கருணாநிதி கைது...முத்துக்கருப்பன் விளக்கம்

முத்துக்கருப்பன்...

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ததன் மூலம் அதே இரவில் ஹீரோவான போலீஸ் அதிகாரி!

கருணாநிதி கைதைக் கண்டித்து அப்போது தி.மு.க. நடத்திய பிரமாண்ட ஊர்வலத்தையும் முத்துக்கருப்பனின் காவல்துறை விட்டுவைக்கவில்லை. அவர்கள் நடத்திய வன்முறையில் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டார்கள். இதற்காக பின்னாளில் விசாரணை கமிஷனே போடப்பட்டது. இந்த கைது களேபரம் அடங்குவதற்குள் சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய கலவரத்தை அடக்கு வதற்காக அவர்கள் தங்கியிருந்த அரசு விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியது போலீஸ். அப்போதும் கமிஷனர் முத்துக்கருப்பன்தான்!

ஆனால், இந்த ஆட்டமெல்லாம் வெறும் ஏழு மாதங்கள்தான்! அதன்பிறகு, அவரை கமிஷனர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் ஜெயலலிதா. அதோடு, ‘வருமானத் துக்கு மீறி முத்துக்கருப்பன் சொத்துச் சேர்த்தார்...’ என்று அவர் மீது புகார் சொல்லப் பட... 27.6.2003ல் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படவே இல்லை.

அடுத்து 2006ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது. கருணாநிதி ஆட்சியில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதி காரிகள் பலரது சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பணி வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், முத்துக்கருப்பனுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.

இந்நிலையில், கடந்த மார்ச் 6&ம் தேதி அவரது சஸ்பெண்ட் உத்தரவை மறுபரி சீலனை செய்யும் காலக்கெடு வந்தது. தான் எப்படியும் மீண்டும் பணிக்கு அழைக்கப் படுவோம் என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், இந்த முறையும் நீட்டிப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனராகக் கம்பீரமாக வலம்வந்த முத்துக்கருப்பன் இன்று கோயில் குளம் என்று ஆன்மிக வலம் வந்துகொண்டிருக்கிறார்!

தனது கடந்தகால நினைவுகளையெல்லாம் மனதுக் குள்ளேயே பூட்டி வைத்திருந்த அவர், முதல் முறையாக ஜூ.வி&க்காக மனம் திறக்க ஒப்புக்கொண்டார்.

‘இரண்டு பாஸ்களிடம் ஒரே நேரத்தில் நீங்கள் வேலை பார்க்கமுடியாது.இப்படித்தான் என்னிடம் சீறினார், முன் னாள் முதல்வர் ஜெயலலிதா. ‘நான் நிறைய சம்பாதித்து விட்ட தாகவும், அதனால்தான் சஸ்பெண்ட் உத்தரவை விலக்கிக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறேன்’ என்றும் பலர் பேசுகிறார்கள். இனியும் நான் அமைதியாக இருந்தால், அந்தப் பேச்சு உண்மையாகி விடும். அதனாலேயே போராடும் எண்ணத் துக்கு வந்திருக்கி றேன்...’’ என்று

பழைய நினைவு களில் மூழ்கிய முத்துக் கருப்பனிடம்,

கருணாநிதியைக் கைது செய்து அப்போதைய ஆளுங் கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டீர்கள். ஆனா லும், அந்த ஆட்சியில்தான் உங்களை சஸ்பெண்ட் செய் தார்கள். அதே கருணாநிதி தற் போது முதல்வராகி விட்ட சூழ் நிலையில் அரசு தரப்பில் உங் களை எப்படி பார்க்கிறார்கள்.?’’ என்ற கேள்வியை வைத்தோம்.

தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியைக் கைது செய்த பிரச்னையில், அறிந்தோ அறியாமலோ நான் முன்னிலைப் படுத்தப்பட்டு விட்டேன். அதனைத் தொடந்து நடந்த சம்பவங்களை வைத்து ஒரு கொடூர அதிகாரியாகத் தமிழக மக்கள் மத்தியில் சித்திரிக்கப்பட்டு விட்டேன். கருணா நிதியைக் கைது செய்வதற்கு முன்னால், ‘நிறைய யோசிக்க வேண்டும்’ என்று சொல்லி அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவிடம் துணிச்சலாக ஆட்சேபித்தேன். ஆனால், அதில் எனக்குத் தோல்விதான் கிடைத்தது. இதுதான் உண்மை. இதெல்லாம் அப்போது உயரதிகாரிகளாக இருந்த வர்கள் பலர் முன்னிலையில் நடந்ததுதான்... இந்த உண்மை களெல்லாம் முதல்வர் கருணாநிதியிடமே விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு காத்திருக் கிறேன். அப்படியரு வாய்ப்பு கிடைத்து விட்டால், என் மீதிருக்கும் தவறான அபிப்பிராயம் நிச்சயம் நீங்கும்... அதன் பிறகு எல்லாமே சுமுக மாக இருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை!’’

சரி, கருணாநிதி கைது செய்யப்பட்ட போது என்னதான் நடந்தது? விளக்க மாகச் சொல்லுங்களேன்..?’’

1996&ல் தி.மு.கழக ஆட்சியின் போது நான் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி&யாக இருந் தேன். அப்போது தமிழகத்தின் சில இடங் களில் குண்டு வெடிப்பும், குண்டுகள் கைப் பற்றப்பட்ட சம்பவமும் நடந்தது. அது தொடர் பாக அப்போதைய தி.மு.க. அரசை எதிர்த்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களோடு அறிக்கையன்றை வெளியிட்டார் ஜெய லலிதா. அதனால் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினேன். பிறகு, 2001&ல் முதல் வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன், என்னை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்தார். கமிஷனராக அவரை நான் சந்தித் தேன். அப்போது, ஏற்கெனவே அவரை விசாரணை நடத்தியதையெல்லாம் ஞாபகம் வைத்து என்னிடம் கேட்டார். அப்போதே என்மீது அவருக்கு சந்தேகமும் கோபமும் இருந்திருக்க வேண்டும். அது எனக்குப் புரியாமல் போய்விட்டது. பிறகு ஒருநாள், கருணாநிதியைக் கைது செய்வதற்காக நேரம் குறித்துவிட்டு, அதுபற்றி ஆலோசிப் பதற்காக என்னை போயஸ் கார்டனுக்கு அழைத்தார். நானும் போனேன். அங்கே வக்கீல் ஜோதி, முன்னாள் அரசு வழக்கறி ஞர் கோமதி நாயகம், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆச்சார்யலு மற்றும் இன்னும் சிலர் இருந்தார்கள். என்னிடம், கருணாநிதியை உடனே கைது செய்யவேண்டும்Õ என்று ஜெய லலிதா சொன்னார். ‘ஆதாரங்களைத் திரட்டாமல் வெறும் வெள்ளைத்தாளில் எழுதித் தரப்படும் புகாரை வைத்துக் கொண்டு, அவசரகதியில் அவரைக் கைது செய்வது சரியல்ல... புகாரை முறைப் படி விசாரித்து ஆதாரங்களை சேகரிப் போம். அதனை சட்டப்படி கோர்ட்டில் தாக்கல் செய்து, அங்கிருந்து உத்தரவு வாங்கி... அதன்பிறகு, பகல் நேரத்திலேயே கைது செய் யலாம்... கருணாநிதி வயதானவர். முதல் வராக இருந்தவர். எங்கும் ஓடிஒளியக்கூடி யவர் அல்ல. அதனால் நள்ளிரவு நேரத்தில் கைது செய்ய வேண்டாம்...Õ என்று மனதில் தோன்றியதை சொன்னேன். நான் சொன்னது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. ‘எஃப்.ஐ.ஆர். போட்டுவிட்டு ஆதாரம் திரட்ட காலம் எடுத்துக் கொண்டால், விஷயம் வெளியே கசிந்து விடும். அதைவைத்து, கருணாநிதி கைது நடவடிக்கையி லிருந்து தப்பித்துவிடக் கூடும்...’ என்றவர், அங்கிருந்தவர் களை சுட்டிக்காட்டி, நீங்கள் வருவதற்கு முன்பே இங்கிருப்பவர் களிடமெல்லாம் ஆலோசனை செய்துவிட்டேன். அவர்களெல் லாம் ‘தாராளமாக கைது செய்யலாம்’ என்கிறார்கள். நீங்கள் மட்டும் இப்படிப் பேசுகிறீர்களே? என்றார். அத்துடன் அன்றைய விவாதம் முடிந்தது. அடுத்த நாளும் இரவு எட்டு மணிக்கு மேல் போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. அங்கிருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில், முக்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் சில அமைச்சர்களும் கூடி இருந்தார்கள். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்வது குறித்து மீண்டும் ஜெயலலிதா பேசினார். நான் மீண்டும் அதிலுள்ள பாதகங்களை வெளிப் படையாக எடுத்துச் சொன்னேன். என் அருகிலிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், Ôமுத்துக் கருப்பன்! சரியாகச் சொல்கிறீர்கள்... அதனைக் கொஞ்சம் வலியுறுத்திச் சொல்லுங்கள்...’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நான் சொன்னதைக் கேட்கும் மூடில் ஜெய லலிதா இல்லை. கூட்டம் முடிந்தது. அடுத்து, இன்னொரு அறையில் என்னைச் சந்தித்த ஜெயலலிதா, Ôஇந்த வழக்கைப் பதிவு செய்திருப் பது நீங்கள் அல்ல... சி.பி.சி.ஐ.டி.! அவர்களுக்கு உதவ வேண்டியது மட்டும்தான் உங்கள் தலைமையிலான சென்னை போலீஸின் வேலை. அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்... என்று காட்டமாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி. இருந்தாலும்,ஓகே மேடம்Õ என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன் படியே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்தேன். அப்போதைய மயிலாப்பூர் உதவி கமிஷனர் முருகேசனை மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரு டன் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தேன். நான் அந்த நேரம் எனது அலுவலகத்தில்தான் இருந்தேன். வெளியே எங்கும் போகவில்லை. கருணாநிதி கைது செய்யப்பட்ட சமயத்தில் எப்படியோ சன் டி.வி. குழுவினர் அங்கு வந்து விட்டனர். சம்பவத்துக்குப் பிறகு என்னை அழைத்த ஜெயலலிதா, Ôநீங்கள்தான் சன் டி.வி&க்காரர்களை உள்ளே போக அனுமதித் தீர்களா?Õ என்று கோபத்துடன் கேட்டார். ‘இல்லை... அந்த நேரத்தில், கோபாலபுரம் வீட்டு வாசலில் காவல் பணியில் இருந்த அதி காரிதான் அவர்களை உள்ளே அனுமதித் திருக்க வேண்டும்’ என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கருணா நிதியை நள்ளிரவில் கைது செய்ய நான் ஆட்சேபம் தெரிவித்தது... சன் டி.வி. குழு வினரை உள்ளே விட்டது... இதையெல்லாம் யோசித்த ஜெயலலிதா, எனக்கும் தி.மு.க&வுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ஒரு கட்டத்தில், Ôநீங்கள் இரண்டு Ôபாஸ்Õகளிடம் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாதுÕ என்றார். ஒரு Ôபாஸ்Õ& ஜெயலலிதா. இன்னொரு Ôபாஸ்Õ& கருணாநிதி. முதல்வர் அப்படி ஒரு எண்ணத்தில் இருக்கிறார் என்றால், அதிகாரியான நான் என்ன சொல்ல முடியும்? மௌனமாக இருந்து விட்டேன்!ÕÕ

‘‘கருணாநிதி கைது சம்பவத்தைத் தொடர்ந்து அது தொடர் பாக அரசு சார்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது நீங்கள்தான். ஆனால், கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் என்று இப்போது சொல்கிறீர்களே... அப்படியென்றால், நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தீர்கள்?’’

ÔÔநான் செய்த மிகப் பெரிய தவறு அதுதான்! கைது செய்யப்போன சி.பி.சி.ஐ.டி. போலீஸ§க்குப் பாதுகாப்பு கொடுத்த நான், அந்த விவகாரம் பற்றி எதுவும் கருத்து சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனால், கைது நடவடிக்கை முடிந்து விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியதும், சி.பி.சி.ஐ.டி. பிரிவின் உயர் அதிகாரிகள்கூட எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. நான் அப்போது கமிஷனர் பதவியில் இருந்த தால், சட்டம்&ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை. ஏதோ நானே முன்னின்று கருணாநிதியைக் கைது செய்ததுமாதிரி யான சூழல் உருவாகிவிட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கிய மான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்... கருணாநிதி கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைக்கப்பட்ட போது, நள்ளிரவு மணி 3 இருக்கும். அவருடைய மனைவி ராஜாத்தியம்மாள் பரிதி இளம்வழுதியுடன் என்னைச் சந்தித்தார். ‘எனது கணவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்?Õ என்று அழுதபடியே கேட்டார். ‘கைது செய்திருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். அந்தப் பிரிவு அலுவலகம் இருக்கும் அட்மிரா லிட்டி ஹவுஸில்தான் விசாரணைக்காக வைத்திருக்கிறார்கள்...’ என்று சொல்லி அனுப்பினேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், கைது நடவடிக்கையில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்பது அவர்களுக்கு அன்றே மிகத் தெளிவாகத் தெரியும் என்பதற்காகத்தான்.’’

‘‘வருமானத்துக்கு அதிகமாக நீங்கள் சொத்துக் குவித்திருப் பதாகச் சொல்லித்தான் உங்களை சஸ்பெண்ட் செய்து வழக்குப் போட்டிருக்கிறார்கள்... அந்த வழக்கின் நிலை என்ன?’’

ÔÔஎன்மீது போடப்பட்டிருக்கும் அந்த வழக்கில் துளிகூட உண்மையில்லை என்பதெல்லாம், அதுகுறித்து விசாரித்து முடித்திருக்கும் அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். இந்த உண்மையைக்கூட அவர்களால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல முடியவில்லை. எனக்கு எதிரான சில சக்திகள் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டன. ரொம்ப ஜூனியரான என்னை பாரம்பரியம் மிக்க சென்னை போலீஸ§க்கு கமிஷனராக அமர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அந்தப் பதவியிலிருந்தது குறுகிய காலம்தான். அப்போது, அப்போதைய முதல்வருக்கு வேண்டிய சிலர், என் பதவியையும் எனது பெயரையும் பல இடங்களில் தவறாகப் பயன்படுத்தினார்கள். இதெல்லாம் எனக்குத் தாமத மாகத்தான் தெரியவந்தது. உடனே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து உண்மையை எடுத்துச்சொல்ல முயன்றேன். ஆனால், அது அந்த மோசடிக் கும்பலுக்குத் தெரியவர... என்மீது இல்லாததும், பொல்லாததும் சொல்லி விட்டார்கள். அடுத்த சில நாட்களிலேயே என்னை கமிஷனர் பதவியிலிருந்தும் தூக்கியடிக்க வைத்துவிட்டார்கள். அதோடு விடவில்லை... தொடர்ந்து நான் போலீஸ் பணியில் இருந்தால் நல்லது இல்லை என்று முடிவெடுத்து, நயவஞ்சமாக என்னைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கியது ஜெயலலிதா நம்பிய அந்தக் கும்பல். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக என்மீது பொய்யாக வழக்குப் போட வைத்து சஸ்பெண்ட் செய்ய வைத்தார்கள். இதனாலேயே என் சம்பந்தப்பட்ட ஃபைலைக் கடைசிவரை அப்போதைய முதல்வரின் பார்வைக்குக் கொண்டு போகாமலேயே வைத்து விட்டார்கள். அப்போது நடந்ததைதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்களும் நன்கு விசாரித்து, உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அதனால், விரைவில் நல்லது நடக்கும். முதல்வர் கருணாநிதியை சந்திக்க முறைப்படி அனுமதி கேட்டிருக்கிறேன். அப்போது நடந்தது எல்லாவற்றையும் அவரிடம் விளக்குவேன். விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்’’ என்றார் முத்துக்கருப்பன்.

நன்றி: ஜூனியர் விகடன்ஆட்சியாளர்களை பாஸ்களாக அரசு அதிகாரிகள் நினைக்கும்வரை இது நடக்கத்தான் செய்யும். மக்களும் சட்டமும்தான் பாஸ்கள் என என்றுதான் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் நினைக்கபோகிறார்களோ தெரியவில்லை .

முதல்வர் கருணாநிதி மேல் பல வருத்தங்கள் இருந்தாலும் , கைது அன்று டீவியில் பார்த்து கண்கள் கசிந்தன. நியாயமான காரணங்கள் இருந்தால் கைது செய்வதில் தவறில்லை. ஒரு கட்சியின் தலைவரை , விரும்புகிறோமோ இல்லையோ பல இலட்சக்கணக்கான மக்களின், ஆதர்சன நாயகனை , ஒரு முதியவரை ,இப்படி நடத்தியது கொடூரத்தின் கொடூரம் .இந்த நிகழ்வு கண்டிப்பாக செல்வி .ஜெயலலிதாவின் அரசியல் தோல்விதான் . இரு கட்சியின் பலிவாங்கும் அரசியலுக்கு அரசு அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்

6 comments:

said...

ஏய்...எல்லாரும் நம்புங்கப்பா...முத்துக்கருப்பன் ஒரு அப்பாவி....ன்னு

ஆனா அப்ப இவர் எம்புட்டு திமிரா பேசினார்னு பாத்தவய்ங்க இன்னும் மறந்திருக்க மாட்டாய்ங்க....

எல்லாஞ்சரிதான்...இம்புட்டு வெவரமான அதிகாரி...சன் டிவி ஒளிபரப்பை தடைசெய்யச் சொல்லி எப்படி உத்தரவு போட்டார்.

டிவி எல்லாம் மத்திய அரசு கட்டுப்பாட்ல உள்ளதுன்னு தெரியாதுன்னு சொன்னாலும் சொல்லுவாருப்போய்...நம்ப தயார இருங்க....

நீதி: பதவி வரும்போது துணிவுடன்...பணிவும் வேண்டும்....

Anonymous said...

எனக்கே இன்னும் முத்துகருப்பன் மேல கோபம் அடங்கல... அந்த நிகழ்சிய நினைச்சு...!!. கலைஞர் தன்னைச் சந்திப்பார்னு நம்புற முத்துக் கருப்பனை நினைச்சா பாவமாத்தான் இருக்கு....

said...

வருகைக்கு நன்றி பங்காளி , அப்டிப்போடு ..

பங்காளி... பணிவு வேண்டும்.. யாரிடம்? அண்ணன் ஜெ,விடம் ரொம்ப பணிவாகத்தான் இருந்திருக்கிறார். இப்போ க.விடமும் பணிவாக இருக்கவே விரும்புகிறார் .;)

ஆமாம்.. அப்டிப்போடு ,

முத்துக்கருப்பன் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். அந்த சூழ்நிலையில், ஒரு அதிகாரி என்னதான் செ்ய்திருக்கமுடியும் . அரசியல்வாதிகள் மாறவேண்டும்

said...

என்னத்தைச் சொல்லுறது?

said...

சென்னை கமிஷனராக இருந்த முத்துக் கருப்பன் மட்டுமல்ல. அப்போது DGP ஆக இருந்த, பெயர் மறந்துவிட்டது - பெண் போலீஸிடம் தவறாக நடந்துகொண்டார் என்று சொல்லி ஜெ சஸ்பெண்ட் செய்த அதிகாரி, மேலும்முத்திரைத்தாள் மோசடியில் சம்பந்தப்படுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட முகம்மது அலி இவர்கள் எல்லாம் கருணாநிதியைப் கைதுசெய்ய ஜெவால் பயன்படுத்தப்பட்டு கறிவேப்பிலையாக (வழமையான ஜெ பாணியில்) தூக்கியெறியப்பட்டவர்கள்.

said...

கயிறு ஒரு மீட்டர் வாங்கினா, ஒரு மீட்டரு இலவசமாம். 150 கிலோ வரைக்கும் எடை தாங்குமாம்.
மு.க வை புடிச்ச மு.க இன்னிக்கு மொக்க!
இது எல்லாத்தையும் விட படு சிரிப்பு நீங்க எழுதியிருக்கிறதுதாங்க! கடைசியில அதிகாரிங்கள பாவமறியா புள்ளைங்கன்னு சொல்லி முடிச்சிட்டீங்க. அப்ப அவங்களுக்கு அறிவே இல்லியா? சொந்த புத்தியே இல்லியா? பின்ன எப்பிடி அதிகாரியா ஆனாங்க?