நானும் ரஜினியும்: ஒரு ஃப்ளாஷ் பேக்

பள்ளியில் படிக்கும்போது ஆன்டுக்கொருமுறை சினிமா கூட்டி செல்லும் என் அப்பா , ‘ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள் ‘ என்ற எண்ணமுடையவராதலால் என்னை ரஜினி படம் பார்க்க அழைத்து கொண்டு போகாததில் வியப்பேதும் இல்லை . ஆதலால் நான் காலேஜ் வருமளவும் ரஜினி படம் பார்த்ததில்லை . ஆனால் அவர் படம் பார்க்கும் முன்னால் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு என் மெட்ராஸ் மாமாவின்
‘இன்ஃபுலன்ஷினால்’ வந்தது . ஏ வி எம்மில் மாப்பிள்ளை ஷூட்டிங் . என் வயது சிறுவன் ஒருவனும்( ஒரு டைரக்டர் பையன் , உம்மனாம் மூஞ்ஜீ .. விஜயாக இருக்குமென்று எனக்கு இப்போது சந்தேகம் .. நாட் ஷுயர்) நானும் நட்பாகி கொன்டு , மற்றவர்களோடு ரஜினிக்காகவும் அமலாவுக்காகவும் வெயிட் பண்ணிகொண்டிருந்தோம் . ரஜினி பைக்கில் ஸ்டையிலாக வருவார் , மேக்-கப் போட்டு கொள்ளமாட்டார் , தலை சீவ மாடார் என ரஜினி ரசிகனான என் நண்பன் சொன்ன வார்தைகளை நம்பி ரஜினியை பைக்கில் எதிர்பார்த்துகொன்டிருக்க, அவர் வந்ததோ காரில் .. முதல் ஏமாற்றம் .. மேக்-கப் போட்டிருந்ததும் , தலை சீவியதும் அடுத்தடுத்த எமாற்றங்கள் . ஏதோ அவரிடம் கை கொடுத்து , சிரிப்பை தனியே வாங்கினாலும் ரஜினிமட்டில் எனக்கு ஏமாற்றம் தான் . ‘சின்ன சின்ன ‘ நடிப்பசைவுகலுக்கும் சுற்றி இருந்தோர் கை தட்டியதும் நடிப்பு ஈஸி என்ற மன நிலையே வந்தது . ‘முதல் இரவு’ காட்சியாக அப்போது கருதப்பட்ட , ரஜினி-அமலா காலேஜ் சந்திப்பு காட்சியும் , ரஜினி- சிவாஜி ராவ் என்ற கமெடியனும் காலேஜ் ஹாஸ்டல் கேட் ஏறி குதிக்கிற ஸீனும் பார்த்துவிட்டு வந்தேன் . (வேறு ஷூட்டிங்கில் சீதாவை பார்க்கும் அவசரத்தில் சீதா அப்பா-அம்மாக்கிடையில் புகுந்ததால் சீதா அப்பா கோபம் கொண்டு திட்டியது தனி கதை) . .

கல்லூரி நாட்களில் ரஜினி படத்தை விடாது பார்த்தாலும் , பிறகு ரஜினியின் பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை, முக்கியமாக தில்லு முல்லு , ஜானி , முள்ளும் மலரும் , நெற்றிக்கன் ரசித்தாலும் மாப்பிள்ளை மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை .

பி . கு : தலைப்பு மட்டும் ஜூ.வி , குமுதம் ,…….. தலைப்புகளின் பாதிப்பு . கொஞ்சம் ஓவர்தான்னு தெரியும் .

6 comments:

said...

// ‘ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள் ‘ என்ற எண்ணமுடையவராதலால்//

தல வேண்டாம் அப்பாலிக்கா பெஜாராயிடுவ... நீ... ராஜேஷ்குமார பத்தி யிப்பிடி சொல்றதுக்கு...

//பி . கு : தலைப்பு மட்டும் ஜூ.வி , குமுதம் ,…….. தலைப்புகளின் பாதிப்பு . கொஞ்சம் ஓவர்தான்னு தெரியும் .
//
தமிழ்மணத்தில இரண்டு பேரு ரொம்ப குசும்பு பண்றாங்கப்பா... ஒன்று இந்த தாஸீ... இன்னொன்று வீ.எம்.

said...

//ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள்//

அதெல்லாம் தமிழ்குடிதாங்கி & கோ. இருக்காங்கல்ல.. இப்படி காப்பிரைட் விஷயத்தை மத்தவங்க மேல அநியாயம பழி போட்டா குழலிக்கு கோபம் வராதா என்ன?!

Anonymous said...

Kalakkunga LLD

said...

//ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள் //
//அதெல்லாம் தமிழ்குடிதாங்கி & கோ. இருக்காங்கல்ல.. //

மாயவரத்தான்..

உங்கள் கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..தமிழ்குடிதாங்கி & கோ இளைஞர்களை மட்டுமா கெடுக்கிறார்கள்??

said...

ரஜினியை தொட்டுப்பார்த்தீங்களா? தொட்டா ஜென்ம சாபல்யம் அடைவீங்க. தொட்டு கும்பிட்டா மோட்சமுன்னு ஒன்னு இருந்தா, அதை அடைவீங்க.

said...

//மாயவரத்தான்.. உங்கள் கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..தமிழ்குடிதாங்கி & கோ இளைஞர்களை மட்டுமா கெடுக்கிறார்கள்??//

அதானே...நான் முன்னாடி சொன்னதிலிருந்து 'அப்பீட்' ஆகிக்கிறேன். ஆமாம்.. 'அப்பீட்'க்கு மிகச்சரியான தமிழ் வார்த்தை என்ன!?! 'அந்த' தமிழ் அகராதியிலே இருக்கான்னு யாருக்கும் தெரியுமா?!