விஜய் , சன் மற்றும் அரசியல்

சிங்கப்பூரில் சன் தொலைக்காட்சி மட்டுமே இந்திய நேரப்படி (2.30 மணி நேர தாமதத்தில் ) ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது . அதாவது ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை, அதே வேளையில் சிங்கப்பூர் நேரம் 11.30 மணிக்கு பார்க்கலாம் . மே 2006 யில் நேர மாறுதல் கொண்டுவரப்பட்டது . ஒவ்வொரு நிகழ்ச்சியும் இந்தியாவில் ஒளிபரப்பும் அதே நேரம் ஒளிபரப்பு ஆரம்பமாகியது .ஆனால் ஒரு வார கால இடைவெளியில் . அதாவது முந்தின வாரம் இந்தியாவில் ஒளிபரப்பின 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' அடுத்த ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் .ஆனால் சன் செய்திகள் மட்டும் அதே வேளையில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன . இதனால் சன் செயதிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே வரும் விளம்பரங்களை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் என்ன நல்லது தானே என்று நினைத்தாலும் , விளம்பர நேரம் எல்லாம் , சன் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பாக, திரும்ப திரும்ப மெகா சீரியல் பாட்டும் நடனமும் கழுத்தறுக்கின்றன் .

வாரநாட்களில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த , மெகாத்தொடர் இல்லாத நிகழ்ச்சிகளாகிய, சூப்பர் 10, திரைவிமர்சனம் போன்ற நிகழ்ச்சிகள், மீனா நடிக்கிற ஒரு மெகாத்தொடரருக்காக நேரம் மாறியதால் , சன் தொலைக்காட்சி என்றாலே மெகாத்தொடர் என்று அலுப்பாகிபோன நேரத்தில், விஜய் தொலைக்காட்சியும் சிங்கப்பூரில் ஒளிபரப்பைத் தொடங்கியது . நல்லவேளையாக மெகாத்தொடர்களை மட்டும் நம்பாமல், மற்ற சில நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது .

முதலில் கவனத்தை கவர்ந்த நிகழ்ச்சி 'க்ராண்ட் மாஸ்டர்' . 21 கேள்விகளுக்குள் , மனதில் நினைத்த நபரை திரு,ப்ரதீப் அவர்கள் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி . விளையாட்டீனூடே பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி . இது ஒரு செட்-அப் ஆக இருக்க வாய்ப்புள்ளது என சிலர் சொல்லவும் செய்தார்கள். ஆனால், உண்மையில், திரு,ப்ரதீப்புக்கு இந்த திறமை இல்லாமல் செட்-அப்பாக இருக்குமென்றால், ஏதாவது ஒரு சினிமா நடிகர்தான் இந்த நிகழ்ச்சியை செய்திருப்பார் .

எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நிகழ்ச்சி 'நீயா? நானா?' .. பலமுறை விவாதங்கள் தலைப்பை விட்டு சென்றாலும், நமக்கு பிடிக்காத கருத்துகள் முட்டாள்தனமான கருத்துகள் எனத் தோன்றினாலும் , விவாதம் மிக சூடாகவும் சுவையாகுமே உள்ளது . நடத்துபவரும் திறமையான் சொல்லாடலுடன் கருத்துகளை கூறுகிறார் . ஆனால் முக்கிய விருந்தினராக வருபவர் பெரும்பாலும் சினிமா, தொலைக்காட்சித் துறையினரே .

கல்லூரி மாணவர்களுக்கிடையே கலைநிகழ்ச்சி போட்டி நடத்தும் EQவும் அருமையான நிகழ்ச்சி . அதிலும் , மெல்லிசையில், கலந்து கொள்கின்ற அனைவருமே பின்னுகிறார்கள் . டேப் ரிக்கார்டை போட்டு வாய் மட்டும் அசைக்கிறார்களோ என்ற ஐயம் வருமளவுக்கு அருமையாக பாடுகிறார்கள் . போட்டிக்கு பின் நடுவர்கள் சொல்லும் பின்னூட்டங்களும் அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருக்கும் .
சன் தொலைக்காட்சியிலும் திரு .ரமணன் நடத்திய ஒரு நிகழ்ச்சி இருந்தது . கார்த்திக் போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிண்ணணி பாடகர்களானார்கள். இப்போது என்ன ஆனது எனத் தெரியவில்லை .

காஃபி வித் அனு .. இதுவும் வழமையான பேட்டி போல அல்லாமல் வித்தியாசமாக உள்ளது .. நடிகர் ஜெயராம் , கங்கை அமரன குடும்பம் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன . இது கலந்து கொள்கின்ற விருந்தினரை பொறுத்து இனிமையாகவும் கொடுமையாகவும் அமையும்.

ஜோடி நம்பர்-1 , இது விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது . எனக்கு பொதுவாக போட்டி நிகழ்ச்சிகள் பிடிக்கும் . தொலைக்காட்சி நடிகர்கள் ஆட்டமும் அதற்கு நடுவர்கள் சொன்ன பின்னூட்டமும் சுவாரஷ்யமாகவே இருந்தது . . இதில் சேத்தன், ப்ரியதர்ஷினி , விஜய் ஆனந்த் தவிர மற்ற அனைவரும் புதுமுகமாகவே எனக்குத் தெரிந்தனர் . மெகாத்தொடர்களை பார்த்திருந்தால் எல்லோரையும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் . ராகவ் ப்ரீத்தா ஜோடி தொடர்ந்து நன்றாக ஆடினர் . விஜய் ஆனந்த் இறுதி சுற்றில் அருமையாக செய்திருப்பார் . ஆனால் , முன்றைய சுற்றுகளில் நன்றாக ஆடியிருந்தாலும் , இறுதி சுற்றில் ,பூஜா -வெங்கட் ஜோடி மற்ற இருவரை காட்டிலும் சாதரணமாகவே செய்திருந்தாலும் , அவர்களே SMS ஓட்டின் மூலம் வெற்றி பெற்றனர் . இதற்கு காரணம் திருமணம் ஆகாத பூஜாவா அல்லது மற்ற ஜோடிகளின் 'ஆத்தில்' இருந்து உறவினர்கள் கொடுத்த பேட்டிகளா எனத் தெரியவில்லை .

ஆனால் இது அடுத்த சுற்றில் மிகவும் சுவாரஷ்யமின்றி முடிந்தது . சன் குழுவினர் ஜோடி நம்பர்-1 இல் கலந்துகொள்ள கூடாது என நெருக்கடி கொடுத்ததாக வந்த செய்திக்கும் ,. நடிகர்களின்றி, நடணக்கலைஞர்களை வைத்து ஜோடி நம்பர்-1 நடந்ததற்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது .


அடுத்து 'கலக்கப்போவது யாரு' .. பலராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இது என்று நினைக்கிறேன் . வெள்ளி இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி , சனி காலையும், ஞாயிறு மாலையும் மறுஒளிபரப்பாகி கொண்டிருந்தது . ஆதலால் இந்த நிகழ்ச்சியை தவறவிடமுடியாது . சிலமுறை மூன்று தடவையும் பார்க்கும் சந்தர்ப்பம் வரும் . ஆனால் , இந்த நிகழ்ச்சிக்கிடையேயும் சன் தொலைக்காட்சி குறுக்கே வந்துவிட்டது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கிய எல்லோரும் சன் தொலைக்காட்சியில் அசத்த வந்துவிட்டார்கள் . 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல , கலைஞர்கள், தாமே சன் தொலைக்காட்சிக்கு வந்ததாக பலமுறை சொன்னார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எல்லோரையும் அப்படியே கடத்துவது எந்தளவு முறையான வியாபார முறை? . Business Etiquette உண்டா இதில்?
அதுவும் நிகழ்ச்சி பெயர் முதற்கொண்டு , எல்லாமே ஈயடிச்சான் காப்பி . சம்பந்தமே இல்லாது கோட் போட்டு கலக்கியவர்கள் , அதே சம்பந்தமே இல்லாத கோட்டுடன் வந்து அசத்துகிறார்கள் . அதில் கூட மாற்றம் இல்லை . விஜயில் விருந்தினராக வந்தவர்களின் சின்னி ஜெயந்த் நல்ல பின்னூட்டங்களையும் , சில நேரங்களில் தானே மிமிக்ரியும் பண்ணினார், ஆனால் சிரித்து மட்டுமே கொண்டிருந்த மதன் பாப், சன்னிலும் வந்து சிரிக்கிறார் ..

அது சரி , நிகழ்ச்சி சன்னில் வந்தால் என்ன , விஜயில் வந்தால் என்ன? நான் என்ன விஜயின் பங்குதாரரா .. கவலைப்படுவதற்கு .. ஆனால் நான் விரும்பும் நிகழ்ச்சி , சன்னிற்கு போனது கவலைதான் . விஜயைப் போல சன் , மறு ஒளிபரப்பு செய்யப்போவது கிடையாது . அவர்கள் நேரத்தை நிரப்ப நிறைய மெகாத்தொடர்களை வைத்துள்ளார்கள். மேலும் , ஒளிபரப்பாகும் நேரம்.. சனி இரவு 10.00 மணி . 10.30 மணிக்கு சன் செய்திகள்(சிங்கப்பூரில் சன் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பாவதால்) இடையூறு வேறு . 11:30 மணிக்கு முடியும் நிகழ்ச்சி .. எஸ். ஜே. சூர்யா வந்த நிகழ்ச்சி வரும் வாரம் ஒளிபரப்பாகும்.

'மக்கள் யார் பக்கம்' என்ற நிகழ்ச்சி ஈராண்டுகளுக்குமுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . அரசியல் தலைவர்களும் , பத்திரிக்கையாளரும் கல்ந்துரையாடும் நிகழ்ச்சி . செல்வி .ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுகவின் ஏழு கட்சி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நேரம் . 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் திரு.பொன்முடி கலந்துகொண்டிருந்த நேரடி ஒளிபரப்பின் போது , சன் தொலைக்காடசியின் பங்குதாரராயும் இருந்த திரு.கருணாநிதி , தொலைபேசியில் தொடர்பு கொண்டு , 'மக்கள் , தாம் யார் பக்கம் என்று முடிவெடுத்துவிட்டரே!! , இன்னும் என்ன இந்த நிகழ்ச்சி என திரு.பொன்முடியையும் , விஜய் தொலைக்காட்சியையும் கடிந்துகொண்டதாக படித்தேன் . அந்த வாரம் முதல் அந்த நிகழ்ச்சி தொடரவில்லையாம் . ஒரு நிகழ்ச்சியை இடையூறு செய்வது என்ன நாகரீகமான் செயலா, அதுவும் ஒரு போட்டி தொலைக்காட்சியின் பங்குதாரர் . காரணமும் நியாயமாகப்படவில்லை .. தலைப்பைத் தெரிவு செய்வதும் அந்த தொலைக்காட்சியின் தனியுரிமை , மற்றும், 'மக்கள் அன்று உங்கள் பக்கமாய் இருந்தாலும் , அதற்கு முன் உங்கள் எதிர்ப்பக்கம் இருந்தார்கள். இனிமேலும் இருப்பார்கள் ' 'மக்கள் யார் பக்கம்?' என்பது எப்போதும் விடைதெரியா கேள்விதான் .

இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சி , பெரும் வெற்றியடையக்கூடாது என விழைகிறேன் . அப்போதுதான் அதை தொடர்ந்து இடையூரில்லாமல் பார்த்து ரசிக்கமுடியும் .

12 comments:

said...

தல,
லொல்லு சபாவ விட்டுட்டீங்களே. . . .

said...

ஓ அப்படியா, விசயம்..

சங்கமம், koffee with அனு - எப்படியோ ?

said...

Venkatraman & Vasantham ,

Thanks for your comments

said...

LLDasu,
நான் மிகவும் ஒத்துப்போகக்கூடிய பதிவு.

said...

நன்றி ஜோ ..

Venkatraman ,

லொள்ளு சபாவும் பரவாயில்லை .. சில சிரிப்புத்துளிகள் நன்றாயிருக்கும் .

said...

தாஸு,

நிச்சயம் பல இடங்களில் ஒத்துப்போகிறேன்.

பிரபல நிகழ்ச்சிகளை சன் டிவி கடத்தும்போது அதன் வெற்றி அம்சங்கள் (என அவர்கள் கருதுவதூ) பற்றி பெரிதுபடுத்துவதும் ஒரு மெகா அசிங்கம்.

ஜாக்கெட் என்றே ஜெயா டிவி ஜாக்பாட் நிகழ்ச்சி பிரபலமாக அறியப்பட்டாலும், அதில் ஜாக்கெட் அணியப்படும் ஒரு சமாசாரமாக மட்டுமே இருந்தது. சன்னுக்கு மாறிய வெர்ஷனில் ஜாக்கெட் விளம்பரப்பொருளாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டது.

கதையல்ல நிஜம், பழைய அரட்டை அரங்கத்தில் ஒரு சில காட்சிகளில் அழுது பிரபலமாகிவிட, இப்போது யார் நடத்தினாலும் அழுவது Mandatory ஆகிவிட்டது இன்னொரு ஆபாசம்.

சன் டிவியின் லிமிட்டேஷன்களில் நல்ல நகைச்சுவை சாத்தியமே இல்லை என்றே தோன்றுகிறது. கலைஞரை மிம்க்ரி செய்தவர்கள் "ஒரு அரசியல்வாதி"யாக மாற்றி நகைச்சுவையை குறைக்க வேண்டியதாகிவிட்டது.

லொல்லு சபாவின் கவுண்டர்பார்ட்டான சூப்பர் 10ல் அரசியல் அபிலாஷைகள் அதிகமாகி நகைச்சுவையைக் கொன்று ஆண்டுகளாகிவிட்டன.

அதுவும் இந்த நகைச்சுவையாளர்கள் சன் டிவிக்கு வந்ததால்தான் வாழ்க்கையில் ஒளிவந்தது என்று ரெண்டு நிமிஷத்தை சாப்பிட்டுவிடுகிறார்கள் - சொற்பொழிவின் முதலில் வரும் போலித்தனம் போல.

நானே எழுத வேண்டும் என நினைத்திருந்த பதிவு, பின்னூட்டத்தோடு நிறுத்தியதற்கு நன்றி:)

said...

சுரேஷ் ,

நன்றி .. இதைப்பற்றி நீங்கள் கண்டிப்பாக எழுதுங்கள் .. உங்களுடைய கோணம் வித்தியாசமானது .. மேலும், உங்களுடைய எழுத்து பரவலாக கவணிக்கப்படும்.

said...

ஆனந்தவிகடணிலிருந்து...

இது எங்க ஐடியா!

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு. இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு. உண்மையான சந்தோஷம் 3&லதான் கிடைக்கும். வாங்க, 3&க்குப் போகலாம்!’ & ‘கலக்கப்போவது யாரு?’ 3&ம் பாகத்துக்கான விளம்பரமாக விஜய் டி.வி&யில் உலா வந்துகொண்டு இருக்கும் வரி இது!

சன் டி.வி&யின் ‘அசத்தப்போவது யாரு?’, விஜய் டி.வி&யின் ‘கலக்கப்போவது யாரு?’ அரசியல் பற்றிக் கேட்டோம்.

‘‘ராஜ்குமார் இந்த நிகழ்ச்சிக்கு டைரக்டரா இருந்தார். அவருக்கும் அந்த டீமுக்கும் எந்தப் பிரச்னையா இருந்தாலும் எங்ககிட்ட முதல்லேயே சொல்லி, சுமுகமா தீர்த்துட்டு இருந்திருக்கலாம். ஆனா, திடீர்னு ஒருநாள் எங்ககிட்ட வந்து பிரச்னைனு சொல்லிட்டு அதுக்கு எந்தத் தீர்வும் கேட்காம, ‘நாங்க விலகிக்கிறோம்’னு மையமா சொல்லிட்டுப் போயிட்டாங்க. நாங்க தங்கவெச்ச ஓட்டல் சரி இல்லைனு புகார் சொன்னவங்க, இப்பவும் அதே ஓட்டல்லதான் தங்கி இருக்காங்க. தகுதி உள்ளவங்க எங்கே வேணாலும் போகலாம், எது வேணாலும் செய்யலாம். ஆனா, ‘கலக்கப்போவது யாரு’ எங்களோட ஐடியா. அதையே வேற ஒரு சேனலுக்கு இவங்க கொண்டுபோனதுதான் எங்க வருத்தம். அதுக்காக எங்க ஐடியாவை நாங்க விடமுடியாதே! நாங்க பார்ட்&3 ஆரம்பிச்சிட்டோம்’’ என்கிறார் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரதீப். இந்த நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியோடு சேர்ந்து காம்பியர் செய்யவிருக்கும் சேது, 64 குரல்களில் மிமிக்ரி செய்யக் கூடியவராம்!

எஸ்.வி.சேகரும் உமா ரியாஸ§ம் தேர்ந்தெடுக்கும் கலக்கல் சாம்பியனுக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசும் உண்டு!

said...

சன் டீவியின் ஆரம்ப காலத்தில் மாலா, ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியை நடத்திய ரெகோ, இன்னொரு மொழி விளையாட்டு நிகழ்ச்சியை நடத்தியவர், இப்பொழுது விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சி நடத்துகிறவர் என்று எல்லாரையும் தூக்கி எறிந்தது மறக்க முடியாதது. இன்றைக்கு அவர்கள் காணாமல் போனாலும் சன் தொலைக்காட்சியின் இந்தத் தொடர் தொல்லையும் மிரட்டலும்..அளவுக்கு மீறிப் போனதாகவே உணர்கிறேன். குறிப்பாக சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி. ஏ.வி.ரமணனுக்குப் பிறகு நிகழ்ச்சி விளங்கவில்லை. அதை விட ஜெய டீவியின் ராகமாலிகா நன்றாக இருக்கிறது. சுபஸ்ரீ தணிகாசலம் இயக்குறார். அரட்டை அரங்கம் நன்றாக நடந்தது. அது இப்பொழுது குறட்டை அரங்கமாக மாறி விட்டது. மக்கள் மன்றம் என்று மக்கள் ஜெயா டீவி கூட பார்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனைக்கு அடி சறுக்குகிறது. ஆனால் பிரச்சனையே...அடி சறுக்கிய ஆனையால் பிறகு எழவே முடியாது என்பதுதான். சன் டீவி தகிடுதத்தங்களை விடுத்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாக யோசித்தால் அவர்களுக்கு நல்லது. இல்லையேல் மக்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடுவார்கள். ஆணவம் குறைய வேண்டும்.

Anonymous said...

போட்டி ஊடகங்களின் சாதனையாளர்களை பணத்தைக்காட்டியும், பதவி காட்டியும் தங்களிடம் இழுப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இதில் இவர்களுக்கு அதிகார பலம் வேறு உள்ளதால் இவர்களை ஒன்றும் சொல்லமுடியவில்லை.

ஆரம்பித்த காலம் முதல் மத்தியில் அல்லது மாநிலத்தில் தொடர்ந்து பதவியில் உள்ளதால் இவர்களி ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருப்பதால் இவர்களின் அட்டகாசம் எல்லை மீறிப்போகிறது.

தமிழகத்தில் ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. இன்னும் சில காலம் ஆனால் இவர்கள் போடுவதுதான் நிகழ்ச்சி, இவர்கள் சொல்லுவதுதான் செய்தி என்றானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

said...

வாங்க இராகவன் .

நல்ல திறமைசாலிகளை வெளியேற்றிவிட்டது. முக்கியமாக சொல்விளையாட்டு எனக்குப் பிடித்திருந்த ஒன்று . அதனை நடத்துபவரும் நல்ல திறமைசாலி .. வேறு எந்த தொலைக்காட்சியும், இவர்களை உபயோகப்படுத்தாதது வருத்தமே.

அணாணி அவர்களின் கருத்து மிகவும் சரி ..

said...

உண்மைதான்