பத்தாண்டுகளுக்கு முன்னால் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு நேர்முகத் தேர்வுக்காக போபால் சென்றிருந்தேன் . அந்த நேர்முகத்தேர்வு இரண்டு, மூன்று நாட்களுக்கும் மேல் நடக்க இருப்பதாக தெரிந்தது . இதை தத்தம் வீட்டிற்க்கு தந்தி அனுப்பி தெரியப்படுத்த, நானும் , வந்த இடத்தில் நட்பாகிய தமிழ் நண்பனும் போஸ்ட் ஆஃபிஸ் செல்ல முடிவெடுத்தோம். போஸ்ட் ஆஃபிஸ் எங்கே என ஆங்கிலத்திலும், சைகையிலும் ரோட்டோரம் சென்றவர்களிடம் கேட்டோம் . யாருக்கும் புரியவில்லை . போஸ்ட் ஆஃபிஸ் என்ற ஆங்கிலமே தெரியாதது ஆச்சரியம்தான் . உண்மையிலேயே புரியவில்லையா அல்லது ‘தார்’ அடித்ததற்காக பழி வங்கினார்களா என்றும் தெறியவில்லை.(அண்ணாத்துரையின் , பெரிய துளையான ஆங்கிலத்தால் இந்த சிறு பூனைக்கு அங்கு ஒரு பயனுமில்லை) . சோர்வோடு நாங்கள் நடக்கையில் , கொஞ்ச தூரத்தில் ஒரு சினிமா போஸ்டர் ஒட்டியிருந்தது தெரிந்தது . நாங்கள் ஒரு முடிவோடு, மகிழ்ச்சியாக, வேகமாக சென்று பார்த்தோம் . ஆம்.. அது தமிழர் பகுதிதான் ....
1 comments:
முட்டாள்தனமாக எழுதுவதை நிறுத்துங்கள்..
Post a Comment