முட்டாள்தின வாழ்த்துக்கள்

முட்டாள்தினம்
ஜூன் 15
தமிழனுக்கு மட்டும்

பெரியார் திரைப்படம்- சில கேள்விகள்

பெரியார் திரைப்படம் சில சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது .. பெரியார் படம் வருவேண்டிய ஒன்றுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 'பாரதி' படத்தை இயக்கியவரே இதனையும் இயக்குகிறார் . அப்போது கூட சில சர்ச்சைகள்.. பாரதியில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் திரிக்கப்பட்டண, அழுத்தமாக இல்லை என ஆங்காங்கே சில கண்டங்கள் எழுந்தன..

ஆனால் பெரியார் திரைப்படத்தில் , திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடந்த சில சம்பவங்கள் , முக்கியமாக முதல்வர் கருணாநிதிக்கு சாதகமாக , அமைந்துள்ளது என்றும் , திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதாவின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும்., ஏன் , பெரியாரின் முதல் மனைவி, மக்கள் ஆகியோரை இருட்டடிப்பு செய்துள்ளதாகவுமே பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன . வரலாற்று நாயகர்களின் திரைப்படத்தை எடுக்கும் சூழலில் , பார்க்கப்போகும் மக்களுக்கு போர் அடிக்காமல் . வரலாற்றுக் குறிப்புகள் எல்லாவற்றையுமே பதிவு செய்வது மிகவும் கடினமான விஷயம். இப்போதைய சூழலில் , அதிகாரத்தில் இருக்கும் பலரும் , முக்கியமாக முதல்வர் , பெரியாரோடு பழகியவர் என்பதால் , இயக்குநருக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு . மேலும் , தமிழக அரசு, இந்தப் படத்திற்கு கொடுக்கும் பணம் .... அரசாங்கம் செய்யும் எந்த உதவியும், அன்றைய முதல்வரே , தன் சட்டைப்பையிலிருந்து வழங்குவதாக அர்த்தப்படுத்தும் இந்த சூழலில் , இந்த படத்திற்கான உதவி, முதல்வர் கருணாநிதி வழங்குவதாகக் கொண்டுள்ளதால் , முதல்வரை சங்கடப்ப்டுத்தும் எந்த நிகழ்வும் பதிவு செய்யப்போவதில்லை என்பது உறுதி. அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே .

ஆனால் , அரசு கொடுத்துள்ள நிதியால் பயனடையப் போகிறார்கள் யார் என்பதே என் கேள்வி . அது ஒரு முதலீடாக கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படியென்றால் இலாபம், தமிழக அரசுக்கு பகிர்ந்துகொடுக்கப்படுமா? இல்லையெனில் , அந்தப் பணம் படத்தயாரிப்பாளருக்கு சென்றால் , பெரியார் பெயரை சொல்லி, இன்னும் ஒருவர்/சிலர் இலாபம் பார்க்கிறார்/கள் என்பதை தவிர வேறு என்ன சாதனை? அந்த படத்திற்கு பணம் கொடுத்து என்ன பயன்.. அல்லது இந்த 95 இலட்சத்தை ஈடு செய்ய , மேலும், பலரும் இத்திரைப்படத்தை பார்க்கும் வண்ணம் திரையரங்க நுழைவுச்சீட்டின் விலை குறைக்கப்பட ஆவணசெய்வார்களா ?

இன்னும் ஒரு கேள்வி .. இன்றைய சூழலில் , எந்தளவு பெரியார் பெயர் தி மு க வின் வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளது என்பது தெரியவில்லை . ஆனால் , தி மு கவின் அடித்தளமாக, அவர்கள் கூறிக்கொள்ளும் பல கொள்கைகள் , பெரியாரின் கொள்கைகளே. எனவே பெரியாரின் புகழ் பரப்ப தி.மு.கவுக்கென்று ஒரு தார்மீக கடமை உண்டு . சன் தொலைக்காட்சி , ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ , தி.மு.கவின் பிரச்சார பீரங்கியாக இருப்பதால் , இந்த கேள்வி எழுகிறது .. ராசி பலன்கள் , மாந்தீரிக நாடகத்தொடர்கள் என்று வியாபார நோக்கத்திற்காக , வேட்டியென அவர்கள் உருவகப்படுத்தும் , தங்கள் கொள்கைகளை தூக்கி எறிந்துகொள்ளட்டும். ஒரு பிராயசித்தமாக, எந்த வியாபார நோக்கமின்றி , டி ஆர் பி ரேட்டிங் கவலையின்றி , பெரியார் வாழ்க்கைத் தொடர் எடுத்து சன் தொலைக்காட்சி ஒளிபரப்பலாமே!! இன்னும் பலரின் வீடுகளுக்கு பெரியார் பற்றிய செய்தி/விழிப்புணர்வு போய் சேர்ந்திருக்குமே?

அந்த 95 இலட்சத்தை , அரசு பணத்திலிருந்து இல்லாமல். தி.மு.க தன் நன்றிக்கடனாக அதன் நிதியிலிருந்து கொடுத்திருந்தால் பொறுத்தமாய் இருந்திருக்கும் . தமிழக அரசு வழங்கிய பண உதவி , தயாரிப்பாளர்/களுக்கான உதவியாக இல்லாமல் , இந்த திரைப்படத்தை பார்க்கும் எல்லோருக்குமான உதவியாக இருந்தால் நலம் .

பி.கு : பல விஷயங்கள் என் பத்திரிகைகளில் வந்த செய்தியினடிப்படையில், என் அனுமானத்தை ஒத்த கருத்துகளே. இதில் ஏதாவது, தகவல் பிழை (உதா: திமுக தான் பண உதவி தருகிறது. அரசு இல்லை போன்ற) இருந்தால், சொல்லுங்கள். மாற்றியோ/அழித்தோவிடுகிறேன் . இப்போதெல்லாம் பத்திரிகைகளையும் முழுதாக நம்பமுடிவதில்லை .;)

இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற

தலைப்பிலேயே இப்போதைய ஹாட் டாபிக் எல்லாமே இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும். இருங்க... கொஞ்சம் தலைய சொறிஞ்சுக்கிறேன் .. இதுக்கு முன்னாலே பத்தாப்பு படிக்கிறப்ப , தமிழ் ஐயா வகுப்புல சொன்ன விஷயத்தை வச்சு , இந்திய சுதந்திரம்-மகாபாரதப்போருன்னு கலந்து கட்டி அடிச்சு, கவிதைப்போட்டியில் கலந்துகிட்டேன் ..என்னோட நல்ல நேரம் .. அந்த போட்டியில் , கவிதையை 'திருத்தினவர்' அதே தமிழ் ஐயா... அவர் சொன்ன விஷயம் கவிதையில பார்க்கவும் எனக்கு முதல் மார்க் போட்டுட்டார்ன்னு நினைக்கிறேன் .. அப்புறம் கவித கவிஜ எந்தப் பக்கமும் போறதே இல்லை ..திடீரென கல்லூரியில் படிக்கும்போது , நாமதான், இளவயசுலேயே, பரிசெல்லாம் வாங்கியிருக்கோமேன்னு கவிதைப்போட்டியில் கலந்துக்கப்போனேன் .. தலைப்புக்கொடுத்து, அரை மணிநேரமோ, ஒரு மணி நேரமோ.. மறந்துவிட்டது , இதுக்குள்ள கொடுத்த தலைப்புல கவிதை எழுதவேண்டும்.. ஒரு மண்ணும் எழுத முடியலை.. அத்த்தோட விட்டது ..

ஜடாயு பதிவுல , "நீங்கள் பிரச்சினைக்குறியதாய் சொல்லியுள்ளப் பகுதியில் எங்கே இந்திய தேசியத்துக்கு எதிராண கருத்து உள்ளது? எல்லா கட்சிகளும் பார்ப்பணீயத்தை கொள்கையாய் கொண்டுள்ளன் என்று சொல்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது . பார்ப்பணீயத்தை தாக்குவதால் உங்களுக்கு கோபம் வருவதைப் புரிந்துகொள்ளலாம். தேவையில்லாமல் இந்திய இறையாண்மை இழுத்து நீங்கள் வேஷம் போடுவது போல்தான் எனக்குத் தோன்றுகிறது ... 'எந்தக்கட்சியுமே சரியில்லப்பா.. எல்லோருமே கொள்ளையடிக்கிறாங்கப்பா' என்று யாராவது கூறினால், 'ஐயோ!! இவன் இந்திய தேசியத்திற்கு எதிராகப்பேசுகிறான்' என்று வீடுகட்டுவீர்கள் போலிருக்குதே . " என்று எழுதி, அப்புறம் காமெண்டு எதுவும் போடவேண்டாம் என விட்டுவிட்டேன் .. அப்புறம் இந்தக் கருத்து யாருக்கும் தெரியாமல் வீணாய் போய்விடுமே (?) என்று மிகவும் வருந்தி, சரி , குழலி ஒரு பதிவுல, இரண்டு, மூன்று பேர் பேசுவதாக (டயலாக் ஸ்டைலில்) பதிவு எழுதியிருப்பார். அதுபோல ஒரு பதிவு எழுதலாம் என்று யோசித்தால் , ஒரே ஒரு டயலாக்குக்கு மேல் யோசிக்கமுடியவில்லை .. அப்பத்தான் இந்த விபரீத ஆசை.. சரி, சொல்றதை இரண்டு , மூன்று வரியில மடிச்சு, மடிச்சு எழுதுனா, கவித, கவிஜ அப்படின்னு சொல்றாங்களே, இதையே மடிச்சு எழுதுவோம்னு , எழுதிட்ட்டேன் .. அப்படியே ஒன்னோட விட்டா எப்படி .. அப்படின்னு , தோணியதெல்லாம், மடிச்சு மடிச்சு எழுதியிருக்கேன்.. ஆச்சரியக்குறிதான் எங்கே வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு ;) ..இதுதான் கவுஜயான்னு சொல்லுங்க...இல்ல இது கவுஜ இல்லை கவுஸ அப்படின்னாலும் ஓகே.. இல்ல இந்த மாதிரியெல்லாம் இனிமே ட்ரை பண்ணாதேன்னாலும் சொல்லிடுங்க.. அப்புறம் இந்த கொடுமையை திருப்பி திருப்பி அனுபவிக்கிற கொடுமை உங்களுக்கு வந்துரும் , ஆமா சொல்லிட்டேன் .. ....பூங்கா, இந்திய தேசியம் , கிரிக்கெட் மற்றும் டாஸ்மாக் பற்றிய கவுஜைக்குப் போகலாமா?

'சோத்துக்கட்சி'
சொன்னது நான்,
தடியுடன் அவர்கள்
தேச பக்தர்களாம்!!

====================

பேச்சுரிமை
வழங்குவது இந்திய தேசியம்.
அம்மா.. தாயே..

====================
சட்டையில் ஓட்டை
நிர்வாணமானேன்
கிரிக்கெட் ரசிகன் நான் ..

====================

தேசிய விளையாட்டு,
வீதியில் மைதானம்,
வீரர்கள் நாங்கள்,
கொடும்பாவி கைகளில்.
டாஸ்மாக் பணம்
அரசு கருவூலத்தில்.
இலவசம்
வெள்ளைச் சேலை .

====================

மந்திரி மகிழ்ச்சி
கருவூலம்
கொழுத்துள்ளதாம்
மலம் தின்று ...

டாப்லெஸ் பயணம்- படங்களுடன்

சிங்கப்பூர்வாசிகளுக்கு சமீபகாலமாக இது பரிச்சயமாயிருக்கும் . முதலில் ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் கூட இப்பொது பெரியதாகக் கவனித்துப் பார்ப்பதில்லை . நானும் பலமுறை சிங்கப்பூர் முஸ்தபா செண்டர் , சிராங்கூன் சாலை மற்றும் ஒர்ச்சட் பகுதிகளில் இதை பார்ப்பதுண்டு . பொதுவாக வெள்ளைக்காரப் பயணிகளைத்தான் இதில் பார்க்கமுடியும். ஒருநாளாவது நானும் இந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என நினைத்ததுண்டு . ஆனால் என்னவென்று தெரியவில்லை , இதில் ஒருதடவை கூட பயணிக்க நான் முயற்சி செய்யவில்லை . சிங்கப்பூர் வெயிலில் , இந்த டாப்லெஸ் பஸ்ஸில் பயணம் குளிர் பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம் . ஆனால், வெயில் வீணாகாமல் , கிராமத்து வீதிகளை சுற்றித் திரிந்த எனக்கு இது ஒன்றும் புதிய அனுபவமாக இருக்காது என்றே நினைக்கிறேன் .


இந்த டாப்லெஸ் பஸ்கள், சிங்கப்பூர் சன் டெக் சிட்டியிலிருந்து புறப்பட்டு , ஒர்ச்சட் வழியாக குட்டி இந்தியா, சைனா டௌன் போன்ற கலாச்சார மையங்களைத் தாண்டி , செந்தோசா தீவுகளுக்கும் செல்கிறது . இதில் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் ஒருதடவை பயணச்சீட்டு வாங்கினால், பயணவழிகளில் எங்கு வேண்டுமானாலும் இறங்கி , எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறலாம் . வெயிலை, மழையை அனுபவிப்பவர்கள், எந்த இடையூறும் இல்லாது , கட்டிடங்களையும் , இரவு நேர முக்கியமாக தீபாவளி காலத்தில் குட்டி இந்தியாவிலும் , கிறிஸ்துமஸ் காலங்களில் ஒர்ச்சட் சாலையிலும் கலக்கும் வண்ண விளக்குக்காட்சிகளை படம் பிடிக்கவிரும்புவோருக்கும் இந்தப் பயணம் பெரும் உதவியாக இருக்கும் .இந்த பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் : ஒருநாளுக்கு - S$23 . இருநாட்களுக்கு - S$33 .படகு என MPA (Maritime Port and Authority)யாலும், பேருந்து என LTA(Land Tranport Authority)யாலும் அழைக்கப்படும் இந்த வாகணம் , வாத்து/DUCK என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது . சிங்கப்பூர் சாலைகளை சுற்றும் இந்த வாத்து வாகணம் , அந்தக்கால ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதைப்போல, கடலிலும் பயணம் செய்யும் . இது ஒருமணிநேரப் பயணம்தான் . பயணச்சீட்டு அதே சன் டெக் சிட்டியில் கிடைக்கும் . கட்டணம் : S$33 .
இது ஏப்ரல் மாதமாகினும், பொறுமையாக இந்த கடைசிப்பத்தி வரையிலும் வாசித்து வருபவர்களை ஏமாற்ற விரும்பவில்லை .. காதைக் கொடுங்கள் ..ஸ்டார் க்ரூஸ்ஸில் டான்ஸ் இருக்காம் ..

லூசு மக்கா..

பேராசிரியர்கள் , அறிவியல் வல்லுநர்கள் , கணிணிப்பொறியாளர்கள் , பெரிய படிப்பாளிகள், கவிஞர்கள் எல்லோரும் , தமிழ் ஆர்வத்தினாலோ, நல்ல சிந்தனைகளை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற எண்ணத்திலோ , நண்பர்கள் வட்டத்தை பெருக்கும் , நோக்கிலோ அல்லது நேரத்தை நல்லவிதமாக் செலவிடவேண்டுமென்ற நோக்கிலோதான் பதிவிடிகிறார்கள் என எண்ணியிருந்தேன். இங்கு இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நினைத்தது தவறானது என்று சில வாரமாய் தமிழ்மணத்தில் உலவும்போது அறிந்து கொண்டேன் . இங்கே இருப்பவர்கள் எல்லோருமே லூசு மக்கா என்று இப்போதுதான் தெரிகிறது . கீழ்பாக்கத்தில் இருக்கவேண்டியவர்களெல்லாம் , இங்கே பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது .. இதற்கு ஆதாரமாய் நான் தொகுத்துள்ளதைப்பாருங்கள் . யாராவது நான் சொல்வதை ஆட்சேபிக்க முடியுமா என்ன?

நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் என தலைப்பிலேயே பெருமிதப்படுகிறார் ஒருவர் . பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன் என்கிறார் மற்றொருவர்( Bluecross-Note this point) . செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவாராம் , கணினியை அடிப்பாராம் ஒருவர் (கணினி, செடி கொடிக்கெல்லாம் ஒரு cross-ம் கிடையாதா என்ன?) . Sprite-ல உப்பு போட்டு , கோக்குல பெப்பர் போட்டு சாப்பிடும் ஒருவர் , சாம்பல் சாப்பிடும் ஒருவர் , தோசை சாப்பிடும்போது ஏதோ ஒரு ஃபீலிங்குக்காக ஏங்குபவர் என எத்தனை குணாதிசயங்கள் .

ஆனால் மக்கா, இதற்கும் முன்னால எத்தனையோ தொடர்கள் வந்திருக்கின்றன் . புத்தகத்தொடர் , சுடர் , பார்த்தது..கேட்டது .. என வந்த தொடர்கள் எல்லாமும் 'அறிவு' சார்ந்து இருந்தன. ஆனால் ஒவ்வொருவருக்குமுள்ள குழந்தைத்தனத்தை எடுத்துக்காட்ட இந்த விளையாட்டுதான் வழிகாட்டியது . நான் அறிந்த வரையில் சீரியஸாக எழுதும் முத்துக்குமரன் , SK, மா.சிவக்குமார் , ஜி.ராகவன், மிதக்கும் வெளி போன்றோரும் குழந்தையாய் மாறி தங்களுடைய கிறுக்குத்தனங்களை பகிர்ந்துகொண்டது நெகிழ்வாய் இருந்தது . இவர்களே அடித்து ஆடும் போது கொலவெறி கும்பல் சும்மாயிருக்குமா .. தம்பி , வெட்டி ,செந்தழல் ரவி, கொத்ஸ் , அபி அப்பா, கண்மணி இவர்களெல்லாம் பெர்முடா கண்ட ஷேவாக் போல அடித்து ஆடி ரணகளமாக்கிவிட்டனர் . ஜோ பதிவில் சாணான் என்பவர் சொன்னது போல மாமா, மச்சான் என ஒரு உறவுக்கூட்டத்தில் இருப்பதுபோல இப்போது இருக்கிறது .. இதை ஆரம்பித்து வைத்த புண்ணியவானுக்கு நன்னி .. எப்படியோ இப்போதெல்லாம் தமிழ்மணம் கொஞ்சம் குளிராக;) இருக்கிறது .

மதுமிதா , மணிமலர் போன்று பலர் என்னை இந்த ஆட்டையில் கலந்துகொள்ள கூப்பிட்டுயிருந்தாலும் , கூகுள் மேல் இரக்கம் வைத்து, I am the escape .

இங்கே பாருங்கப்பா லூசு மக்கா..................

விடியற வரை சுடுகாட்டுல ஒரு கல்லறை மேல உக்காந்திருந்தேன். (தம்பி)

பாத்திரம் விளக்க வச்சிருந்த சாம்பல் எடுத்து சாப்பிட்டுருக்கேன (தம்பி)

பிராண்டி வைச்சுடுவேன். (நாகை சிவா)

குழந்தைய பார்த்தா உடனே அதோட கன்னத்தை கிள்ளனும் . (மணிகண்டன்)

திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் . (கீதா சாம்பசிவம்)

குண்டக்க மண்டக்கன்னு பேசுவது. (உஷா)

தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்...........எதை? அது தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறென்? (துளசி)

பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். (துளசி)

அழுகை வந்தாலும் சிரிக்கின்றேன்,கோபம் வந்தாலும் சிரிக்கின்றேன. (துர்கா)

எதை உடைப்பேன் என்று எனக்கே தெரியாது . (துர்கா)

தேவை இல்லமால் சண்டை போடுவேன். (துர்கா)

செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! (ராதா ஸ்ரீராம்)

எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். (SK)

என்னைப் பார்த்தாலே நண்பர்கள் ஓடுவர். (டோண்டு)

எல்லாவற்றிலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு சென்று விடுவது(டோண்டு)

கடகடன்னு முடிக்கறதுல எதயாச்சும் கொட்டி கவுத்து தான் வேல செய்வேன்.(முத்துலெட்சுமி)

சாதாரண விஷயங்களில்கூடா ஏதேனும் அறிவியலையோ அல்லது தத்துவங்களையோ அப்ளை பண்ணலாமான்னு பாப்பேன்.(சிறில் அலெக்ஸ்)

அன்னியன் அம்பி பாணியில் மனதுக்குள் புலம்புவதும், வெளிப்படையாக பேசுவதும் நடந்து வருகிறது. (மா.சிவக்குமார்)

இன்னிக்கு ஒண்ணு பேசுவேன். நாளைக்கு அதே விஷயத்த பத்தி வேற மாதிரி சொல்வேன (ரஷ்யா இராமநாதன்)

என் கணினியோடு பேசுவேன். ரொம்ப படுத்தினால் அடிப்பேன். கெஞ்சியபடியே தடவிக்கொடுப்பேன (ரஷ்யா இராமநாதன்)

எனக்கு கோவிலில் யாருமே இருந்தா பிடிக்காது நான் மட்டும் தான் இருக்கனும . (வெட்டிப்பயல்)

யார் சொன்னாலும் கேட்க்க மாட்டேன் ,அடம்பிடிப்பேன் மண்ணுல புரண்டு உருளுவேன. (ஜி.ராகவன்)

தனியா பேசிக்குவேன். (கார்த்திக் பிரபு)

வேணுக்குன்னே திருட்டு முழி முழிக்கிறது . (கார்த்திக் பிரபு)

இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். (அபிஅப்பா)

சம்பந்தமில்லாத நாட்டிலிருந்து கொண்டு சம்பந்தமில்லாமால் யோசனை செய்வது . (சின்னக்குட்டி)

இப்பவும் நல்லா உளருவேன் (அவந்திகா)

பெரிய பொறுப்பாளி மாதிரி ஓவர் சீன் போடுவேன் (ஜி)

ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)

ரோட்ல போற ஆளுகளைத் திட்டுறது. (தருமி)

நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் .(ஜோ)

பாடலை கேட்டால் குலை நடுங்கும். (கானா பிரபா)

சாப்பிட்டமா இல்லையான்னு கூட தோனும் . (கண்மணி)

நள்ளிரவில் விழித்துக் கொண்டு வேண்டாத கேள்விகளில் உழலும்(மதுமிதா)

ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.(மலைநாடான்)

விலங்குகள் போல திரியவேண்டும் என்றொரு கனவு. .(மணிமலர்)

நல்லா 37-40 டிகிரி வெய்யில்ல எங்க போறோம் எதுக்கு போறோம்னு தெரியாம நடப்போம். (மங்கை)

வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். (மிதக்கும் வெளி)

இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன். (முத்துக்குமரன்)

ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி படிப்பேன். (இராம்)

நான் இந்த feeling எப்படா வரும் அப்படின்னு ஒக்காந்துகிட்டு இருப்பேன். (சந்தோஷ்)

காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன். (செல்லி)

spriteல உப்பு போட்டு குடிச்சா நன்னாருக்கும். (சர்வேசன்)

தமிழ் படத்துக்கு சப்-டைட்டில் போட்டா கூட சப்-டைட்டில் தான் படிப்பேன். படம் பார்க்க மாட்டேன்.(Fast Bowler )

இடி , மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....(செந்தழல்)

ஒண்ணு பிடிச்சா ஒரேடியா பிடிக்கும் இல்லைன்னா பிடிக்காமலேயே போயிடும்.(கொத்ஸ்)

கிறுக்கன்டா நீ' இப்படி ஏதாவ்து சொல்லி என்னை நானே திட்டிக்குவேன்.(நந்தா)

கையில புத்தகத்தோட ரோட்டில் நடக்க வைக்குது (திரு)

யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன்.(பீம்பாய்-ஈரோடு)

மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்
சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்.(அய்யணார்)

மொட்டைமாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. (அய்யணார்)

தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.(ஜோசப்)

ஐஸ்கிரீம் இருக்கு பாருங்க. அத நல்லா கொழச்சி தன்னியாட்டம் ஆக்கி சாபிடுறது எனக்கு பிடிக்கும. (மனதின் ஒசை)

சாப்பிட்ட பிறகு கையை அடிக்கடி முகர்ந்து பார்ப்பேன்(சூர்யா)

ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது. (யோகன் பாரிஸ்) :)

எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன். (பொன்ஸ்)

பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். (பொன்ஸ்)


பயணிகளை இறக்கி விட்டுட்டு ஷெட்டுக்குப் போய் அரை மணி நேரம் கழிச்சி கிளீனர் பையன் வந்து எழுப்பி டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போனான்.(நாமக்கல் சிபி)

ஒரு முறை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்து, கொடைக்கானலுக்கு நடந்து வந்தேன். (நடைவண்டி)

சம்பந்தமில்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களைச் சொல்வது. (ஆழியூரான்)

கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும்.(நெல்லை சிவா)

ஓனான் புடிச்சி அத‌ பீடி புடிக்க‌ வெச்ச‌து .(மாறன்)

நெய்த் தூக்கைத் திறந்து மோந்து பார்த்துக்குவேன். (துளசி கோபால்)

பஸ்லயோ ஓட்டல்லயோ இல்ல எந்த பொது இடமா இருந்தாலும் எனக்கு பொழுதுபோகலைனா யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுத்து முறைச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன.(கப்பிப்பய)

கனவுல என்னென்னவோ வரும். துப்பறியும் கதை, செண்டிமெண்ட், திரில்லர், லவ் ஸ்டோரி, கிரிக்கெட்ன்னு எல்லா டைப் கதையும் வரும். பல பிரபலங்கள் வருவாங்க.(கப்பிப்பய)

சாகப்போறனு சொல்லி ஃபிரெண்டுக்கு போன் பண்ணி என் இண்டர்நெர் பாஸ் வேர்ட், பேங் அக்கவுண்ட் பாஸ் வேர்ட் எல்லாம் கொடுத்து வீட்டுக்கு சொல்லிட சொல்லுவேன். அப்பறம் என்னடா இன்னும் சாகலையேனு யோசிப்பேன்.(வெட்டி)

பி.கு : இன்னும் பலரின் கிறுக்குத்தனங்கள் எப்படியோ எஸ்கேப் ஆகிவிட்டன. வலைதேடி பிடித்ததும் இணைத்துக்கொள்ளுகிறேன்.


எச்சரிக்கை :

யாராவது சாப்பிடும்போது புத்தகம் படிக்கவில்லையென்றால், அதை லிஸ்டில் சேர்க்கலாம்.
சாப்பிட்டுகொண்டே படிப்பது நார்மலான விஷயமாகத்தான் தெரிகிறது. அதை லிஸ்டில் சேர்ப்பது தடை செய்யப்படுகிறது.

ஒரே ஊரிலிருந்து , ஒரு ஹீரோ .. ஒரு வில்லன்...

கர்நாடக மாநிலத்திலிருந்து ஒருவரை அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் வில்லனாக . அவரின் கண்ணில் ஒரு ஒளி தெரிந்ததாம், அந்த ஒளியைப்பார்த்து, அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினாராம் . இது அவர் தமிழ் சினிமாவில் வெற்றியடைந்தவுடன் வந்த ஜல்லி . ஒளியும் ஒலியும் அவர் கண்ணில் தெரிந்திருந்தால் அவரை ஏன் வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும்? . இதிலெல்லாம் இங்கே எந்த பிரச்சினையில்லை . ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்துவிடுவது தமிழ் சினிமாத்துறையில் புதியதா என்ன ? நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாமலா இருக்கும் ? ரஜினி அய்யாதான்.. வேறு யார் ?

அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, உச்சத்தில் இருந்த பாலச்சந்தர் தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பளித்தார் . ரஜினிக்கு பாலச்சந்தரிடமிருந்து மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த பாரதிராஜா , மகேந்திரன் போன்றவர்களின் மூலம் பதினாறு வயதினிலே , முள்ளும் மலரும் போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்தன . சரியாகவே அவரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார் . தொடர்ந்து , தன்னுடைய வித்தியாசமான நடை , பேச்சு போன்றவற்றின் மூலம் கதாநாயகனாகி , உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தையும் பெற்றார் .

ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு , ஒரு படத்திற்கு இன்னொருவரை அதே கர்நாடகத்திலிருந்து ,அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் , இவரையும் வில்லனாக . இந்த வில்லன் அறிமுகமான படம் ஒரு தோல்விப்படம். இவர் ...பிரகாஷ்ராஜ் . ரஜினிக்கு பாலச்சந்திரடமிருந்து கிடைத்த வாய்ப்புகள், ஆதரவுகள், இந்த பிரகாஷ்ராஜுக்குக் கிடைக்கவில்லை . பாலச்சந்தருக்கே ஆதரவு தேவைப்பட்ட நேரமது . பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராய் இருந்த வசந்த்தின் 'ஆசை' இவருக்கு முதல் அறிமுகத்தைக் கொடுத்தது . அதிலிருந்து பலதரப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தாலும், ரஜினிகாந்த்க்கு வந்த வெற்றிகளோ , புகழோ இவருக்கு கிடைக்கவில்லை . ரஜினி அளவுக்கு இவருக்கு திறமையில்லை என்றாலும் ஒத்துக்கொள்வதில் எனக்கொரு பிரச்சினையுமில்லை .

ரஜினி , தன் புகழுக்குக் காரணம் இந்த தமிழ் மண்தான் , தமிழர்கள் தான் என அடிக்கடி தன் பாடல்களில் பாடுவதும், வசனங்களில் சேர்ப்பதையும் தன் பழக்கமாக கொண்டிருக்கிறார் . ஆனால் , தமிழன் தன் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்பதாகவும் படமுடுத்து ரசித்துக் கொண்டுமிருக்கிறார் . சரி, படத்தில் வருவதெல்லாம் கற்பனை , இயக்குநர், பாடலாசிரியர்களின் கற்பனை என்றே வைத்துக்கொள்வோம் , இங்கே , உச்ச நட்சத்திரங்களின் விருப்பமின்றி , அணுவும் அசைவதில்லை என்பது நிதர்சனமாயிருந்தாலும் . நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது ? திருமண மண்டபம் தமிழர்க்கு அர்ப்பணம் என்ற கண்துடைப்பு, காவிரி போராட்டத்திற்கு ' உண்ணாவிரதம் ' என்ற பெயரில் திசைதிருப்பல் . யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல கங்கை-காவிரி இணைப்புக்கு 1 கோடி மற்றும் வாய்ஸ் எனத் தமிழர்க்கு நன்றிக்கடன் செலுத்துவது போல , தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒரு போராட்டம் நடத்திவருகிறார் .

ரஜினி அய்யா!! நீங்கள் நன்றிக் கடன் என்று ஏதாவது செய்ய வேண்டுமென்றால் , அது தமிழர்க்கு செய்யவேண்டியது ஒன்றுமில்லை . தமிழன், அவன் தலைவிதி, உங்களை ரசித்தான் , காசு கொடுத்தான், அவனுக்கு பொழுதுபோக்கை வழங்கினீர்கள் . ஆனால் , நீங்கள் நன்றி கடன் செலுத்தியே ஆக வேண்டுமென்றால் , நீங்கள் செலுத்த வேண்டியது தமிழ் சினிமாவிற்குதான் .


இந்த விஷயத்தில் தான் , பிரகாஷ்ராஜ் உயர்ந்து நிற்கிறார் . நல்ல சினிமா தரவேண்டும் என்ற அவரின் ஆசைக்கு ஒரு சல்யூட் . நல்ல கதைகளை, நல்ல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் . சிலமுறை 'பொய்' , 'நாம்' போன்ற அவர் தயாரித்த படங்கள் வெற்றியடையாவிடினும், சில படங்கள் நல்ல தரமானதாக அமையாவிடினும், நல்ல படங்கள் தரவேண்டும் என்ற அவரின் நோக்கம் உயர்ந்தது . 'மொழி' , 'அழகிய தீயே' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்ததும் அவரின் ஆர்வத்தை மேலும் உயர்த்தும் என்று நம்புகிறேன். தமிழ் சினிமா அவராலும் , அவர் தமிழ் சினிமாவாலும் வளர , தமிழ் திரைப்பட ரசிகன் என்ற முறையில் வாழ்த்துகிறேன் .

ஆனால், ரஜினி அய்யா அவர்கள் , தமிழ் சினிமாவை குப்பையில் சேர்க்க இன்னும் பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார் . தன் வயதிற்கேற்றவாறு நடிக்கவோ , நல்ல படங்களைத் தயாரிக்கவோ இன்னும் இவர் மனம் ஒப்பவில்லை. அதே குப்பை மசாலாக்களை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி இன்னும் நடித்து கொண்டுதான் இருக்கிறார் . தமிழ் சினிமாவில் மசாலாவுக்கு குறைச்சலா என்ன? இவரின் ஒவ்வொரு அசைவையும் காப்பி அடிக்கும் தளபதிகளும் , மாப்பிளைகளும் , லிட்டில் ஸ்டார்களும் அதை பார்த்துக் கொள்ளட்டுமே . அதை அந்த ரசிகர்கள் பார்த்து விசிலடித்துக்கொள்ளட்டுமே !! ஆனால் அந்த விசிலடிக்கும் கூட்டம் நிரந்தரமாக தன்னிடமே இருக்கவேண்டுமென்ற போராட்டம்தானே இந்த மசாலாக்களும் வாய்ஸ்களும் . இதில் எங்கே நன்றி கடன்கள் ?

ரஜினி அய்யா நடித்ததில் ஒரளவுக்கேனும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் 'சந்திரமுகி ' .. அய்யாவின் குழப்பமான ஆண்மீகத்தைத் திணிக்க எத்தளித்த சில தருணங்களைத் தவிர கடைசிக்காட்சிகள் மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் தான் இருந்தன.. ஆனால் அந்தப் படத்தின் இறுதிக்காட்சிகளைத் தவிர்த்த மற்ற காட்சிகள் ??? . ரஜினி என்ற இளைஞருக்காகத் திணித்த காட்சிகள் எவ்வளவு தூரம் தரமானதாக இருந்தன ? விளக்குக்கம்பை பார்த்தால் , நாய் தான் காலைத்தூக்கும் என்பார்கள்!! இங்கே , அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் 'உலகப்புகழ்' பெற்ற மருத்துவர் காலைத்தூக்கி அறிமுகமானது எவ்வளவு தூரம் கதைக்கு அவசியமானதாய் இருந்தது . உலகப்புகழ் பெற்ற மருத்துவர் எனும்போது , ஐம்பது வயதினை ஒத்தவர் என்றால் கொஞ்சம் நம்பும் படியாக இருக்குமே , கதையையும் அது பாதிக்கப்போவதில்லையே , கல்யாணம் ஆகாத ஒருவராக , கதைக்குத்தேவையில்லாத, அய்யாவோடு இணைந்த காதல் டூயட்டுகள் எதற்காக? காதல் காட்சிகள் திரைப்படக் கட்டாயம் என்றாலும் , அதை ஜோதிகா , அவரின் கணவனாக நடிக்கும் ஒரு இளமையான சூர்யாவோ அல்லது யாரோவை வைத்து காதல் டூயட் இருந்தால் , ரசிகர்கள் பார்க்கமாட்டார்களா என்ன?

கழிவுகளுக்கு தங்க கிரீடம் வைக்கும் ஷங்கர் போன்றவர்களின் இயக்கத்தில் நடிப்பதை தவிர்த்து ,மனித உணர்வுகளைப் பதியும் சேரன் போன்றவர்களின் படங்களில் , உதாரணமாக 'தவமாய் தவமிருந்து'வில் ,சேட்டைகளை தூர எறிந்துவிட்டு, ராஜ் கிரண் வேடத்தில், ரஜினி நடித்திருந்தால் தமிழ் சினிமாவுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய கைமாறாய் இருந்திருக்குமே!! ஒரு சிறந்த நடிகர் , தமிழ் சினிமாவில் உயர்வான இடத்தில் இருக்கும் ஒருவர் , மண்ணின் மனத்தை, மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்தின் நடிப்பதின் மூலம், தமிழ் சினிமாவின் தரம் உயருமே என்ற ஆதங்கத்தில் , ஒரு தமிழ் சினிமா ரசிகனாகவே இதை எழுதுகிறேன் . தரமான தமிழ் படம் கொடுப்பதற்கான தார்மீக கடமையும் , அதற்கான திறமையும் ரஜினியிடம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன் . ஆனால் , அதற்கான மனம் தான் அவரிடம் இல்லை ..

இன்னும் வரவிருக்கும் சிவாஜி என்ற படத்திலிருக்கும் ஸ்டில்களைப் பார்த்தாலும் , தம் வயதினை ஒத்த, மசாலா இல்லாத படத்தினைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை வரவில்லை . சரி , அவர் சம்பாரிப்பதையோ , சம்பாரிக்கும் பணத்தை முதலீடு செய்யும் முறையையோ குறை சொல்ல நமக்கு உரிமையில்லை . ஆனால், தமிழனுக்கு 'வாய்ஸ்' கொடுப்பதை , தமிழனுக்கு நன்றிக்கடனாக 'முதல்வராக' வரும் முயற்சியையும் நிறுத்திக்கொள்ளட்டும் . அல்லது நிறுத்திக்கொண்டதை தொடரட்டும். தமிழனுக்கு ஒரு குறையென்றால், அவனை ஆண்டவனாலும் காப்பற்ற முடியவில்லையென்றாலும் , அதை பார்த்துக்கொள்ள தமிழ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு கடமையும் உள்ளது .

மதநல்லிணக்க உரையாடலில் ரஜினியால் வந்த நம்பிக்கை

சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியில் உள்ளூர், உலக அரசியல் நடப்புகளை ஆராயும் ஒரு நிகழ்ச்சி எதிரொலி . இதில் கலந்துரையாடல்கள், கருத்தறிதல் ஆகியவற்றை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி . மதநல்லிணக்கம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்குகொள்ள எனக்கு வாய்ப்பு வந்தது . ஒரு தயக்கத்துடனேதான் மேலிட அனுமதியும் கிடைத்தது (வேற யாரு, தங்கமணியிடமிருந்துதான் , உளறிவிடுவேன், பிரச்சினையாகிவிடும் என உறுதியாக நம்பினார்) .

ஒளிப்பதிவு, ஒளிபரப்பு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்றது . ஒளிப்பதிவிற்கு முன் , தயாரிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது , மதநல்லிணக்கம் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று . அதுவும் ஒரு அமைதியான குடிமக்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் அவசியம்தானா? என்று என் சந்தேகத்தைக் கேட்டேன் . இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் , மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துகள் தொடர்ந்து மக்களிடம் போய் சேர, அதன் அவசியத்தை மக்கள் மேலும் உணர, அரசாங்கம் எடுக்கும் முயற்சிதான் இது பற்றிய கலந்துரையாடல்கள் எனக் கூறினார் . எனவே, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை நான் என்ன திரும்பவும் கூறப்போகிறேன் என்ற என் தயக்கம் விலகி, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை என் மொழியில் நான் கூறப்போகிறேன் என என் நம்பிக்கை கூடியது .

கிறிஸ்தவன் என்ற முறையில் நானும் , இந்து மற்றும் இஸ்லாம் மதத்திலிருந்து இரு சகோதரர்களும் கலந்துகொண்டோம் . டச்-அப்(ஹி..ஹி)க்குப் பிறகு ஒளிப்பதிவு அரங்கத்திற்கு சென்றமர்ந்தோம் . பிரதமர் திரு. லீ சியாங் லுங் ' சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கும் , புரிந்துணர்விற்கும் சமயத்தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களே சிறந்த வழி' என்று கூறுவதும் , அதற்கான சமயப்பெரியோர்களின் கருத்துகளும் திரையிடப்பட்டது . முஸ்லிம் மதத்தலைவர் 'தீபாவளி , கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறுவது இஸ்லாத்துக்கு எதிரானது' என சில முஸ்லீம்கள் கூறுவதைக் கண்டித்தார் . அயலானைப் பற்றி புனித குர்-ஆனில் கூறுகின்ற வசனத்தையும் , ஜிஹாத் என்பதற்கான அர்த்தம், உலகில் இருக்கும் தீமைகளுக்கு எதிரான போராட்டம் (நான் ஏற்கெனவே அறிந்திருந்ததுதான்) என்றும் விளக்கினார் . அவருடைய கருத்து மிக நன்றாக இருந்தது . அதன் பின் ஒரு முன்னோட்டக் கலந்துரையாடல் எங்களுக்குள் நடைபெற்றது . உடனே , படப்பிடிப்பும் ஆரம்பமானது .. நாஸ்ரத் ஹசான் (Host) அவர்கள் , நாங்கள் முன்னோட்டக் கலந்துரையாடலில் முன்வைத்த கருத்துகளைச் சொல்ல வேண்டிய வகையில் , கேள்விகளைக் கேட்டார் . எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தமிழ் வார்த்தைகளை,. ஆள் வைத்துத் தேடாமல், நல்ல தமிழில் , சரளமாக கேள்விகளைக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ..

ஆனால் , அவரும் ஒரு இடத்தில் சறுக்கினார் . எங்களை அறிமுகப்படுத்தும்போது , ' மூன்று இளையர்கள்' எனக்கூறினார் . ( 'இளைஞர்' என்ற சொல்லை 'இளையர்' என்று இங்கு சிங்கப்பூரில் கூறுகிறார்கள்) . ' அறுபத்து நான்கு' வயதினரை இளைஞர் என்று சொல்லலாமென்று தமிழ்மணத்திலுள்ளோர் எல்லோரருக்கும் தெரியும். 'முப்பத்திநான்கு'.. வயதினனை இளையர் எனச் சொல்லலாமா? எனக்குத் திரும்பவும் ஒரு கலக்கம் .. சற்றுமுன், தயாரிப்பாளர் 'வயது என்ன?' என்று என்னிடம் கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது . வயது தெரியாமல், தமிழ் கிறிஸ்தவன் யாரும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் என்னை கூப்பிட்டுவிட்டார்களோ என ஒரு சங்கடமும் வந்தது . அப்போதுதான் ஆபத்பாந்தனாக ரஜினிகாந்த் என் நினைவில் வந்தார் . பேரன் எடுத்தவரெல்லாம், புட்டாமாவும், பயிரிட்ட மயிரும் , மயிருக்கு சாயமும் பூசி இளைஞனாக , பேத்தி வயதையொத்தவரிடம் டூயட் பாடும்போது , என்னை இளைஞன் என்ன சிறுவன் என்று கூறினாலும் தவறில்லை என என் மனம் அமைதி கொண்டது .

ஐயோ , ரஜினி அரசியலில் உளறியதிலிருந்து இப்படித்தான் , நல்ல நேரங்களில் கூட அவர் நியாபகம் வந்து தொலைத்துவிடும் .ரஜினி நினைப்புடனே வணக்கம் சொன்ன என்னை வீடியோவில் பார்க்கவும் . என்னுடைய கருத்தெல்லாம் இந்த வீடியோவில் இல்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, நல்ல ஜல்லி என்ற பின்னூட்டமும் வரும் என்பதால் .இந்த நிகழ்ச்சி , ஜனவரி-15 ஆம் நாள் (பொங்கலன்று) ஒளிபரப்பாகியது . எனக்காக, என் நண்பர்கள் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அந்நியனை' பார்க்காமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள் . நண்பர் ஒருவர் , 'ஜிகாத்' திற்கு உண்மையான அர்த்தத்தை அன்றுதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார் . தயாரிப்பாளர் திரு . மணிமாறன் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது

கருணாநிதி கைது...முத்துக்கருப்பன் விளக்கம்

முத்துக்கருப்பன்...

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ததன் மூலம் அதே இரவில் ஹீரோவான போலீஸ் அதிகாரி!

கருணாநிதி கைதைக் கண்டித்து அப்போது தி.மு.க. நடத்திய பிரமாண்ட ஊர்வலத்தையும் முத்துக்கருப்பனின் காவல்துறை விட்டுவைக்கவில்லை. அவர்கள் நடத்திய வன்முறையில் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டார்கள். இதற்காக பின்னாளில் விசாரணை கமிஷனே போடப்பட்டது. இந்த கைது களேபரம் அடங்குவதற்குள் சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய கலவரத்தை அடக்கு வதற்காக அவர்கள் தங்கியிருந்த அரசு விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியது போலீஸ். அப்போதும் கமிஷனர் முத்துக்கருப்பன்தான்!

ஆனால், இந்த ஆட்டமெல்லாம் வெறும் ஏழு மாதங்கள்தான்! அதன்பிறகு, அவரை கமிஷனர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் ஜெயலலிதா. அதோடு, ‘வருமானத் துக்கு மீறி முத்துக்கருப்பன் சொத்துச் சேர்த்தார்...’ என்று அவர் மீது புகார் சொல்லப் பட... 27.6.2003ல் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படவே இல்லை.

அடுத்து 2006ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது. கருணாநிதி ஆட்சியில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதி காரிகள் பலரது சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பணி வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், முத்துக்கருப்பனுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.

இந்நிலையில், கடந்த மார்ச் 6&ம் தேதி அவரது சஸ்பெண்ட் உத்தரவை மறுபரி சீலனை செய்யும் காலக்கெடு வந்தது. தான் எப்படியும் மீண்டும் பணிக்கு அழைக்கப் படுவோம் என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், இந்த முறையும் நீட்டிப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனராகக் கம்பீரமாக வலம்வந்த முத்துக்கருப்பன் இன்று கோயில் குளம் என்று ஆன்மிக வலம் வந்துகொண்டிருக்கிறார்!

தனது கடந்தகால நினைவுகளையெல்லாம் மனதுக் குள்ளேயே பூட்டி வைத்திருந்த அவர், முதல் முறையாக ஜூ.வி&க்காக மனம் திறக்க ஒப்புக்கொண்டார்.

‘இரண்டு பாஸ்களிடம் ஒரே நேரத்தில் நீங்கள் வேலை பார்க்கமுடியாது.இப்படித்தான் என்னிடம் சீறினார், முன் னாள் முதல்வர் ஜெயலலிதா. ‘நான் நிறைய சம்பாதித்து விட்ட தாகவும், அதனால்தான் சஸ்பெண்ட் உத்தரவை விலக்கிக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறேன்’ என்றும் பலர் பேசுகிறார்கள். இனியும் நான் அமைதியாக இருந்தால், அந்தப் பேச்சு உண்மையாகி விடும். அதனாலேயே போராடும் எண்ணத் துக்கு வந்திருக்கி றேன்...’’ என்று

பழைய நினைவு களில் மூழ்கிய முத்துக் கருப்பனிடம்,

கருணாநிதியைக் கைது செய்து அப்போதைய ஆளுங் கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டீர்கள். ஆனா லும், அந்த ஆட்சியில்தான் உங்களை சஸ்பெண்ட் செய் தார்கள். அதே கருணாநிதி தற் போது முதல்வராகி விட்ட சூழ் நிலையில் அரசு தரப்பில் உங் களை எப்படி பார்க்கிறார்கள்.?’’ என்ற கேள்வியை வைத்தோம்.

தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியைக் கைது செய்த பிரச்னையில், அறிந்தோ அறியாமலோ நான் முன்னிலைப் படுத்தப்பட்டு விட்டேன். அதனைத் தொடந்து நடந்த சம்பவங்களை வைத்து ஒரு கொடூர அதிகாரியாகத் தமிழக மக்கள் மத்தியில் சித்திரிக்கப்பட்டு விட்டேன். கருணா நிதியைக் கைது செய்வதற்கு முன்னால், ‘நிறைய யோசிக்க வேண்டும்’ என்று சொல்லி அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவிடம் துணிச்சலாக ஆட்சேபித்தேன். ஆனால், அதில் எனக்குத் தோல்விதான் கிடைத்தது. இதுதான் உண்மை. இதெல்லாம் அப்போது உயரதிகாரிகளாக இருந்த வர்கள் பலர் முன்னிலையில் நடந்ததுதான்... இந்த உண்மை களெல்லாம் முதல்வர் கருணாநிதியிடமே விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு காத்திருக் கிறேன். அப்படியரு வாய்ப்பு கிடைத்து விட்டால், என் மீதிருக்கும் தவறான அபிப்பிராயம் நிச்சயம் நீங்கும்... அதன் பிறகு எல்லாமே சுமுக மாக இருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை!’’

சரி, கருணாநிதி கைது செய்யப்பட்ட போது என்னதான் நடந்தது? விளக்க மாகச் சொல்லுங்களேன்..?’’

1996&ல் தி.மு.கழக ஆட்சியின் போது நான் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி&யாக இருந் தேன். அப்போது தமிழகத்தின் சில இடங் களில் குண்டு வெடிப்பும், குண்டுகள் கைப் பற்றப்பட்ட சம்பவமும் நடந்தது. அது தொடர் பாக அப்போதைய தி.மு.க. அரசை எதிர்த்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களோடு அறிக்கையன்றை வெளியிட்டார் ஜெய லலிதா. அதனால் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினேன். பிறகு, 2001&ல் முதல் வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன், என்னை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்தார். கமிஷனராக அவரை நான் சந்தித் தேன். அப்போது, ஏற்கெனவே அவரை விசாரணை நடத்தியதையெல்லாம் ஞாபகம் வைத்து என்னிடம் கேட்டார். அப்போதே என்மீது அவருக்கு சந்தேகமும் கோபமும் இருந்திருக்க வேண்டும். அது எனக்குப் புரியாமல் போய்விட்டது. பிறகு ஒருநாள், கருணாநிதியைக் கைது செய்வதற்காக நேரம் குறித்துவிட்டு, அதுபற்றி ஆலோசிப் பதற்காக என்னை போயஸ் கார்டனுக்கு அழைத்தார். நானும் போனேன். அங்கே வக்கீல் ஜோதி, முன்னாள் அரசு வழக்கறி ஞர் கோமதி நாயகம், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆச்சார்யலு மற்றும் இன்னும் சிலர் இருந்தார்கள். என்னிடம், கருணாநிதியை உடனே கைது செய்யவேண்டும்Õ என்று ஜெய லலிதா சொன்னார். ‘ஆதாரங்களைத் திரட்டாமல் வெறும் வெள்ளைத்தாளில் எழுதித் தரப்படும் புகாரை வைத்துக் கொண்டு, அவசரகதியில் அவரைக் கைது செய்வது சரியல்ல... புகாரை முறைப் படி விசாரித்து ஆதாரங்களை சேகரிப் போம். அதனை சட்டப்படி கோர்ட்டில் தாக்கல் செய்து, அங்கிருந்து உத்தரவு வாங்கி... அதன்பிறகு, பகல் நேரத்திலேயே கைது செய் யலாம்... கருணாநிதி வயதானவர். முதல் வராக இருந்தவர். எங்கும் ஓடிஒளியக்கூடி யவர் அல்ல. அதனால் நள்ளிரவு நேரத்தில் கைது செய்ய வேண்டாம்...Õ என்று மனதில் தோன்றியதை சொன்னேன். நான் சொன்னது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. ‘எஃப்.ஐ.ஆர். போட்டுவிட்டு ஆதாரம் திரட்ட காலம் எடுத்துக் கொண்டால், விஷயம் வெளியே கசிந்து விடும். அதைவைத்து, கருணாநிதி கைது நடவடிக்கையி லிருந்து தப்பித்துவிடக் கூடும்...’ என்றவர், அங்கிருந்தவர் களை சுட்டிக்காட்டி, நீங்கள் வருவதற்கு முன்பே இங்கிருப்பவர் களிடமெல்லாம் ஆலோசனை செய்துவிட்டேன். அவர்களெல் லாம் ‘தாராளமாக கைது செய்யலாம்’ என்கிறார்கள். நீங்கள் மட்டும் இப்படிப் பேசுகிறீர்களே? என்றார். அத்துடன் அன்றைய விவாதம் முடிந்தது. அடுத்த நாளும் இரவு எட்டு மணிக்கு மேல் போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. அங்கிருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில், முக்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் சில அமைச்சர்களும் கூடி இருந்தார்கள். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்வது குறித்து மீண்டும் ஜெயலலிதா பேசினார். நான் மீண்டும் அதிலுள்ள பாதகங்களை வெளிப் படையாக எடுத்துச் சொன்னேன். என் அருகிலிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், Ôமுத்துக் கருப்பன்! சரியாகச் சொல்கிறீர்கள்... அதனைக் கொஞ்சம் வலியுறுத்திச் சொல்லுங்கள்...’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நான் சொன்னதைக் கேட்கும் மூடில் ஜெய லலிதா இல்லை. கூட்டம் முடிந்தது. அடுத்து, இன்னொரு அறையில் என்னைச் சந்தித்த ஜெயலலிதா, Ôஇந்த வழக்கைப் பதிவு செய்திருப் பது நீங்கள் அல்ல... சி.பி.சி.ஐ.டி.! அவர்களுக்கு உதவ வேண்டியது மட்டும்தான் உங்கள் தலைமையிலான சென்னை போலீஸின் வேலை. அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்... என்று காட்டமாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி. இருந்தாலும்,ஓகே மேடம்Õ என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன் படியே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்தேன். அப்போதைய மயிலாப்பூர் உதவி கமிஷனர் முருகேசனை மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரு டன் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தேன். நான் அந்த நேரம் எனது அலுவலகத்தில்தான் இருந்தேன். வெளியே எங்கும் போகவில்லை. கருணாநிதி கைது செய்யப்பட்ட சமயத்தில் எப்படியோ சன் டி.வி. குழுவினர் அங்கு வந்து விட்டனர். சம்பவத்துக்குப் பிறகு என்னை அழைத்த ஜெயலலிதா, Ôநீங்கள்தான் சன் டி.வி&க்காரர்களை உள்ளே போக அனுமதித் தீர்களா?Õ என்று கோபத்துடன் கேட்டார். ‘இல்லை... அந்த நேரத்தில், கோபாலபுரம் வீட்டு வாசலில் காவல் பணியில் இருந்த அதி காரிதான் அவர்களை உள்ளே அனுமதித் திருக்க வேண்டும்’ என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கருணா நிதியை நள்ளிரவில் கைது செய்ய நான் ஆட்சேபம் தெரிவித்தது... சன் டி.வி. குழு வினரை உள்ளே விட்டது... இதையெல்லாம் யோசித்த ஜெயலலிதா, எனக்கும் தி.மு.க&வுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ஒரு கட்டத்தில், Ôநீங்கள் இரண்டு Ôபாஸ்Õகளிடம் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாதுÕ என்றார். ஒரு Ôபாஸ்Õ& ஜெயலலிதா. இன்னொரு Ôபாஸ்Õ& கருணாநிதி. முதல்வர் அப்படி ஒரு எண்ணத்தில் இருக்கிறார் என்றால், அதிகாரியான நான் என்ன சொல்ல முடியும்? மௌனமாக இருந்து விட்டேன்!ÕÕ

‘‘கருணாநிதி கைது சம்பவத்தைத் தொடர்ந்து அது தொடர் பாக அரசு சார்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது நீங்கள்தான். ஆனால், கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் என்று இப்போது சொல்கிறீர்களே... அப்படியென்றால், நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தீர்கள்?’’

ÔÔநான் செய்த மிகப் பெரிய தவறு அதுதான்! கைது செய்யப்போன சி.பி.சி.ஐ.டி. போலீஸ§க்குப் பாதுகாப்பு கொடுத்த நான், அந்த விவகாரம் பற்றி எதுவும் கருத்து சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனால், கைது நடவடிக்கை முடிந்து விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியதும், சி.பி.சி.ஐ.டி. பிரிவின் உயர் அதிகாரிகள்கூட எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. நான் அப்போது கமிஷனர் பதவியில் இருந்த தால், சட்டம்&ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை. ஏதோ நானே முன்னின்று கருணாநிதியைக் கைது செய்ததுமாதிரி யான சூழல் உருவாகிவிட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கிய மான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்... கருணாநிதி கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைக்கப்பட்ட போது, நள்ளிரவு மணி 3 இருக்கும். அவருடைய மனைவி ராஜாத்தியம்மாள் பரிதி இளம்வழுதியுடன் என்னைச் சந்தித்தார். ‘எனது கணவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்?Õ என்று அழுதபடியே கேட்டார். ‘கைது செய்திருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். அந்தப் பிரிவு அலுவலகம் இருக்கும் அட்மிரா லிட்டி ஹவுஸில்தான் விசாரணைக்காக வைத்திருக்கிறார்கள்...’ என்று சொல்லி அனுப்பினேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், கைது நடவடிக்கையில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்பது அவர்களுக்கு அன்றே மிகத் தெளிவாகத் தெரியும் என்பதற்காகத்தான்.’’

‘‘வருமானத்துக்கு அதிகமாக நீங்கள் சொத்துக் குவித்திருப் பதாகச் சொல்லித்தான் உங்களை சஸ்பெண்ட் செய்து வழக்குப் போட்டிருக்கிறார்கள்... அந்த வழக்கின் நிலை என்ன?’’

ÔÔஎன்மீது போடப்பட்டிருக்கும் அந்த வழக்கில் துளிகூட உண்மையில்லை என்பதெல்லாம், அதுகுறித்து விசாரித்து முடித்திருக்கும் அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். இந்த உண்மையைக்கூட அவர்களால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல முடியவில்லை. எனக்கு எதிரான சில சக்திகள் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டன. ரொம்ப ஜூனியரான என்னை பாரம்பரியம் மிக்க சென்னை போலீஸ§க்கு கமிஷனராக அமர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அந்தப் பதவியிலிருந்தது குறுகிய காலம்தான். அப்போது, அப்போதைய முதல்வருக்கு வேண்டிய சிலர், என் பதவியையும் எனது பெயரையும் பல இடங்களில் தவறாகப் பயன்படுத்தினார்கள். இதெல்லாம் எனக்குத் தாமத மாகத்தான் தெரியவந்தது. உடனே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து உண்மையை எடுத்துச்சொல்ல முயன்றேன். ஆனால், அது அந்த மோசடிக் கும்பலுக்குத் தெரியவர... என்மீது இல்லாததும், பொல்லாததும் சொல்லி விட்டார்கள். அடுத்த சில நாட்களிலேயே என்னை கமிஷனர் பதவியிலிருந்தும் தூக்கியடிக்க வைத்துவிட்டார்கள். அதோடு விடவில்லை... தொடர்ந்து நான் போலீஸ் பணியில் இருந்தால் நல்லது இல்லை என்று முடிவெடுத்து, நயவஞ்சமாக என்னைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கியது ஜெயலலிதா நம்பிய அந்தக் கும்பல். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக என்மீது பொய்யாக வழக்குப் போட வைத்து சஸ்பெண்ட் செய்ய வைத்தார்கள். இதனாலேயே என் சம்பந்தப்பட்ட ஃபைலைக் கடைசிவரை அப்போதைய முதல்வரின் பார்வைக்குக் கொண்டு போகாமலேயே வைத்து விட்டார்கள். அப்போது நடந்ததைதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்களும் நன்கு விசாரித்து, உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அதனால், விரைவில் நல்லது நடக்கும். முதல்வர் கருணாநிதியை சந்திக்க முறைப்படி அனுமதி கேட்டிருக்கிறேன். அப்போது நடந்தது எல்லாவற்றையும் அவரிடம் விளக்குவேன். விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்’’ என்றார் முத்துக்கருப்பன்.

நன்றி: ஜூனியர் விகடன்ஆட்சியாளர்களை பாஸ்களாக அரசு அதிகாரிகள் நினைக்கும்வரை இது நடக்கத்தான் செய்யும். மக்களும் சட்டமும்தான் பாஸ்கள் என என்றுதான் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் நினைக்கபோகிறார்களோ தெரியவில்லை .

முதல்வர் கருணாநிதி மேல் பல வருத்தங்கள் இருந்தாலும் , கைது அன்று டீவியில் பார்த்து கண்கள் கசிந்தன. நியாயமான காரணங்கள் இருந்தால் கைது செய்வதில் தவறில்லை. ஒரு கட்சியின் தலைவரை , விரும்புகிறோமோ இல்லையோ பல இலட்சக்கணக்கான மக்களின், ஆதர்சன நாயகனை , ஒரு முதியவரை ,இப்படி நடத்தியது கொடூரத்தின் கொடூரம் .இந்த நிகழ்வு கண்டிப்பாக செல்வி .ஜெயலலிதாவின் அரசியல் தோல்விதான் . இரு கட்சியின் பலிவாங்கும் அரசியலுக்கு அரசு அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணையும் ரீடிஃப்பின் கொதிப்பும்

இன்று ரீடிஃப் வலைத்தளத்தில் ஒரு தலைப்பு 'ஏப்ரல் 15: இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதல்' என தினமலர்த்தனமான தலைப்பு சூப்பர் 8ல் தானே இவையிரண்டும் மோதுகின்றன . ஏப்ரல் 15யில் மோத கூடுதல் வாய்ப்புள்ளதே தவிர எப்படி அறுதியிட்டுக்கூற முடியும் என ஒரு சந்தேகத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன் .
ஐ சி சி வலைத்தளத்தில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் , இது வாரவிடுமுறை நாளில் , இந்த இரண்டு நாடுகளை ஆடவிட்டு, ரசிகர்களை முன்பதிவு செய்யவைக்க செய்த யுக்தி எனவும் , ஐ சி சி , மேட்ச் ஃபிக்ஸின் இறங்கியதைப் போல அந்த கட்டுரையாளர் உணர்ச்சிவசத்துடன் ஐ சி சி யை கிழி கிழியென கிழித்து, உப்புக்கண்டம் போட்டு காயவைத்துள்ளார் . இவ்வளவு முட்டாள்தனமாகவா இந்த
ஐ சி சி நடந்துகொள்ளும் என அவர்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பார்த்தால்தான் , ரெடிஃப் கட்டுரையாளரின் முட்டாள்தனம் புரிகிறது.
இவர்கள் பத்திரிகை நடத்தும் இலட்சணமும், ஒரு சாதாரண விஷயத்தை எவ்வாறெல்லாம் அதிர்ச்சியூட்டும் செய்தியாக மாற்றுகிறார்கள் எனவும் புரிந்த்தது . நீங்களே பாருங்கள்அட்டவணை போடும்போது , ஒரு வரிசையாக 1, 2 என எழுதுவது ஒரு சாதாரண விஷயம் . ஆனால் A1 B2.. என்பது வெற்றிபெற்றவுடன் வரும் வரிசையைப்பொறுத்து என்பதை சிறுபிள்ளைக்குகூட புரியும் ஒரு விஷயம் ..
ஆனாலும் இது சிலருக்கு புரியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது என கட்டுரையாளர் எழுதியிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அவர்கள் எழுதியுள்ள தொணி .. என்ன செய்வது இதுதான் ஜர்ணலிசம் போலிருக்கிறது ..

Link : http://www.rediff.com/wc2007/2007/mar/05icc.htm

சத்யசாய் வீரப்பா சந்தனக்கடத்தல் பாபா

சத்ய சாய் பாபா . நல்ல பேச்சாளர் . மக்களை மயக்கும் சொல்வன்மை உடையவர் . அவர் வாயிலிருந்து லிங்கம் எடுப்பது , வெறும் கையிலிருந்து விபூதி எடுப்பது போன்றவற்றை செய்து, தாமே 'கடவுள்' என பறைசாற்றினார் . இதை கண்ட கூட்டம் இவரை தெய்வம் என்று வழிபட்டது . ( ரயிலை மறையச் செய்த பி.சி. சர்க்கார் இன்னும் பெரிய கடவுள்தானே!!) . இவருக்கு வெளிநாட்டு பக்தர்களும், பணக்கார/ அதிகாரவர்க்க பக்தகேடிகளும் குவிந்தனர் . இவரின் பக்தர்கள் மூலம் பெரும்வருமானம் இவருக்கு கிடைத்தது. இதன்மூலம் இவர் கல்விக்கூடங்களும் , தண்ணீர் பஞ்சம் போக்கும் பணிகளும் செய்தார் . இவரது கல்விக்கூடங்களில் படிக்கும் பக்தர்களின் குழந்தைகளை பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது , கொலைக்குற்றச்சாட்டு கூட உண்டு . இதனால் மாணவர்களே இவரை கொலை செய்யவும் முயன்றனர் . வீபூதி, லிங்கம் , செயின் எடுப்பது எல்லாம் சாதாரண, அடிமட்ட மாஜிக்குகளே என தோலுரித்துக்காட்டப்பட்டுள்ளது . ஆனாலும் , இவரின் நற்பணிகளுக்காக இவரை அரசாங்கமும் பத்திரிகைகளும் பாராட்டுகின்றன .


வீரப்பன் சந்தனகட்டை கடத்தியவர் . கொச்சையாகப் பேசக்கூடியவர். தன்னை 'பச்சைத்தமிழன்' என்று கூறிக்கொண்டார் . சில முக்கிய நபர்களை கடத்தினார். பணம் வசூல் செய்தவுடன் விடுவித்தார் . திரு.நாகப்பன் மற்றும் இவரை பிடிக்கவந்த காவல்துறையினரைக் கொன்றார் . பண வசூல் மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தார் . அதன் மூலமோ மற்றும் காட்டிற்குள் தனியாக வரும் பெண்களிடமோ ஆண்களிடமோ பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் இல்லை . பல வழிகளில் முயற்சித்தும், இவரை காட்டிகொடுக்கவோ கொல்லவோ இவரிடம் உதவிபெற்றதாக சொல்லப்படும் மக்கள் செய்யவில்லை . இவரிடம் உதவிபெற்றதற்காகவும், காவல்துறையினரிடம், காட்டிகொடுக்காத , மேலும், அவர் ஒளிந்திருந்த ஊர்களில் வாழ்ந்த குற்றத்திற்காக பலர் பாலியல் பலாத்காரமும் , சிறைவாசமும் அடைந்தனர் . இவரின் குற்றத்திற்காக , காவற்துறையினாரால் கொல்லப்பட்டார் . இவரைக் கொன்றதற்காக , காவற்துறையினரை அரசாங்கமும், பத்திரிகைகளும் பாராட்டின .

நீதி: சந்தனக்கட்டையைவிட காவிச்சட்டைக்கு மதிப்பு அதிகம்.

பி.கு : தலைப்பை அப்படியேவும் படிக்கலாம் , சொற்களை மாற்றியும் படிக்கலாம் . அது உங்கள் விருப்பம் .

Inspired by : இணைய நாடோடி செல்லா , அல்வாசிட்டி விஜய்

என் கேள்விக்கு என்ன பதில்?


துளசி டீச்சர்
, இட்லி வடையைத் தொடர்ந்து எனக்கும் ஒரு சந்தேகம் . இறால்வடை என்று ஒனறு சிங்கப்பூரிலுள்ள இந்திய கடைகளில் மிகப்பிரபலம் . அதை சாப்பிடுப்பார்க்கும் தைரியம் இன்னும எனக்கு் வரவில்லை) . இறால் கொண்டு இதை செய்திருப்பார்கள் .. பார்க்க படம் .


இறாலில் செய்திருப்பதால் இது இறால் வடை .
மேலே படத்தில் நீங்கள் காணும் வடையை ஏன் 'ஆமை வடை' எனக் கூறுகிறார்கள் ?

விஜய் , சன் மற்றும் அரசியல்

சிங்கப்பூரில் சன் தொலைக்காட்சி மட்டுமே இந்திய நேரப்படி (2.30 மணி நேர தாமதத்தில் ) ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது . அதாவது ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை, அதே வேளையில் சிங்கப்பூர் நேரம் 11.30 மணிக்கு பார்க்கலாம் . மே 2006 யில் நேர மாறுதல் கொண்டுவரப்பட்டது . ஒவ்வொரு நிகழ்ச்சியும் இந்தியாவில் ஒளிபரப்பும் அதே நேரம் ஒளிபரப்பு ஆரம்பமாகியது .ஆனால் ஒரு வார கால இடைவெளியில் . அதாவது முந்தின வாரம் இந்தியாவில் ஒளிபரப்பின 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' அடுத்த ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் .ஆனால் சன் செய்திகள் மட்டும் அதே வேளையில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன . இதனால் சன் செயதிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே வரும் விளம்பரங்களை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் என்ன நல்லது தானே என்று நினைத்தாலும் , விளம்பர நேரம் எல்லாம் , சன் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பாக, திரும்ப திரும்ப மெகா சீரியல் பாட்டும் நடனமும் கழுத்தறுக்கின்றன் .

வாரநாட்களில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த , மெகாத்தொடர் இல்லாத நிகழ்ச்சிகளாகிய, சூப்பர் 10, திரைவிமர்சனம் போன்ற நிகழ்ச்சிகள், மீனா நடிக்கிற ஒரு மெகாத்தொடரருக்காக நேரம் மாறியதால் , சன் தொலைக்காட்சி என்றாலே மெகாத்தொடர் என்று அலுப்பாகிபோன நேரத்தில், விஜய் தொலைக்காட்சியும் சிங்கப்பூரில் ஒளிபரப்பைத் தொடங்கியது . நல்லவேளையாக மெகாத்தொடர்களை மட்டும் நம்பாமல், மற்ற சில நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது .

முதலில் கவனத்தை கவர்ந்த நிகழ்ச்சி 'க்ராண்ட் மாஸ்டர்' . 21 கேள்விகளுக்குள் , மனதில் நினைத்த நபரை திரு,ப்ரதீப் அவர்கள் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி . விளையாட்டீனூடே பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி . இது ஒரு செட்-அப் ஆக இருக்க வாய்ப்புள்ளது என சிலர் சொல்லவும் செய்தார்கள். ஆனால், உண்மையில், திரு,ப்ரதீப்புக்கு இந்த திறமை இல்லாமல் செட்-அப்பாக இருக்குமென்றால், ஏதாவது ஒரு சினிமா நடிகர்தான் இந்த நிகழ்ச்சியை செய்திருப்பார் .

எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நிகழ்ச்சி 'நீயா? நானா?' .. பலமுறை விவாதங்கள் தலைப்பை விட்டு சென்றாலும், நமக்கு பிடிக்காத கருத்துகள் முட்டாள்தனமான கருத்துகள் எனத் தோன்றினாலும் , விவாதம் மிக சூடாகவும் சுவையாகுமே உள்ளது . நடத்துபவரும் திறமையான் சொல்லாடலுடன் கருத்துகளை கூறுகிறார் . ஆனால் முக்கிய விருந்தினராக வருபவர் பெரும்பாலும் சினிமா, தொலைக்காட்சித் துறையினரே .

கல்லூரி மாணவர்களுக்கிடையே கலைநிகழ்ச்சி போட்டி நடத்தும் EQவும் அருமையான நிகழ்ச்சி . அதிலும் , மெல்லிசையில், கலந்து கொள்கின்ற அனைவருமே பின்னுகிறார்கள் . டேப் ரிக்கார்டை போட்டு வாய் மட்டும் அசைக்கிறார்களோ என்ற ஐயம் வருமளவுக்கு அருமையாக பாடுகிறார்கள் . போட்டிக்கு பின் நடுவர்கள் சொல்லும் பின்னூட்டங்களும் அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருக்கும் .
சன் தொலைக்காட்சியிலும் திரு .ரமணன் நடத்திய ஒரு நிகழ்ச்சி இருந்தது . கார்த்திக் போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிண்ணணி பாடகர்களானார்கள். இப்போது என்ன ஆனது எனத் தெரியவில்லை .

காஃபி வித் அனு .. இதுவும் வழமையான பேட்டி போல அல்லாமல் வித்தியாசமாக உள்ளது .. நடிகர் ஜெயராம் , கங்கை அமரன குடும்பம் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன . இது கலந்து கொள்கின்ற விருந்தினரை பொறுத்து இனிமையாகவும் கொடுமையாகவும் அமையும்.

ஜோடி நம்பர்-1 , இது விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது . எனக்கு பொதுவாக போட்டி நிகழ்ச்சிகள் பிடிக்கும் . தொலைக்காட்சி நடிகர்கள் ஆட்டமும் அதற்கு நடுவர்கள் சொன்ன பின்னூட்டமும் சுவாரஷ்யமாகவே இருந்தது . . இதில் சேத்தன், ப்ரியதர்ஷினி , விஜய் ஆனந்த் தவிர மற்ற அனைவரும் புதுமுகமாகவே எனக்குத் தெரிந்தனர் . மெகாத்தொடர்களை பார்த்திருந்தால் எல்லோரையும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் . ராகவ் ப்ரீத்தா ஜோடி தொடர்ந்து நன்றாக ஆடினர் . விஜய் ஆனந்த் இறுதி சுற்றில் அருமையாக செய்திருப்பார் . ஆனால் , முன்றைய சுற்றுகளில் நன்றாக ஆடியிருந்தாலும் , இறுதி சுற்றில் ,பூஜா -வெங்கட் ஜோடி மற்ற இருவரை காட்டிலும் சாதரணமாகவே செய்திருந்தாலும் , அவர்களே SMS ஓட்டின் மூலம் வெற்றி பெற்றனர் . இதற்கு காரணம் திருமணம் ஆகாத பூஜாவா அல்லது மற்ற ஜோடிகளின் 'ஆத்தில்' இருந்து உறவினர்கள் கொடுத்த பேட்டிகளா எனத் தெரியவில்லை .

ஆனால் இது அடுத்த சுற்றில் மிகவும் சுவாரஷ்யமின்றி முடிந்தது . சன் குழுவினர் ஜோடி நம்பர்-1 இல் கலந்துகொள்ள கூடாது என நெருக்கடி கொடுத்ததாக வந்த செய்திக்கும் ,. நடிகர்களின்றி, நடணக்கலைஞர்களை வைத்து ஜோடி நம்பர்-1 நடந்ததற்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது .


அடுத்து 'கலக்கப்போவது யாரு' .. பலராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இது என்று நினைக்கிறேன் . வெள்ளி இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி , சனி காலையும், ஞாயிறு மாலையும் மறுஒளிபரப்பாகி கொண்டிருந்தது . ஆதலால் இந்த நிகழ்ச்சியை தவறவிடமுடியாது . சிலமுறை மூன்று தடவையும் பார்க்கும் சந்தர்ப்பம் வரும் . ஆனால் , இந்த நிகழ்ச்சிக்கிடையேயும் சன் தொலைக்காட்சி குறுக்கே வந்துவிட்டது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கிய எல்லோரும் சன் தொலைக்காட்சியில் அசத்த வந்துவிட்டார்கள் . 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல , கலைஞர்கள், தாமே சன் தொலைக்காட்சிக்கு வந்ததாக பலமுறை சொன்னார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எல்லோரையும் அப்படியே கடத்துவது எந்தளவு முறையான வியாபார முறை? . Business Etiquette உண்டா இதில்?
அதுவும் நிகழ்ச்சி பெயர் முதற்கொண்டு , எல்லாமே ஈயடிச்சான் காப்பி . சம்பந்தமே இல்லாது கோட் போட்டு கலக்கியவர்கள் , அதே சம்பந்தமே இல்லாத கோட்டுடன் வந்து அசத்துகிறார்கள் . அதில் கூட மாற்றம் இல்லை . விஜயில் விருந்தினராக வந்தவர்களின் சின்னி ஜெயந்த் நல்ல பின்னூட்டங்களையும் , சில நேரங்களில் தானே மிமிக்ரியும் பண்ணினார், ஆனால் சிரித்து மட்டுமே கொண்டிருந்த மதன் பாப், சன்னிலும் வந்து சிரிக்கிறார் ..

அது சரி , நிகழ்ச்சி சன்னில் வந்தால் என்ன , விஜயில் வந்தால் என்ன? நான் என்ன விஜயின் பங்குதாரரா .. கவலைப்படுவதற்கு .. ஆனால் நான் விரும்பும் நிகழ்ச்சி , சன்னிற்கு போனது கவலைதான் . விஜயைப் போல சன் , மறு ஒளிபரப்பு செய்யப்போவது கிடையாது . அவர்கள் நேரத்தை நிரப்ப நிறைய மெகாத்தொடர்களை வைத்துள்ளார்கள். மேலும் , ஒளிபரப்பாகும் நேரம்.. சனி இரவு 10.00 மணி . 10.30 மணிக்கு சன் செய்திகள்(சிங்கப்பூரில் சன் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பாவதால்) இடையூறு வேறு . 11:30 மணிக்கு முடியும் நிகழ்ச்சி .. எஸ். ஜே. சூர்யா வந்த நிகழ்ச்சி வரும் வாரம் ஒளிபரப்பாகும்.

'மக்கள் யார் பக்கம்' என்ற நிகழ்ச்சி ஈராண்டுகளுக்குமுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . அரசியல் தலைவர்களும் , பத்திரிக்கையாளரும் கல்ந்துரையாடும் நிகழ்ச்சி . செல்வி .ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுகவின் ஏழு கட்சி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நேரம் . 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் திரு.பொன்முடி கலந்துகொண்டிருந்த நேரடி ஒளிபரப்பின் போது , சன் தொலைக்காடசியின் பங்குதாரராயும் இருந்த திரு.கருணாநிதி , தொலைபேசியில் தொடர்பு கொண்டு , 'மக்கள் , தாம் யார் பக்கம் என்று முடிவெடுத்துவிட்டரே!! , இன்னும் என்ன இந்த நிகழ்ச்சி என திரு.பொன்முடியையும் , விஜய் தொலைக்காட்சியையும் கடிந்துகொண்டதாக படித்தேன் . அந்த வாரம் முதல் அந்த நிகழ்ச்சி தொடரவில்லையாம் . ஒரு நிகழ்ச்சியை இடையூறு செய்வது என்ன நாகரீகமான் செயலா, அதுவும் ஒரு போட்டி தொலைக்காட்சியின் பங்குதாரர் . காரணமும் நியாயமாகப்படவில்லை .. தலைப்பைத் தெரிவு செய்வதும் அந்த தொலைக்காட்சியின் தனியுரிமை , மற்றும், 'மக்கள் அன்று உங்கள் பக்கமாய் இருந்தாலும் , அதற்கு முன் உங்கள் எதிர்ப்பக்கம் இருந்தார்கள். இனிமேலும் இருப்பார்கள் ' 'மக்கள் யார் பக்கம்?' என்பது எப்போதும் விடைதெரியா கேள்விதான் .

இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சி , பெரும் வெற்றியடையக்கூடாது என விழைகிறேன் . அப்போதுதான் அதை தொடர்ந்து இடையூரில்லாமல் பார்த்து ரசிக்கமுடியும் .

மதுசூதனின் சூதுவாதம்

இந்த வாரத்தில் விழுந்த இரண்டாவது விக்கெட் விழுந்தது கொஞ்சம் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது . முதலில் விழுந்த வலையுலக டெண்டுல்கர் , க்ளீன் போல்ட் என்பதால் , இந்த விக்கெட் ஒரு சாதாரண எல் பி டபிள்யூவே என்பதால் இது கவனிக்கப்படவில்லை என நினைக்கிறேன் .

இதே மாதிரியான பொய்களும் புரட்டுக்களையும் கடந்தே பல தடவை சென்றிருக்கிறேன் . பலமுறை மற்ற பதிவர்கள் தோலுரித்திருந்திருப்பார்கள் . இந்த விசயம் , கிறித்துவ மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்தவர்களுக்குதான் தெரியும் என்பதால் இதை எழுதுகிறேன் .

மதுசூதனின் போப் பற்றிய கேள்வியும் அதில் தன் முதுகை தட்டிக்கொண்டதுமான பற்றிய பதிவைப்பற்றிய எதிர்வினையே இந்தப்பதிவு . இதில் ஒரு கிறிஸ்தவர் இவரிடம் வந்து மத மாற்ற முயற்சி மேற்கொண்டாராம் . அதில் அவர் போப் பற்றிய கேள்வி கேட்டு அவரின் மூக்கை உடைத்தாராம் . மதமாற்ற முயற்சியை மேற்கொண்டார் . பஸ்ஸில் என்னை ப்ளேடு போட்டார் என்பதோடு நிறுத்தியிருந்தால் அதில் பொய் இருந்திருக்க வாய்ப்பில்லை . போப் பற்றி கேள்வி என்று சொல்லி தன்னுடைய அறியாமையையும் கற்பனாசக்தியையும் காட்டிக்கொண்டுள்ளார் .இதனை நண்பர் ஜோ அந்தப் பதிவிலேயே தோலுரித்தும்விட்டார் .

போப்பை தலைவராகக்கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தினர் , தீவிர மதப்பிடிப்பாளர்கள் கூட, பஸ்ஸில் தெரியாதவர்களிடம் மதமாற்றப்பிரச்சாரத்தை செய்வதில்லை . அவர்கள் தான் அடிக்கடி கோயிலுக்கு போவது பற்றியும் , ஜெபமாலை செய்வது பற்றியும், வேளாங்கண்ணி வருடாவருடம் செல்வது பற்றியும் நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லி 'புனிதப்பசு'வாக காண்பிப்பதோடு அவர்கள் தன் 'ஆண்மீக' அரிப்பை தீர்த்துக்கொண்டு, தன் ஜாதி செல்வாக்கைப்பற்றிய இறுமாப்புடன் இருக்கும் சராசரி இந்தியனாகவே இருக்கிறார்கள் . பஸ்ஸில், ரயிலில் இதனை செய்வது ப்ரட்டஸ்டாண்ட்டில் உள்ள எல்லாப் பிரிவினரும்கூட இல்லை , 'இயேசு அழைக்கிறார்' , 'இயேசு இருக்கிறார்' என்றெல்லாம் பெயரை வைத்துக்கொண்டுள்ள தினகரன் வகையராக்களே .

மதுசூதன் அவர்கள் கத்தோலிக்கர் தான் செய்தார் என்பதற்கு சான்றாக தனக்குத் தெரிந்த கத்தோலிக்கர் செய்தார் என்று சொல்லியிருந்தால் அதனை நம்பியிருக்கலாம் . சில கத்தோலிக்கர் இந்த மாதிரி சபைகளுக்கு மதம் மாறி(?) இந்த கொடும்பணியை செய்வதுண்டு . அதனால் அவர் மதம் மாறினது மதுசூதனுக்குத்தெரியாமல் அவர் கத்தோலிக்கர் என சொன்னதாக நம்பலாம். ஆனால் அவர் சொன்னது ஒரு கத்தோலிக்க கோவில் பெயரை . இந்த மாதிரியான செயல்களில் கத்தோலிக்க சர்ச் ஈடுபடுவதில்லை . கோவிலில் மக்கள் முன்னால் செய்யும் பிரசங்களைத்தவிர வேறு ரயிலிலோ பஸ்ஸிலோ செய்வதை கத்தோலிக்கப் பாதிரியார்கள் கௌரவக்குறைச்சலாகவே எடுத்துக்கொள்வார்கள் .

பைபிள் என்று பொதுவாகச் சொன்னாலும் , கத்தோலிக்க பைபிளில் உள்ள எல்லாமும், மற்ற பிரிவினர் பயன்படுத்தும் பைபிளில் இருப்பதில்லை (அடுத்து பொய் சொல்லும்போது, இதை கவனத்தில் கொள்ளவும்) . தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் வித்தியாசம் . கத்தோலிக்க பைபிளின் மொழிபெயர்ப்பு அழகு தமிழில், வடமொழி கலப்பு தவிர்க்கப்பட்டு இருக்கும் . மற்ற சபையினரின் பைபிள் வடமொழி கலப்போடு , கொஞ்சம் வித்தியாசமான நடையிலே இருக்கும் . உதாரணமாக 'வாழ்வு' என்ற வார்த்தை 'ஜீவன்' என்ற வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் . வாக்கிய நடையும் கொஞ்சம் அந்நியமாக இருக்கும் . சிலபேர் ஆத்து, அவாள் எனக்கூறி தன் அடையாளத்தைக் காட்ட முனைவது போல , தன் மொழி நடையை மாற்றி, தான் சபையினரை சார்ந்தவன் என அடையாளத்தை காட்ட முனையும் அரசியல்தான் இது . ஒரு கத்தோலிக்க கோவிலால் அனுப்பபட்ட ஒரு கத்தோலிக்கர் , நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்பே இல்லை . ஆனால் உங்களுக்கு , உங்கள் போப் பற்றிய அறிவை காண்பிக்க , அவரை 'கத்தோலிக்கர்' எனக்கூறுவது அவசியம் . நான் இங்கே எழுதுவது , கத்தோலிக்க மற்றும் பிறசபையினர் சண்டையாக திசை திருப்பப்படும். ஆனால் என்னுடைய ஒரே நோக்கம் மதுசூதனனின் பொய்யை அம்பலப்படுத்துவதுதான் .

இங்கே எனது அனுமானங்கள் .

மதுசூதனன் போப் இயற்பெயர் மற்றும் சில விபரங்களை படித்திருக்கிறார் . அப்போது இந்த விபரம் எல்லா கிறிஸ்தவர்களுக்கு தெரியுமா என்ற சந்தேகத்தில் , ஒரு கதையை எழுதியிருக்கிறார் .
(அல்லது)

மதுசூதனன் ரயிலில் சென்றபோது , ஒருவர் பிரச்சாரம் பண்ணியுள்ளார் . அவரிடம் போப் பற்றிய கேள்வி கேட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையை இங்கே அவிழ்த்துவிட்டுள்ளார் .
(அல்லது)

மதுசூதனன் ரயிலில் பிரச்சாரம் பண்ணியவரிடம், இந்த கேள்வியை கேட்டிருந்திருப்பார் . அவர் 'போப்பையும்' இரட்சிக்க அவரைத்தான் தேவன்(இறைவன்) தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற தொனியில் பேசி , மதுசூதனனை ஒரு வழி பண்ணியிருப்பார் . உனக்குத்தேவையா இது என வடிவேலு பாணியில் மதுசூதனன் நொந்துகொண்டிருந்திருப்பார்.

இதைத் தவிர வேறு எதுவும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை . இது மதுசூதனனின் பொய்யான கற்பனை .


பின்னூட்டத்தில் ஒரு அருமையான கருத்தைச் சொல்லியுள்ளார் , ஒரு கிறிஸ்தவன் , மற்ற சபையில் இருந்தால் கூட , போப் பற்றிய அறிவு இருந்திருக்கவேண்டாமா என்று .. ஒரு கிறிஸ்தவனுக்கு , அவன் கத்தோலிக்கனாய் இருந்தால்கூட, போப் பற்றிய அறிவு தேவையில்லாதது .
'ஜெய் ஹிந்த்' என சொல்லுபவர்கள் எல்லோருக்கும் , மன்மோகன் சிங் எங்கு பிறந்தார், அவர் எத்தனையாவது பிரதமர் , அவருடைய மனைவி பெயர் போன்ற விபரங்கள் தெரியவேண்டும் எனக் கூறுவது போல் . அதுவும் நீங்கள் கேள்வி கேட்டதாக கூறுவது ஒரு கத்தோலிக்கர் அல்லாதவரிடம் . இது ஒரு பாகிஸ்தானியிடம் 'மன்மோகன் சிங்' பற்றிய கேள்வியை கேட்டுவிட்டு , அவனுக்கு தெரிந்திருக்கவில்லையென்றால் ,கேலி பேசுவதற்கு ஒப்பான அறிவீனம் .

மதுசூதனன் பதிவின் பின்னூட்டத்தில் , Ven. Shravasti Dhammika அவர்களின் அனுபவம் நம்பும்படியாகவும் ,சுவையாகவும் , புத்திசாலித்தனமாகவும் இருந்தது . என்னிடம் யாரும் பிரச்சாரத்திற்கு வரும்போது இதே கேள்வியை கேட்க இதனை சேமித்துள்ளேன் . 1999 ஆண்டு , என்னுடைய ரூம் மேட் ஒருவன் , 2000 ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லிக்கொண்டே , H1Bக்காக அலைந்துகொண்டிருந்தான் . ;) ;)