லூசு மக்கா..

பேராசிரியர்கள் , அறிவியல் வல்லுநர்கள் , கணிணிப்பொறியாளர்கள் , பெரிய படிப்பாளிகள், கவிஞர்கள் எல்லோரும் , தமிழ் ஆர்வத்தினாலோ, நல்ல சிந்தனைகளை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற எண்ணத்திலோ , நண்பர்கள் வட்டத்தை பெருக்கும் , நோக்கிலோ அல்லது நேரத்தை நல்லவிதமாக் செலவிடவேண்டுமென்ற நோக்கிலோதான் பதிவிடிகிறார்கள் என எண்ணியிருந்தேன். இங்கு இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நினைத்தது தவறானது என்று சில வாரமாய் தமிழ்மணத்தில் உலவும்போது அறிந்து கொண்டேன் . இங்கே இருப்பவர்கள் எல்லோருமே லூசு மக்கா என்று இப்போதுதான் தெரிகிறது . கீழ்பாக்கத்தில் இருக்கவேண்டியவர்களெல்லாம் , இங்கே பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது .. இதற்கு ஆதாரமாய் நான் தொகுத்துள்ளதைப்பாருங்கள் . யாராவது நான் சொல்வதை ஆட்சேபிக்க முடியுமா என்ன?

நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் என தலைப்பிலேயே பெருமிதப்படுகிறார் ஒருவர் . பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன் என்கிறார் மற்றொருவர்( Bluecross-Note this point) . செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவாராம் , கணினியை அடிப்பாராம் ஒருவர் (கணினி, செடி கொடிக்கெல்லாம் ஒரு cross-ம் கிடையாதா என்ன?) . Sprite-ல உப்பு போட்டு , கோக்குல பெப்பர் போட்டு சாப்பிடும் ஒருவர் , சாம்பல் சாப்பிடும் ஒருவர் , தோசை சாப்பிடும்போது ஏதோ ஒரு ஃபீலிங்குக்காக ஏங்குபவர் என எத்தனை குணாதிசயங்கள் .

ஆனால் மக்கா, இதற்கும் முன்னால எத்தனையோ தொடர்கள் வந்திருக்கின்றன் . புத்தகத்தொடர் , சுடர் , பார்த்தது..கேட்டது .. என வந்த தொடர்கள் எல்லாமும் 'அறிவு' சார்ந்து இருந்தன. ஆனால் ஒவ்வொருவருக்குமுள்ள குழந்தைத்தனத்தை எடுத்துக்காட்ட இந்த விளையாட்டுதான் வழிகாட்டியது . நான் அறிந்த வரையில் சீரியஸாக எழுதும் முத்துக்குமரன் , SK, மா.சிவக்குமார் , ஜி.ராகவன், மிதக்கும் வெளி போன்றோரும் குழந்தையாய் மாறி தங்களுடைய கிறுக்குத்தனங்களை பகிர்ந்துகொண்டது நெகிழ்வாய் இருந்தது . இவர்களே அடித்து ஆடும் போது கொலவெறி கும்பல் சும்மாயிருக்குமா .. தம்பி , வெட்டி ,செந்தழல் ரவி, கொத்ஸ் , அபி அப்பா, கண்மணி இவர்களெல்லாம் பெர்முடா கண்ட ஷேவாக் போல அடித்து ஆடி ரணகளமாக்கிவிட்டனர் . ஜோ பதிவில் சாணான் என்பவர் சொன்னது போல மாமா, மச்சான் என ஒரு உறவுக்கூட்டத்தில் இருப்பதுபோல இப்போது இருக்கிறது .. இதை ஆரம்பித்து வைத்த புண்ணியவானுக்கு நன்னி .. எப்படியோ இப்போதெல்லாம் தமிழ்மணம் கொஞ்சம் குளிராக;) இருக்கிறது .

மதுமிதா , மணிமலர் போன்று பலர் என்னை இந்த ஆட்டையில் கலந்துகொள்ள கூப்பிட்டுயிருந்தாலும் , கூகுள் மேல் இரக்கம் வைத்து, I am the escape .

இங்கே பாருங்கப்பா லூசு மக்கா..................

விடியற வரை சுடுகாட்டுல ஒரு கல்லறை மேல உக்காந்திருந்தேன். (தம்பி)

பாத்திரம் விளக்க வச்சிருந்த சாம்பல் எடுத்து சாப்பிட்டுருக்கேன (தம்பி)

பிராண்டி வைச்சுடுவேன். (நாகை சிவா)

குழந்தைய பார்த்தா உடனே அதோட கன்னத்தை கிள்ளனும் . (மணிகண்டன்)

திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் . (கீதா சாம்பசிவம்)

குண்டக்க மண்டக்கன்னு பேசுவது. (உஷா)

தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்...........எதை? அது தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறென்? (துளசி)

பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். (துளசி)

அழுகை வந்தாலும் சிரிக்கின்றேன்,கோபம் வந்தாலும் சிரிக்கின்றேன. (துர்கா)

எதை உடைப்பேன் என்று எனக்கே தெரியாது . (துர்கா)

தேவை இல்லமால் சண்டை போடுவேன். (துர்கா)

செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! (ராதா ஸ்ரீராம்)

எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். (SK)

என்னைப் பார்த்தாலே நண்பர்கள் ஓடுவர். (டோண்டு)

எல்லாவற்றிலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு சென்று விடுவது(டோண்டு)

கடகடன்னு முடிக்கறதுல எதயாச்சும் கொட்டி கவுத்து தான் வேல செய்வேன்.(முத்துலெட்சுமி)

சாதாரண விஷயங்களில்கூடா ஏதேனும் அறிவியலையோ அல்லது தத்துவங்களையோ அப்ளை பண்ணலாமான்னு பாப்பேன்.(சிறில் அலெக்ஸ்)

அன்னியன் அம்பி பாணியில் மனதுக்குள் புலம்புவதும், வெளிப்படையாக பேசுவதும் நடந்து வருகிறது. (மா.சிவக்குமார்)

இன்னிக்கு ஒண்ணு பேசுவேன். நாளைக்கு அதே விஷயத்த பத்தி வேற மாதிரி சொல்வேன (ரஷ்யா இராமநாதன்)

என் கணினியோடு பேசுவேன். ரொம்ப படுத்தினால் அடிப்பேன். கெஞ்சியபடியே தடவிக்கொடுப்பேன (ரஷ்யா இராமநாதன்)

எனக்கு கோவிலில் யாருமே இருந்தா பிடிக்காது நான் மட்டும் தான் இருக்கனும . (வெட்டிப்பயல்)

யார் சொன்னாலும் கேட்க்க மாட்டேன் ,அடம்பிடிப்பேன் மண்ணுல புரண்டு உருளுவேன. (ஜி.ராகவன்)

தனியா பேசிக்குவேன். (கார்த்திக் பிரபு)

வேணுக்குன்னே திருட்டு முழி முழிக்கிறது . (கார்த்திக் பிரபு)

இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். (அபிஅப்பா)

சம்பந்தமில்லாத நாட்டிலிருந்து கொண்டு சம்பந்தமில்லாமால் யோசனை செய்வது . (சின்னக்குட்டி)

இப்பவும் நல்லா உளருவேன் (அவந்திகா)

பெரிய பொறுப்பாளி மாதிரி ஓவர் சீன் போடுவேன் (ஜி)

ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)

ரோட்ல போற ஆளுகளைத் திட்டுறது. (தருமி)

நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் .(ஜோ)

பாடலை கேட்டால் குலை நடுங்கும். (கானா பிரபா)

சாப்பிட்டமா இல்லையான்னு கூட தோனும் . (கண்மணி)

நள்ளிரவில் விழித்துக் கொண்டு வேண்டாத கேள்விகளில் உழலும்(மதுமிதா)

ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.(மலைநாடான்)

விலங்குகள் போல திரியவேண்டும் என்றொரு கனவு. .(மணிமலர்)

நல்லா 37-40 டிகிரி வெய்யில்ல எங்க போறோம் எதுக்கு போறோம்னு தெரியாம நடப்போம். (மங்கை)

வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். (மிதக்கும் வெளி)

இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன். (முத்துக்குமரன்)

ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி படிப்பேன். (இராம்)

நான் இந்த feeling எப்படா வரும் அப்படின்னு ஒக்காந்துகிட்டு இருப்பேன். (சந்தோஷ்)

காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன். (செல்லி)

spriteல உப்பு போட்டு குடிச்சா நன்னாருக்கும். (சர்வேசன்)

தமிழ் படத்துக்கு சப்-டைட்டில் போட்டா கூட சப்-டைட்டில் தான் படிப்பேன். படம் பார்க்க மாட்டேன்.(Fast Bowler )

இடி , மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....(செந்தழல்)

ஒண்ணு பிடிச்சா ஒரேடியா பிடிக்கும் இல்லைன்னா பிடிக்காமலேயே போயிடும்.(கொத்ஸ்)

கிறுக்கன்டா நீ' இப்படி ஏதாவ்து சொல்லி என்னை நானே திட்டிக்குவேன்.(நந்தா)

கையில புத்தகத்தோட ரோட்டில் நடக்க வைக்குது (திரு)

யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன்.(பீம்பாய்-ஈரோடு)

மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்
சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்.(அய்யணார்)

மொட்டைமாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. (அய்யணார்)

தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.(ஜோசப்)

ஐஸ்கிரீம் இருக்கு பாருங்க. அத நல்லா கொழச்சி தன்னியாட்டம் ஆக்கி சாபிடுறது எனக்கு பிடிக்கும. (மனதின் ஒசை)

சாப்பிட்ட பிறகு கையை அடிக்கடி முகர்ந்து பார்ப்பேன்(சூர்யா)

ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது. (யோகன் பாரிஸ்) :)

எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன். (பொன்ஸ்)

பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். (பொன்ஸ்)


பயணிகளை இறக்கி விட்டுட்டு ஷெட்டுக்குப் போய் அரை மணி நேரம் கழிச்சி கிளீனர் பையன் வந்து எழுப்பி டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போனான்.(நாமக்கல் சிபி)

ஒரு முறை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்து, கொடைக்கானலுக்கு நடந்து வந்தேன். (நடைவண்டி)

சம்பந்தமில்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களைச் சொல்வது. (ஆழியூரான்)

கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும்.(நெல்லை சிவா)

ஓனான் புடிச்சி அத‌ பீடி புடிக்க‌ வெச்ச‌து .(மாறன்)

நெய்த் தூக்கைத் திறந்து மோந்து பார்த்துக்குவேன். (துளசி கோபால்)

பஸ்லயோ ஓட்டல்லயோ இல்ல எந்த பொது இடமா இருந்தாலும் எனக்கு பொழுதுபோகலைனா யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுத்து முறைச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன.(கப்பிப்பய)

கனவுல என்னென்னவோ வரும். துப்பறியும் கதை, செண்டிமெண்ட், திரில்லர், லவ் ஸ்டோரி, கிரிக்கெட்ன்னு எல்லா டைப் கதையும் வரும். பல பிரபலங்கள் வருவாங்க.(கப்பிப்பய)

சாகப்போறனு சொல்லி ஃபிரெண்டுக்கு போன் பண்ணி என் இண்டர்நெர் பாஸ் வேர்ட், பேங் அக்கவுண்ட் பாஸ் வேர்ட் எல்லாம் கொடுத்து வீட்டுக்கு சொல்லிட சொல்லுவேன். அப்பறம் என்னடா இன்னும் சாகலையேனு யோசிப்பேன்.(வெட்டி)

பி.கு : இன்னும் பலரின் கிறுக்குத்தனங்கள் எப்படியோ எஸ்கேப் ஆகிவிட்டன. வலைதேடி பிடித்ததும் இணைத்துக்கொள்ளுகிறேன்.


எச்சரிக்கை :

யாராவது சாப்பிடும்போது புத்தகம் படிக்கவில்லையென்றால், அதை லிஸ்டில் சேர்க்கலாம்.
சாப்பிட்டுகொண்டே படிப்பது நார்மலான விஷயமாகத்தான் தெரிகிறது. அதை லிஸ்டில் சேர்ப்பது தடை செய்யப்படுகிறது.

48 comments:

said...

ஹி ஹி நம்ம பெருமைய பரப்புரதுக்கு நன்றி

said...

ஹி..ஹி..ஹி

said...

//இன்னும் பலரின் கிறுக்குத்தனங்கள் எப்படியோ எஸ்கேப் ஆகிவிட்டன. வலைதேடி பிடித்ததும் இணைத்துக்கொள்ளுகிறேன் //
இது தான் டாப் மோஸ்ட் போலிருக்கே! :)))

நான் சொல்லவந்ததுல பாதி இங்கயே இருக்கு. இதிலேர்ந்தே எடுத்து பதிவு போடலாம்னு இருக்கேன் ;)

said...

பதிவு போடுறப்ப ஞாபகத்துக்கு வராதது எல்லாம் இப்ப வருது. :-)

காபி சொன்னது போலா பெருமையை பரப்புறதுக்கு நன்றி

said...

தனியா பேசுரவர், கனவில் பேசுரவர், No-1 , எல்லோரும் வாங்க.. இதில் இரண்டு பேர் தலையை சொறிந்து கொண்டு ஹி..ஹி என்று திரும்பவும் தம் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டிருகிறார்கள் ..

பொன்ஸ்.. வாங்க.. இதற்கு காப்பிரைட வாங்கியாச்சு. Reference பண்ணவேண்டுமென்றால் மணியார்டரை மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பவும்

said...

இப்ப உங்களை கிள்ளனும் போல இருக்கு :)

said...

தோ வந்துட்டேன் தனியா பேசுறவன். பேசாம உங்களை என் கொ.ப.செ வா போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

//இங்கே இருப்பவர்கள் எல்லோருமே லூசு மக்கா என்று இப்போதுதான் தெரிகிறது . //

நல்லதொரு ஆராய்ச்சி. எப்படி எப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா.

//திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் . (கீதா சாம்பசிவம்)//

இது ரொம்ப நல்லா இருக்கே.

அத்தனை கிறுக்குங்களையும் ஒண்ணா சேத்த தமிழ் மணத்துக்கு ஒரு ஓ!

said...

அருமையான ஐடியா! ஆழமான, அழகான ஆராய்ச்சி.

joke படிக்க எங்கேயும் போகத் தேவையில்ல.

இவையே போதுமே நினைத்து நினைத்துச் சிரிப்பதற்கு!:-)))))))))

said...

அட, நானும் இருக்கேனா ;-)

said...

அடேங்கப்பா. பின்னியிருக்கியேய்யா.

இதெல்லாம் கோத்து ஒரு சர்வே போட்டுடுங்க. யாரோடு வியர்டு டாப்ல வருதுன்னு பாக்க வசதியா இருக்கும்:)

said...

அப்படியே, ஒரு டாக்டர் பட்டம் தரேன் வாங்கிக்கங்க. இவ்ளோ சீரியஸா எல்லாத்தையும் கோத்து போட்டிருக்கீங்களே. சூப்பர்.

இன்றிலிருந்து, நீங்க இணைய.டாக்டர்.எல்லெல்தாஸு என்று அனைவராலும் அழைக்கப்படுவீர்களாக.

said...

அப்படியே இதுல சூப்பர் 10 செலக்ட் பண்ணி என்கிட்ட குடுங்க, நீங்க சர்வே போடலன்னா நான் போட்டுடுவேன். கை பர பரங்குது :)

said...

செம compilation; நல்ல தேர்வுகள்.

said...

லார்ட் லபக்தாஸு-ன்னு பேர் வைத்துக் கொண்டு மற்றவர்களை நக்கல் பண்றதில் ஒண்ணும் குறைச்சல் இல்ல ;-)

இருந்தாலும், Superb Compilation :)

//
ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)
//
தல, இது சின்ன வயசுல பண்ணினதுன்னு போட்டுருக்கேன் !
இதெல்லாம் டோ ண்டுவின் அழைப்பால் வந்த வினை :)

எ.அ.பாலா

said...

//இப்ப உங்களை கிள்ளனும் போல இருக்கு :)//
உங்கள் நிலமை புரியுது .

Nandha
//அத்தனை கிறுக்குங்களையும் ஒண்ணா சேத்த தமிழ் மணத்துக்கு ஒரு ஓ!//
இதை ஆரம்பித்தவருக்கும் ஒரு ஓ!! அந்த புண்ணியவான் இங்கே வந்து இந்த 'ஓ'வை ஏற்றுக்கொள்ளவும் .

செல்லி
//அருமையான ஐடியா! ஆழமான, அழகான ஆராய்ச்சி.//
டாக்டர் பட்டம் கொடுங்க என்று உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன் . சர்வேசன் யுனிவர்சிட்டியிலிருந்து அது கிடைத்துவிட்டது .

//இதெல்லாம் கோத்து ஒரு சர்வே போட்டுடுங்க. யாரோடு வியர்டு டாப்ல வருதுன்னு பாக்க வசதியா இருக்கும்//
சர்வேசன் நல்ல ஐடியா? . சர்வேன்னா சர்வேசன் தான் .. நீங்களே இதில் பார்த்து ஒரு டாப்-10 எடுத்துக்கோங்க.. நானும் ஒரு டாப்-10 எடுக்கலாமென்று பார்த்தால், யாரும் மற்றவர்க்கு சலித்தவரில்லை எனத் தோன்றுகிறது .. முடியல.. நீங்களே பாத்துக்கோங்க

கானா பிரபா
ஆனா!! நீங்க மட்டும் தனியா இல்லை ..;)

எ.அ.பாலா,

வளரும் பயிர் முளையிலே தெரியும் .

said...

இங்க இப்படி ஒரு கலெக்க்ஷன் வேற நடக்குதா? நடத்துங்க...

said...

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா...

சாம்பல் தின்றது ஹாபி இல்லிங்க, தெரியாம எடுத்து வாயில வெச்சுட்டேன்.

said...

உள்ளேன் ஐயா,

இவண்,
லூசு மக்கா #37

(வரிசைபடி அங்கே தான் என்னோட பேரு இருக்கு ஹி ஹி)

said...

ஃபாஸ்ட் பௌலர், தம்பி ,#37, எல்லோரும் வாங்க.உங்கள் வருகையால் என் பதிவு கீழ்ப்பாக்கம் ஆகிவிட்டது ..


//சாம்பல் தின்றது ஹாபி இல்லிங்க, தெரியாம எடுத்து வாயில வெச்சுட்டேன்.//
தெரியுமே.. ;)

said...

தாஸு உமக்கு நேரம் சரியில்லை.ச்சுப்பிரமணிகிட்ட கடி வாங்கினாத்தான் சரிப்படுவீர்.நாங்கெல்லம் லூசுன்னா நீங்க 'லூசுக்கெல்லாம் பாஸா' ஹி..ஹி..[லூசு என்பதால் ஹி..ஹி.. இல்லை இது என் டிரேட் மார்க் ஹி..ஹி..]

said...

//இன்றிலிருந்து, நீங்க இணைய.டாக்டர்.எல்லெல்தாஸு என்று அனைவராலும் அழைக்கப்படுவீர்களாக//.

:-))

said...

pottaachu

said...

அப்படி எழுதினதுக்காக இப்ப உங்ககிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேங்க!
:))0

நன்றி, லா.ல. தாஸு!!

said...

நல்ல பதிவு...அனைவரின் பதிவுகளையும் படிக்கமுடியாத என் போன்றவர்களுக்கு எல்லோருடைய விசித்திர குணங்களையும் ஒரே பதிவில் சுவையாகவும் சுருக்கமாகவும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

said...

ஐயோ இந்த குழந்தைப்பிள்ளையளிண்டை தொல்லை தாங்க முடியேலை. கொஞ்சநாளா.

said...

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/03/30/wierd/

said...

இம்புட்டு பதிவையும் படிச்சு அதில் இருந்து எடுத்து போட்டு இருக்கீங்க பாருங்க.... தெய்வமே!

said...

ஒவ்வொருத்தர் பதிஞ்சதிலருந்து சூப்பர் கிறுக்குத்தனத்த எடுத்து போட்டது ரொம்பவே சூப்பராருக்கு...

கிறுக்குத்தனங்கள்ங்கறதவிட குழந்தைத்தனங்கள்ங்கறதுதான் சரியாருக்கும்னு நினைக்கேன்..

கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க முடிஞ்சது. நன்றி..

said...

வருகைக்கு நன்றி..கண்மணி, சின்னக்குட்டி, எஸ்புள்ளிகே,வெற்றி, நளாயினி, டுபுக்கு , சிவா மற்றும் டி.பி.ஆர் ஜோசப் ..

நீங்களெல்லாம் ரசித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ரொம்ப நன்றி. ஒரு கலைஞனுக்கு .. (சரி.. சரி.. விடுங்க..).. கட் அண்ட் பேஸ்ட் செய்வதன்ன பெரிய விஷயம்.. அதைத்தானே ஆயுள் முழுக்க செய்துகொண்டிருக்கிறேன்.. இதுக்கெல்லாம் ஒரு டாக்டர் பட்டம் ..

said...

நம்ம வியர்டுத்தனத்தையும் சிறந்த வியர்டுத்தனமா மதிச்சி சேர்த்துகிட்டதுக்கு நன்றிங்க தாஸ்!

(ஆமா நீங்அ வெறும் தாஸா இல்லை)
அட்ச்சே! இந்த குசும்பு போக மாட்டேங்குதே!

said...

யண்ணே..நானும் பயங்கர மெண்டல்னேன்..நாலு மாசம் கீழ்பாக்கத்துக்குப் பக்கத்துலதாண்ணே குடியிருந்திருந்தேன்..வேணும்னா மருந்து சீட்டுக் கூட காட்டுறேண்ணே..எப்படியாச்சும் என்னையும் உங்க பட்டியல்ல சேர்த்துக்குங்கண்ணே...

http://nadaivandi.blogspot.com/2007/04/blog-post.html

said...

வருகைக்கும், குசும்புக்கும் நன்றி சிபி.

சம்த்துப்புள்ளயாய் தானா வண்டியில ஏறிக்கிட்ட நடைவண்டி ஆழியூரானுக்கும் நன்றி .. இப்படியும் ஒரு வியர்ட்த்தனம்

ஏதோ ஒரு படத்தில், வடிவேலு நானும் ரவுடிதான்னு போலிஸ் வண்டியில் ஏறுவது ஞாபகத்திற்கு வந்தது

said...

மொத்தக் கிறுக்கையும் ஒரே இடத்தில பார்க்கிற வாய்ப்புக்கு நன்றி, நம்ம பித்தமும் தெளியுமான்னு இங்க வந்து எட்டிப் பாத்து சொல்லுங்கண்ணா!

http://vinmathi.blogspot.com/2007/04/blog-post.html

said...

சிவா..
போட்டாச்சு போட்டாச்சு ..;) ;)

மக்களே சர்வேசன் பதிவில் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.. ஆதங்கம் புரிகிறது. ஒவ்வொருவரும் தன்னை விட பெரிய ஆள் வேறுண்டா என்றெண்ணித்தானே தயங்குகிறீர்கள்

said...

எத்தனை வகை கிறுக்குத்தனங்கள்!!!
என்னையும் கிறுக்கச்சொல்லி நெல்லை சிவா அழைத்திருக்கிறார்
கிறுக்குவேன் விரைவில்!!

said...

நெல்லை சிவா சொன்னவுடன் நானும் கிறுக்கிட்டேன்...

http://vadapalani.blogspot.com/2007/04/blog-post.html

said...

நல்ல கலெக்ஷன். இப்பத்தான் இன்னொண்ணு(??) ஞாபகம் வருது.
அப்பப்ப நெய்த் தூக்கைத் திறந்து மோந்து பார்த்துக்குவேன், வாசம் பிடிக்க.

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)