தமிழர்கள் திறமையானவர்கள் , படிப்பாளிகள் , தன்முனைப்பு கொண்டோர் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை . ஆனால் நாம் ‘அரசியல் முட்டாள்கள்’ என்ற வருத்தமும் உள்ளது . படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? எதிர்கால முதல்வர்களாக எதிர்பார்க்கபடுவோரும் ரஜினி , விஜய்காந்த் என்று சினிமாக்காரர்கள் கூட்டமாக உள்ளது ஏன்? சினிமா முதல்வர்களிடமிருந்தும் ஜாதி கட்சி தலைவர்களிடமிருந்தும் நாம் எப்போது நம்மை விடுதலை ஆக்கி கொள்வோம் ? நாம் ‘பொறாமை’ கொள்ளக்கூடிய அளவுக்கு சினிமா ஆசை கொண்ட நம் சகோதரர்கள் தெலுகர் கூட என்.டி.ஆரோடு சினிமா முதல்வர்களை முடித்துக்கொண்டுள்ளனர் .
எனக்கு ஒரு கனவு உண்டு . நான் ஒரு நாளாவது நாம் தேர்ந்தெடுத்த சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு முதல்வரால் ஆளப்பட வேண்டும் . நடக்குமா ?
நிறைவேறுமா?
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வாங்க... லா.ல தாசு,
இங்கேயும் வந்துட்டீங்களா? என்னை ஞாபகம் இருக்குதா?
உங்களை தெரியாதா என்ன? உங்கள் மூலமாகத்தான் எனக்கு blogspot-ம் தமிழ்மணமும் அறிமுகம் .
உங்கள் blogspot& காந்தீய விழுமியங்கள் ன் நான் regular வாசகன் . Tsunami -ல் உங்கள் பணி பாரட்டுக்குறியது..
// படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? //
You have a good point. Thanks for making me to think about the reasons for the same.
Thank you PK Sivakumar for giving your comments here. Expecting your article in this topic
// படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? //
நல்லவங்க எத்தனை பேரு அரசியலில் ஈடுபட விரும்பறாங்க?
அட எத்தனை பேரு ஒழுங்கா ஓட்டு போடுறாங்க...?
ஒவ்வொரு முறையும் என் தொகுதியில் நிற்பவர்களில் யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியிருப்பதை (அவர்கள் தோற்றுப் போவது தனிக்கதை - என் ராசி அப்படி) அவலம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?
நல்லவங்க அரசியலுக்கு வந்தாத்தானே என்னை போலுள்ளவங்க அவங்களுக்கு வாக்களிக்க முடியும் ?
Post a Comment