தமிழ் கிறிஸ்தவ திருவிழாக்கள்

கல்வெட்டு அவர்களின் ஹலோவின் மற்றும் பொங்கல் பதிவுகளை தொடர்ந்து தமிழ் கிறிஸ்தவர்களின் திருவிழாக்களை பற்றி தெரிந்த சிலவற்றை எழுதலாம் என உத்தேசித்து எழுதியுள்ளேன் .


கிறிஸ்துவர்களின் திருவிழாக்களில் கிறிஸ்துமஸ் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில், சான்டா க்ளாசும்,. கிறிஸ்துமஸ் மரமும் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன் என்பது ஒரு புரியாத புதிர்தான் .

ஆனாலும், கிறிஸ்துவ நம்பிக்கையின்படி, கிறிஸ்துமஸைக் காட்டிலும் விசேடமான நாள் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்த நாள். எல்லோருமே பிறக்கிறோம் .. ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி , உயிர்த்த ஒரே ஒருவர் இயேசுதான்..ஆதாலால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி ஈஸ்டர்தான் கிறிஸ்துமஸை விட முக்கியமான நாள்.. இது பொதுவாக ஞாயிறன்று வருவதனாலும் , பல நாடுகளில் பொது விடுமுறை அட்டவணையில் இது இடம் பெறாததாலும், பலருக்கும் ஈஸ்டர் பற்றி தெரிவதில்லை . ஆனால் ஈஸ்டர் ஞாயிருக்கு முன் வரும் வெள்ளியன்று வரும் 'புனித வெள்ளி', பொது விடுமுறை நாள் என்பதால் பலருக்கும் தெரிந்த விழா.. தெரியாதது அது இயேசு இறந்த தினம் என்பது . பல நண்பர்களிடமிருந்து அன்று எனக்கு வாழ்த்து வருவதும் உண்டு .

மற்ற பண்டிகைகள் எல்லாம் ஒரு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்து விடும் . அன்றைய தினங்களில் கண்டிப்பாக வழிபாட்டுக்கு வரவேண்டும் . அந்த நாட்களை 'கடன்(?)திருநாட்கள்' ' என்று சொல்வதுண்டு . பெறும்பாலும் கத்தோலிக்கர் அன்றைய தினம் திருப்பலியில் கலந்துக்கொள்வர் . அதில் முக்கியமான நாள் ஆகஸ்டு 15 அன்று வரும் 'மாதா விண்ணேற்பு' அடைந்த நாள். இயேசுவின் தாய் மேரி , உடலோடும் ஆன்மாவோடும், விண்ணுலகம் சென்றதாக 'கத்தோலிக்கர்'களால் மட்டும் நம்பப்படும் நாள். அன்று இந்திய சுதந்திர தினமென்பதால் . வழிபாட்டில் கன்னிமேரியும், தாய்த்திருநாடும் நினைவுகூறப்படுவர் .

நவம்பர் முதல்தேதியன்று 'புனிதர் நாள்' கொண்டாடப்படும் . இதுவும் ஒரு கடன் திருநாள்தான் . ஒரு நீண்ட வழிபாடு இருக்கும். என்னை போன்றவர்களால் சுரத்தேயின்றி கொண்டாடப்படும் நாள் அது . அமெரிக்காவில் ஹலோவியன் பண்டிகையாக மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைதான் இது என்று நினைக்கிறேன்.

மற்றும் தமிழரின் நன்றித்திருவிழாவான் பொங்கல் பண்டிகை , கத்தோலிக்க தேவாலயங்களில் , முக்கியமாக கிராமப்புறங்களில் , பொங்கல் , மஞ்சு விரட்டு என மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது . இதற்கு 'கடன் திருவிழா' என்ற tag இல்லாவிடினும் உற்சாகத்தோடும், உண்மையான மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விழாவாக 'பொங்கல்' உள்ளது.

தீபாவளி - தீபத்திருநாளாய்' - 'உலகின் ஒளி இயேசு' என பாவித்து கொண்டாடப்படுவதும் உண்டு .

தீவிர அ.தி.மு.க ஆதரவாளர்!!

இவர் ஒரு தீவிர அ.தி.மு.க ஆதரவாளர் ..எம்.ஜி.ஆர் வழியும் ஜெயலலிதா வழியும் நடப்பதுதான் இவர் கொள்கை .. இவரது பேட்டி சமீபத்தில் குமுதத்தில் வந்துள்ளது . (பலமுறை பல பத்திரிகைகளில் இவர் பேட்டி வரும் .. அதில் அவர் அடிக்கடி கூறுவதுதான் இது !!).. Over to kumudam ..

சட்டசபைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன்’ என்பது போல, இன்று வரை எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவில்லை. கேட்டால், ‘அ.தி.மு.க.வினர் அராஜகத்தை ஏவி விடுவார்கள்’ என்கிறீர்கள். அப்படியென்றால், சட்டசபை உறுப்பினருக்குண்டான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாமே?

‘‘சட்டசபை செத்துவிட்டது’’ என்று கூறி, எம்.ஜி.ஆர். சட்டமன்றத்துக்கே வராமல் இருந்தார். சட்டமன்றத்தில் நான் ‘பட்ஜெட்’ படிக்க எழுந்தபோது, அதைத் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விட்டுப் பிடுங்கச் சொல்லி, கிழித்தெறிந்து என்னையும் தாக்கி விட்டு, பிறகு சபைக்கே ஜெயலலிதா வராமல் இருந்தார். உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிடும் ஆலோசனைகளை அவர்கள் கடைப்பிடித்து அதற்கு முன்மாதிரி இருந்தால் சொல்லுங்கள், அதன்படி நடக்கிறேன்.

பட்டத்து ராசா

இளையராஜாவை இனிமேல் 'இசைஞானி' என அழைக்கவேண்டுமென்று சொன்னேன் . அந்த சிறப்புப் பட்டம் , அவருடன் ஒட்டிக்கொண்டது . ஊரில் - நாட்டில் - உலகத்தின் மூலை முடுக்குகளில் வாழ்கிற தமிழ் மக்கள் அனைவருக்கும், அவர் அன்று முதல் 'இசைஞானி'யாகவே ஆகிவிட்டார் .

அந்த எழுச்சிமிகுந்த விழாவில்தான் நான் கமலுக்குக் 'கலைஞானி' என்ற பட்டமும் சூட்டி மகிழ்ந்தேன் .

இனிமேல் இவர் கவிஞர்(!) கண்ணதாசன் என்றேன் . அன்று அவருக்குக் 'கவிஞர்' என்று நான் சூட்டிய பட்டம்தான் , அவர் மறைகின்ற வரையில் , கவிஞர் என்றாலே. அது கண்ணதாசன் தான் என்கிற அளவுக்கு நிலைத்து நின்றது .

கவிஞர் வாலிக்கு 'காவியக் கவிஞர்' என்ற பட்டத்தைச் சூட்டியதும் நான் தான் .

தம்பி வைரமுத்துவை நான் 'கவிப் பேரரசு' என்று அழைத்ததுதான் , இன்றைக்கும் என்றைக்கும் தமிழர் வாழும் பகுதிகள் எங்கும் நின்று நிலைத்துவிட்ட பெயராக ஆகியுள்ளது .


தமிழுக்கு செந்தமிழ் என்று பட்டம் சூட்டியதும் நான் தான்.

....தொடரும் ....

என்னை கரு...தி என்று அழைக்கும் அளவுக்குத் தமிழினம் தரம் தாழ்ந்துவிட்டது .

சிங்கப்பூருக்கான இந்திய பாஸ்ப்போர்ட்

இது நடந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது .. நடந்த நாளும் கொஞ்சம் வித்தியாசமான நாள் தான். 1999 வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி .9/9/99 .. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தான் மலேஷியா கம்பனி ஒன்றில் வேலை கிடைத்திருந்தது . விசா எடுக்க மலேஷிய ஹைகமிஷன் செல்ல ஆட்டோ எடுத்தேன் . பொதுவாக சென்னையில் , பஸ்ஸில் செல்ல பிடிக்காமல் , ஆட்டோ எடுக்க வசதியுமில்லாமல் , சைக்கிளில் செல்வதுதான் என் வழக்கம் . ஆனால் பாஸ்ப்போர்ட் மற்றும் சில முக்கியமான படிவங்கள் இருந்த நிலையில் ஆட்டோவில் செல்வதே பாதுகாப்பாக தோன்றியது ..

பத்திரிகைகளில் ஆட்டோ சூடு என்றால் என்ன என்று படித்திருந்ததும் , மிடில் க்ளாஸ் புத்தி என்று ஏதோ சொல்வார்களே அதுவும் சேர்ந்து , ஒரு இருபது பைசாவுக்கும் அடுத்த இருபது பைசாவிற்கும் உள்ள கால இடைவெளியை கணக்கிட்டு கொண்டே வந்ததில் , ஆட்டோவில் சூடு வைத்திருந்தது உறுதியாய் தெரிந்தது .. தேர்தல் பிரச்சார காலம் என்பதால் , ஆட்டோ சென்னையை சுற்றியதில் வேறு, மீட்டர் போன்றே B.P யும் எகிற , மலேஷிய ஹைகமிஷனை விசாரித்து சென்றுவிடலாம் என்று எண்ணி , அதன் அருகிலிருக்கும் கல்லூரி வாசலில் (கல்லூரி பெயர் நியாபகம் இல்லை) இறங்கினதும் ஏதோ தோன்ற, என்னுடைய ஃபைலை சோதனை செய்ததில் பாஸ்ப்போர்ட் அங்கே இல்லை ..

அடுத்த வந்த ஆட்டோவை பிடித்து , நான் வந்த ஆட்டோவை பிடிக்கலாம் என்றெண்ணி பார்த்தால் முன்னால் செல்வதோ மூன்று ஆட்டோக்கள் .. மூன்றும் திரும்புவது மூன்று திசைகளில் .. நான் எங்கே ஆட்டோ நம்பரை பார்த்தேன், பார்த்ததெல்லாம் ரேட்டுதான் .

புது பாஸ்ப்போர்ட்டுக்கு அலைந்தது எல்லாம் தனிக்கதை .. இடையில் சிங்கப்பூரிலும் வேலை கிடைத்து , பாஸ்ப்போர்ட் ஆஃபிசரின் நேர்முக விசாரனையின்போது , தெரிவு சிங்கப்பூர் வேலையாகவே இருந்தது .. ஒரு வருட 'validity' மற்றும் சிங்கப்பூர் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் மட்டுமே பாஸ்ப்போர்ட் தரமுடியும் என்ற கண்டிஷனோடு எனக்கு பாஸ்ப்போர்ட் வழங்கப்பட்டது . பார்க்க படம் ..

Image hosted by Photobucket.com

என்னுடைய கேள்வி இதுதான் ? கடவுச்சீட்டு 'இந்திய குடிமகன்' என்ற அடையாள அட்டை இல்லையா? , அது ஒரு பயணப்பத்திரம் மட்டும்தானா? 'சிங்கப்பூர் மட்டுமே எனக்குறிப்பிட்டுள்ளதால் இந்த கேள்வி.. தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் ..