காக்காக்கூட்டம்

அடுத்த மாதம் 23-ந் தேதி முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டுவிழா. இதற்காக 22 மற்றும் 23-ந் தேதி அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழ் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பாராட்டு விழா நடக்கிறது. இது குறித்து விழாக்குழுவின் தலைவர் ராம. நாராயணன், செயலாளர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கருணாநிதியின் வரிச்சலுகை, படப்பிடிப்பு கட்டணக் குறைப்பு ஆகியவற்றால் சிறு முதலீட்டாளர்களுடன் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. விழா சிறப்பாக நடைபெற, நடிகர்சங்கம் சார்பில் சத்யராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், தொழிலாளர் சம்மேளனம் சார்பில் விஜயன் தலைமையில் ஒரு குழுவும், விநியோகஸ்தர் கூட்டமைப்பு சார்பில் அருள்பதி தலைமையில் ஒரு குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அண்ணாமலை, அபிராமி ராமநாதன் ஆகிய இருவர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழாவில் கலைநிகழ்ச்சி, ஓரங்க நாடகம், காமெடி தர்பார், இன்னிசை என நவரசங்களும் இடம் பெறுகிறது. கருணாநிதியின் புகழ்பாடும் ஒரு புத்தகமும் விழாவில் வெளியிடப்படுகிறது.

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கில் அனுமதிக்கப்படுவர். அதற்காக கவலை வேண்டாம். எப்படியும் சன் டி.வி.யில் ஒரு சன்டே இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாமலா இருப்பார்கள்!
நன்றி : சினிசௌத்

3 comments:

said...

நடிகர் சங்கத் தலைவர் மற்றும் தே.மு.தி.க. தலைவர் ஆகியோர் கலந்து 'கொல்'கிறார்களாமா?!

said...

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நாங்க போடுவோம் ஜால்ரா!

said...

TV கொடுக்கறேன்னல்ல, மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு விழா எடுத்தால் என்ன