மதநல்லிணக்க உரையாடலில் ரஜினியால் வந்த நம்பிக்கை

சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியில் உள்ளூர், உலக அரசியல் நடப்புகளை ஆராயும் ஒரு நிகழ்ச்சி எதிரொலி . இதில் கலந்துரையாடல்கள், கருத்தறிதல் ஆகியவற்றை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி . மதநல்லிணக்கம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்குகொள்ள எனக்கு வாய்ப்பு வந்தது . ஒரு தயக்கத்துடனேதான் மேலிட அனுமதியும் கிடைத்தது (வேற யாரு, தங்கமணியிடமிருந்துதான் , உளறிவிடுவேன், பிரச்சினையாகிவிடும் என உறுதியாக நம்பினார்) .

ஒளிப்பதிவு, ஒளிபரப்பு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்றது . ஒளிப்பதிவிற்கு முன் , தயாரிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது , மதநல்லிணக்கம் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று . அதுவும் ஒரு அமைதியான குடிமக்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் அவசியம்தானா? என்று என் சந்தேகத்தைக் கேட்டேன் . இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் , மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துகள் தொடர்ந்து மக்களிடம் போய் சேர, அதன் அவசியத்தை மக்கள் மேலும் உணர, அரசாங்கம் எடுக்கும் முயற்சிதான் இது பற்றிய கலந்துரையாடல்கள் எனக் கூறினார் . எனவே, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை நான் என்ன திரும்பவும் கூறப்போகிறேன் என்ற என் தயக்கம் விலகி, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை என் மொழியில் நான் கூறப்போகிறேன் என என் நம்பிக்கை கூடியது .

கிறிஸ்தவன் என்ற முறையில் நானும் , இந்து மற்றும் இஸ்லாம் மதத்திலிருந்து இரு சகோதரர்களும் கலந்துகொண்டோம் . டச்-அப்(ஹி..ஹி)க்குப் பிறகு ஒளிப்பதிவு அரங்கத்திற்கு சென்றமர்ந்தோம் . பிரதமர் திரு. லீ சியாங் லுங் ' சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கும் , புரிந்துணர்விற்கும் சமயத்தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களே சிறந்த வழி' என்று கூறுவதும் , அதற்கான சமயப்பெரியோர்களின் கருத்துகளும் திரையிடப்பட்டது . முஸ்லிம் மதத்தலைவர் 'தீபாவளி , கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறுவது இஸ்லாத்துக்கு எதிரானது' என சில முஸ்லீம்கள் கூறுவதைக் கண்டித்தார் . அயலானைப் பற்றி புனித குர்-ஆனில் கூறுகின்ற வசனத்தையும் , ஜிஹாத் என்பதற்கான அர்த்தம், உலகில் இருக்கும் தீமைகளுக்கு எதிரான போராட்டம் (நான் ஏற்கெனவே அறிந்திருந்ததுதான்) என்றும் விளக்கினார் . அவருடைய கருத்து மிக நன்றாக இருந்தது . அதன் பின் ஒரு முன்னோட்டக் கலந்துரையாடல் எங்களுக்குள் நடைபெற்றது . உடனே , படப்பிடிப்பும் ஆரம்பமானது .. நாஸ்ரத் ஹசான் (Host) அவர்கள் , நாங்கள் முன்னோட்டக் கலந்துரையாடலில் முன்வைத்த கருத்துகளைச் சொல்ல வேண்டிய வகையில் , கேள்விகளைக் கேட்டார் . எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தமிழ் வார்த்தைகளை,. ஆள் வைத்துத் தேடாமல், நல்ல தமிழில் , சரளமாக கேள்விகளைக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ..

ஆனால் , அவரும் ஒரு இடத்தில் சறுக்கினார் . எங்களை அறிமுகப்படுத்தும்போது , ' மூன்று இளையர்கள்' எனக்கூறினார் . ( 'இளைஞர்' என்ற சொல்லை 'இளையர்' என்று இங்கு சிங்கப்பூரில் கூறுகிறார்கள்) . ' அறுபத்து நான்கு' வயதினரை இளைஞர் என்று சொல்லலாமென்று தமிழ்மணத்திலுள்ளோர் எல்லோரருக்கும் தெரியும். 'முப்பத்திநான்கு'.. வயதினனை இளையர் எனச் சொல்லலாமா? எனக்குத் திரும்பவும் ஒரு கலக்கம் .. சற்றுமுன், தயாரிப்பாளர் 'வயது என்ன?' என்று என்னிடம் கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது . வயது தெரியாமல், தமிழ் கிறிஸ்தவன் யாரும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் என்னை கூப்பிட்டுவிட்டார்களோ என ஒரு சங்கடமும் வந்தது . அப்போதுதான் ஆபத்பாந்தனாக ரஜினிகாந்த் என் நினைவில் வந்தார் . பேரன் எடுத்தவரெல்லாம், புட்டாமாவும், பயிரிட்ட மயிரும் , மயிருக்கு சாயமும் பூசி இளைஞனாக , பேத்தி வயதையொத்தவரிடம் டூயட் பாடும்போது , என்னை இளைஞன் என்ன சிறுவன் என்று கூறினாலும் தவறில்லை என என் மனம் அமைதி கொண்டது .

ஐயோ , ரஜினி அரசியலில் உளறியதிலிருந்து இப்படித்தான் , நல்ல நேரங்களில் கூட அவர் நியாபகம் வந்து தொலைத்துவிடும் .ரஜினி நினைப்புடனே வணக்கம் சொன்ன என்னை வீடியோவில் பார்க்கவும் . என்னுடைய கருத்தெல்லாம் இந்த வீடியோவில் இல்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, நல்ல ஜல்லி என்ற பின்னூட்டமும் வரும் என்பதால் .இந்த நிகழ்ச்சி , ஜனவரி-15 ஆம் நாள் (பொங்கலன்று) ஒளிபரப்பாகியது . எனக்காக, என் நண்பர்கள் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அந்நியனை' பார்க்காமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள் . நண்பர் ஒருவர் , 'ஜிகாத்' திற்கு உண்மையான அர்த்தத்தை அன்றுதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார் . தயாரிப்பாளர் திரு . மணிமாறன் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது

20 comments:

said...

ஆஹா! சொல்லவே இல்ல! எதிரொலி வழக்கமாக நான் பார்க்கும் நிகழ்ச்சி .நேற்று கூட பார்த்தேன்.ஆனால் உங்கள் நிகழ்ச்சியை தவற விட்டுவிட்டேன் .நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள்

said...

அது சரிய்யா, அந்த முசுலீம் தம்பிக்கு மத்தவங்கள மாதிரி கைகூப்பி வணக்கம் செய்ய தெரியாதோ? இல்ல கர்வமோ?

said...

ஜோ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

மாசிலா .. வருகைக்கு நன்றி ..

வணங்குவது ஒரு முறை . தலையசைத்தாரே.. அது அவருடைய பழக்கமாய் இருக்கலாம் அல்லது நாங்கள் இருவரும் கைகூப்பியதால் வித்தியாசமாய் இருப்பதற்காக தலையசைத்து வணக்கம் செய்திருக்கலாம் . இதிலெல்லாம் எப்படி குறைகாண்பது.


கரு.மூர்த்தி மற்றும் அணானிகளே குறிப்பிட்ட மதத்தைத் தாக்கும் உங்கள் பின்னூட்டங்கள் வெளியிடப்படவிலலை.

said...

உங்கள் பதில் கண்டு மிகவும் மனம் கொதித்தேன்.

கைகூப்பி வணக்கம் செய்வது என்பது பண்பாடு மற்றும் மரியாதைக்கு அர்த்தம் ஆயிற்றே. அதெப்படி ஒரு குழுமத்தில் இருவர் பணிவன்புடன் வணக்கம் செய்கையில் மூன்றாமவர் மட்டும் தலைவணங்காமல் இப்படி நடந்துகொள்வது சரியாகும்?

அவருக்கு பரிந்து பேசுவது உமது பெருந்தன்மையை காட்டுகிறது -L-L-D-a-s-u.

நன்றி.

said...

ஒவ்வொருத்தருக்கும் ஒரு பண்பாடு இருக்கும்.கை கூப்புவது மட்டும்தான் மரியாதையை வெளிப்படுத்துவதாக அர்த்தப்படுமா என்ன. மிகச் சாதாரண இந்த நிகழ்வில் நொட்டை காண்பது பார்வை மற்றும் புத்திக்கோளாறே. இதில் மனம் கொதிக்க என்ன இருக்கு. கொதிக்க காரணம் அவரது மதமோ????

said...

//அப்போதுதான் ஆபத்பாந்தனாக ரஜினிகாந்த் என் நினைவில் வந்தார் . பேரன் எடுத்தவரெல்லாம், புட்டாமாவும், பயிரிட்ட மயிரும் , மயிருக்கு சாயமும் பூசி இளைஞனாக , பேத்தி வயதையொத்தவரிடம் டூயட் பாடும்போது , என்னை இளைஞன் என்ன சிறுவன் என்று கூறினாலும் தவறில்லை என என் மனம் அமைதி கொண்டது .
//
இது இது தான்யா லபக்கு தாசு பஞ்ச்....

said...

ஆரம்பத்தில் நான் இவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி அவ்வளவாக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் படத்தை பார்த்து முடித்தபின், இவருடைய நடத்தையை கண்டபிறகு, இவருடைய பண்பாடு கலாச்சாரம் பின்புலம் அறிய ஆவல் கொண்டேன். இது இயற்கைதானே?

நான் ஒரு மதவாதி அல்ல. அடிப்படை மரியாதைகளை மதிக்கும் ஒரு சாதாரண மனிதனே.
ஏதோ என் கண்ணுக்கும் மனதுக்கும் பட்டதை பட்டென்று சொன்னேன்.

said...

//அது சரிய்யா, அந்த முசுலீம் தம்பிக்கு மத்தவங்கள மாதிரி கைகூப்பி வணக்கம் செய்ய தெரியாதோ? இல்ல கர்வமோ?
//
//ஆரம்பத்தில் நான் இவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி அவ்வளவாக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் படத்தை பார்த்து முடித்தபின், இவருடைய நடத்தையை கண்டபிறகு, இவருடைய பண்பாடு கலாச்சாரம் பின்புலம் அறிய ஆவல் கொண்டேன். இது இயற்கைதானே?//

***
//நான் ஒரு மதவாதி அல்ல.// நானும் அப்படி கருதவில்லை மாசிலா

said...

முத்துக்குமரன்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மாசிலா, cool down ;)
இது ஒரு சாதாரண் விசயமாகத்தான் எனக்கும் தோன்றுகிறது .

குழலி.. ;) ;)

said...

மாசிலா அவர்களுக்கு, கை கூப்புவது மரியாதை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் கைகூப்புவதே தொட்டு விடாதே, எட்ட நில் என்று கூறுவது போல் மரியாதை குறைவாக நாங்கள் நினைக்கிறோம். மதம், சாதி, பிறப்பு பாராமல் யாராக இருந்தாலும் கட்டி பிடித்து ஆலிங்கனம் செய்யுங்கள், இது தான் எங்கள் மரபு. - நாகூர் இஸ்மாயில்

said...

வாருங்கள் இஸ்மாயில் ..கருத்துக்கு நன்றி .. எனக்கும் நீங்கள் சொன்னப் பழக்கம் பிடிக்கும் . ஆனால் இதை அந்த இடத்தில் செய்ய முடியாது ;)..

என்ன கொடுமை சரவணன் இது ... பதிவுல டோண்டு மாமா இருக்காங்க, ரஜினி மாமா இருங்காங்க,படத்துல தாஸு தம்பி இருக்காக.. இவங்களையெல்லாம் விட அண்ணன் ராஜ் மொஹமட் அவர்களுக்குத்தான் நிறைய ரசிகர்களோ?

Anonymous said...

congrates Jose...

But toooo fat.... reduce your weight..

Anonymous said...

Dear Jose,

I read your blog and happy to see you in Ethiroli. I also missed it
to see the show. Keep it up!

said...

LL தாஸு,

நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள், எப்டியோ பெரிய ஆளாயிட்டீங்க, போங்க ;-)

'தலைவரை', சமயம் பார்த்து நக்கலடித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்:)

எ.அ.பாலா

said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா.

நக்கலெல்லாம் இல்லைங்க.. உண்மைங்க.. கண்ட நேரத்தில, நல்ல நேரத்திலகூட, ரஜினி நினைப்பு வந்து தொல்லை பண்றதும் உண்மைங்க!!;);)

Anonymous said...

appadiya.. periya alaitenu sollu

said...

//ரஜினி மாமா இருங்காங்க//

இளையரான ரஜினி தம்பியை, மாமா என்று வயதானவராக்கிக் காட்ட முயலும் உங்க குசும்பைக் கண்டிக்கிறோம் ;) :))

இங்க படம் தெரியலை.. அப்பாலிக்கா பாத்துட்டு சொல்றேன்..

said...

ஏமாறாதவன் கருத்தும்என்னுடைய பதிலும் .. அவருடைய கருத்து போல்டில்

தாஸூ ஐயா,

தங்கள் பதிவு ஒரு சரியான மொக்கை பதிவு.

ஆம். நன்றி
ஒருவேளை, உங்கள் புராணத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று போட்டதோ என்னவோ?
ஆம். உண்மை ..
அப்படியாயின் மேலே படிக்கவேண்டாம்.
ஓக்கே .. படிக்கவில்லை .:

இல்லையாயின் என் இரு கேள்விகள் கீழே.
உங்கள் கேள்விகளில் உள்ள சில நியாயங்கள் புரிந்தாலும் , சிலவற்றை ஒத்துகொண்டாலும் இதை பிரசுரிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன் . கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவை போல் இருந்தாலும் , நான் இருக்கும் நாட்டினுடைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இதை செய்யவேண்டியுள்ளது . மன்னிக்கவும் .. உங்களின் கருத்து உங்களுடைய பதிவின்மூலமோ, பின்னூட்டங்களின் மூலமோ பெரும்பாலான வாசகர்களுக்கு தெரியுமாதலால் அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன் .

தங்கள் நண்பர் அறிஞர்......
இது சும்மா ஒரு தகவலுக்காக..ரொம்ப முக்கியமில்லையென்றாலும் ..
அந்த அறிஞர் என் நண்பரல்ல.. என்னோடு உரையாடலில் கலந்துகொண்ட இளையருமல்ல ;) .. அவர் ஒரு மசூதியின் தலைவர். முதியவர் ..


இம்மாதிரி மேடைப்பேச்சுகள் யாரையும் ஏமாற்ற முடியாது. இன்று உலகில் பலருக்கும் உலகளாவிய நோக்கு ஏற்பட்டு மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைக்கும் ஆதார சக்திகள் வெட்டென தெரிகின்றன.

இம்மாதிரி குளுகுளு ஹாலில் கைதட்டல் வாங்குவதற்காக வெத்து கூட்டம் போட்டால் யாதொரு பயனும் இல்லை.

இருக்கலாம். ஆனால் , உண்மையில்லாத ஒன்றினால் கிடைக்கும் பயனும், உண்மையினால் தீமையும் இருந்தால், உண்மையில்லாத ஒன்றை ஆறத்தழுவதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .. இந்தப் பதிவின் நோக்கம் மத நல்லிணக்க விவாதத்தை ஆரம்பித்து வைக்க அல்ல. ஆதலால் தான் , எங்களில் விவாதத்தை ஒளியேற்றவில்லை.. நானும் டிவியில் தோன்றினேன் என்று தண்டோரா போடுவதே இதன் நோக்கம்.. நான் ரொம்ப சின்னவன்.. என்னை விட்ருங்க!!! ப்ளீஸ் .;) ;)

said...

பொன்ஸ் அக்கா..

நன்றி.. பார்த்துவிட்டு சொல்லுங்கள்.. நான் மாமாவா, தம்பியா (ரஜினிக்கு) சொல்லுங்கள்

said...

தாஸ் ஐயா,

//// உங்கள் கேள்விகளில் உள்ள சில நியாயங்கள் புரிந்தாலும் , சிலவற்றை ஒத்துகொண்டாலும் இதை பிரசுரிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன் ////

சிலவற்றையாவது ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. தங்கள் நேர்மைக்கு வணங்குகிறேன்.

என் விமர்சனங்களை மற்ற வளைகுடா பதிவர்கள் ஒரு தயக்கமும் இல்லாமல் பிரசுரித்து வருகிறார்கள். இணைய ஜிகாதி இஸ்லாமியர்கள் கூட சிலர் இதை பிரசுரத்திருக்கிறார்கள். நீங்கள் இப்படி பயப்படுவது ரொம்பவும் வியப்பு. More loyal than the king என்பது உங்களைப்போன்றோரின் திம்மித்துவத்துக்குத்தான்..

/// ஆனால் , உண்மையில்லாத ஒன்றினால் கிடைக்கும் பயனும், உண்மையினால் தீமையும் இருந்தால், உண்மையில்லாத ஒன்றை ஆறத்தழுவதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ////

ஹி!! ஹி!!! உண்மைதான். ஆனால், இது நடக்குமா? நடக்குமாயின் இந்த கனவு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நூறு கோடிக்கும் மேலுள்ள சில இனங்களின் உண்மைகளை எல்லோரும் மறந்து புதிய ஒரு அத்தியாயம் எழுதுவார்கள் என்று நீங்கள் நினைப்பது, மன்னிக்கவும், மூடத்தனம்.

கைத்தட்டலுக்கு மட்டுமே உங்கள் கனவு பயன்படும்...