வில்லன் விவேக்

சுனாமி மீட்பு பணியில் விவேக் ஓபராய் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது . அவரின் உடலுழைப்பும், செலவிட்ட காலமும் .... பிரமிப்பாக உள்ளது . இப்படியும் ஒரு மனிதர், அதுவும் சினிமா நடிகர் தற்போது இருப்பாரா என ஆச்சரியமாக உள்ளது . ஒரு ஹிந்தி நடிகர் செய்கிறாரே, லட்ச லட்சமாக தமிழில் சம்பாதித்த தமிழ் நடிகர்கள் ஒன்றும் பெரிதாக செய்யவில்லையே என்ற குரலும் தமிழகத்திலே கேட்கத்தான் செய்கிறது .

21 லட்சம் கொடுத்து விட்டு தன் 'தனி வழி'யில் போவதையோ அல்லது ஒன்றுமே கொடுக்காமல் இருப்பதையோ நாம் விமர்சிக்கமுடியாது . அது அவரவர்களின் சொந்த விருப்பம் . ஒவ்வொருவரும் அவரவருடைய பணத்தின், நேரத்தின் முதலாளிகள் .
ஆனால் ,அவர்கள் 'தமிழனுக்காக உயிரை கொடுப்பேன் ' என பஞ்ச் டயலாக் விடும்போது நம் தமிழினம் அவர்களின் பொய் முகத்தை உணர வேண்டும். தமிழக தமிழரை மேல் நாட்டு மேடைகளிலே விமர்சித்துவிட்டு வரும் நடிகர்களுக்கு மாலை போட , அவர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய போட்டி போடும் நம் தமிழினம் இனியாவது உணர்ந்து திருந்துமா? நல்ல வேலை, அவர்களில் எவரும் விவேக்கைப் போல் சேவை செய்யவில்லை . சிறு சிறு அசைவுகளுக்கும் அதிக சம்பளம் வங்கும் இவர்கள் , அதே விகிதப்படி , இந்த சேவைக்கு முதல்வர் நாற்காலி எதிர்பார்ப்பார்கள் .

ஒன்று மட்டும் நிச்சயம் , விஜயக்காந்த் , ரஜினிக்காந்த் போன்றோர்க்கு விவேக் ஒரு கொடூரமான வில்லன் . காமெடி விவேக்கின் கோபமே அதற்கு சாட்சி .

4 comments:

said...

வந்தாரையெல்லாம் முதல்வராக்கும் தமிழகத்தின் முதல்வர், விவேக்கை விமர்சித்தது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது . அவர் செலவழித்தது 10% ஆனாலும் ஒரு தனி மனிதன் இவ்வளவு செய்தது பெரிய விஷயம் அல்லவா? அவர் புகழுக்காக செய்தார் என சொல்ல வாய் கூசவில்லையா அம்மைக்கு . . ஒரிரு தமிழ்படத்தில் நடித்து, தமிழ் வால்க என கூவி , ஓரிரு தையல் மெஷின் கொடுத்தால் தானாக புகழ் வந்து விட்டு போகிறது .ஏன் தமிழக முதல்வராகவே வாய்ப்புள்ளதே? ஏன் இவ்வாறெல்லாம் கஷ்டப்படவேண்டும்?

Anonymous said...

முதல்வர் விவேக் மீது குற்றம் சாட்டியது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முதல்வரின் வார்த்தைகளில் இருந்து ஒன்று மட்டும் விளங்கிக் கொள்ளக கூடியதாக இருக்கிறது. அதாவது அவருடைய அரசாங்கம் அறிவிக்கிற திட்டங்கள் எல்லாம் விளம்பரத்துக்காகத் தானே தவிர அதில் மக்கள் நலனைப் பற்றிக் கவலைகொள்வதில்லையென்பதைச் சூசமாகச் சொல்ல முனைகிறார்(உண்மையும் அது தானே).

நன்றி
உண்மைவிளம்பி

said...

ஜெயலலிதா மனிததன்மையே அற்றவர் என்பதை மேலும் ஒருமுறை உறுதிசெய்துள்ளார்.

காமெடி விவேக்கின் கோபமே சாட்சி என்று எழுதியிருக்கிறீர்கள். அது என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க தாஸ். எனக்கு அதைப்பற்றி தெரியாது.

said...

விவேக் ஒபராய்


சந்திரமுகி