ஒரே ஊரிலிருந்து , ஒரு ஹீரோ .. ஒரு வில்லன்...

கர்நாடக மாநிலத்திலிருந்து ஒருவரை அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் வில்லனாக . அவரின் கண்ணில் ஒரு ஒளி தெரிந்ததாம், அந்த ஒளியைப்பார்த்து, அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினாராம் . இது அவர் தமிழ் சினிமாவில் வெற்றியடைந்தவுடன் வந்த ஜல்லி . ஒளியும் ஒலியும் அவர் கண்ணில் தெரிந்திருந்தால் அவரை ஏன் வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும்? . இதிலெல்லாம் இங்கே எந்த பிரச்சினையில்லை . ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்துவிடுவது தமிழ் சினிமாத்துறையில் புதியதா என்ன ? நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாமலா இருக்கும் ? ரஜினி அய்யாதான்.. வேறு யார் ?

அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, உச்சத்தில் இருந்த பாலச்சந்தர் தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பளித்தார் . ரஜினிக்கு பாலச்சந்தரிடமிருந்து மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த பாரதிராஜா , மகேந்திரன் போன்றவர்களின் மூலம் பதினாறு வயதினிலே , முள்ளும் மலரும் போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்தன . சரியாகவே அவரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார் . தொடர்ந்து , தன்னுடைய வித்தியாசமான நடை , பேச்சு போன்றவற்றின் மூலம் கதாநாயகனாகி , உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தையும் பெற்றார் .

ஏறக்குறைய 15 வருடங்களுக்குப் பிறகு , ஒரு படத்திற்கு இன்னொருவரை அதே கர்நாடகத்திலிருந்து ,அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் , இவரையும் வில்லனாக . இந்த வில்லன் அறிமுகமான படம் ஒரு தோல்விப்படம். இவர் ...பிரகாஷ்ராஜ் . ரஜினிக்கு பாலச்சந்திரடமிருந்து கிடைத்த வாய்ப்புகள், ஆதரவுகள், இந்த பிரகாஷ்ராஜுக்குக் கிடைக்கவில்லை . பாலச்சந்தருக்கே ஆதரவு தேவைப்பட்ட நேரமது . பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராய் இருந்த வசந்த்தின் 'ஆசை' இவருக்கு முதல் அறிமுகத்தைக் கொடுத்தது . அதிலிருந்து பலதரப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தாலும், ரஜினிகாந்த்க்கு வந்த வெற்றிகளோ , புகழோ இவருக்கு கிடைக்கவில்லை . ரஜினி அளவுக்கு இவருக்கு திறமையில்லை என்றாலும் ஒத்துக்கொள்வதில் எனக்கொரு பிரச்சினையுமில்லை .

ரஜினி , தன் புகழுக்குக் காரணம் இந்த தமிழ் மண்தான் , தமிழர்கள் தான் என அடிக்கடி தன் பாடல்களில் பாடுவதும், வசனங்களில் சேர்ப்பதையும் தன் பழக்கமாக கொண்டிருக்கிறார் . ஆனால் , தமிழன் தன் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்பதாகவும் படமுடுத்து ரசித்துக் கொண்டுமிருக்கிறார் . சரி, படத்தில் வருவதெல்லாம் கற்பனை , இயக்குநர், பாடலாசிரியர்களின் கற்பனை என்றே வைத்துக்கொள்வோம் , இங்கே , உச்ச நட்சத்திரங்களின் விருப்பமின்றி , அணுவும் அசைவதில்லை என்பது நிதர்சனமாயிருந்தாலும் . நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது ? திருமண மண்டபம் தமிழர்க்கு அர்ப்பணம் என்ற கண்துடைப்பு, காவிரி போராட்டத்திற்கு ' உண்ணாவிரதம் ' என்ற பெயரில் திசைதிருப்பல் . யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல கங்கை-காவிரி இணைப்புக்கு 1 கோடி மற்றும் வாய்ஸ் எனத் தமிழர்க்கு நன்றிக்கடன் செலுத்துவது போல , தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒரு போராட்டம் நடத்திவருகிறார் .

ரஜினி அய்யா!! நீங்கள் நன்றிக் கடன் என்று ஏதாவது செய்ய வேண்டுமென்றால் , அது தமிழர்க்கு செய்யவேண்டியது ஒன்றுமில்லை . தமிழன், அவன் தலைவிதி, உங்களை ரசித்தான் , காசு கொடுத்தான், அவனுக்கு பொழுதுபோக்கை வழங்கினீர்கள் . ஆனால் , நீங்கள் நன்றி கடன் செலுத்தியே ஆக வேண்டுமென்றால் , நீங்கள் செலுத்த வேண்டியது தமிழ் சினிமாவிற்குதான் .


இந்த விஷயத்தில் தான் , பிரகாஷ்ராஜ் உயர்ந்து நிற்கிறார் . நல்ல சினிமா தரவேண்டும் என்ற அவரின் ஆசைக்கு ஒரு சல்யூட் . நல்ல கதைகளை, நல்ல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் . சிலமுறை 'பொய்' , 'நாம்' போன்ற அவர் தயாரித்த படங்கள் வெற்றியடையாவிடினும், சில படங்கள் நல்ல தரமானதாக அமையாவிடினும், நல்ல படங்கள் தரவேண்டும் என்ற அவரின் நோக்கம் உயர்ந்தது . 'மொழி' , 'அழகிய தீயே' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்ததும் அவரின் ஆர்வத்தை மேலும் உயர்த்தும் என்று நம்புகிறேன். தமிழ் சினிமா அவராலும் , அவர் தமிழ் சினிமாவாலும் வளர , தமிழ் திரைப்பட ரசிகன் என்ற முறையில் வாழ்த்துகிறேன் .

ஆனால், ரஜினி அய்யா அவர்கள் , தமிழ் சினிமாவை குப்பையில் சேர்க்க இன்னும் பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார் . தன் வயதிற்கேற்றவாறு நடிக்கவோ , நல்ல படங்களைத் தயாரிக்கவோ இன்னும் இவர் மனம் ஒப்பவில்லை. அதே குப்பை மசாலாக்களை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி இன்னும் நடித்து கொண்டுதான் இருக்கிறார் . தமிழ் சினிமாவில் மசாலாவுக்கு குறைச்சலா என்ன? இவரின் ஒவ்வொரு அசைவையும் காப்பி அடிக்கும் தளபதிகளும் , மாப்பிளைகளும் , லிட்டில் ஸ்டார்களும் அதை பார்த்துக் கொள்ளட்டுமே . அதை அந்த ரசிகர்கள் பார்த்து விசிலடித்துக்கொள்ளட்டுமே !! ஆனால் அந்த விசிலடிக்கும் கூட்டம் நிரந்தரமாக தன்னிடமே இருக்கவேண்டுமென்ற போராட்டம்தானே இந்த மசாலாக்களும் வாய்ஸ்களும் . இதில் எங்கே நன்றி கடன்கள் ?

ரஜினி அய்யா நடித்ததில் ஒரளவுக்கேனும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் 'சந்திரமுகி ' .. அய்யாவின் குழப்பமான ஆண்மீகத்தைத் திணிக்க எத்தளித்த சில தருணங்களைத் தவிர கடைசிக்காட்சிகள் மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் தான் இருந்தன.. ஆனால் அந்தப் படத்தின் இறுதிக்காட்சிகளைத் தவிர்த்த மற்ற காட்சிகள் ??? . ரஜினி என்ற இளைஞருக்காகத் திணித்த காட்சிகள் எவ்வளவு தூரம் தரமானதாக இருந்தன ? விளக்குக்கம்பை பார்த்தால் , நாய் தான் காலைத்தூக்கும் என்பார்கள்!! இங்கே , அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் 'உலகப்புகழ்' பெற்ற மருத்துவர் காலைத்தூக்கி அறிமுகமானது எவ்வளவு தூரம் கதைக்கு அவசியமானதாய் இருந்தது . உலகப்புகழ் பெற்ற மருத்துவர் எனும்போது , ஐம்பது வயதினை ஒத்தவர் என்றால் கொஞ்சம் நம்பும் படியாக இருக்குமே , கதையையும் அது பாதிக்கப்போவதில்லையே , கல்யாணம் ஆகாத ஒருவராக , கதைக்குத்தேவையில்லாத, அய்யாவோடு இணைந்த காதல் டூயட்டுகள் எதற்காக? காதல் காட்சிகள் திரைப்படக் கட்டாயம் என்றாலும் , அதை ஜோதிகா , அவரின் கணவனாக நடிக்கும் ஒரு இளமையான சூர்யாவோ அல்லது யாரோவை வைத்து காதல் டூயட் இருந்தால் , ரசிகர்கள் பார்க்கமாட்டார்களா என்ன?

கழிவுகளுக்கு தங்க கிரீடம் வைக்கும் ஷங்கர் போன்றவர்களின் இயக்கத்தில் நடிப்பதை தவிர்த்து ,மனித உணர்வுகளைப் பதியும் சேரன் போன்றவர்களின் படங்களில் , உதாரணமாக 'தவமாய் தவமிருந்து'வில் ,சேட்டைகளை தூர எறிந்துவிட்டு, ராஜ் கிரண் வேடத்தில், ரஜினி நடித்திருந்தால் தமிழ் சினிமாவுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய கைமாறாய் இருந்திருக்குமே!! ஒரு சிறந்த நடிகர் , தமிழ் சினிமாவில் உயர்வான இடத்தில் இருக்கும் ஒருவர் , மண்ணின் மனத்தை, மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்தின் நடிப்பதின் மூலம், தமிழ் சினிமாவின் தரம் உயருமே என்ற ஆதங்கத்தில் , ஒரு தமிழ் சினிமா ரசிகனாகவே இதை எழுதுகிறேன் . தரமான தமிழ் படம் கொடுப்பதற்கான தார்மீக கடமையும் , அதற்கான திறமையும் ரஜினியிடம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன் . ஆனால் , அதற்கான மனம் தான் அவரிடம் இல்லை ..

இன்னும் வரவிருக்கும் சிவாஜி என்ற படத்திலிருக்கும் ஸ்டில்களைப் பார்த்தாலும் , தம் வயதினை ஒத்த, மசாலா இல்லாத படத்தினைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை வரவில்லை . சரி , அவர் சம்பாரிப்பதையோ , சம்பாரிக்கும் பணத்தை முதலீடு செய்யும் முறையையோ குறை சொல்ல நமக்கு உரிமையில்லை . ஆனால், தமிழனுக்கு 'வாய்ஸ்' கொடுப்பதை , தமிழனுக்கு நன்றிக்கடனாக 'முதல்வராக' வரும் முயற்சியையும் நிறுத்திக்கொள்ளட்டும் . அல்லது நிறுத்திக்கொண்டதை தொடரட்டும். தமிழனுக்கு ஒரு குறையென்றால், அவனை ஆண்டவனாலும் காப்பற்ற முடியவில்லையென்றாலும் , அதை பார்த்துக்கொள்ள தமிழ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு கடமையும் உள்ளது .

39 comments:

Anonymous said...

உண்மை. சரியாகச் சொல்லி உள்ளீர்கள்.

said...

சூஊஊஊஊஊஊஊஊப்பர் பதிவு!

said...

தாசு,
மொழி போன்ற படங்களை தருவதற்காக பிரகாஷ்ராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .பிரகாஷ் ராஜ் ஒரு பொறுப்புள்ள தயாரிப்பாளராக தெரிகிறார்.

அதே நேரம் இந்த ஏ.வி.எம் நிறுவனத்தைப் பாருங்கள் .எப்போதெல்லாம் தமிழ் சினிமா கொஞ்சம் உருப்படியான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு படு மசாலா படத்தை எடுத்து மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவது (ஏ.வி.எம் செட்டியாருக்கு பிறகு) ஏ.வி.எம் செய்து வரும் ஒன்று .சகலகலா வல்லவன் ,முரட்டுக்காளை ,ஜெமினி ..இப்போ சிவாஜி.

Anonymous said...

Very good. Apprications.

Anonymous said...

ரஜினி ரசிகர்களகிய நாங்கள் தூக்கி மாட்டி தொங்க வேண்டும் போல் இருக்கிறது உங்கள் பதிவு. நாக்கைப் புடுங்கிக் கொள்ளும்படியான கேள்விகள்.

said...

சிந்திக்க வைக்கும் ஒரு நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள், நண்பரே ! ரஜினி, வரும் காலங்களில், மாறுபட்ட குணச்சித்திரப் பாத்திரங்களில் பரிமளிக்க வேண்டும் என்பது என் அவாவும் கூட !

எ.அ.பாலா

said...

agreed agreed. totally agreed. prakashraj reads lots of tamil novels. and his pronounciation is very perfect unlike...prampparai pronounciation. I totally agree with the content of this post.

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோ, அணானி , முத்து, ரஜினி ரசிகன் மற்றும் எ.அ.பாலா .

ஜோ , தமிழ் சினிமாவை கற்பழிப்பதில் AVMக்கும் என்ன அலாதி இன்பமோ தெரியவில்லை. மெய்யப்பச்செட்டியார் காலத்தில் நல்ல படம் எடுத்தார்களா? பழைய படங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

பாலா,

உங்களிடமிருந்து கண்டனம் வராததற்கு நன்றி .

உங்களைப் போன்ற ரஜினி ரசிகர்களும் இதையே விரும்புகிறீர்கள் என்பது நல்ல செய்தி. ரசிகர்கள் மசாலாவைத்தால் விரும்புகிறார்கள் என ரஜினி கூறுவது பொய் என நீருபித்ததற்கு நன்றி. ;)

said...

தாஸ் நல்லா சூப்பரா கேள்வி கேட்டு இருக்கிங்க. என்ன இன்னும் தலிவரோட ஆளுங்க யாரையும் காணோம். இதை தான் வாழப்பழத்துல ஊசி ஏத்துவது அப்படின்னு சொல்றதோ?

said...

//தமிழ் சினிமா அவராலும் , அவர் தமிழ் சினிமாவாலும் வளர , தமிழ் திரைப்பட ரசிகன் என்ற முறையில் வாழ்த்துகிறேன் .
//
நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்

Anonymous said...

அய்யா வணக்கம்,

எப்படி இப்படி கோர்வையா எழுத வருதோ. படிக்கிறவங்கள் எல்லாரையும் ஆமாஞ்ச் சாமி போட வைச்சுதீங்க.
நல்லது.

நானும் ரஜினி ரசிகன் தான் ரஜினி முதல்வர் ஆவடில் எனக்கு எந்த உடன் பாடும் இல்லை.
தமிழ் மண்ணில் பிறந்து 20, 30 வருடங்கள் ஆண்ட பிறகும், "எங்களை ஆட்சியில் அமர்த்தினால் நாங்கள் அதை செய்வோம் இதை செய்வோம்" என்று
சொல்பவர்களே இருந்து விட்டு போகட்டும்.

ரஜினியின் ஒரு சில படங்கள் நல்ல - தரமான - படங்கள் தான்.

நீங்கள் எல்லோரும் தமிழ் சினிமாவை காப்பாற்ற அவதாரம் எடுத்தவர்களா ?
போய் படம் எடுக்கிறது தானே ?

மொழி, அழகிய தீயே தவிர நல்ல படங்கள் வர வில்லையா?

மற்றவர்களை குறை சொல்லாமல் ஒருத்தரை பாராட்ட தெரியாதா?

கே.பாலச்சந்தர் - ரஜினியை பாராட்டி பிழைக்க வேண்டியது இல்லை நண்பரே.

//ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்துவிடுவது தமிழ் சினிமாத்துறையில் புதியதா என்ன ?//
உங்களுக்கு என்ன சிரமம். உண்மை தங்களுக்கு தான் இருக்கிறதே.


//காவிரி போராட்டத்திற்கு ' உண்ணாவிரதம் ' என்ற பெயரில் திசைதிருப்பல் .//

சினிமாவில் வருவது போல - பறந்து பறந்து அடித்து, தண்ணீரை திறந்டு விட செய்ய வேண்டுமா?
நடுவர் மன்றம் தீர்ப்பு வந்த பிறகும் தண்ணி தரலே... ராணுவம் தான் வரணும். ரஜினி எல்லாம் பததாடு.

//யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல கங்கை-காவிரி இணைப்புக்கு 1 கோடி மற்றும் வாய்ஸ் எனத் தமிழர்க்கு நன்றிக்கடன் செலுத்துவது போல//
அப்படியென்றாள், ரஜினியே எல்லா செலாவையும் செய்து அதை செய்ய வேண்டும் நாம் தமிழ் இன தலைவர்கள்.
மூடிக்கொண்டு மூலையில் போய் உறங்குவார்களா?

விவேக் ஓபராய் - ஒரு புகழ் விரும்பி - என்று கூறிய தமிழ் நாடு நண்பரே இது.

//தமிழன், அவன் தலைவிதி, உங்களை ரசித்தான் , காசு கொடுத்தான், அவனுக்கு பொழுதுபோக்கை வழங்கினீர்கள் //
அது என்ன அவன் தலைவிதி?

விஜய T R - சுத்த தமிழன் - நடித்த படங்களையும் பார்க்க வேண்டியது தானே.

தலை வீதி எல்லாம் இல்லை - தமிழன் - அவனக்கு பிடித்தால் HUM APE ke HAIN HOUN - ஒரு வருடமும் ஓடும். பாபா 50 நாளில் தியெட்டரை விட்டும் ஓடும்.

படத்தை யாரும் நிஜம் என்று நம்ப வேண்டாம்.
பிடித்தால் பாருங்கள். இல்லையென்றால் படம் பற்றி விமர்சனம் செய்யுங்கள்.

ரஜினி ரசிகனாக - எனக்கு ரஜினி பிடிக்கும்.

இதுக்கு - அவர் எனக்கு எதுவும் செய்யவேண்டியது இல்லை.
நானும் எதுவும் செய்ய போவதில்லை ( ரஜினி சினிமா (சிவாஜி) பார்ப்பது தவிர).

நன்றி.

said...

ரஜினி மட்டுமே தமிழ்சினிமாவின் ஈனத்துவப்பிரதிநிதியாகவும் பிரகாஷ்ராஜ் மட்டுமே நல்ல படம் எடுப்பதாகவும் என்னாலும் ஒத்துக்கொள்ள முடியவில்லை :)

ஆனால், ரஜினியும் ரஜினி-ஆகத்-துடிப்பவர்களும் தமிழ் சினிமாவைக் கொந்திக்கொண்டிருப்பது வருத்தமான விஷயமே. தமிழ்ப்படங்களில் மட்டுமே இல்லையென்றாலும் நாயகவழிபாட்டை அடுத்த மதமாகவே ஆக்குவதில் இவர்கள் பங்கு மகத்தானது -- அசிங்கமானது.

ஏவிஎம் பற்றீ ஜோ சொன்னதும் நூற்றுக்கு நூறு உண்மை. எப்போது எது விற்கிறதோ அதைச் செய்வதே ஏவிஎம்மின் வேலை. (ஞாநி கட்டுரை ஒன்று மறுபடியும் புத்தகத்தில் இதைச் சுவாரஸ்யமாக அலசியிருக்கும் - குறிப்பாக தமிழகத்தில் கம்யூனிஸ உணர்வு அதிகரித்தபோது சிவப்பு மல்லி எடுத்த வியாபார நோக்கு)!

அனானி .. ரஜினியின் ஒரு சில படங்கள் தரமான படங்கள்தான் -- நானும் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் ஒப்பீட்டளவில் அதைவிட அதிக நல்ல படங்களைக் கொடுத்தவர்களுக்கும் நடித்த்வர்களுக்கும் ரசிகர்கள் இல்லையே அது ஏன்?

நல்ல பதிவு தாஸு.

Anonymous said...

Well said Doss...
Superrrrrrrr pathivu...

Yo anani ungalai ellam ethanai pathivu pottalum thirutha mudiyathu...

Tamilnadu urupadathukku karaname ungalai mathi aalunkathan..

said...

//இதுக்கு - அவர் எனக்கு எதுவும் செய்யவேண்டியது இல்லை.
நானும் எதுவும் செய்ய போவதில்லை ( ரஜினி சினிமா (சிவாஜி) பார்ப்பது தவிர). //
இப்படி இருந்துட்டா யாரு கேட்க போறாங்க. பிரச்சனையே அப்பன் ஆத்தா குருவி மாதிரி சேத்து வெச்ச காசுல கட் அவுட் வெக்கிறனுங்களை பத்தி.

said...

வருகைக்கு நன்றி ஜிரா, குழலி, சந்தோஷ், சுரேஷ் மற்றும் அணானி!

//
இதுக்கு - அவர் எனக்கு எதுவும் செய்யவேண்டியது இல்லை.
நானும் எதுவும் செய்ய போவதில்லை ( ரஜினி சினிமா (சிவாஜி) பார்ப்பது தவிர).
//
நண்பரே , இதே கருத்தைத்தான் நான் கூறுகிறேன்.. காவிரியை கொண்டு வருவது அவர் வேலையில்லை. ஓட்டு வாங்கியவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும் , பறந்து பறந்து அடிக்கவும் வேண்டாம், ஒரு செலவும் செய்யவும் வேண்டாம் ,உண்ணாவிரத்மும் இருக்கவேண்டாம் ..

//மற்றவர்களை குறை சொல்லாமல் ஒருத்தரை பாராட்ட தெரியாதா?//
ஐயோ!! புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறீர்களே!! அவரை குறை சொல்லத்தானே இவரை பாராட்டுகிறேன் .. ;) ;)


//ரஜினியின் ஒரு சில படங்கள் நல்ல - தரமான - படங்கள் தான்.//
உண்மை, அதனால் தான் அவரிடம் எதிர்பார்க்கிறேன் . விஜய்காந்த் போன்றவர்களிடம் இந்த மாதிரியெல்லாம் எதிர்பார்க்கவாவது முடியுமா என்ன?

சுரேஷ்,

ரஜினி மட்டுமே இதை செய்யவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில் உயரத்திற்கு சென்ற ரஜினிக்கு மற்றவர்களை காட்டிலும் அதிக பொறுப்பு உள்ளது மட்டுமின்றி அதற்கான திறமையும் அவரிடமிருக்கிறது என்றே நினைக்கிறேன் . பிரகாஷ்ராஜ் இங்கே கொண்டு வந்தது , ரஜினிக்கும் அவருக்குமுள்ள தொடர்புக்காகத்தான் ..

said...

//இப்படி இருந்துட்டா யாரு கேட்க போறாங்க. பிரச்சனையே அப்பன் ஆத்தா குருவி மாதிரி சேத்து வெச்ச காசுல கட் அவுட் வெக்கிறனுங்களை பத்தி. //
Athu ..

Anonymous said...

//ரஜினியின் ஒரு சில படங்கள் தரமான படங்கள்தான் -- நானும் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் ஒப்பீட்டளவில் அதைவிட அதிக நல்ல படங்களைக் கொடுத்தவர்களுக்கும் நடித்த்வர்களுக்கும் ரசிகர்கள் இல்லையே அது ஏன்? //

ஏன்னா? நல்ல படங்கள் னு நீங்க நினைக்கிறது எல்லாம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய வில்லை. அப்படித்தானே இருந்திருக்கவேண்டும்.


//இப்படி இருந்துட்டா யாரு கேட்க போறாங்க. பிரச்சனையே அப்பன் ஆத்தா குருவி மாதிரி சேத்து வெச்ச காசுல கட் அவுட் வெக்கிறனுங்களை பத்தி. //

அது அவங்க அப்பா அம்மா பிரச்சினை சார்.
நீங்க சொல்லுங்க, உங்க கண்ணுக்கு முன்னாலே ஒரு தவறு கூட நடந்தது இல்லைனு.
நீங்க ஒரு தடவை கூட ஓங்க அப்பா அம்மாவை ஏமாத்திரவில்லை னு
ரங்க் கார்ட், பால் பாக்கெட் மீதி சில்லரை .....னு ஒண்ணு கூடவா செய்யல? அப்பன் ஆத்தா குருவி மாதிரி சேத்து வெச்ச காசுல கட் அவுட் இல்ல, என்ன செஞ்சாலும் தப்பு தான். இதுல நீங்க மேல சொன்ன நல்ல படம் பார்க்கிறது, நல்ல HOTELலே போய் நாலா வைரு முத்த சாப்பிதுறது, தான தர்மம் பண்றது எல்லாம்மும் தான்.
கண்ணு முன்னாலே காசு புழங்குவதை பார்த்தால், குழந்தை கூட திருடும்.
இதுக்கு ரஜினி என்ன கடவுள் கூட ஒண்ணும் பண்ண முடியாது அந்த பையனோட அப்பா வோ இல்ல அம்மா வோ,
அந்த பையனே கூப்பிட்டு, மகனே நமக்கு இது எல்லாம் வேண்டாத வேலை னு சொல்லி புரிய வைக்கணும்.


ரஜினி ப த் தி பேசணும்னா, ரஜினிக்கு மட்டுமே செல்ல கூடிய சில விசயங்களை மட்டும் சொல்லுங்க.
கட் அவுட், இப்போ பழைய MRG, sivaji படம் வந்தாலும் வைக்கிறான், ஜெயம் ரவி க்கும் வைக்கிறான், அவங்க அப்பா ஹீரோ வா நாடிச்சா, அவருக்கும் வைப்பான்.


யாருப்பா அது? Athu.
Thalai rasigarooo?

yaarupa nammaku pottiya innoru annani?

yo annani, pathivu pottale thirundiranuma? appdina, naatu yenaiko dirundhi irrukum pa.
Pathivellam mathavengale thiruthuradhuku illapa...yechika vaikiradhuku.
adhuku appuram edhu nalladho adhey eduthkannum. ungalai madhiri...oruthar pathivu pottar nu sonna podhum.
aaha...ohhoo...suupper. idhellam edhukku.

Nandri

said...

ஒரு வியாபாரி வெற்றிகரமாக வியாபரம் செய்கிறான். அவரிடம் விடியல் தேடுவது நமது குற்றம். என்ன கொடுமையினா அவரை நாம் வியாபாரி என்று சொல்லக்கூடாது.அவரும் சொல்ல மாட்டார். ஆறாவது அறிவை பயன்படுத்தி புரிஞ்சுக்கணும்.

நடிகர் ரஜினிகாந்த் என்றைக்கோ காணாமல் போய்விட்டார். இப்போது இருப்பவர் ஒரு வெற்றிகரமான வியாபாரி.

//தமிழனுக்கு நன்றிக்கடனாக 'முதல்வராக' வரும் முயற்சியையும் நிறுத்திக்கொள்ளட்டும் . அல்லது நிறுத்திக்கொண்டதை தொடரட்டும்.//
வியாபாரம் செய்த மண்ணுக்கு இந்த நன்றியையாவது செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும்

ஒரு முன்னாள் ரசிகன்

said...

அவர் வியாபாரிதான். அவரிடம் எதிர்பார்ப்பது நம் தவறுதான் போலிருக்கிறது .

//வியாபாரம் செய்த மண்ணுக்கு இந்த நன்றியையாவது செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும்

ஒரு முன்னாள் ரசிகன//
;) ;)

அணானி அவர்களே!! கொஞ்சம் பதிவையும் வாசித்துவிட்டு பிண்ணூட்டம் இடவும் ..கண்மூடித்தனமான ரசிகர்கள் மீது எனக்கு விமர்சனம் இருந்தாலும் , இந்தப்பதிவில அதைக்கூறவில்லை .

மேலும் , தன் பெற்றோரிடம் திருடி சாப்பிடுவது தவறுதான் . அதிலாவது தன் வயிறாவது நிரம்பும். தந்தை கூட மகன் தானே சாப்பிட்டான் என்ற எண்ணம் வரும்.. வேற எந்த நாதாரியோ வயறு வளர்க்க, இவன் தன் தகப்பனின் காசிலோ, அவன் சொந்த காசிலோ கட்-அவுட் வைப்பது வயிற்றெரிச்சல்தானே!! பெருமையாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது வேறு!! இந்த போக்கை வளர்க்கும் விதமாக 'ரசிகர்களை' இந்த நாதாரிகள் நைசாக தடவுவார்கள், வார்த்தை ஜாலங்களில். ..

said...

tamil's top
COMEDY

said...

சந்தோஷ், கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்..எது காமெடி?

Anonymous said...

Heollo Das,
Cut out culture namma oorla rumba nallavey irrukkuthu….Ella herokkum than cutout vaikurannga, pala abishekam mannikavum ippa ellam beer abhishekam including kamal, vijay, ajith etc…enna matha herovukellam nooru, iranooru per pannuranunga….rajinikku aiyramper pannurannga….

First of all, cinema is not a non profitable organization where government invests the money to run the business….It is one of the big industry in India like oil industry, software industry (at least in terms of employment). To run the industry and develop the employments, the producers and investors have to make profits to kick start the next project. Otherwise, the people those who involved in (lakhs and lakhs of people) cinema will be in big trouble. We need both commercial and art or performance oriented movie. Before, we all talk ill about the producers and stars (especially rajini), we should think about their situation and their constraints (especially financial constraints). I have many things to discuss in this reagarding.

This is my humble opinion - Samuthayathai seer kolaikatha entha orru commercial padamum varaverka thakkathey.-

About Rajini – Pazatha maranthan kalladi padum.

Selva

said...

இது போன்ற பதிவுகளை பற்றிய என் பார்வையை பதிவாக போட்டு இருக்கிறேன்.. பார்க்கவும்.

http://manathinoosai.blogspot.com/2007/04/blog-post.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

மிகவும் நல்ல பதிவு.

தவறு நம் மீதுதான். தாங்கள் அரசியல்வாதிகள்தான் என்று சொல்வோரிடம் நாம் எதுவுமே எதிர்ப்பார்ப்பதில்லை. அவர்கள் நாட்டைச் சுரண்டும்போதும், ஊழல் செய்யும்போதும், நாம் எதுவுமே சொல்வதில்லை. ஆனால், ஒருவர் தன் படம் வரும்போது மட்டும் ரசிகர்களை பார்ப்பதும், பிறகு ஏதோ கண்காணாத இடத்திற்கு செல்வதும்...

தன்னுடைய சில ரசிகர்களையே அவர் 25 வருடங்களாக சந்திக்கவில்லை என்று எங்கோ படித்தேன்... அப்படிப்பட்டவர், தமிழக முதல்வர் ஆகிவிட்டால், நாம் அவரைத் தேடி கண்டுபிடிப்பதற்கே ஒரு தனி அமைச்சர் போட வேண்டும்.

said...

நல்ல பதிவு... நம்ம மக்களோட பிரச்சனையே அவனவன் வேலைய பாக்காம அடுத்தவன் காரியத்துல மூக்கை நுழைக்கிறது.

காவேரி பிரச்சனைக்கும் சினிமா நடிகர்களுக்கும் என்ன சம்மந்தம்னு தெரியல!