ஒரு கோழையாக முதுகெலும்பு இல்லாதவராக , தமிழக ஊடகங்களால் நடத்தப்படும் ஊடக வன்முறையை எதிர்கொண்டு, ஓ. பன்னீர்செல்வம் அவர்களை பற்றி சொல்வது என் கடமையென நினக்கிறேன் . பன்னீர்செல்வத்தை இவ்வாறு தாக்குபவர்கள் க.அன்பழகனை , நெடுஞ்செழியனை, வைகோவை இவ்வாறு சொல்வதில்லையே ஏன் .. சாதிபற்றுதானே என நான் கூறினால் , என்னை சாதி வெறியனாக மட்டையடிக்க கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும் சில உண்மை விடயங்களை கூறுவது என் கடமையென விழைகின்றேன் .
திரைத்துறையை சார்ந்தவர்கள்தான் தமிழகத்தின் முதல்வராக முடியும் எனும் துர்பாக்கிய நிலையை முறியடித்து , அரிதாரம் பூசாத, சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவனும் தமிழக முதல்வராக முடியும் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் .. சாதீய உணர்ச்சிகளை தூண்டி, கூட்டம் சேர்த்த சாதீய தலைவர்கள் கூட செய்ய முடியாத சாதனைகளை , அமைதி புரட்சியை நடத்திக்காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் . இவரில்லாமல் யார் யாரையோ புரட்சி தலைவர், தலைவி என காவடி தூக்குகிறது தமிழ் சமுதாயம் . ஆடை அவிழ்ப்பில் புரட்சி செய்தவர் தன்னை புரட்சி தலைவியாகவும், அச்சு பிச்சு கவிதை எழுதுபவர் தம்மை கலைஞராகவும், மற்ற உடண்பிறப்புகளை விட சற்றே அதிகம் படித்தவர் பல்கலைகழமாகவும் , அந்த அடையாளங்கள் கூட இல்லாதவர் தன் ஊர் பெயரை இணைத்து ஆர்க்காட்டார் , வாழ்ப்பாடியார் எனவும் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் சூழலில், முதல்வர் பொறுப்பு இருந்தபோதும் பட்ட பெயரகளை பற்றி சற்றொப்ப கூட கவலைப்படாமல் மேல்மக்கள் மேல்மக்களே என ஒவ்வொரு அரசியல்வாதியையும் வெட்கப்படவைத்தவர் அவர் .
அவர் முதல்வராக வந்த சூழல் எப்படிப்பட்டது? அமெரிக்காவிலே இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, உலகில் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொரு தமிழனும், இந்தியனும், ஏன் உலக மக்கள் ஒவ்வொருமே பயந்து கொண்டு இருந்த சூழலில், தைரியமாக நம்மையெல்லாம் காக்க நம்மில் ஒருவராக முதல்வரானவர் அவர் .அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் .
அவர் ஆட்சி சமயத்திலே டெல்லியிலே என்ன நடந்தது? நாடாளுமன்ற தாக்குதல் .. பயங்கரவாதிகள் டெல்லி நாடளுமன்றத்திலே தாக்குதல் நடத்தினர் .. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் ஏன் தமிழக சட்டமன்றத்தை தாக்க வில்லை . அந்த துணிச்சல் ஏன் அவர்கட்கு வரவில்லை . அண்ணன் பன்னீர்செலவம் அஞசா நெஞ்சம் உள்ளவர்.. தீவிரவாதிகள் வாலாட்டினால் அதை ஒட்ட அறுத்தெரிவார் என்ற பயத்தினால்தானே .
அவர் ஆட்சியிலே நடைபெற்ற கல்வி கொள்கை சீர்திருத்தம் , கவர்னர் பற்றிய டெல்லி மாநாட்டில் அனைவரின் பாரட்டையும் பெற்ற தலைவரின் உரை, கண்ணகி சிலை அகற்ற படுத்தியதால் திணிக்கப்பட்ட போராட்டம் , இந்தியா டுடே போன்ற பார்ப்பணீய ஏடுகள் அவர்க்கு எதிராக் நடத்திய ஊடக வன்முறை போன்றவற்றை அடுத்தடுத்த படிவுகளில் பதிகிறேன்,. நன்றி ..
ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும் - ஒரு அலசல் Part-I
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
"இவரில்லாமல் யார் யாரையோ புரட்சி தலைவர், தலைவி என காவடி தூக்குகிறது தமிழ் சமுதாயம் . ஆடை அவிழ்ப்பில் புரட்சி செய்தவர் தன்னை புரட்சி தலைவியாகவும், அச்சு பிச்சு கவிதை எழுதுபவர் தம்மை கலைஞராகவும், மற்ற உடண்பிறப்புகளை விட சற்றே அதிகம் படித்தவர் பல்கலைகழமாகவும் , அந்த அடையாளங்கள் கூட இல்லாதவர் தன் ஊர் பெயரை இணைத்து ஆர்க்காட்டார் , வாழ்ப்பாடியார் எனவும் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் சூழலில், முதல்வர் பொறுப்பு இருந்தபோதும் பட்ட பெயரகளை பற்றி சற்றொப்ப கூட கவலைப்படாமல் மேல்மக்கள் மேல்மக்களே என ஒவ்வொரு அரசியல்வாதியையும் வெட்கப்படவைத்தவர் அவர் ."
அந்த அரசியல்வாதிகளில் புரட்சித் தலைவியையும் சேர்த்துவிட்டீர்களா? போச்சு எல்லாம் போச்சு. இம்மாதிரி அனுகூல சத்ரு எனக்கு தேவையா என்று ஓ.பி. அவர்கள் புலம்பப்போவது நிச்சயம் என்று பட்சி கூறுகிறது.
அடுத்தப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
:-) :-)
///அவர் முதல்வராக வந்த சூழல் எப்படிப்பட்டது? அமெரிக்காவிலே இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, உலகில் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொரு தமிழனும், இந்தியனும், ஏன் உலக மக்கள் ஒவ்வொருமே பயந்து கொண்டு இருந்த சூழலில், தைரியமாக நம்மையெல்லாம் காக்க நம்மில் ஒருவராக முதல்வரானவர் அவர் .அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் .
அவர் ஆட்சி சமயத்திலே டெல்லியிலே என்ன நடந்தது? நாடாளுமன்ற தாக்குதல் .. பயங்கரவாதிகள் டெல்லி நாடளுமன்றத்திலே தாக்குதல் நடத்தினர் .. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் ஏன் தமிழக சட்டமன்றத்தை தாக்க வில்லை . அந்த துணிச்சல் ஏன் அவர்கட்கு வரவில்லை . அண்ணன் பன்னீர்செலவம் அஞசா நெஞ்சம் உள்ளவர்.. தீவிரவாதிகள் வாலாட்டினால் அதை ஒட்ட அறுத்தெரிவார் என்ற பயத்தினால்தானே .///
எல் எல் தாஸு,
சீரியஸாய்த்தான் சொல்கிறீர்களா ???
அவர் முதல்வராக வந்த சூழல் எப்படிப்பட்டது? அமெரிக்காவிலே இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, உலகில் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொரு தமிழனும், இந்தியனும், ஏன் உலக மக்கள் ஒவ்வொருமே பயந்து கொண்டு இருந்த சூழலில், தைரியமாக நம்மையெல்லாம் காக்க நம்மில் ஒருவராக முதல்வரானவர் அவர் .அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் .
அவர் ஆட்சி சமயத்திலே டெல்லியிலே என்ன நடந்தது? நாடாளுமன்ற தாக்குதல் .. பயங்கரவாதிகள் டெல்லி நாடளுமன்றத்திலே தாக்குதல் நடத்தினர் .. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் ஏன் தமிழக சட்டமன்றத்தை தாக்க வில்லை . அந்த துணிச்சல் ஏன் அவர்கட்கு வரவில்லை . அண்ணன் பன்னீர்செலவம் அஞசா நெஞ்சம் உள்ளவர்.. தீவிரவாதிகள் வாலாட்டினால் அதை ஒட்ட அறுத்தெரிவார் என்ற
அண்ணாச்சி.!
சிரிச்சு சிரிச்சு குடல் அறுந்து போச்சி.
அண்ணாசி நீங்க நிதானத்தில் தான் இதனை எழுதினீங்களா?
லபக்குதாசு ஒன்னுமே புரியலை, இது என்ன சீரியசான கட்டுரையா? வேடிக்கையாக எழுதப்பட்டதா?
இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என எனக்கு புரியவில்லை . இதுகூட புரியாமல் தடுமாற்றத்திலிருக்கும் இந்த தமிழ் சூழல் மிக அலுப்பாக உள்ளது .. மிகவும் அலுப்புடனே இந்த பின்னூட்டத்தையும் இடுகிறேன் ..
எத்தனை உயிர்களின் சமாதியினால் வைகோ கட்சி தலைவராய் உள்ளார் ... அன்புமணி பதிண்மரில் ஒன்றாக, ஒரு மத்திய அமைச்சராக எத்தனை பேர் தன்னுயிரை ஈந்துள்ளனர் ..அண்ணன் ஓ.பி அவர்கள் , யாரும் இரத்தம் சிந்த வைக்காமல், காந்திய நெறியில் முதல்வர் பதவி அடைந்தார்.. மிகவும் அலுப்பாக உள்ளது.. அடுத்தடுத்த பதிவுகளில் மற்றவற்றை கூறுகிறேன் .
//எல் எல் தாஸு,
சீரியஸாய்த்தான் சொல்கிறீர்களா ???
//
//அண்ணாச்சி.!
சிரிச்சு சிரிச்சு குடல் அறுந்து போச்சி.
அண்ணாசி நீங்க நிதானத்தில் தான் இதனை எழுதினீங்களா?
//
என்ற பின்னூட்டங்களை பார்த்து சற்று குழம்பிவிட்டேன் அவ்வளவே
திரு.ஓ.பி.எஸ் அவர்களின் எளிமை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, எஸ்.ஆர்.பொம்மை, தற்போது உமாபாரதி அவர்கள் ராஜினிமா செய்த பொழுது பதவியேற்ற அவரது ஆதரவாளர் மாதிரி முதுகில் குத்தாமல் முதன்மந்திரியாக்கிய ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தது எல்லாம் நிச்சயம் பாராட்டுக்குறியதே. ஒ.பி.எஸ். மாதிரியான ஒருவர் கிடைத்ததற்கு நிச்சயம் ஜெயலலிதா அவர்கள் அதிட்டம் செய்திருக்க வேண்டும்
குழலி,
ஒ.பி.யின் எளிமையும், அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருப்பதும் பெரிய விஷ்யங்கள்தான்.
முதல்வர் பதவியைவிடுங்கள். சாதாரண சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தவுடன், அமைச்சர் பதவி கிடைத்தவுடன் தலைமையை முதுகில் குத்தும் சம்பவங்கள் பா.ம.க-வில் நடப்பது தெரிந்த ஒன்றுதானே?. ஜெவின் ஓ.பி-போல் பா.ம.க வில் நம்பிக்கைக்குரிய ஒருவர் யாரும் இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டும்.
முத்து ..வழிமொழிகிறேன் ..தலைவன் எவ்வழி ...
//தலைமையை முதுகில் குத்தும் சம்பவங்கள் பா.ம.க-வில் நடப்பது தெரிந்த ஒன்றுதானே?. ஜெவின் ஓ.பி-போல் பா.ம.க வில் நம்பிக்கைக்குரிய ஒருவர் யாரும் இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டும்.
//
நம்பிக்கை துரோகிகள் பாமகவில் மட்டுமல்ல, எல்லா கட்சிகளிலும் உண்டு, கன்ஷிராம் இருக்கும்போதே கட்சியை கைப்பற்றிய மாயவதியிலிருந்து, சந்திரபாபு நாயுடுவிலிருந்து தமிழகத்திலும் ஒரு மிகப்பெரிய பட்டியலிடலாம், எனவே தனியாக பாமகவை மட்டும் குறிப்பிடவேண்டாம்
//எல் எல் தாஸு said...
முத்து ..வழிமொழிகிறேன் ..தலைவன் எவ்வழி ...
//
மருத்துவர் இராமதாசுவின் முதுகில் தான் துரோகிகளின் குத்து விழுந்ததேயொழிய அவர் யார் முதுகிலும் குத்தவில்லை.
நான் உங்க ரசிகைன்னு விஜயகாந்த பாத்து ஒரு பெண் சொன்னா அவர் எவ்வளவு அதிர்ச்சி அடைவாரோ, அத விட அதிர்ச்சி அண்ணன் ஒபிஎஸ் அவர்கள் இந்த பதிவ பாத்து அடைந்திருப்பார். மரம் வெட்டாமல்/மரம் நடாமல், தமிழ் வளர்க்காமல்/தமிழ் அழிக்காமல் அவர் முதல்வாரனைத்தான் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது'ன்னு சொன்னாங்களோ.... வருங்கால முதல்வர், எதிர்கால பிரதமர், அருமை தளபதி, அகில இந்திய அண்ணன் ஒபிஎஸ் நற்பணி மன்றத்தின் சார்பில சீக்கிரமா மத்த பதிவையும் எழுதுங்க எண்டு வரவேற்கிறேன்... (ஆமா லாடு லபக்கு தாஸ¤தானே எல் எல் தாஸின் சுருக்கம்?)
//மரம் வெட்டாமல்/மரம் நடாமல், தமிழ் வளர்க்காமல்/தமிழ் அழிக்காமல் அவர் முதல்வாரனைத்தான்//
அப்படியே இறந்து போன எம்ஜியாரின் தலைமாட்டில் உட்கார்ந்தும் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்,
இதையும் குறிப்பிட மறந்துவிட்டீர்களா? இல்லை குறிப்பிடவிரும்பவில்லையா?
அது என்னவென்றே தெரியவில்லை இராமதாசுவும்,கருனானிதியும் இவர்களிடம் வாங்கும் மட்டையடியைப்போல் ஜெயலலிதா வாங்குவதில்லை
அட நம்ம ஜனங்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைஞ்சுகிட்டே வருது.
அரசியலில் வெட்கம் கெட்டு கட்சி மாறிய்வர்கள் பலருண்டு ..'நிரந்தர பகைவர், நண்பர்....' மொழி பேசி தாவும் ஜெ, நேருவின் மகளிடமும், இத்தாலிய மருமகளிடமும், பூசாரிகளிடமும் தாவும் கருணாநிதியும், கம்னியூஸ்ட், காங்கிரஸ், மற்ற திராவிட மற்றும் ஜாதி கட்சிகள் என எல்லாமே விதி விலக்கற்று அந்த தாவுதலை செய்துள்ளன ..
ஆனால் இவர்களுக்கும் ராமதாசுக்கும் உள்ள வேறுபாடு.. ' அ தி மு க வுடன் இனி எந்த காலத்திலும் உடன்பாடு கொள்ளமாட்டேன்..' என கூறியபோது அவர் கூறிய உதாரணம் எந்த நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் சொல்ல கூசும் வசனம் . பின்னர் '(தன் தாயையே கேவலப்படுத்தும் விதமாக) ஜெயுடன் கூட்டணி வைத்தது மகா மகா கேவலம் என்பதை ..நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்
தாசு சார்..
அண்ணன் ஓ பி எஸ் பற்றிய நல்ல பதிவு ..நன்றி .தொடருங்கள் ..
///நம்பிக்கை துரோகிகள் பாமகவில் மட்டுமல்ல, எல்லா கட்சிகளிலும் உண்டு, கன்ஷிராம் இருக்கும்போதே கட்சியை கைப்பற்றிய மாயவதியிலிருந்து, சந்திரபாபு நாயுடுவிலிருந்து தமிழகத்திலும் ஒரு மிகப்பெரிய பட்டியலிடலாம், எனவே தனியாக பாமகவை மட்டும் குறிப்பிடவேண்டாம்///
குழலி,
ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன். அங்கே தலைமைக்குக் கீழே உள்ள்வர்கள் துரோகம் செய்தால், பல கட்சிகளில் கொஞ்சம் வளர்ந்தவரைக் கட்சியைவிட்டே ஓரம் கட்டும் வேலை நடக்கிறது, அதுவும் அதை முன்னால் நின்று நடத்துவது அக்கட்சிகளின் தலைமை.
குழலி ..
எங்கள் கேள்விகளுக்கு பதில் எப்போது வரும்??
//குழலி ..
எங்கள் கேள்விகளுக்கு பதில் எப்போது வரும்?? //
மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் பகுதி 4 எழுதிக்கொண்டுள்ளேன் அதில் பதில் சொல்கின்றேன்
உங்கள் 4-ஆம் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
உங்க இரண்டாம் பாகம் சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க லாடு... உங்க சீரிஸ் முடியனும்னு அண்ணன் ஒபிஎஸ்க்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறத வேற தள்ளி போட்றுக்கேன். (செயலாளர் பதவி வேணுன்னா தாரேன், ஆனா அப்புறம் பொதுக்குழுவ மிரட்டி உங்க புள்ளக்கி பதவியெல்லாம் கேக்க கூடாது. முக்கியமா என்ன கவுத்து தலைவர் பதவிய கைப்பத்த கூடாது)
//அது என்னவென்றே தெரியவில்லை இராமதாசுவும்,கருனானிதியும் இவர்களிடம் வாங்கும் மட்டையடியைப்போல் ஜெயலலிதா வாங்குவதில்லை//
குழலி நிஜம்மாவே சீரியஸாத்தான் சொல்றீங்களா? பத்திரிகைகளை எடுத்து பார்ப்போமா? யாருக்கு எதிரான கருத்துகள் அதிகம் என்று?! முழு பூசணிச்செடியையே சோற்றுப் பருக்கைக்குள் மறைய வைக்க முயலுகிறீர்களே, நியாயமா?!
கலைஞர் என பரிவுடன் சொல்லும் பத்திரிகைகள், புரட்சி தலைவி என்று ஏன் சொல்லுவதில்லை , இரண்டுமே அர்த்தமில்லாத பட்டபெயர்களானாலும் ..
இரண்டாம் பாகம் விரைவில் முகமூடி ..
:-))))
அண்ணே இரண்டாம் பாகம் சீக்கிரம் போடுங்கண்ணே.
:-))
என்ன தாஸ், எப்போ இரண்டாம் பாகம்? வலைக்கு வந்தா ஏமாற்றமா இருக்கு
//உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவனும் தமிழக முதல்வராக முடியும் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் .. //
//அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் //
டமாசு , டமாசு...எப்படி தாஸீ உனக்கு இவ்ளோ காமெடியா எழுத வருது...???
//உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவனும் தமிழக முதல்வராக முடியும் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் .. //
//அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் //
அநியாத்துக்கு நகைச்சுவை எழுத்தாளாரா இருக்காறே நம்ம தாசு!
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. அதுசரி அது யாரு .ஓ.பன்னீர்செல்வம்? கொஞ்ச நாள் ஜெயலலிதாவின் பினாமிய இருந்தாரே அந்தக கூழைக்கும்பிடு நபரா? நல்ல டாமசு...2005 சிறந்த நகைச்சுவை பதிவு. part II போடுங்கப்பா...கொஞ்சம் கவலையை மறந்து சிரிக்கலாம்!அதுசரி இவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ள நீங்கள் ஏன் திரைப்படத்துறையில் முயற்சி செய்யவில்லை தாசு?
//அந்தக கூழைக்கும்பிடு நபரா..//
அண்ணன் பெண்ணடிமைத்தனததை எதிர்ப்பவர் .. பெண்களை தெய்வமாக மதிப்பவர்.. உங்களை போன்ற ஆணாதிக்கவாதிகள் கயமை மூளைக்கு இதெல்லாம் எட்டாது ..
// நீங்கள் ஏன் திரைப்படத்துறையில் முயற்சி செய்யவில்லை தாசு? //
அனானிமஸ¤ - நான் ஒரு நாளாவது நாம் தேர்ந்தெடுத்த சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு முதல்வரால் ஆளப்பட வேண்டும் .நடக்குமா ? - ன்னு லாடு கேட்டது வாஸ்தவம்தான் அதுக்காக அவரையே முதல்வர் ஆக்கி வுட்டுடுவீங்க போலருக்கே.... அந்நிய நாட்டு சதி லாடு மாட்டிக்காதேயும்...
Post a Comment