்தை நடத்துவது இயேசுவுக்கு செய்யும் துரோகம் . கிறித்துவம் தவிர மற்ற எந்த காரணத்திற்காகவும் , பணத்திற்காகவோ , வியாதி , சாதீய காரணங்களுக்காகவோ, மற்ற எந்த காரணத்திற்காகவோ மதம் மாறுவதும் தடை செய்யப்படவேண்டும்., இதனை செய்யவேண்டியது மதகுருமார்கள் .. இதனை இந்த போலிக்கள் செய்யாமல், கிறிஸ்துவத்தை உயர்த்தும் இந்த சட்டத்தை எதிர்த்தது கேலிக்குறியது.

11 comments:

said...

//ஒரு கிறிஸ்தவனாக நான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல நினைத்த ஒரு சட்டம் . கட்டாய மத மாற்ற சட்டம் . ஒரு போப் சொல்ல வேண்டியதை .. கிறிஸ்தவ மதகுருமார்கள் கடைபிடிக்க வேண்டியதை, ஜெயலலிதா செய்துள்ளார் .
//
எந்த சட்டத்தை ஜெயலலிதா அவர்கள் முறையானதற்கு மட்டும் உபயோகித்துள்ளார்?

நெடுமாறன், வைகோ மீதான பொடா வழக்கு.

நக்கீரன் கோபால் மீதான ஆயுததடைசட்டம், பொடா வழக்கு

செரீனா மீதான கஞ்சா வழக்கு

வளர்ப்பு மகன்.. ஓ அவர் இப்போ முன்னாளா அவர் மீதான கஞ்சா வழக்கு என எத்தனை எத்தனை வழக்குகள்.

பார்த்துங்க நீங்க அந்த நேரத்தில் ஊருக்கு போக உங்கள் பெயரில் நீங்கள் கையெழுத்து போட கிறுத்தவ பெயரை கையெழுத்தாக போட முயன்றதன் மூலம் கட்டாய மத மாற்ற பிரச்சாரம் செய்ததாக நீர் கூட உள்ளே போயிருந்திருப்பீர், உம்ம நல்ல நேரம் தப்பித்துவிட்டீர்...

said...

இந்த மத மாற்றத்தில் கிடைக்கும் நம்பரைக் காட்டியே, வெளி நாடுகளிலிருந்து பாதிரிமார்கள் பணம் கொள்ளையடிக்கின்றனர்...

அதுக்காகவே அவர்கள் அந்த சட்டம் கொண்டுவந்த பொழுது கதறினர்...

உண்மையில் ஒரு போப் பேசவேண்டிய விஷயம் இது...

இது வரை வந்த எந்த போப்பையாவும் அப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை.

ஆசிய ஆன்மாக்களை அறுவடை செய்யவேண்டும் என்று தான் பேசியதாகத் தெரிகின்றது...

said...

//கட்டாய மத மாற்ற சட்டம்//

கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்?

இல்லை நான் தான் confuse ஆகிவிட்டேனா? தெளிவு படுத்தவும். please

said...

சின்னதம்பி

அது கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் தான் ..மன்னிக்கவும் .. மாற்றிவிட்டேன் .. சுட்டிக்காட்டியதற்கு நன்றி .

said...

ஆமென் :)

said...

//இதே சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கு வந்தது.. அவர் இயேசு.. //

இயேசு மீண்டும் வருவேன் என சொன்னது இதுதானா? கருணாநிதியின் உருவில் மீண்டும் இயேசுவா? :))))

said...
This comment has been removed by a blog administrator.
சனம் said...

அந்த சட்டத்தில் "கட்டாய" என்பதே ஒரு சும்மாகாச்சிக்கும் போட்டதும்மா... மதமாற்ற தடைச் சட்டம்... அம்புட்டுதேன். என்னா எரிச்சல் படுத்தற யாரையாச்சும் அடிக்கணும்ன்னா ஒரு லைசன்ஸ் வேணும் இல்லீங்களா... ம்ம்ம்... அப்பாலிக்கா எப்பவாச்சும் அம்மா வரும். அப்போ கிளம்பிக்கலாம்.. மறுபடியும்.

said...

சில சிந்தனைகள் நமது அரசியல்வாதிகளுக்கு .....

கட்டாய திருமண தடை சட்டம்
கட்டாய கலப்பு திருமண சட்டம்
கட்டாய படிக்கும்(கல்வி) சட்டம்
கட்டாய வேலை தரும் சட்டம்
கட்டாய ஒரு அல்லது இரு மழலை சட்டம்
கட்டாய உணவு தரும் சட்டம்
கட்டாய வோட்டு (வாக்கு) சட்டம்
கட்டாய தேசிய ராணுவப் பயிற்சி

said...

L-L-D-a-s-u,

As usual, சவுக்கடிப் பதிவு !!!

No comments ;-)

said...

கட்டாய மதமாற்றம்...அவசியம் தேவை.

கிறிஸ்து மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மட்டுமல்ல. பழங்குடியினரை, பௌத்த, சீக்கிய மதத்தினரையெல்லாம் இந்துக்களாக கணக்குகாட்டும் கயவாலித்தனத்தை தடுக்கவும் இது பயன் படும் தானே?

புத்தவிகாரையை கூட இந்து கோயிலாக்கி மணியாட்டும் உரிமையை கைவசப்படுத்திய கயவர்களை தண்டிக்குமானால், 'கட்டாய மத மாற்ற தடை சட்டம்' கட்டாய தேவையே.

நன்றி.

ஆமாம் நீங்கள் நெஜமாலுமே கிருத்துவரா? ;-)