என் கேள்விக்கு என்ன பதில்?


துளசி டீச்சர்
, இட்லி வடையைத் தொடர்ந்து எனக்கும் ஒரு சந்தேகம் . இறால்வடை என்று ஒனறு சிங்கப்பூரிலுள்ள இந்திய கடைகளில் மிகப்பிரபலம் . அதை சாப்பிடுப்பார்க்கும் தைரியம் இன்னும எனக்கு் வரவில்லை) . இறால் கொண்டு இதை செய்திருப்பார்கள் .. பார்க்க படம் .


இறாலில் செய்திருப்பதால் இது இறால் வடை .
மேலே படத்தில் நீங்கள் காணும் வடையை ஏன் 'ஆமை வடை' எனக் கூறுகிறார்கள் ?

8 comments:

said...

ஐயா.. லொள்ளு தாங்கலை.. இனிமே ஆமை வடை சாப்பிட முடியாம பண்ணிட்டீங்க..

மைசூர் போண்டாவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? ;)

said...

//சிங்கப்பூரிலுள்ள இந்திய கடைகளில் மிகப்பிரபலம் . அதை சாப்பிடுப்பார்க்கும் தைரியம் இன்னும எனக்கு் வரவில்லை//

தினமும் கடலுணவு சாப்பிடும் நானும் இதை சாப்பிட்டதேயில்லை .ஏதோ ஒரு வாரத்துக்கு முன்னரே செய்து வைத்தது போல இருக்கும்.

said...

nice blog

said...

பொன்ஸ் ,

மைசூர் போண்டாவில் மைசூர் இருக்காதா?

ஜோ..

கொஞ்சம் பயமாக இருக்கும் .. அதே மாதிரி நான் பயப்படும் இன்னொன்று 'ரோஜாக்'.. இவையெல்லாம் இங்கே இந்திய உணவு வகையைச் சார்ந்த்தது எனக்கருதப்பட்டாலும் இந்தியாவில் இவற்றை பார்த்ததேயில்லை .

said...

//அதே மாதிரி நான் பயப்படும் இன்னொன்று 'ரோஜாக்'.//

நான் இந்த இரால் வடையும் ரோஜாக்-ன் ஒரு பகுதியிண்ணு தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் .இந்த ரோஜாக் எப்படி இந்திய உணவு வகையானது என்று தெரியவில்லை .ஊசிப்போன வடை அயிட்டங்கள் மாதிரி இருக்கும் .இது மலாய் - இந்திய கலவை என நினைக்கிறேன்.

said...

இது கொஞ்சம் பெரிய வடையா இருக்குமோ ஆமை முட்டை சைஸ்லே?
அதான் ஆமை வடையா?:-))))))))))))

ஏங்க இது ஆம வடையாச்சே.

ஆமா..பொல்லாத வடைன்னு சொல்லப்போய் ஆம வடை ஆகி இருக்கலாம்.

said...

வாங்கக்கா..
இந்த லிங்க் பாருங்கள்..
http://www.arusuvai.com/tamil/node/1148
ஆமை வடை என்றுதானுள்ளது ..;)

நல்லவேளை நா..ன் பிழைத்துகொண்டேன்...

said...

//நான் இந்த இரால் வடையும் ரோஜாக்-ன் ஒரு பகுதியிண்ணு தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன//

இருக்கலாம் ஜோ..

//பொல்லாத வடைன்னு சொல்லப்போய் ஆம வடை ஆகி இருக்கலாம்.//
;)