அடைக்கலராசும் பார்ப்பணீய சூழ்ச்சியும்

நம் வாழுகின்ற இந்த தருணத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சில பெரியோரை பற்றியும், அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட அடிகளையும், பார்ப்பணீயத்தினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் பதிந்து , இருநூறாயிரம் ஆண்டுகட்கு பிறகும் இணையத்தை பார்க்கும் நம் வழித்தோன்றல்களுக்கு , இந்த சூழ்நிலையை படம் பிடித்து காட்டும் புனிதப்பணியை மேற்கொண்டுள்ளேன் .

தமிழகத்தின் புனித பூமியாம் திருச்சியில் , நகரத்தந்தை என அழைக்கப்பட்டவரும் , சுதந்திர போராட்ட வீரருமான திரு லூர்துசாமியின் தவப்புதல்வராக பிறந்தவர் அடைக்கலராசு . சிறுவயதிலே ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் உறுதுணையாகவும் இருந்தவர் இவர் . அன்னை இந்திராவின் சோசலிச கொள்கையினால் கவரப்பட்டு , இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சியான காங்கிரசில் இணைத்துக்கொண்டபோது, அன்னை இந்திரா எவ்வளவு மகிழ்ச்சியுற்றார் என்பதை திரு . எஸ் கே சாவ்லா தன் நூலில் விவரித்துள்ளார் .

ஏழைகளுக்கும் கூலி தொழிலாளர்க்கும் வேலை கொடுக்க எத்தனை கட்டடங்களை கட்டினார் , மக்களுக்கு மகிழ்ச்சியுற எத்தனை தியேட்டர்களை திறந்தார்.. ஏன், அவர் 80 அடி கட்-அவுட் தமிழகத்தில் முதன்முதலில் நிறுவியதும் ஏழைகளுக்காகத்தானே என நான் கூறினால் என்னை ஜாதி வெறியன் என ஜல்லியடிக்ககூடிய சாத்திய கூறுகள் இருந்தாலும் , நம் தமிழ் மக்களுக்கு உண்மைகளை உரக்கக்கூற நான் பின்வாங்கவில்லை .

சிங்கப்பூர்க்கு அவர் வருகை அளித்தபோது, அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு மணிநேரத்திலும், தமிழ், தமிழ் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய 'தமிழ்த்தாய்' என்ற புத்தகத்தை படித்தீர்களென்றால் அவரின் தமிழ்பற்றும் , இலக்கிய இலக்கண அறிவும் உங்களுக்கு விளங்கும் .

அவர் நாடாளுமன்றத்தில் இடியென முழங்கி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் எத்தனை ? அதனையெல்லாம் செய்தியாக வராமல் பார்த்துக்கொண்டன இந்த பார்ப்பண பத்திரிகைகள் .. இவரை விட்டால் , தமிழ்நாட்டை இஸ்ரேலுடன் இணைக்கும் தம்முடைய கனவுக்கு குறுக்குசால் ஓட்டி விடுவார் என பயந்த சோ போன்ற பார்ப்பணகும்பல் , மூப்பனார் என்ற நேர்மைய்ற்றவருடன் கூட்டு சேர்ந்து ஓரம் கட்டியதை மறுக்கமுடியுமா?

பின் குறிப்பு: தலைவர் ஓ.ப(http://lldasu.blogspot.com/2005/05/part-i.html), சோசலிசவாதி அண்ணன் அ.ரா போன்ற தமிழகத்தின் தலை சிறந்தோரைக்கூட அறிமுக படுத்த வேண்டியுள்ள இந்த தமிழ் சூழல் மிகுந்த அலுப்பினை தருகிறது .. நான் இந்த பணியை என் பணிச்சுமைக்குமிடையே செய்ய வேண்டியுள்ளது .. அடுத்து நீதியரசர் தூத்துக்குடி பெரியசாமியை இந்த தமிழ் மக்களுக்கும் , வழித்தோன்ரல்களுக்கும் அறிமுகப்படுத்துவேன் . இந்த கேடுகெட்ட தமிழர்க்காக, அய்யா தமிழ்க்குடிதாங்கியின் பெருமைகளை அலசிய குழலியாரும் (http://kuzhali.blogspot.com/2005/04/1.html) , அண்ணன் தொல். திருமாவை பற்றி மணிக்கூண்டாரும்(http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_111655887144691553.html) எழுதி இந்த திருப்பணியை என்க்கு முன்னரே செய்துள்ளனர் .

18 comments:

said...

அடங்கொகாமக்கா... என்னவோ எதோண்ணு நெனச்சு வந்து பார்த்தால் வவுத்து வலி வந்திடுச்சுப்பா.

உங்க பட்டியலில் அரும்பெரும் தமிழ் தொண்டாற்றும், வெற்றி கொண்டான், நன்னிலம் நடராசன், தீப்பொறி ஆறுமுகம், எஸ்.எஸ்.சந்திரன் பத்தியெல்லாம் எழுதுவீங்கதானே?!

said...

குறிப்பா அந்த தீப்பொறி ஆறுமுகம், எஸ்.எஸ்.சந்திரன் போன்ற பைந்தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் அவர்தம் தமிழ்த்தொண்டுகள் பற்றும் எழுதுக. தமிழகம் படித்து உய்யட்டும்.

said...

மீதி ரெண்டு பேரும் என்ன பாவம் செஞ்சாங்களாம்?!

said...

அட விடப்பா இந்த பதிவு சீரியசா இல்ல காமெடியானு கேட்டா என்னிய ரவுண்டு கட்டி அடிப்ப... இது தேவையா எனக்கு...ஹி ஹி

said...

அது சரி.. ஓ.பன்னீர் செல்வம் பத்தி எழுதினது 'நக்கல்' தான்னு இப்போ தான் புரியுது! மண்ட காய வெச்சிட்டியே சாரே!

said...

//அட விடப்பா இந்த பதிவு சீரியசா இல்ல காமெடியானு கேட்டா என்னிய ரவுண்டு கட்டி அடிப்ப//

காமெடியா?? இந்த தமிழ் சூழல்.......... சரி சரி விட்ரேன் .. அண்ணன் ஓ.ப பதிவில், நீங்கள் கேட்ட நியாயமான கேள்விக்கு ,, சூழல் , ஜல்லி என நான் உளர்னதுக்கே மனம் மாறி , அவரை புகழ ஆரம்பித்துவிட்டீரே..உங்கள மாதிரி நல்ல மனுசங்களையெல்லாம் ஏமாத்த எப்படித்தான் அய்யாவுக்கு மனசு வருதோ??

said...

//மனம் மாறி , அவரை புகழ ஆரம்பித்துவிட்டீரே..//

மனம் மாறிலாம் இல்ல தல எனக்கு ஓ.பி.எஸ் மேல எப்பவும் ஒரு சாப்ட்கார்னர் உண்டு... இப்போ எழுதிக்கிட்டு இருக்கனே எனக்கு சிலரின் நல்லபக்கங்கள் அதில் ஓ.பி.எஸ். பற்றி எழுதலாம் என்று இருந்தேன் நீங்க முந்திக்கிட்டீங்க, இப்ப என்னடானா அன்னை சோனியா பத்தி எழுதினக்கு எனக்கு தாஸ் எழுதனதுக்கு போட்டியானு கேட்கிறாரு புலிக்குட்டி, இருந்தாலும் தாஸ் தமிழ்மணத்தில் ஒரு ட்ரெண்ட் செட்டர் தான்பா

said...

//லிட்டில் இந்தியா பக்கம் வருவீர்கள்தானே??//
நீங்களும் சிங்கையில்தானிருக்கின்றீரா?
நாளை அங்கேதான் இரவு உணவிற்கு வருவேன், நீங்களும் வருவதென்றால் kuzhali140277 (at) yahoo (dot) com க்கு மின்னஞ்சல் தரவும், நாம் சந்திக்கலாமே

said...

குழலி
தனிமடல் அனுப்பியுள்ளேன் ... நீங்க தனியாத்தானே வரீங்க.. ஆளுகலெல்லாம் இல்லையில்ல??

said...

பதில் அனுப்பியுள்ளேன் தாஸ்,
நாளை பேசுகின்றேன்

said...

//வெற்றி கொண்டான், நன்னிலம் நடராசன், தீப்பொறி ஆறுமுகம், எஸ்.எஸ்.சந்திரன்//

மாயவரத்தாரே..

குழலியின் ஐயா பதிவில் , ஐயாவை எடுத்திட்டு உங்களுக்கு புடிச்ச யாரையினாலும் போட்டுக்குங்க.. நம்ம அண்ணன் பதிவுலருந்தும் உருவிக்கலாம் ..ப்ராப்லம் லேது (தெலுகுல சொன்னா உங்களுக்கு புடிக்கும்தானே ..ஆமா .. நீங்க கை தட்டமலா ஒருத்தர் ஓட்டிக்கிட்டு இருக்கார்...)

ராகவன் அவர்களே.. செந்தமிழில் நீங்கள் கூறியோர் மட்டுமல்ல பெரியோர் ..அந்த லிஸ்ட் பெருசு .. 'தல'தான் முதல்வர் அதில்.

said...

//தாஸ் தமிழ்மணத்தில் ஒரு ட்ரெண்ட் செட்டர் தான்பா//

தப்பிக்காதீங்க... நீங்க அய்யாவை பத்தி எழுதும்போதே அந்த ட்ரெண்ட் வந்தாச்சு ..

said...

அடேய் தமிழ் துரோகிங்களா... என் தலைவன் அடைக்கலராசுவ பத்தி நீங்க எல்லாம் எப்படிடா கேவலமா எழுதலாம்... தானை தலைவன் அடைக்கலராசுவுக்காக தீக்குளிப்போம்டா, எங்க மயி... ச்ச உயிரயும் கொடுக்க கூடிய தொண்டர்படை கையில மாட்னீங்கன்னா கைமாடா நீங்க.... அப்புறம் வருங்கால முதல்வர் அருமை அண்ணன் எஸ்.எஸ். சந்திரன் பத்தியும் எதிர்கால முப்படை தானை தளபதி தீப்பொறி ஆறுமுகம் பத்தியும் கேவலமா எழுத பாப்பான்களான லாடு, குழலி, மாயவரத்தான், ராகவன் எல்லாம் சதி பண்ரானுங்க... இத கேக்க நாதி இல்லையா???

Anonymous said...

Hi you fools,

I have been in trichy during 93-96.

The one and only mp who even never opened his mouth even to yawn in parliament is that lazy adaikalaraj. You are backing here him. Don't think blogspot visitors are fools. You b......

ananymous kekke pekka

said...

அட கெக்கெ பெக்க ..

முழுசா படிக்கிறது இல்லையா?? காமெண்ட்ஸையும் படிமா கண்ணு ..

மற்றபடி, இங்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி

said...

வர வர நம்ம தாசு அண்ணாச்சி பதிவிலே யார் யாரு சீரியசா பேசுராங்க, யார் யாரு கிண்டல் பண்ராங்கன்னு புரியாம போய்டிச்சி..! கம்யூனிஸ்ட் கட்சிகளோட கோரிக்கை அறிக்கை மாதிரி ஆகிருச்சே!!!

said...

ரஜினியோட அரசியல் மாதிரி அவ்வளவு ஈஸியா புரியர மேட்டர் இல்லை விசிதா.. மருத்துவரோட திடீர் தமிழ் பற்று மாதிரியான இடியாப்பச் சிக்கல். இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்குமே?!

said...

மாயவரத்தான் & விசித்ரா...

அடடா.. ஆரம்பிச்சிங்க...விட்டுட்டிங்களே...:)