படம் டிபிக்கல் ஷங்கர் பார்முலாவுக்குள் அடங்குகிறது. அநியாயங்களைத் தட்டிக் கேட்க தள்ளப்படும் சாதாரணமான கதாநாயகன், ஆங்காங்கே புகுத்தப்பட்ட கிராபிக்ஸ், கொஞ்சமாய் ரிசர்ச் செய்து சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயமாக ‘கருடபுராணம்’ .அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூடா எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது?
அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே .ரூல்ஸ் ராமானுஜமாக இருக்கும் அம்பியின் காரெக்டரில் நல்ல நகைச்சுவை மற்றும் நறுக் நாட்டு நல சிந்தனைகள். அன்னியனா அம்பியா என்று கேட்டால், அன்னியன் காரெக்டருக்குத் தான் முதல் பரிசு.
இன்னொரு ஹீரோ பீட்டர் ஹெய்ன்! ஆக்ஷன் காட்சிகளோ பிரமிப்பு வகை ..குறிப்பாக , கராத்தே ஸ்கூலில் ஏழெட்டு டஜன் ஆட்களை மூர்க்கமாக விக்ரம் அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி. பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.
விவேக் - வாரே வாவ். நீண்ட நாளுக்கப்புறம் ஒரு கலக்கல் காமெடி செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார்.
சதா அழகாயிருக்கிறார். பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.அந்நியனிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும் அந்த சில நிமிடங்களில் சதாவிடமிருந்து அருமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குனர். சதா சாதா..
லுங்கி கட்டிகொண்டு, சுத்தமற்ற தன்மையில் சைக்கிளில் செல்லும் கருப்பு நிற இளைஞன்(சார்லி), தன் பாட்டிற்கு தேமேனென்று சென்று கொண்டிருக்கும் அம்பியின் மீது துப்புகிறான். ஒரு காலத்தில் சமூகத்தால் மிகவும் மதிக்கப்பட்ட பிராமண வாழ்க்கை, இன்று மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அந்த காட்சி அற்புதமாய் படம் பிடித்தாலும், அந்த காட்சி ஜாதி அடையாளங்களை மீறி காண்பிக்கப் பட்டிருக்கிறது. பார்ப்பனன் மட்டுமே யோக்கியமானவன் போல காட்டப்படுவதும், அயோக்கியர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதோர் போன்று சித்தரிக்கப்படுவதும் இயக்குனரின் ஆதிக்க வெறியை நிலைநாட்டும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. சற்றே உற்று நோக்கினீர்களேயானால், சங்கீத அகாடெமி தலைவராக இருக்கும் நீலுவின் பாத்திரம் மட்டும் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்பட்டு, தவறு செய்பவராகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர் கூட அன்னியரால் மிரட்டப்படுகிறாரேயொழிய, கொலை செய்யப்படுவதில்லை என்று ஆராய்ந்து நோக்கினால் யாராலும் சுலபமாய் கண்டுபிடிக்க முடியும்.’
பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணன் என்ற பெயரில் வாசகர் கேள்விகள் எல்லாம் எழுதுவாரே…அவரது பெயர் கூட படத்தில் ஒரு கதாபாத்திரமாய் உலாவ விட்டிருப்பது, ஷங்கர் டச் தான்.
பின் குறிப்பு:
இந்த விமர்சனத்திற்கான உளவியல் காரணீகளுக்கான காலக்கட்டம் 'அந்நியன்' வெளிவந்த அன்று முதலில் வெளியான விமர்சனத்திலிருந்து , நேற்று இரவு நான் அப்படத்தை பார்த்த பின் நண்பர் படத்தை பற்றிய கருத்தை கேட்கும்போது நான் முழித்த வரையிலான காலக்கட்டம் .
கருத்து உதவி : ஷங்கர் .
தொழில்நுட்ப உதவி : கன்ட்ரோல் சி, கன்ட்ரோல் வி ..
அந்நியன்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
As you said, this is a movie to showcause the Brahmins.
Shankar directed the movie at the cost of around 30 crores (thats what the people claim). Do you think the entire movie is produced with WHITE money?. I am 200% sure that lot of BLACK is involved in this type of huge productions. So what kind of punishment Shankar is going to get?
The heroine was showing her navel in allmost all dance sequences. So what kind of punishment Shankar is going to get for exposing a brahmin character in his movie??
There are 2 characters who escaped death. One is Neelu character and the other is the heroine?. She too escaped death!!!. What a coincidence??
Shankar is known for producing high tech movies using all the latest gadgets but at the same time he is talking about yaman, chitraguptan, karudapurnam etc etc. This clearly shows what is his mental attitude!!!
nalla sonnae rasa padathai pathi.
motha para.. )
innathu !! arunu parpan pathi pesarananu oodiyanthaen.. ippadi dabaichutiyae..
ஒன்றிரண்டு படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி வந்தால் பரவாயில்லை…ஏதோ தமிழ் சினிமாவின் அடையாளமே மசாலா தான் என்பது போல, திருப்பாச்சிகளாய் வந்து குவியும் போதும், அந்த சத்தத்தின் நடுவே கண்ணாடிப்பூக்கள் காணாமல் போவதும் எரிச்சலையும், வேதனையையும் ஏற்றிக் கொண்டே போகிறது! காதல், 7G ரெயின்போ காலனி போன்ற சில படங்கள் யதார்த்தத்தைத் தழுவி, நல்ல வசூலைக் குவித்தாலும்…மசாலாப் படங்களின் அபரிதமான வெற்றியினால், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் மசாலாப் படங்களை நோக்கியே பெரிதும் சாய்கின்றனர்.
கருத்து சொன்ன நண்பர்களுக்கு மீண்டும். நன்றி. என் கணணி 'துயில் கலையும் போதெல்லாம் விழிப்பு கொள்வதில்' மக்கர் செய்வதால் இப்போதுதான் வர முடிந்தது.
பல பெயர்கள் வெறும் கேள்விகுறிகளாய் வந்துவிட்டதால் (மின்னஞ்சலில் பார்த்து) பெயர்களை குறிப்பிடுகிறேன்.
சுதர்சன், பெயரிலி, குழலி, யளனகபக கண்ணன், டோண்டு, ஈழநாதன், முதன் முறையாய் அனாவசியமாய் 'கெட்ட'வார்த்தைகள் கலக்காமல் யாரையும் திட்டாமல் ஒரு பின்னூட்டம் அளித்த 'மனிதன்', பாண்டி, தருமி, கார்திக், பாலாஜி-பாரி, முதன் முறையாய் என் பதிவில் பின்னூட்டம் அளித்து பெருமை சேர்த்த இராம.கி ஐயா, அல்வாசிடி விஜய், என்றென்றும் அன்புடன் பாலா, பண்டாரம், சுந்தர வடிவேல், பாஸ்டன் பாலா, சுவடு சங்கர், அருள், என்னமோ போங்க, கறுப்பி, சோழநாடன், BR, தங்கணி, அப்படி போடு, தாஸு ஆகியோருக்கு நன்றி.
இது தவிர தனிப்பதிவின் மூலம் கருத்து சொன்ன அருண் மற்றும் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் நன்றி.
கணணி அனுமதித்தால் இன்னும் சிறிது நேரத்தில் வந்து, ஸ்ரீகாந்த சொன்ன சில கருத்துக்கள் குறித்தும், லாடு லபக்கு தாஸ் எழுப்பியுள்ள(நக்கல் என்று அவர் நினைத்து எழுதினாலும், கொஞ்சம் அர்த்தமுள்ளது என நான் நினைக்கும்) கேள்விக்கும் பதில் கருத்து சொல்லுகிறேன். நன்றி!
மிஸ்டர் குசும்பன்,
சிறிது நேரம் வரை நின்றிருந்த என்னுடைய அந்நியன் பதிவுக்கு 113 சொச்ச மொத்த வாக்குகள் இருந்தது. யார் பண்ண வேலையோ தெரியவில்லை ஒரு இரண்டு மூன்று மணி நேரத்தில் 60 சொச்ச வாக்குகள் பெற்றது. நான் அதை சுத்தமாக நம்பவில்லை. யாருடைய டகால்ட்டி வேலையென்று தெரியவில்லை. அதனால் வாக்குகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எவ்வளவு பின்னூட்டம் வருகிறது என்று பார்த்து தான் எதோ ஒரு/சில சாராருக்கு பதிவு ஓரளவு பிடிச்சிருக்குன்னு நினைத்துக் கொள்வேன்.
இந்த பின்னூட்டங்களின் உளவியல் காரணீகளுக்கான காலக்கட்டம் arunhere's "அன்னியன் - ஒரு அலசல்!" to rosavasanth's "ஷங்கரின் 'அந்நியன்' பற்றி..." till arun here's "ரோஸாவஸந்த் ஸ்டைல் பதில்!"
கருத்து உதவி: குப்பக்கூடெ
தொழில்நுட்ப உதவி : கன்ட்ரோல் சி, கன்ட்ரோல் வி ..
இன்னாது இது... உப்புமா,கிச்சடி மாதிரி ஒரு பதிவு.
உண்மையிலே தாசு படம் பார்த்துட்டாரே? அவரோட ஒப்பினீயன் பார்க்கலாமுன்னு வந்த??????
வெ...வெ... வெவ்வ்வ்வவ்வ்வா...வெ வெ....
A good commentary. As anonymous said "Out of 30 crores spent how much is white and how much is Black and What kind of punishment Shankar is going to get for this?".
Ellaam Oorukku Upadhesam. Unakkum enakkum ella machaan.
LLDasu said "sada saadha". Enna Ayya sun TV -la application pottu erukkeengala?
/LLDasu said "sada saadha". Enna Ayya sun TV -la application pottu erukkeengala?//
அது சரி, இருந்தாலும் இருக்கும்
Post a Comment