சந்திரமுகி கதை பல வழிகளில் தெரிந்ததாலும் , சிங்கப்பூரில் டிக்கெட் விலை 15 வெள்ளியாய் இருப்பதாலும் (மற்ற படங்கள் 8 அல்லது 10 வெள்ளிகள்) , தியேட்டர் சென்று படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை . தீபாவளியன்று வசந்தம் சென்ட்ரலில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன் .. இணைய தளத்தில் சந்திரமுகியை இலவசமாக கிடைக்கிறது என்றும் அதற்கு காரணம் புலித்தலைவர் பிரபாகரன்(?) முதற்கொன்டு இலங்கை தொழிலதிபர் வரை பல செய்திகள் வர, டாக்டர் பிரகாசின் வலைத்தள முகவரிகளை பிரசுரித்த நம் பத்திரிகைகள் கண்டிப்பாக இதனையும் பிரசுரிப்பார்கள் என தேடினேன்.. சமூக பொறுப்புணர்வோடு(!!) யாரும் இந்த வலைத்தளங்களை பிரசுரிக்கவில்லை .
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு
முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்
இதற்கு மேல் ,,,,,,,,,,,,,,,,,,
visit this site
http://www.ninaithale.com/
www.lankasri.com
www.tamilstate.com
www.lovetamil.com
நன்றி குமரேஸ் மற்றும் அனானிமஸ்களே ..
சந்திரமுகி மற்றும் சினிமாக்களை டவுன்லோட் செய்யும் இணைய தளங்களை பிரசுரிப்பதின் ஆபத்தை உணர்ந்த நம் பத்திரிகைகள் ஏன் டாக்டர் பிரகாசின் வலைத்தளங்களை சமூக பொறுப்புணர்வோடு பிரசுரித்தார்கள் என்பதுதான் எனது கேள்வி .. அன்றைய வாரங்களில் நான் பார்த்த குமுதம், ஆ.வி. , நக்கீரன் , தினமலர், தினகரன், துக்ளக் பத்திரிகைகளில் , துக்ளக் தவிர (disclaimer: நான் பார்ப்பான் இல்லை) மற்ற பத்திரிகைகள் எல்லாம் பிரசுரித்திருந்தன...
மற்றபடி , சினிமாவை தரவிரக்கம் செய்யும் வெப்சைட்டுகள் எனக்கும் தெரியும் ...
"நம் பத்திரிகைகள் ஏன் டாக்டர் பிரகாசின் வலைத்தளங்களை சமூக பொறுப்புணர்வோடு பிரசுரித்தார்கள் என்பதுதான் எனது கேள்வி .. அன்றைய வாரங்களில் நான் பார்த்த குமுதம், ஆ.வி. , நக்கீரன் , தினமலர், தினகரன், துக்ளக் பத்திரிகைகளில் , துக்ளக் தவிர (டிஸ்க்ளைமர்: நான் பார்ப்பான் இல்லை) மற்ற பத்திரிகைகள் எல்லாம் பிரசுரித்திருந்தன..."
நீங்கள் கொடுக்கும் டிஸ்க்ளைமர் மிகவும் அவசியமே. தமிழ் வலைப்பூ உலகை நன்றாகவே கணித்து வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். இன்னொரு செய்தி: துக்ளக் இந்தச் செய்தியையே கொடுக்கவில்லை. அவ்வளவு தரம் வாய்ந்தப் பத்திரிக்கை அது. நான் டிஸ்க்ளைமர் கொடுக்க இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இல்லை செய்தி வந்தது டோண்டு சார் ...ஆனால் இணையதள முகவரி இல்லை ..நான் என் நண்பர்களிடம் இதை சுட்டிக்காட்டியது நியாபகத்திலுள்ளது .
நாம் இருவர் சொல்வதும் சரி என்று நான் எண்ணுகிறேன். எப்படி? விளக்குகிறேன். எல்லா பத்திரிகைகளும் இதைப் பற்றி முழக்கிய போது துக்ளக் போடவில்லை. ஆனால் செய்திக்குப் பிறகு வந்த ஆண்டு விழாக் கூட்டம் ம்யூஸிக் அகாடமியில் நடந்த போது, இந்தச் செய்தி, அண்ணாச்சியைப் பற்றிய செய்திகளை ஆகியவற்றை ஏன் போடவில்லை என்பது பற்றிப் பேசினார். பத்திரிகையில் போடவில்லை என்றாலும் உதவி ஆசிரியர்கள் இதைப் பற்றித் தம்முடன் விவாதித்தார்கள் என்பதையும் சுவையாகக் கூறினார். நான் அந்த மீட்டிங்கிற்கு சென்றிருந்தேன். பிறகு ஆண்டு விழா கூட்டத்தைப் பற்றிய வழமையான செய்திகள் துக்ளக்கில் இரண்டு மூன்று வாரங்கள் வரும்போது இதுவும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment