ஐயா .. அம்மா ஆட்சி சரியில்லையா .. எல்லோரையும் சந்தொஷப்படவைக்கிறாங்க.. ஆனா நல்லது செஞ்சு இல்லையா.. ஐயாவை ஜெயில்லெ தள்ளி ஒரு பக்கத்தை சந்தோஷபடுதுறாங்க ..சாமியாரை கைது பண்ணி அடுத்தபக்கத்தை சந்தோஷ படுத்துராங்க.. அரசு ஊழியரை உள்ளே தள்ளி மத்தவுகளை சந்தோஷபடுத்துறாங்க .. எல்லோரும் சந்தொஷமாத்தேன் இருக்கோம் .. ஆனா ஒரு யூஸும் இல்லையா . அவுகளை மாத்தனுமையா? அடுத்தபக்கம் ஐயா அவுக.. என்னையா வித்தியாசம் அம்மாக்கும் ஐயாவுக்கும் ? . அம்மா படப்படன்னு செய்யுறதை ஐயா அடக்கி செய்வாரு . அம்மாக்கு உடன்பிறவா சகோதரி குடும்பமுனா ஐயாக்கு சொந்த குடும்பம் ..என்னையா ஒரு ஆறு வித்தியாசம் கூட இல்ல. வேற ஆளு நல்ல ஆளா நல்ல கச்சியா பாக்கனும்யா . காங்கிரசு காரவுக.. அடுத்தவன் வேட்டிய அவுக்கிறதிலே இருக்கிறாங்கையா… வேட்டி அவுத்துட்டு அறிவாலயத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் டெல்லிக்கும் ரூட்டு போடவே டைம் பத்தலாயா அவுங்களுக்கு ..இதுல எங்கையா நம்மல பத்தி கவலப்பட போறாங்க . பி ஜே பின்னு ஒரு கச்சி .. அவுக கோயிலு கட்டித்தான் நாட்டை முன்னேத்தனுமாம் .. சாமியார் தப்பு பண்ணாலும் அவரு வால் புடிப்போம்னு இருகாங்கே.. வேணாமுயா அவிங்க .. வந்தாங்கயினா தமிழ்நாடும் குசராத்தா மாறிரும் .. சரியா.. இன்னொருத்தரு.. அவரை நினைச்சா துக்கம் தொண்டைய அடைக்குது .. அழுகை வைகோவாய் சாரி.. வைகையாய் வருது.. பாவம்யா .. அவரு.. அவர் தனியா அழட்டும்.. நம்ம அவரை முதல்வராக்கி தொந்தரவு பண்ண வேணாமுயா . ..அப்பறம் இருக்காரு பாருங்க இன்னொரு அய்யா.. குரங்குல இருந்துதான் மனுஷன் பிறந்தான்னு நிரூபிக்க கஷ்டபடுற விஞ்ஞானியா அவரு . அப்புறம் நம்ம கி.சாமி .. அவரு சு. சாமியோட வரும்போதே அவரு சரிப்பட்டு வரமாட்டாருன்னு தெரியும்யா.. ஆனா இன்னொருத்தர் இருக்காரே ..சாதி கட்சினாலும் பாவபட்ட சனத்துக்குதானே போராடுறரு , எம்மெல்லெ பதவியெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டாருன்னு .. நல்லவராத்தே இருப்பாருன்னு பார்த்தா போட்டாரே ஒரு கூட்டு சேதுராமனோடையும் மருத்துவரோடையும் .. அவரு.............................. வேனாமுயா பொல்லாப்பு .. அப்புறம் ஒருத்தரு பட்செட்டுன்னா படிச்சாரு. நல்ல அறிவாளியா இருப்பாரோன்னு பாத்தா அவரு ரசினி பின்னாடி விசய் பின்னாடியெல்லாம் அலைஞ்சு இப்ப சேலை பின்னாலே ஒளிஞ்சுட்டாரு .. எதோ இன்னும் பட்செட்டெல்லாம் படிச்சிக்கிட்டு நல்ல சீவனந்தான் நடத்துராரு ..ஆனா நம்ம ஊருக்கு என்ன பிரயொசனமுன்னு தெரியலெ
அப்புறம் சாதி கச்சி தலைவருங்க.. சமய கச்சி தலவருங்க .. அவுக எல்லாம் கூட்டணி யரொடவாவது வச்சமா.. எம்மெல்லெ ஆனமா .. முதல்வரை புகழ்ந்துட்டே இஞ்சினியர் காலேஸ் வச்சமான்னு திரியிராங்கே.. அவங்கள பத்தி பேசி என்ன பன்ன? ..
சரி புது ஆளுக யாராவது வருவாக முதல்வராக்கலாம்னு பாத்தா.. ரசினியின்னு சொல்ராக.. விசயகாந்துன்னு சொல்ராக.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. சினிமாக்காரக மட்டும் முதல்வராக தமிழ்நாடென்ன திரைப்படக்கல்லூரியா?
ஒரு தமிழனின் புலம்பல்கள்
Posted by -L-L-D-a-s-u at 5 comments
Labels: பொது
பா.ர வாக துடிக்கும் பா.ரா , ர.ராக்கள் ..
சினிமா நடிகர் புகழ் பாடி புத்தகம் எழுதுவதற்கும் , கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம் . கட் அவுட் கலாச்சாரத்தை கண்டிக்கும் நம்மில் பலர் இதை வரவேற்பது ஏன் ? எழுத்துத்திறமை கட் அவுட் வைப்பவற்கு இல்லாததினாலா?
காந்தீய விழுமம் எழுத திறமையிருந்தும் ரஜினி சகாப்தம் எழுதும் புத்திசாலித்தனத்திற்கு வாழ்த்துக்கள். முதன்முதலில் எழுதுவதால் என் தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் .. முதன்முதலாய் விஷம் வைத்தாலும் சொல்லுங்கள்.. எல்லோரும் வாழ்த்துகிறோம் .
Posted by -L-L-D-a-s-u at 5 comments
Labels: பதிவர்வட்டம்
கார்த்திக் அரசியல் ..
பஞ்ச் வசனம் பேசாமல் நடிக்கும் நடிகர் என்பதால் கார்த்திக் மேல் நல்ல அபிமானம் எனக்கு உண்டு .
அவராலேயே அவரது சில பழக்கவழக்கங்களை மாற்றமுடியாமல் , ஊரை மாற்ற புறப்பட்டிருக்கும் அவரை நினைத்தால்..
இரண்டு பொண்டாட்டி வைத்திருப்பதுதான் முதல்வராவதற்கு தகுதி என நினைத்திருக்கிறாரோ என்னவோ?
Posted by -L-L-D-a-s-u at 3 comments
Labels: அரசியல்
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்
'இளையராஜா மகளுக்கும் கமல் மகளுக்கும் தமிழ் தெரியாது ' ..என கேட்க நேரும்போது இளையராஜாவைத்தான் குறைகூறவே எனக்குத்தோன்றும் . அதற்கு காரணம் இளையராஜாவின் மேல் நான் வைத்துள்ள மதிப்பீடுதான் . மதிப்பீடு உடையும்போது கோபம் வருவதுதானே இயற்கை . கமல் பற்றிய செய்தி எனக்கு ஆச்சரியமில்லை ..இங்கே வந்து ஜாதியால் தான் இளையாராஜவை குறைகூறுகிறாய் என்றால் , அது என்னளவில் பிரச்சினை இல்லை ..'ஜாதி' கண்ணாடியை கழற்றிவிட்டு பார் .
திருமாவை பற்றிய என் காமெண்டு தனி மனிதனை பற்றியதுதான்..நான் ஜாதி கண்ணாடி அணியும் பழக்கம் இல்லாததால் ஜாதியை பார்க்கவில்லை ..மேலேயிருந்த படம் பிஜேபியின் மூத்திர விற்பனை பற்றியிருந்திருந்தால், 'மூத்திரம்' குடிப்பதை தொடர்பு படுத்தியிருந்திருப்பேன் . இதனை எல்லோரும் அவ்வாறே பார்த்துள்ளனர், ஒரே ஒரு கண்ணாடி அணிந்திருந்தவர் தவிர .. அவர் எழுதிய 'அணிந்துரைக்கு' அப்புறம் தான்.. கூட்டத்தோடு 'கோவிந்தா'.. அப்படியே பழகிவிட்டது நமக்கு..
கொவிந்தா ஆசாமிகளில் ஒருவர் எனக்கு அறிமுகமானவர்.. அவரின் ஜாதிய வெறியை நானறிவேன்.. 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ' பற்றி என்ன சொல்ல...
நம்மில் எத்தனை பேர் நல்ல வசதியிருந்தும் , நல்ல சூழ்நிலை இருந்தும் , 'இட ஒதுக்கிடு' மூலம் இடம் பிடித்தோம், நம்மால் வாய்ப்பை இழக்கப்போவது நம்மில் வசதியில்லாது ஒருவர்தான் என்ற உணர்வே இல்லாமல் ..? நமக்கு இப்படி குதிக்க என்ன தகுதியுள்ளது என 'கோவிந்தா'க்கள் மனசாட்சி இருந்தால் கேட்டுக்கொள்ளட்டும் ..
'என் ஜாதியினர் மலம் சுமக்கிறார்கள் .. எனக்கு வேலை கொடு '..எனக்கூறுவதில் என்ன நியாயம் சொல்லமுடியும் ?
பிகு ..
நான் எழுதுவது எல்லாவற்றிலும் என் பெயர் இருக்கும். பெயரில்லாமல் நான் எழுதுவதில்லை ..
'ஜாதி சங்கத்திற்குள்' நான் உட்காந்திருப்பது போல் அருவருப்பாய் உள்ளது சில காலமாய் .
Posted by -L-L-D-a-s-u at 0 comments
Labels: பதிவர்வட்டம்
தமிழனும் அவன் பெருமைகளும் ..
1)சினிமாவில் நடித்தவன் மட்டுமே நம்மை ஆள தகுதியானவன் என்று உறுதியாக நம்புவனே மறத்தமிழன் .
2)நடிகனை தலைவன் என்று ஏற்று அவன் உளரும் ‘பன்ச் டயலாக்’கை கொள்கை என்று ஏற்கும் மனப்பக்குவம் உள்ளவனே முழுத்தமிழன் .
3) சினிமாக்காரனும் அரசியல்வாதியும் ஒருத்தனுக்கொருத்தன் (அ)அவனுக்கவனே சூட்டிக்கொள்ளும் பட்ட பெயரை ( புரச்சி தலைவி , அறிஞர், கலைஞர் , கேப்டன், சூப்பர் ஸ்டார், டாக்டர் ஐயா …) சொல்லி சொல்லி பெருமை படுபவனே அறத்தமிழன் .
4) தன் பேருக்கு முன்னால் சினிமாக்காரன் பேரை வைத்து ரஜினி ராமு, கமல் கருப்பையா.. என வைத்து அலைபவனே சுத்தத்தமிழன் .
5) சுனாமி வந்தாலும் , பாகிஸ்தான் குன்டு போட்டாலும் , தன் குழந்தை பாலுக்கு அழுதாலும் சினிமாக்காரன் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுபவனே
6) தான் விரும்பும் சினிமா நடிகந்தான் மற்ற நடிகனை விட நல்லவன், கொடை வள்ளல் என எங்கிலும் சண்டை போடுபவனே வீரத்தமிழன்.
7)வீட்டுல எந்த மொழியிலாவது பேசிட்டு வெளியே தமில் தமில் என மாருல அடித்து திரிபவனே 'மாடர்ன்' தமிழன் .
Posted by -L-L-D-a-s-u at 5 comments
Labels: பொது