ராமதாஸ் , திருமாவைப்போல் ஊடகத்தாக்குதலுக்குள்ளானோர் எவருமல்லர் என்பது குழலி அவர்களின் விசனம் .. இது உண்மையா..? வேறு எவரும் இவர்களைப் போல விமர்சிக்கப்படவில்லையா என்பதின் மேலோட்டமான என் எண்ணங்கள் ..
இந்திரா காந்தியின் 'எமர்ஜென்சி' காலம் இன்றும் விமர்சிக்கப்படவில்லையா? ராஜீவ் மீதான போபார்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எத்தனை கட்டுரைகள், எத்தனை மேடைப்பேச்சுகள். குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்னரே அவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவில்லையா நாமும் நம் பத்திரிகைகளும் ..
கருணாநிதியின் வாரிசு அரசியலை கேலி செய்யும் செய்திகளை பார்த்ததேயில்லையா நீங்கள் .. வைகோவை கட்சியை விட்டு நீக்கின காலக்கட்டத்தில் கருணாநிதியின்பால் விழுந்த விமர்சனங்கள் எத்தனை? ஊழலின் ஊற்றுக்கண்ணாக கருணாநிதியை கூறுகிறவர்கள் எத்தனை பேர்? .. ஜெ.வின் ஆணவ ஆட்சிக்காகவும், ஊழலுக்காகவும் , ஆடம்பர திருமணத்திற்காகவும் அவர் மேல் விழுந்த விமர்சனங்கள் கருணாநிதி அனுபவித்த விமர்சனங்களை விட குறைந்ததா என்ன?
ஜெவின் ஊழலை எதிர்த்து வைகோ தொடங்கிய நடைபயணம் போயஸ் தோட்டத்தில் நிறைவு பெற்றப்பொது வைகோவுக்கு விழுந்த ஊடக அடிகள் எத்தனை? அவர் தி மு க வுடன் திரும்பவும் கூட்டணி அமைத்துக்கொண்டபோது அவர்க்கு கிடைத்த விமர்சங்கள் மறந்துவிட்டதா?
அத்வானியின் தேர்பயணத்திற்கும் , பாபர் மசூதி இடிப்பிற்கும் பத்திரிகைகளில் விமர்சனம் இல்லையா என்ன? குஜராத் படுகொலைகளுக்கு மோடியின் மேல் விழுந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடக விமர்சனங்கள் எத்தனை ?
ஏன் ரஜினி , விஜய்காந்த் போன்றோரின் திரைப்பட வசனங்களுக்காக அவர்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டதில்லையா என்ன?
மோடியின் குஜராத் படுகொலைகளையோ , மசூதி இடிப்பையோ , வாரிசு , ஆடம்பர, ஊழல் அரசியலையோ நியாபடுத்தவில்லை நான் .. ஒவ்வொருவர் செய்த வினைகளுக்கு தகுந்த எதிர்வினைகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள் என்பதே என் கருத்து .
மரம் வெட்டியதும், வாரிசு அரசியலும் , ஆபாச பேச்சுக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது எனறு நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை .. திருமா விடயத்தில் அவரின் தலித் முன்னேற்ற பணிகள் விமர்சிக்கப்படவில்லை(ஆதரிக்கப்படவில்லையெனினும்) .. அவரின் ராஜினாமா பலராலும் பாராட்டவேப்பட்டது .. நான் முன்பே கூறியது போல சிறிதும் முக்கியமும் அவசியமும் இல்லாத திரைப்பட பெயர் மாற்றம் போன்ற அரசியலே விமர்சிக்கப்பட்டது ..ராமதாஸ் , திருமா கூட்டணி குறித்தான விமர்சனங்களும் தி மு க , ம தி மு க கூட்டணி குறித்தான விமர்சனங்களை ஒத்ததே என எண்ணுகிறேன் .
வேண்டுமானால் உங்களுக்காக ராமதாஸுக்கு என்னாலான ஊடகத்தடவல் ..
தமிழ்நாட்டின் நலனுக்காக தன் தாய்மேல் பழி வந்தாலும் பரவாயில்லை என ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நம் அன்பு தலைவர் , தன் மகனை இந்திய நலனுக்காக மந்திரியாக்கி தியாகம் புரிந்தவர் .. தன் வாரிசுகளிடமிருந்து தமிழைக் காப்பாற்ற அவர்களுக்கு ஆங்கில கல்வி கொடுக்குமளவுக்கு தமிழுணர்வு மிக்கவர் .
வினை எதிர்வினை
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
நியூட்டனின் மூன்றாவது விதி எங்கெல்லாம் பயன்படுகிறது என்று சொல்கிறீர்களா?
தாஸ¥,
நல்ல பதிவு !
யப்பா ! சாமீயோவ் !
வாழைப்பழத்தில் ஊசி ஏத்தறதுலே நீர் எக்ஸ்பர்ட் :)
எ.அ. பாலா
விமர்சிக்கப்படுவதற்கும் காழ்ப்புணர்ச்சியோடு மட்டை அடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது, சேது சமுத்திரத்திட்டம் பற்றி பேசும்போது கூட சமுத்திரம் என்று ஏன் பெயர் வைத்துள்ளனர் என மட்டையடிக்கப்பட்டார் மருத்துவர் இராமதாசு, அதற்கு இராம.கி அய்யா அவர்கள் விளக்கம் கூறினார் http://merkondar.blogspot.com/2005/06/blog-post_30.html
அந்த பதிவில் சொல்லப்பட்ட விடயங்களுக்கும் மருத்துவருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா, அங்கே ஒரு மட்டையடி தேவையா? இது மாதிரி வலைப்பதிவுகளிலே ஆயிரம் உதாரணம் காட்ட முடியும்,
தெருவில் இறங்கிய யாரும் விமர்சனத்திற்கப்பார்பட்டவர்கள் அல்ல, ஆனால் விமர்சனம் ஒரே அளவுகோலோடு உள்ளதா?
ஒரு விதத்தில் திருமாவையும் மருத்துவர் இராமதாசுவையும் அவர்கள் தொண்டர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு இது மாதிரியான விமர்சனங்களே முக்கிய காரணம், இந்த விதத்தில் திருமாவும், மருத்துவரும் பத்திரிக்கைகளுக்கு நன்றி கூற வேண்டும்.
மருத்துவர் இராமதாசுவின் மிகப்பெரிய பலவீனம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேசுவது, அது அவரது இயல்பு ஆனால் அது தான் அவரின் மிகப்பெரிய பலமும்.
காலமெல்லாம் சாதிச்சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு சாதிகள் இன்று ஒரு தளத்தில் இயங்குகின்றன, மேல்மட்ட அளவில் ஒன்று சேர்ந்திருக்கும் அளவிற்கு தொண்டர்கள் அளவில் இல்லையென்றாலும் முறைத்துக்கொண்டு திரிந்த காலம் போய் இப்போது இணக்கமான பார்வை பரிமாற்றங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன, வட தமிழகத்திலே அரசாங்கங்களால் செயல்படுத்த முடியாத ஒரு அமைதிச்சூழலை திருமாவும் மருத்துவரும் நடைமுறைப்படுத்தியுள்ளனர், இதற்கு பாராட்டவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் இருவரும் ஒரு தளத்தில் இயங்குவதற்கு எத்தனை எத்தனை ஏச்சுக்கள், எப்போதுமே இவர்கள் பகையாளிகளாகவே இருக்க வேண்டுமென்ற எண்ணமா??
குசராத் படுகொலைகளும், ஊழலும் இன்னபிற சம்பவங்கள் நீங்கள் குறிப்பிட்டதும் திருமா, இராமதாசுவின் செயல்களையும் ஒன்றாக ஒரே தட்டில் எடை போடுமளவிற்கு சாதாரண விடயங்களா??
குசராத் படுகொலைகளுக்கு சரியான அளவில் எதிர்ப்பு காண்பிக்கப்படவில்லை, அப்படி எதிர்ப்பு காண்பித்து மோடியின் பதவி பறிக்கப்பட்டதா?? இல்லையே?
//மரம் வெட்டியதும், வாரிசு அரசியலும் , ஆபாச பேச்சுக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது எனறு நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை .. //
பல இடங்களில் கூறியதுதான் விமர்சனம் விமர்சனமாக இருக்க வேண்டும் காழ்ப்புணர்ச்சியோடு அணுகப்படக்கூடாது அது தான் எமது வேண்டுகோள், நடுநிலை என கூறிக்கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் கடைபிடிப்பது எந்த விதத்தில் நியாயம்??
மருத்துவரையும் திருமாவையும் இத்தனை மூர்க்கமாக தாக்குபவர்கள் மற்ற பலரை தொடுவது கூட இல்லையே? ஏன்? கேட்டால் இதில் ஒரு கரண்டி அதில் ஒரு கரண்டி என ஜல்லியடிப்பார்கள்
மணிக்கூண்டு சிவா எழுதிய திருமாவின் சிங்கப்பூர்பயணத்திற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட பதிவை விமர்சனம் என சொல்வீர்களா, நகைச்சுவை என சொல்வீர்களா? அது காழ்ப்புணர்ச்சியில்லையா??
ஆகா ஒரு பதிவாகவே போட்டிருக்கலாம்....
//திருமா, இராமதாசுவின் செயல்களையும் ஒன்றாக ஒரே தட்டில் எடை போடுமளவிற்கு சாதாரண விடயங்களா??//
இல்லை.. இல்லை.. இல்லை..
மனுஷனை வெட்டுனவங்கள மரத்த வெட்டுனவங்களோட நா எட போட்டா நா மனுஷனே கிடயாது..
//அப்படி எதிர்ப்பு காண்பித்து மோடியின் பதவி பறிக்கப்பட்டதா?? //
மனுஷன வெட்டுனவர் பதவியிலே இருந்துட்டார் .. மரத்த வெட்டுனவர் புது பதவிகளை புடுச்சுட்டார் . இப்படிப் போச்சு நம்ம ஜனநாயகம் .
//அப்படி எதிர்ப்பு காண்பித்து மோடியின் பதவி பறிக்கப்பட்டதா?? //
ராமதாஸ் விடயத்திலும் பதவி பறிப்போ , தண்டனைகளோ இல்லையே .. ஊடகத்தாக்குதல் மட்டும்தானே ..மோடி விடயத்தில் ஊடக விமர்சனங்கள் தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல உலக அளவில் இருக்கிறது .. அமெரிக்க விசா மறுக்கப்பட்டது அதில் ஒன்று ..மருத்துவர்க்கு அப்படியா நடக்கிறது.. அதனால்தான் வினைக்கேற்றளவு எதிர்வினை என்றேன் ..கொலைக்குற்றத்திற்கான தண்டனை தூக்கு என்றால் அதனை அனுபவிக்கவேண்டியவர் மோடி ..
மற்றவர்கள் உடைத்தால் மண்குடம் திருமாவும், இராமதாசுவும் குடம் உடையாவிட்டாலும் கீழே தூக்கிப்போட்டாலே அது பொன்குடம் இது தான் அளவுகோலாக பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது, உதாரணம் வலைபதிவர்களின் பதிவுகளிலேயே காணலாம்
குழலி இதனையும் ஒரு முறை பார்த்து விடுங்கள்.
http://karikaalan.blogspot.com/2005/06/blog-post_29.html
இப்பதிவின் பின்னூட்டங்கள் ஒரே அளவுகோலோடு உள்ளதா... இதில் ராமதாஸ¤க்கு ஆதரவான வார்த்தைகள் 288, எழுத்துக்கள் மட்டும் 2569(இடைவெளி கணக்கெடுக்காம்ல்), 2867(இடைவெளியோடு)... எதிர்ப்பாக இதுவரை ஒரு வார்த்தை இல்லை... ஏன் இந்த பாரபட்சம்... அவர் OBC என்பதாலா... ஏன் இந்த முக்கியத்துவம்... அவரையும் ஏன் மற்ற எல்லாரையும் போல் மதிக்க(எதிர்க்க) மாட்டேன் என்கிறீர்கள்... அவரின் எந்த செய்கையும் எதிர்க்கும் அளவு இருக்காது என்றாலும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தால் ஏதாவது கிடைக்காதா... இந்த பாரபட்சம் காழ்ப்புணர்ச்சியில்லையா
முகமூடி { நீங்கள் காலமெல்லாம் தேடி அலைந்த லிங்க் கைக்கெட்டும் தூரத்தில்}
குழலி., ராமதாஸின் அரசியலுக்கு, முன்பிருந்து அரசியல் செய்யும் கலைஞரைத் தாக்குவதைவிடவா ராமதாஸ், திருமாவைத் தாக்கி விட்டார்கள்?. ஆனால் நீங்கள் சொல்வதை நானும் வழிமொழிகிறேன். இங்கு விமர்சனம் என்பதே காழ்ப்புணர்வுதான். எதை எதையோ எழுத வேண்டும் என நினைத்து உள்ளே வந்த நான்கூட அதெல்லாம் இங்கு எடுபடாவிட்டால்கூட பரவாயில்லை., நம் நோக்கத்தையே திசை திருப்பி விடுவார்களோ என அஞ்ச வேண்டியிருக்கிறது. நம்மையும் காழ்ப்புணர்வோடு எழுத தூண்டுவது மற்றுமொரு வேதனை.
வாங்க வாங்க கரிகாலன், அப்டிபோடு (Customer Service).
அப்டிபோடு,
//கலைஞரைத் தாக்குவதைவிடவா ராமதாஸ், திருமாவைத் தாக்கி விட்டார்கள்?.//
ஜெ. மீதான ஆபாச விமர்சினங்களை விடவா?? கருணாநிதி மலையாளி , கூத்தாடி என MGR யை விமர்சித்தது காழ்ப்புணர்ச்சி இல்லையா?
குழலி ,
//
சேது சமுத்திரத்திட்டம் பற்றி பேசும்போது கூட சமுத்திரம் என்று ஏன் பெயர் வைத்துள்ளனர் என மட்டையடிக்கப்பட்டார் மருத்துவர் இராமதாசு,//
நுழைவுத்தேர்வு விடயத்தில் 'முட்டாள்' அதிகாரிகளை 'தமிழினத்துரோகிகள்' என மட்டையடிக்கும் ராமதாஸ் , இந்த மாதிரியான மட்டையடிப்புக்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் .
//
வலைபதிவர்களின் பதிவுகளிலேயே காணலாம் //
கணக்கெடுங்கள் .. எத்தனை வலைப்பதிவர் திருமாவுக்கு ஆதரவாக எழுதிகிறார்கள்.. எத்தனை பேர் எதிர்க்கிறார்கள் ..வலைப்பூ உலகில் ரஜினிக்கும் ராமதாஸுக்கும் வேண்டுமானால் ஒரே அளவு எதிர்ப்பு இருக்கிறது ..திருமாவுக்கு இல்லை .. உங்களின் 'கூட்டணி யுக்தி' புரிகிறது .
//ஜெ. மீதான ஆபாச விமர்சினங்களை விடவா?? கருணாநிதி மலையாளி , கூத்தாடி என MGR யை விமர்சித்தது காழ்ப்புணர்ச்சி இல்லையா? //
விவாதம் திசை மாறுகின்றது, இங்கே கருணாநிதி MGR ஐ விமர்சிப்பதோ ஜெயலலிதாவை விமர்சிப்பதோ விடயமல்ல....
எம்ஜியாரை எத்தனை பத்திரிக்கைகள் மலையாளி என்று விமர்சித்தன??
எத்தனை பத்திரிக்கைகள் ஜெயலலிதாவின் மீது ஆபாச விமர்சனம் வைத்தன?
இல்லையே...
நடுநிலை பத்திரிக்கைகள் அவ்வாறு செய்யவில்லையே...
அரசியல்வாதிகள் அவர்களுக்குள் விமர்சித்துக்கொள்வதை நாம் கணக்கிலேயே எடுப்பதில்லை
ஆனால் பத்திரிக்கைகள், நடுநிலை நடுநிலை என்று பேசிக்கொண்டு எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்கின்றன...
இங்கே வலைப்பதிவர்களிலும் ஆமாம் எங்களுக்கு காழ்ப்புணர்சிதான் அதனால் தான் எதிர்க்கின்றோம் என்று கூறினால் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் நடுநிலை நாயகன் போல பேசிவிட்டு மட்டையடி மட்டும் ஒரு குறிப்பிட்ட சில பேருக்கு என்றால் என்ன நியாயம் அது....
மீண்டும் சொல்கிறேன் அரசியல் வாதிகள் அவர்களுக்குள் விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது....
ஆனால் நடுநிலை வலைப்பதிவர்கள் என கூறிக்கொள்பவர்களும், நடுநிலைப்பத்திரிக்கைகளும் விமர்சிக்கும்போது விமர்சனமாக மட்டுமே இருக்க வேண்டும், இல்லையென்றால் அது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்றுதான் எண்ணப்படும்....
அது சரி உங்கள் பதிவுகளில் தான் காழ்ப்புணர்ச்சி தென்படவில்லையே பிறகு நீங்கள் ஏன் இப்படி பதிவெழுதுகின்றீர், மற்றவர்களின் குரலை ஒலிக்கின்றீரா?
/அது சரி உங்கள் பதிவுகளில் தான் காழ்ப்புணர்ச்சி தென்படவில்லையே பிறகு நீங்கள் ஏன் இப்படி பதிவெழுதுகின்றீர், //
உங்களுக்கு ஆறுதல் அளிக்கத்தான் ..;)
விவாதம் திசை மாறுகின்றது..
ஆம் ..நான் நீங்கள் அவர்களையும் சேர்த்துதான் ஆதங்கப்படுகிறீர்கள் என நினைத்து எழுதிவிட்டேன் . பத்திரிகைகளையும், பதிவர்களையும் மட்டுமே சொல்லுகிறீர்கள் எனில் ..
பதிவர்கள் புதியவர்கள் ...தற்போதைய நிகழ்வுகளுகளின் தாக்கம்தான் அதிகமிருக்கும் ..
பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் , தினமலர் படித்து ராமதாஸ் மீதான் தாக்குதல் அதிகமென்றும் , நமது எம் ஜி. ஆரும், துக்ளக்கும் படித்துவிட்டு கருணாநிதி மீதான தாக்குதல் அதிகமென்றும் , முரசொலியும், தினகரனும், நக்கீரனும் படித்துவிட்டு ஜெ மீதான தாக்குதல் அதிகமென்றும் கூறுவது சரியானதாகத்தெரியவில்லை ..
இங்கு பின்னூட்டமிட்ட அண்ணாச்சி , அன்புடன் பாலா, கரிகாலன் , அப்டிபோடு, குழலிக்கு நன்றி.
எனக்கு என்ன என்னவோ சொல்லணும் போல இருக்கு.. சொன்னா ஒத்துக்கவா போறாங்க?! அட.. ஜெ. மீது பத்திரிகைகள் தொடுத்த தாக்குதலை விடவா வேறொருவர் மேல் வந்து விடப்போகிறது?!
//நான் நீங்கள் அவர்களையும் சேர்த்துதான் ஆதங்கப்படுகிறீர்கள் //
அடடா தாசு அவங்க பேசுறதை கணக்கிலேயே எடுக்காதிங்க, இன்னைக்கி அடிச்சிப்பாங்க நாளைக்கு கூடிப்பாங்க, அதே மாதிரி நடிகர்கள் பேசுறதையும் கணக்கில் எடுத்துக்காதிங்க இன்னைக்கு ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாதுனு ஸ்டைலா சொல்லிட்டு நாளைக்கி கையகட்டிக்கிட்டு தைரியலஷ்மினு சொல்லுவாங்க...
//தினமலர் படித்து ராமதாஸ் மீதான் தாக்குதல் அதிகமென்றும் //
தினமலரையும் துக்ளக்,முரசொலி,நமது எம்ஜியார் வரிசையில சேர்த்துட்டிங்க... ஆனா நடுநிலை நாளிதழ்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றாங்க அப்போ சரி இனி தினமலர் சொல்றதையெல்லாம் கணக்கிலெடுக்க வேண்டாம், அப்போ இந்த குமுதம்,விகடன் அதனோட ஜீனியருங்க, கல்கி இதெல்லாம் எந்த கணக்கில சேர்க்கிறதுனு சொல்லிட்டிங்கனா நல்லா இருக்கும்
//பதிவர்கள் புதியவர்கள் ...தற்போதைய நிகழ்வுகளுகளின் தாக்கம்தான் அதிகமிருக்கும் ..//
தற்போதைய நிகழ்வுகளின் தாக்கத்தை எல்லோரும் பத்திரிக்கை வாயிலாகத்தானே பார்க்கின்றனர், ஏற்கனவே பாமகவையும் திருமாவையும் அப்படித்தானே அவர்கள் பார்த்தனர், அதன் வெளிப்பாடுதான் பதிவுகளில் வெளிப்படுகின்றன....
//ஜெ. மீது பத்திரிகைகள் தொடுத்த தாக்குதலை விடவா வேறொருவர் மேல் வந்து விடப்போகிறது?! //
100 கோடி செலவில் யாருமே செய்யாத வளர்ப்பு மகன் திருமணத்தையா அவங்க செய்துட்டாங்க....
திட்டத்தில ஊழலிருக்கும், ஊழல்லதான் திட்டமேனு யாருமே செய்யாததையா அவங்க செய்துட்டாங்க
ஒரு ஏக்கர்ல இரண்டரை கோடி வருமானம் வருகின்ற திராட்சை தோட்டத்தை வைத்து விவாசாயம் செய்த அவங்களைப்போயி ஊடகவன்முறை செய்யறாங்களே...
உயிரோட 60 பேரை ரெயில் பெட்டியோட வைத்து கொளுத்தினது இருக்கும்போது பஸ்ஸோட 3 பேர கொளுத்தினதைப்போயி பெருசா பேசுதுங்க இந்த பத்திரிக்கைங்க
இந்த சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம் ஊடகவன்முறை நடத்துகின்றபோது இதையெல்லாம் கேட்காம இந்த குழலி வாரிசு அரசியல்,கூட்டணி மாற்றம்,இன்ன பிற யாருமே செய்யாத பாதக செயலை செய்த இராமதாசு மேல ஊடக வன்முறைனு சொல்றாரே, அவருக்கு ஏதாவது மண்டையில இருக்கா அப்படினு கேட்கறிங்க புரியுதுங்க புரியுது மாயவரத்தான்...
நன்றி தமிழன் அவர்களே ..
மாயா சொல்லுவதுபோல் ஜெயலலிதா போல பத்திரிகை விமர்சினத்துக்குள்ளானோர் யாருமிலர்.. அது குழலி சொன்னது போல சரியான காரணங்களுக்காகவே ..அதற்கடுத்த நிலையில் ராமதாஸ் வருவார் ... அதுவும் சரியான காரணங்களுக்காகவே..மரம் வெட்டியது தவறில்லை அதை சுட்டிக்காட்டினால் ஏன் பதறுகிறீர்கள் ..உப்பு தின்னவன் தண்ணி குடித்துதான் ஆகனும் ..
கணேசன் கேள்வி நச்சின்னுதான் இருக்கு ... நன்றி கணேசன் வருகைக்கும் கேள்விக்கும் ...
//அய்யா இராமதாசு தமிழகத்துக்குச் செய்த ஒரே ஒரு நன்மையை மட்டும் கூறுங்கள் .//
ஒரு நடிகரின் மாய பலத்தை உடைத்தெறிந்தாரே அது ஒன்று போதாதா?
இருந்தாலும் உமக்காக சொல்கின்றேன்...
கச்சத்தீவு பிரச்சினைக்காக போராடுகின்றார்,
பொடாவென்றாலும் தடாவென்றாலும் பயப்படாமல் ஈழத்தமிழர் ஆதரவு நிலை கொண்டுள்ளார்
பாமக வை சேர்ந்த மூர்த்தி வேலு ஆகியோர் இரயில்வே துறை மந்திரியாக இருந்த இருக்கும் போது எத்தனை அகலபாதை போடப்பட்டுள்ளது எத்தனை புதிய இரயில்கள் விடப்பட்டுள்ளது
சுகாதாரத்துறைக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு தமிழக அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் பறிபோகாமல் காப்பாற்றியது
மொத்தமே இரண்டுதுறைதான் அதிலும் ஒன்றில் இனை அமைச்சர் பதவிதான் எனவே செய்தவைகளுக்கு பத்திரிக்கைகள் அதிக விளம்பரம் தருவதில்லை
ஓடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரவேசம் மருத்தவரால்தான் நிகழ்ந்தது
படித்த பண்பாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட வைத்தது...
ஏ.கே. மூர்த்தி தவிர மற்ற அத்தனை பாமக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேராசிரியர்கள், முன்னாள் இ.ஆ.ப. அதிகாரி, முனைவர்
பாமக உறுப்பினர்கள் தன்ராஜ் மற்றும் மூர்த்தியின் செயல் வேகம் அனைவரும் அறிந்ததே...
வடதமிழ்நாடு இன்று அமைதிப்பூங்காவாக இருக்க காரணம் திருமாவும் மருத்துவரும் தான், இனி எந்த அரசும் மோதவிட்டு இரத்தம் குடிக்க முடியாது
இத்தனைக்கும் மேலே இன்றைக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அரசியல்,பொருளாதாரம், வாழ்க்கைமுறை, கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற காரணாமாக இருந்தவர்...
நண்பர்களே, என்னுடைய வலைப்பூவில் மனநோயாளியின் பார்வை பட்டுள்ளதால் , இதன் பின்னூட்ட வசதியை நீக்கிவிட்டுள்ளேன்.. இன்றும் சில நாட்களாவது வலைப்பூக்கள் பக்கம் வராமல் இருக்கலாம் என் எண்ணியுள்ளேன் . அந்த நோயாளி குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.. வேறு ஒன்றும் செய்யமுடியாது ..
Post a Comment