தமிழனும் அவன் பெருமைகளும் ..

1)சினிமாவில் நடித்தவன் மட்டுமே நம்மை ஆள தகுதியானவன் என்று உறுதியாக நம்புவனே மறத்தமிழன் .
2)நடிகனை தலைவன் என்று ஏற்று அவன் உளரும் ‘பன்ச் டயலாக்’கை கொள்கை என்று ஏற்கும் மனப்பக்குவம் உள்ளவனே முழுத்தமிழன் .
3) சினிமாக்காரனும் அரசியல்வாதியும் ஒருத்தனுக்கொருத்தன் (அ)அவனுக்கவனே சூட்டிக்கொள்ளும் பட்ட பெயரை ( புரச்சி தலைவி , அறிஞர், கலைஞர் , கேப்டன், சூப்பர் ஸ்டார், டாக்டர் ஐயா …) சொல்லி சொல்லி பெருமை படுபவனே அறத்தமிழன் .
4) தன் பேருக்கு முன்னால் சினிமாக்காரன் பேரை வைத்து ரஜினி ராமு, கமல் கருப்பையா.. என வைத்து அலைபவனே சுத்தத்தமிழன் .
5) சுனாமி வந்தாலும் , பாகிஸ்தான் குன்டு போட்டாலும் , தன் குழந்தை பாலுக்கு அழுதாலும் சினிமாக்காரன் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுபவனே
6) தான் விரும்பும் சினிமா நடிகந்தான் மற்ற நடிகனை விட நல்லவன், கொடை வள்ளல் என எங்கிலும் சண்டை போடுபவனே வீரத்தமிழன்.

7)வீட்டுல எந்த மொழியிலாவது பேசிட்டு வெளியே தமில் தமில் என மாருல அடித்து திரிபவனே 'மாடர்ன்' தமிழன் .

5 comments:

Anonymous said...

/* தன் பேருக்கு முன்னால் சினிமாக்காரன் பேரை வைத்து ரஜினி ராமு, கமல் கருப்பையா*/

ஏண்டா நாய்ங்களா உங்களை பெத்த அப்பன், ஆத்தா பேர உங்க பேருக்கு முன்னால போடுங்கடா

said...

இந்த சினிமாவால் இன்று எங்கள் சமுதாயமே ஒரு பலவீனமான சமுதாயமாக மாறிக்கொண்டு போகிறது, இந்த மாயையில் இருந்து எப்பதான் விடுபடுவார்களோ....????

Anonymous said...

அவ்வப்போது இந்த மாதிரி கோணத்தனமாக ஜெனரலைஸ் செய்பவனும் தமிழன் தான்

said...

தாஸ்,
முதல்ல நீங்க தமிழனா இல்லியாங்கிறத தெளிவா சொல்லுங்க..

Anonymous said...

அவரு லாடு லபக்கு தாஸாம். அதுக்கு தான் தன் பெயரை L.L.தாஸ்ன்னு வச்சிருக்காராம்.

//தன் பேருக்கு முன்னால் சினிமாக்காரன் பேரை வைத்து ரஜினி ராமு, கமல் கருப்பையா.. என வைத்து அலைபவனே சுத்தத்தமிழன் //

ஆமா நீங்க மட்டும் லாடு லபக்கு தாஸ் எங்கிறத சினிமாவில இருந்து தானே பிடிச்சீங்க. ஓ! நீங்க சுத்தத்தமிழன்னு சொல்லிகிறீங்களோ.

அடுத்தவன் முதுகில் அழுக்கை சுரண்டும் போது தன் முதுகில் ஏதும் அழுக்கு இருக்கிறதாவென சரி பார்ப்பது உத்தமம் சாமி.

உணர்ச்சிவயத்தில் கமெண்ட் அடிக்காமல் கொஞ்சம் யோசிச்சி கமெண்ட் அடிங்க.