ஒரு தமிழனின் புலம்பல்கள்

ஐயா .. அம்மா ஆட்சி சரியில்லையா .. எல்லோரையும் சந்தொஷப்படவைக்கிறாங்க.. ஆனா நல்லது செஞ்சு இல்லையா.. ஐயாவை ஜெயில்லெ தள்ளி ஒரு பக்கத்தை சந்தோஷபடுதுறாங்க ..சாமியாரை கைது பண்ணி அடுத்தபக்கத்தை சந்தோஷ படுத்துராங்க.. அரசு ஊழியரை உள்ளே தள்ளி மத்தவுகளை சந்தோஷபடுத்துறாங்க .. எல்லோரும் சந்தொஷமாத்தேன் இருக்கோம் .. ஆனா ஒரு யூஸும் இல்லையா . அவுகளை மாத்தனுமையா? அடுத்தபக்கம் ஐயா அவுக.. என்னையா வித்தியாசம் அம்மாக்கும் ஐயாவுக்கும் ? . அம்மா படப்படன்னு செய்யுறதை ஐயா அடக்கி செய்வாரு . அம்மாக்கு உடன்பிறவா சகோதரி குடும்பமுனா ஐயாக்கு சொந்த குடும்பம் ..என்னையா ஒரு ஆறு வித்தியாசம் கூட இல்ல. வேற ஆளு நல்ல ஆளா நல்ல கச்சியா பாக்கனும்யா . காங்கிரசு காரவுக.. அடுத்தவன் வேட்டிய அவுக்கிறதிலே இருக்கிறாங்கையா… வேட்டி அவுத்துட்டு அறிவாலயத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் டெல்லிக்கும் ரூட்டு போடவே டைம் பத்தலாயா அவுங்களுக்கு ..இதுல எங்கையா நம்மல பத்தி கவலப்பட போறாங்க . பி ஜே பின்னு ஒரு கச்சி .. அவுக கோயிலு கட்டித்தான் நாட்டை முன்னேத்தனுமாம் .. சாமியார் தப்பு பண்ணாலும் அவரு வால் புடிப்போம்னு இருகாங்கே.. வேணாமுயா அவிங்க .. வந்தாங்கயினா தமிழ்நாடும் குசராத்தா மாறிரும் .. சரியா.. இன்னொருத்தரு.. அவரை நினைச்சா துக்கம் தொண்டைய அடைக்குது .. அழுகை வைகோவாய் சாரி.. வைகையாய் வருது.. பாவம்யா .. அவரு.. அவர் தனியா அழட்டும்.. நம்ம அவரை முதல்வராக்கி தொந்தரவு பண்ண வேணாமுயா . ..அப்பறம் இருக்காரு பாருங்க இன்னொரு அய்யா.. குரங்குல இருந்துதான் மனுஷன் பிறந்தான்னு நிரூபிக்க கஷ்டபடுற விஞ்ஞானியா அவரு . அப்புறம் நம்ம கி.சாமி .. அவரு சு. சாமியோட வரும்போதே அவரு சரிப்பட்டு வரமாட்டாருன்னு தெரியும்யா.. ஆனா இன்னொருத்தர் இருக்காரே ..சாதி கட்சினாலும் பாவபட்ட சனத்துக்குதானே போராடுறரு , எம்மெல்லெ பதவியெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டாருன்னு .. நல்லவராத்தே இருப்பாருன்னு பார்த்தா போட்டாரே ஒரு கூட்டு சேதுராமனோடையும் மருத்துவரோடையும் .. அவரு.............................. வேனாமுயா பொல்லாப்பு .. அப்புறம் ஒருத்தரு பட்செட்டுன்னா படிச்சாரு. நல்ல அறிவாளியா இருப்பாரோன்னு பாத்தா அவரு ரசினி பின்னாடி விசய் பின்னாடியெல்லாம் அலைஞ்சு இப்ப சேலை பின்னாலே ஒளிஞ்சுட்டாரு .. எதோ இன்னும் பட்செட்டெல்லாம் படிச்சிக்கிட்டு நல்ல சீவனந்தான் நடத்துராரு ..ஆனா நம்ம ஊருக்கு என்ன பிரயொசனமுன்னு தெரியலெ
அப்புறம் சாதி கச்சி தலைவருங்க.. சமய கச்சி தலவருங்க .. அவுக எல்லாம் கூட்டணி யரொடவாவது வச்சமா.. எம்மெல்லெ ஆனமா .. முதல்வரை புகழ்ந்துட்டே இஞ்சினியர் காலேஸ் வச்சமான்னு திரியிராங்கே.. அவங்கள பத்தி பேசி என்ன பன்ன? ..
சரி புது ஆளுக யாராவது வருவாக முதல்வராக்கலாம்னு பாத்தா.. ரசினியின்னு சொல்ராக.. விசயகாந்துன்னு சொல்ராக.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. சினிமாக்காரக மட்டும் முதல்வராக தமிழ்நாடென்ன திரைப்படக்கல்லூரியா?

5 comments:

said...

நன்றி...கண்டிப்பாக ..

Anonymous said...

// குரங்குல இருந்துதான் மனுஷன் பிறந்தான்னு நிரூபிக்க கஷ்டபடுற விஞ்ஞானியா அவரு//

Kalakkire mamu ..

said...

//நான் உங்கள சந்திச்சே ஆகனும்.//

எதுக்கும் messanger-லே ட்ரை பண்ணுங்களேன் மூர்த்தி..!!

said...

LL Dasu,

ஒங்க புலம்பல் சூப்பர் :))
யாரு தான் வரலாம் என்கிறீர்கள் ?

--- BALA

said...

//எதுக்கும் messanger-லே ட்ரை பண்ணுங்களேன் மூர்த்தி..!!

நாங்க பேசிட்டோம் மாயவரத்தான் ..

//யாரு தான் வரலாம் என்கிறீர்கள்

கண்டிப்பா ரஜினி இல்லீங்கனா..;)