பிதாவே எங்களை மன்னியும்

அன்பு சகோதரர்க்குள் சாதி பார்த்து தீண்டாமை வளர்த்து, தேவாலயத்தை பூர்வாஷிரமாக்கியதற்காக ,பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கல்லூரி , பள்ளி சொத்துக்களை காக்க உரிமை குரல் கொடுத்துவிட்டு , ஈராயிர வருஷ கொடுமைகளுக்கு ஆளான தலித்தின் உரிமைகளுக்கு (சாதி எங்களுக்குள் இல்லையென பொய் சொல்லி ) குரல் கொடுக்காத குற்றத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

அன்பை பரப்ப சொன்னவர் நீர் .. அரசியல், கலாச்சார விடயங்களுக்கான மதமாய் மாற்றி , வன்முறையில் செயல்படுவற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

கட்டாய மத மாற்றத்தை நீர் வெறுப்பீர் எனத்தெரிந்தும், சட்டம் கொண்டு வந்தோரை எதிர்த்து அரசியல் நடத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

யார் ஆட்சிக்கு வந்தாலும், மாலையோடு காத்திருக்கும் குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமது வார்த்தைகளை பேசாமல் , அரசியல் தலைவரின் கொ.ப.சே வாக இருந்ததற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் விழாக்களின் நாயகராக நீரில்லாமல், அரசியல் தலைவர்களின் நாயகர்களாக்கி, அவர்களின் நாய் பேச்சுகளுக்கு கைதட்டியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கூட்டத்தை நாடக குழுவாக்கி , ஊனமுற்றோராய் நடிப்போரை கதாநாயகர்களாக ஆக்கும் எங்கள் அவலங்களுக்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமக்கு ஏஜண்டுகள் நாங்கள், நாங்கள் ஜெபித்தால்தான் நீர் செவிமடுப்பீர் என ஊரை ஏமாற்றி ,ஜெபிக்க சொல்வோரிடம் , கூலி கேட்கும் ஏஜண்டாக இருப்பதற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

'மருத்துவர் நோயுற்றோர்க்கே' என்று நீர் சொன்னதை மறந்து , எங்கள் கான்வென்டுகளில் படித்த பணக்கார குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் கயமைத்தனத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

யாருக்கும் தெரியாத மொழி ஒன்றை பேசி இது உமது மொழியென கூறி உம்மை தனிமைப்படுத்திய குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .


பாப் பாடலை எதிர்த்து, அதற்கு சற்றும் குறைவில்லாத 'அல்லேலூயா' நடனம் ஆடி உம்மை கேவலப்படுத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உலகம் அழிய தேதி குறித்தமைக்காகவும், தேதியை வெட்கமில்லாமல் மாற்றி திரிந்தமைக்காகவும்,பிதாவே எங்களை மன்னியும் .

10 comments:

Vijayakumar said...

இதுக்கு பேரு தான் 'லார்டு' லப்க்கு தாஸோ?

Anonymous said...

LLDasu, Nice one. I think you have Paul Dinakaran and Co and Esra Sargunam in your mind. Anyway a bold article

ஜோ/Joe said...

தாஸ்,

போட்டு தாக்குங்க!
ஆனால் சிலவற்றில் நிகழ்காலத்துக்கு பதில் இறந்த காலம் வந்திருக்கவேண்டுமென்பது என் தனிப்பட்ட கருத்து .இன்னும் சில ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது.

"என்னை ஆண்டவனே ஆண்டவனே என்று கூப்பிடுகிறவன் விண்ணரசில் சேரமாட்டான்
என் வார்த்தைகளின் படி நடக்கிறவன் எவனோ அவனே விண்ணரசில் சேருவான்."

-என்ற இயேசுவின் வார்த்தைகள் புரியாதவர்களை என்ன செய்வது?

குழலி / Kuzhali said...

தேவையின்றி சகதியை வாரிக்கொட்டும் தாஸீவை வன்மையாக கண்டிக்கின்றேன்...

யார் இப்படி பேசத்தூண்டுகிறார்கள், எது இப்படியெல்லாம் பேசத்தூண்டுகின்றது என எனக்கு நன்றாகத்தெரியும்...


சரியாக கேட்டீர்களா அவர்களின் விளம்பரத்தை.... முடவர்கள் பார்க்கின்றார்கள், குருடர்கள் நடக்கின்றார்கள் எனத்தான் இருக்கும்...
இதில் தவறெதுவும் தெரியவில்லை...

மீண்டும் கவனியுங்கள்

முடவர்கள் பார்க்கின்றார்கள்
குருடர்கள் நடக்கின்றார்கள்

இதில் என்ன தவறு கண்டார் தாஸீ என எனக்கு புரியவில்லை...

எனவே இங்கு தவறான தகவல்கள் தரும் தாஸீவை இரட்சியுங்கள் பிதாவே

குழலி / Kuzhali said...

//அன்பு சகோதரர்க்குள் சாதி பார்த்து தீண்டாமை வளர்த்து, தேவாலயத்தை பூர்வாஷிரமாக்கியதற்காக ,பிதாவே எங்களை மன்னியும் .
//

சத்தியமான உண்மை......

-L-L-D-a-s-u said...

ஆகா நானே எனக்கிட்டேயே பாவமன்னிப்பு.. எங்கேயோ பொயிட்டீங்க அண்ணாச்சி .
காலக்காம்பிங்க..(போட்டோல நீங்களா??)

ராஜசேகர் , அவர்கள் மட்டுமா? என்னையும் சேர்த்து பலர் ..

ஜோ.. இறந்த காலமா? நிகழ்காலத்தில் நடக்கவில்லை என்கிறீர்களா?

குழலி ..குசும்பா?

கருத்துரைத்த தமிழன் , அண்ணாச்சி, ராஜசேகர், ஜோ, நன்றி

ஜோ/Joe said...

//யாருக்கும் தெரியாத மொழி ஒன்றை பேசி இது உமது மொழியென கூறி உம்மை தனிமைப்படுத்திய குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .//

தாஸ்,
அது என்ன மொழி? அது லத்தீன் எனில் அது இறந்த காலம் இல்லையா?

-L-L-D-a-s-u said...

ஜோ ..

லத்தீனை சொல்லவில்லை . லத்தீனுக்கு எழுத்துண்டு ...இலக்கணமுன்டு .. நீங்கள் எதுவும் கரிஸ்மேட்டிக் கூட்டத்திற்கு மழைக்குக்கூட ஒதுங்கியதில்லையோ .. ஷக்கலக்கலக்கலக்க என 'கடவுள் பாஷை பேசுவார்களே.. அதை சொன்னேன் ..


ரயில்வே ஸ்டேஷனில் , கூட்டத்தில் , நரக வேதனையில் தவிக்கும்போது , ' நரகத்தின் உபாக்கியதைகள்' பிட் நோட்டீஸை வினியோகிப்பார்களே.. அதை மறந்துவிட்டேன் ..

முகமூடி said...
This comment has been removed by a blog administrator.
முகமூடி said...

//பாப் பாடலை எதிர்த்து, அதற்கு சற்றும் குறைவில்லாத 'அல்லேலூயா' நடனம் ஆடி உம்மை கேவலப்படுத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் // எதை எதோடு ஒப்பிடுவது என்று விவஸ்தையில்லாமல் compare செய்ததன் மூலம் எங்களை மிகவும் கேவலப்படுத்திய தாஸை வன்மையாக கண்டிக்கின்றோம் - முகமூடி, பாப் கலைஞர்கள் சங்கம்.