கோயாபல்'சோ'வும் காந்துகளும்

துக்ளக்கில் பலமுறை படித்திருந்ததினால் வி.காந்தின் , முதல்வர் கருணாநிதி மேலான 'பாவாடை நாடா' குற்றச்சாட்டின் மேல் ஒரு அதிர்ச்சியும் இல்லை. இது தெரிந்ததுதானே என்றுதான் தோன்றியது. ஆனால் அதற்கு பிந்தைய வக்கீல் நோட்டிஸ்களும், வி.காந்த் தரப்பிலிருந்து வந்த மலுப்பல்களை பார்த்தபிறகு , கருணாநிதி மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை கோயபல்'சோ' செய்து வந்திருக்கிறார் என புரிந்தது .துக்ளக் படித்துவிட்டு உளறிய வி.காந்த் பாவம் ..


அடுத்து கருணாநிதி ஜோஸ்யம் பார்ப்பார் என யாரோ மேடையில் சொன்னதாகவும் அதற்கு கருணாநிதி மறுப்பு சொல்லவில்லை எனவும் துக்ளக்கில் , அடுத்தடுத்த வாரங்களில் வந்த செய்தி / கிண்டல் . தலைவர் ஜோஸ்யம் பார்ப்பார் என கூறியது விழாத்தலைவர் பற்றி எனவும் , அதை அதே மேடையில் அந்த தலைவர் மறுத்துள்ளார் எனவும் ஒரு செய்தி . தலைவர் என குறித்தது கருணாநிதியைத்தான் என நினைப்பது இயல்பு ஆனாலும் அதே மேடையில் அதற்கான விளக்கத்தை அறிந்த பின்பும் அதை செய்தியாக்குவது என்ன வகை நியாயம் ?

ர.காந்த் முதல்வரானால் தமிழ்நாடு குஜராத் ஆகுமாம் . தமிழ்நாட்டின் மேல் என்ன வெறுப்போ இவருக்கு ? பாஜகா, ர.காவின் ஆன்மீக முகமூடியுடன் தமிழ்நாட்டில் நுழைய எத்தளிப்பது புரிகிறது . ;) மோடிதான் சிறந்த நிர்வாகியாம் .குஜராத் கொலைகளுக்கு மோடி குற்றவாளி இல்லை என கொண்டாலும் ,பலநூறு கொலைகளை தடுக்கமுடியாதவர் எவ்வாறு நல்ல நிர்வாகியாக முடியும் ?

கீழே உள்ளதை படித்துவிட்டு வாய்வழியாகவாவது சிரித்து ...விடுங்கள்

16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..

கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீக்ஷிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள் .

அதே பத்திரைகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை . பிறகு ஏன் பிரச்சினை?

,