இராஜேந்திர சோழன்

அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராஜேந்திர சோழன்.

இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்க்கு வெளியே வென்று , கடல் கட்ந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராஜேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .

கடாரம் - மலேயா , சுமத்ரா, ஜாவா , போர்னியோ , பிலிப்பைன்ஸ் , பார்மோஸா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது . 3000 KM க்கும் மேல் இப்படியொரு படையெடுப்பு மனித வரலாற்றில் நடந்ததாக தெரியவில்லை .ஜூலியஸ் சீஸர் , அலெக்ஸான்டர் , தாமூர் , செங்கிஸ்கான் போன்றோர் தரை வழியாகாவோ அல்லது நதிகளை தாண்டியோதான் படையெடுத்தனர் .

ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராஜேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .

கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை இராஜேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .

இதை மெய்க்கீர்த்தி,

" அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,
ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .."

என குறிப்பிடுக்கிறது .

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராஜேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை . கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்காத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான் .


நன்றி .(இதயம் - 1/6/1999 )தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் - முனைவர் .இ.ஜே. சுந்தர் .


பின்குறிப்பு :

'தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன்' என்ற புத்தகத்தை படித்தவுடன் , இந்த வரலாற்று செய்திகளை, உலகிற்கு ...அல்ல..அல்ல.. இந்தியாவிற்கு... அல்ல.. தமிழகத்து தமிழர்க்கு கூட தெரியப்படுத்த இந்த தமிழ் காப்பார்கள் ஒரு அடி கூட எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் copyright -ட்டைக் கூடப் பற்றி கவலைப்ப்டாமல் (ஆசிரியர் மன்னிக்கவும்) எழுதியது. இதில் ஏதேனும் குறை இருந்தால் சுருங்க சொல்லுகிறேன் பேர்வழி என்று நான் சுருக்கியதில் உள்ள குறையாக இருக்கும் .

தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் ?- ஒவ்வொரு சாமான்யத் தமிழனும் படிக்கவேண்டிய புத்தகம் ..

22 comments:

said...

நல்ல தகவல் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

said...

"வந்தார்கள்..வென்றார்கள்" என்று 'மதன்' எழுதியது போல் "சென்றார்கள்..வென்றார்கள்" என்று சோழர்கள் வரலாற்றை யாராவது சுவையாகவும், விளக்கமாகவும் எழுதினால் நன்றாகத்தினிருக்கும் என்று மனது ஏங்குகிறது!!

அன்புடன்,
சௌந்தர்.

said...

Great Info

said...

Hi,

Good post! It is unfortunate that the world believes so called 'expert historians' like George Spencers, who call Rajendra Chozhan as a PIRATE!!!

The photo you have posted here is the one of Rajaraja chozha. Rajendra's reign was in the A.D and not in B.C:-).

said...

மிக்க நன்றி . தவறுக்கு மன்னிக்கவும் .. google-லை நம்பி படத்தை மாற்றியுள்ளேன் .. இதுவும் தவறான படம் என்றால் வேறு வழியில்லை ..படத்தை remove பண்ணிவிடுகிறேன் .

said...

LLDas,

That pic looks like kalinga narthana krishna of oothukkadu to me.:-))

said...

"Chola Empire" is said to be the golden age of the Tamils, where the "classic Tamil culture"? evolved. But, such empire must have been supported by high degree of organization and technology as you indicate? But, the "Chola Empire" did fall. How? Why? What happened? Why Tamils never recovered from that? How did Tamils became "Koolies"? Why are we still so slow in participating in the modern age? Why are we so embedded with the caste system that makes mobility within the society and society it self-burdensome? I wonder.

said...

//அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராஜேந்திர சோழன்.//

அடப்பாவி, இங்கே ஒருத்தருக்கு கூடவா அடுத்தவன் நாட்டை நாம் போர் புரிந்து வீழ்த்துவதில் ஒரு பெருமையும் இல்லை, அது அராஜகம் என்று தோன்றவில்லை. அப்பறம் ஆங்கிலேயன் நம்மை ஆண்டதிலும், அமேரிக்கா உலகத்தையே புணர்வதிலும் என்னய்யா (அதாவது உங்கள் வாதப்படி) தப்பு?

said...

நக்கீரன், சோழர் காலத்தில்தான் இங்கே ஜாதி கறாராய் நிறுவனமயமானது என்று தெரியுமா?

said...

ஒரு அடிமை தன் மகனிடம் ‘அந்த காலத்தில் உன் தாத்தா பெரிய ஆள் ..அவரிடம் நிறைய அடிமைகள் இருந்தார்கள்..’ என புலம்பினால் அதில் என்ன தவறு காண்பீர்கள் .

அலெக்ஸான்டர் , தைமூர் , நெப்போலியன் .. இவர்களை கொடூரர்களாக உலக வரலாறு கூறவில்லையே , வீரர்களாகத் தானே கூறுகிறது ..

கடாரத்தரசன் ஷ்ரிவிஜயன், அவன் நாடு வழியே சென்ற சோழ வணிகர்களை கொடுமைப்படுத்தி , வணிக போக்குவரத்துக்கு தடை விதிக்கும்வரை , சோழர்க்கு அவர்களுடன் நல்ல நட்பே இருந்திருக்கிறது . மேலும் அவன் மேலாதிக்கம் (conquer?) – பண்ணியதோடு சரி – ஆந்கிலேயரைபோல ஊடுருவ (invade) வில்லை .

said...

//நக்கீரன், சோழர் காலத்தில்தான் இங்கே ஜாதி கறாராய் நிறுவனமயமானது என்று தெரியுமா?//

அட..இதிலுமா..????

said...

நீங்க வேற தாஸ்... ஆதாம், ஏவாள் காலத்திலேயே இப்படி ஆரம்பிச்சிடிச்சி அப்படீன்னு 'அறிவாளி'ங்க சொல்லாம விட்டாங்களே!

said...

Dear Rosa Vasanth,

There is a lot of misunderstanding about war, and so your ideas followed those interpretations and found guilty of the wars that the Chozhas engaged.

To make a war and to win, a country should have the best logistics possible. This includes education, high level calibre in arts, science, human values, philosophy and various other disciplines. For example, before waging war Hitler developed his country as an economically powerful, stable country. America won the IInd World war because of its calibre and development in science.

In addition, only those countries that engage in big wars develop so quickly. Ofcourse there are countries that get doomed, but it is because of lack of good leadership.

That is the reason all those hawks are considered as great personalities. We need not feel guilty in knowing that our ancestors have indulged and won a lot of wars. In addition we can feel really proud that our ancestors followed a code of conduct during war and showed respect and kindness for the defeated.

It is utter nonsense that it is the chozha empire that brought the current castiest undertakings. Those history books I read about the Chozha empire says otherwise.

My opinion is that all these foolish ideas of caste get practised (in the very bad manner) when Indian where slaves under Muslims and Christians. If you like we would discuss it in some other place.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

¾ÅÈ¡É ¾¸Åø¸û ÁÄ¢óÐûÇÉ. ¾¢Õò¾¢ì¦¸¡ûÇ×õ.

said...

better check your facts. a lot of things seem wrong.

said...

தயவு செய்து தகவல்பிழைகளை சொல்லிவிடுங்கள் .. சுட்டியும்(?) தந்தால் நல்லது .. மாற்றிவிடுகிறேன் . நன்றி ..

said...

Sub: Rajendra Cholzan's SEAsian Naval Campaign

Re: As per my private mail, I will send you the URLs as and when I find them. Most of the stuff is in tscii. I hope you can convert them into unicode.

Since my time is limited, I will ask Dr.Pasha to monitor the postings and developement.

As you see, I dont even have time to add and update my own blog.

Anyway, your efforts to know Thamilziyam, support Thaamilziyam, and feel proud about Thamilziyam, are most appreciated.

Keep it up.

said...

Thank you sir ..

kalakkal said...

good post