வலைப்பதிவில் தமிழ் துரோகம் ..

மறைமுகமாக ஒரு தமிழின துரோகம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது ..இது எத்தனை பேருக்கு புரிந்துள்ளது எனத் தெரியவில்லை.. சொரணை கெட்ட தமிழன் எப்போதும் அப்படித்தான். தன் உரிமை பறிபோவதுகூட தெரியாமல் பராக்கு பார்த்துக்கொண்டிருப்பான் . தனக்கு கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைக்கும் வலைப்பதிவாளன் கூட இந்த விடயத்தில் ஏமாந்துதான் போகிறான் .. என்ன செய்வது அவனும் தமிழன் தானே .

நான் சொல்ல வருவது இன்னுமா புரியவில்லை.. தமிழனுக்கு புரியாது !.. பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகளை தெரியவிடாமல் , வலைப்பதிவில்(blogspot) உள்ள தமிழின துரோகிகள் , தமிழ்பெயர்களை ?????? என்று மாற்றும் தொழில்நுட்பத்தை செய்து, எல்லோரையும் ஆங்கிலத்தில் தம் பெயர்களை மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர் . நம் வலைப்பதிவரும் அவர்களின் சூழ்ச்சி தெரியாமல் , பெயர்களை ஆங்கிலத்தின் எழுதும் அவலச்சூழலில் மாட்டிகொண்டுள்ளனர் ..

இதனை கண்டிக்கும் வகையில் , என் பெயரை -L-L-D-a-s-u--..(எழுத்துகளின் மீது தார் அடிக்க முடியாமல் செய்திருக்கும் மைக்ரோசாஃப்டின் தமிழ் துரோகத்தையும் கண்டிக்கிறேன் )..

Image hosted by Photobucket.com

மாற்றியுள்ளேன் ..

பி.கு ...

தார் அடித்து நான் தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கையில் , என்னை தமிழ் வளர்ப்போர் லிஸ்டில் சேர்க்காமல், தன் பெயரிலே ஆங்கிலத்தை கலக்கும் அல்வாசிட்டி ,மற்றும் மாயவரத்தான், இட்லி வடை , பாலா போன்றோரை சேர்த்த தினமலர் போன்ற பார்ப்பண ஏடுகளை கண்டிக்கிறேன் .

27 comments:

said...

தாஸு,
பிளாக்கர் நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தினால் சரி செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
இல்லையென்றால் டெம்ப்ளேட்டில் நம்து பெயரை மீண்டும் ஒருதடவை சரியாய் எழுதிப் பப்ளிஷ் செய்தால் சரியாகலாம்.

said...

:-))

said...

இப்படி செய்வதன் மூலம் '?' என்பதை தமிழாக ஏற்கச்செய்ய நினைக்கும் ஆங்கில ஏகாதிபத்தியத்தை நான், என் மகன் (மதுரை ஏரியா), என் மகன் (வடாற்காடு, தென்னாற்காடு, செங்கை கிழக்கு ஏரியா), என் மருமகன் (வட இந்தியா) ஆகியோர் கண்டிக்கிறோம்.

said...

முகமூடி,
தமிழே கேள்விக்குறியாகிவிட்டது என்றுதான் கவலையாய் இருக்கிறது .

said...

சரி பின்னூட்டத்திற்கு முக்கியமான சில வரிகளை பதிவிலிருந்து எடுத்துப்போடலமா என நினைத்தால் மொத்தப்பதிவையும் தான் எடுத்துப்போட வேண்டும் போல இருக்கு

தாஸீ நான் கூட ஏமாந்து என் பெயரை மீண்டும் kuzhali என ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்துவிட்டேன்...

ஆனாலும் உன் நக்கல்,நையாண்டி அலும்புக்கெல்லாம் அளவேயில்லை சாமி...

said...

//ஆனாலும் உன் நக்கல்,நையாண்டி அலும்புக்கெல்லாம் அளவேயில்லை சாமி//
உங்களின் மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் தொடரை விடவா? நான் குலுங்கி சிரித்ததை பார்த்து எனக்குள் என்னவோ 'split personality' என எண்ணி நன்பர்கள் பயந்து விட்டனர் .. குழலி உஙகளுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு..

said...

என் மகன் (மதுரை ஏரியா), என் மகன் (வடாற்காடு, தென்னாற்காடு, செங்கை கிழக்கு ஏரியா), என் மருமகன் (வட இந்தியா)
.

;)

said...

யோவ் தாசு, உங்க அலும்பு ஓவரா போயிடுச்சே. நான் அல்வாசிட்டின்னு தமிழ்ல தானே எழுதியிருக்கிறேன். Halwacity-ன்னு போட்டதான் தப்பு. எதுக்கும் தார்பூசி அல்வாசிட்டியை அழிச்சிறவா? :-)))))))))))))

said...

ஆரம்பிச்சாட்டாருப்பா நாலாம் மொழிப்போரை!!

said...

பேசாம என் பேரகூட ???????? ன்னு மாத்திடலாமான்னு எங்க பொதுக்குழுல (இதுவரை தமிழகம் முழுவதும் 8 கோடி பேர்) முடிவு செய்யப் போறோம்.

said...

//இதுவரை தமிழகம் முழுவதும் 8 கோடி பேர்//

தமிழ்நாட்டிலே இருக்குற நூத்து சொச்சம் கோடி பேருன்னு சொல்லாம விட்டீங்களே..!!

said...

ஆமாங்க, மாயவரத்தார் (அரசியலுக்கு வந்த பிறகு இப்படிதான் அழைப்பார்கள்) தமிழ் நாட்டுல இருக்குற ஒவ்வொரு ஜாதி கட்சியும் எங்களுக்கு இத்தனை கோடி பேர்னு உதார் விடுராங்க. அல்லாத்தையும் கூட்டிப்பார்த்தால் இந்திய மக்கள் தொகையை விட அதிகம்.

விஜகாந்தருக்கு தற்போது 25 லட்சமாமே. விஜய T. ராஜேந்தர் கட்சிக்கு (உங்க ஊர்க்காரர்தான்) எத்தனை பேருன்னு கொஞ்சம் விசாரிச்சு சொன்னா கூட்டனி, தொகுதி பங்கீடு பற்றியும் பேசிடலாம்.

said...

//விஜய T. ராஜேந்தர் கட்சிக்கு (உங்க ஊர்க்காரர்தான்) எத்தனை பேருன்னு கொஞ்சம் விசாரிச்சு சொன்னா //

அது இருக்கும் கிட்டத்தட்ட ரெண்டு மில்லியன் பேரு..!! (அவங்க எங்காளோட கட்சிக்காரங்கன்ற மேட்டரு சம்பந்தப்பட்ட மக்களுக்கே தெரியுமான்றது வேற விஷயம்! எல்லாம் வாக்காளர் பட்டியல் மாதிரி..!)

said...

முகமூடி ,

திருச்சி, ராமநாதபுரம் , கோவை , நெல்லை ஏரியாவிற்கெல்லாம் அனுப்ப பிள்ளைகள் இல்லையா? குடும்பம் ஒன்றுதானா? குடும்பத்தை கூட ஒன்றுக்கு மேல் வைக்கத்தெரியாத நீங்களெல்லாம் எப்படி, தமிழக முதல்வராக போகிறீர்களோ? ..பச்சோந்தி முன்னேற்ற கழகத்தை கலைத்துவிடுங்கள் ..

ஹல்வாசிட்டி ,

உங்கள் இணையதளத்தின் பெயரை அழகு தமிழில் , அல்வாநகரம் என்றழைப்பதை எந்த சக்தி தடுக்கிறது, அவர்களின் நோக்கம், திட்டம் , ப்ளான் எல்லாம் என எங்களுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள் ?

said...

// பச்சோந்தி முன்னேற்ற கழகத்தை கலைத்துவிடுங்கள் //
என்னது கலைப்பதா... இன்னிக்குதாம்பு பதிவே செஞ்சிறுக்கோம்... இன்று முதல் உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை இருக்ககிறது அதில்...

Anonymous said...

;)

said...

அய்யோடா ...

said...

எங்கள் திமுக(திட்டுவோர் முன்னேற்றக்கழகம்)வின் கொள்கைகளெல்லாம் காப்பி அடித்த உங்களை நம்ப தமிழர்கள் என்ன பீஸாவால் அடித்த பிண்டங்களா ? இல்லை சோற்றை சாப்பிடும் சொந்தங்கள் ..

said...

//பிளாக்கர் நிர்வாகிகளுக்குத் //

முத்து ..அவர்களிடமெல்லாம் தலைவணங்கமாட்டான் இந்த தாஸு .

என்னுடைய தமிழ்பற்றை கேலியாக்கி , 'பின்னூட்ட வன்முறை செய்த முகமூடி, குழலி , அல்வாநகரம் விசய் ,மாயவரத்தான் , தமிழன் , அனொனிமசு, ?????? ஆகியோரை கண்டிக்கிறேன் . தன் அடையாளம் போனாலும், ஆங்கிலத்தில் எழுதாமல் இருக்கும் ?????? யின் தமிழுணர்வை பாராட்டுக்கிறேன் .. தன் வாழ்வே கேள்விக்குறியானாலும் இதனை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

said...

Das,
You are becoming "TOO MUCH", sorry, "THREE MUCH", in fact :)

said...

என்னதான் எதிரிக்கட்சியாக இருந்தாலும் லாடுவின் திமுக பாசறையில் ஆங்கிலத்தில் பேசிய பாலாவை ப.ம.க வன்மையாக கண்டிக்கிறது... எழுத்துக்கு 100 ரூ என்ற வீதத்தில் ப.ம.க வளர்ச்சி நிதியில் அபராதம் கட்ட வேண்டும், அல்லது பாலாவின் வலைப்பதிவில் தார் அடிக்கப்படும் என்று அன்புடன் சொல்லிக்கொல்கிறோம்

said...

தமிழகத்தில் பிறந்து தமிழன் என்று சொல்லிக்கொண்டு ,அரசியல்வாதிகளின் போலி தமிழ் பற்றை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் ,நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் மற்றும் தமிழுணர்வை கேலி செய்து அல்லது கேலி செய்வாரோடு சேர்ந்து கொண்டு தம்மை மேதைகளாக நினைத்துக்கொள்ளும் புல்லுருகள் பெருகி வருகிறார்கள்.

- ஜோ

said...

நோ ஜோ... நோஓஓ சில்லி ·பீலிங்ஸ்ஸ்ஸ்... டேக் இட் ஈஸி யார்...

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி ..

இந்த பதிவு , ராமதாஸ் கூட்டணியினர் செய்யும் கூத்துக்களின் சிறுபதிப்பு (simulation).. அவ்வளவே..
இந்த பதிவை வேடிக்கையாக எடுத்தோர், ரா.கூ(ராமதாஸ் கூட்டணியினர்) செய்கைகளையுன் அவ்வாறே எடுத்திருந்திருக்கவேண்டும் எனவும் , இதனை எரிச்சலாக பாவித்தவர், ரா.கூ வையும் அப்படியே எடை போட்டிருந்திருப்பவர் எனவும் எண்ணுகிறேன் .

Anonymous said...

Test from Filter