உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணையும் ரீடிஃப்பின் கொதிப்பும்

இன்று ரீடிஃப் வலைத்தளத்தில் ஒரு தலைப்பு 'ஏப்ரல் 15: இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதல்' என தினமலர்த்தனமான தலைப்பு சூப்பர் 8ல் தானே இவையிரண்டும் மோதுகின்றன . ஏப்ரல் 15யில் மோத கூடுதல் வாய்ப்புள்ளதே தவிர எப்படி அறுதியிட்டுக்கூற முடியும் என ஒரு சந்தேகத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன் .
ஐ சி சி வலைத்தளத்தில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் , இது வாரவிடுமுறை நாளில் , இந்த இரண்டு நாடுகளை ஆடவிட்டு, ரசிகர்களை முன்பதிவு செய்யவைக்க செய்த யுக்தி எனவும் , ஐ சி சி , மேட்ச் ஃபிக்ஸின் இறங்கியதைப் போல அந்த கட்டுரையாளர் உணர்ச்சிவசத்துடன் ஐ சி சி யை கிழி கிழியென கிழித்து, உப்புக்கண்டம் போட்டு காயவைத்துள்ளார் . இவ்வளவு முட்டாள்தனமாகவா இந்த
ஐ சி சி நடந்துகொள்ளும் என அவர்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பார்த்தால்தான் , ரெடிஃப் கட்டுரையாளரின் முட்டாள்தனம் புரிகிறது.
இவர்கள் பத்திரிகை நடத்தும் இலட்சணமும், ஒரு சாதாரண விஷயத்தை எவ்வாறெல்லாம் அதிர்ச்சியூட்டும் செய்தியாக மாற்றுகிறார்கள் எனவும் புரிந்த்தது . நீங்களே பாருங்கள்



அட்டவணை போடும்போது , ஒரு வரிசையாக 1, 2 என எழுதுவது ஒரு சாதாரண விஷயம் . ஆனால் A1 B2.. என்பது வெற்றிபெற்றவுடன் வரும் வரிசையைப்பொறுத்து என்பதை சிறுபிள்ளைக்குகூட புரியும் ஒரு விஷயம் ..
ஆனாலும் இது சிலருக்கு புரியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது என கட்டுரையாளர் எழுதியிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அவர்கள் எழுதியுள்ள தொணி .. என்ன செய்வது இதுதான் ஜர்ணலிசம் போலிருக்கிறது ..

Link : http://www.rediff.com/wc2007/2007/mar/05icc.htm

3 comments:

said...

//ஆனால் A1 B2.. என்பது வெற்றிபெற்றவுடன் வரும் வரிசையைப்பொறுத்து என்பதை சிறுபிள்ளைக்குகூட புரியும் ஒரு விஷயம் ..
//
அப்படி இல்லை என்பதுதான் இங்கு பிரச்சினை. அந்த தளத்தில் இருந்த செய்தியை அப்படியே தருகிறேன்.
>> if South Africa wins Group A and Australia comes second, for the purposes of the Super Eights, South Africa will still be A2 and Australia will be A1
<<

Super Eight என்பது ஒரு Round Robin, அதனால் இப்படி செய்வதில் ஒன்றும் பிரச்னை இல்லை.

ICC தளத்திலும் அப்படியேதான் போட்டிருக்கிறார்கள். (D2 X A1) (West Indies V Australia).

தற்சமயம் தோனும் கேள்வி - Group A -வில் ஸ்காட்லேண்ட் எல்லா மேட்சுகளிலும் வெற்றி பெற்றால் (சிரிக்காதீங்கப்பு) என்ன நடக்கும்? ICC தனது அட்டவணையை திருத்திக் கொள்ளுமா அல்லது ஆஸ்திரேலியாதான் தொடர்ந்து ஆடுமா?

said...

Sridhar Venkat ,
ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் . முதற்சுற்றுக்குப்பின் B1 B2 என்று தரவரிசை கொடுப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று . ஆனால் இப்போது முறை மாறியுள்ளது . இந்த முறை விவாதத்திற்குறியதுதான் . நான் சுட்டிக்காட்டியதுபோல ரீடிஃப் செய்தது தவறில்லை .

ஆனால் முதலில் இந்த முறை கேலிக்குறியதாக தோன்றினாலும் , சூப்பர்-8ல், எல்லா அணிகளும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் யாருக்கும் பாதகமில்லை. இரசிகர்கள் தங்களுடைய பிரயாணத்தேதியை முடிவு செய்ய உதவுகிறது ..

புது விதிமுறைப்படி , இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் சூப்பர் -8யில் நுழையும் பட்சத்தில் , ஏப்ரல்-15 அன்று இரு அணிகளுக்கிடையே நடக்கும் ஆட்டம் நடைபெறும் .

இந்தியா , இலங்கை இரண்டும் தகுதிபெற்றால் இலங்கை B1 இந்தியா B2
இந்தியா, வங்கதேசம்/பெர்முடா தகுதிபெற்றால் வங்கதேசம் /பெர்முடாB1 இந்தியா B2
இலங்கை வங்கதேசம்/பெர்முடா தகுதிபெற்றால் இலங்கை B1 வங்கதேசம்/பெர்முடா B2
வங்கதேசம், பெர்முடா தகுதிபெற்றால் வங்கதேசம் B1 பெர்முடா B2 (ஐ சி சி தரவரிசை அடிப்படையில் வங்கதேசம் முன்னிலை)


உங்கள் தகவலுக்கு நன்றி ..நீங்கள் சுட்டிக்காட்டியபின்பு தான் , பொறுமையாகப் (பொறுமை எருமையை விடப் பெரியது) படித்தேன்.
இந்தப் பதிவு தவறான ஒன்று . மன்னிக்கவும்.

said...

//...தினமலர்த்தனமான தலைப்பு...//

//...பொறுமையாகப் (பொறுமை எருமையை விடப் பெரியது) படித்தேன்.
இந்தப் பதிவு தவறான ஒன்று . மன்னிக்கவும். //

:-((