சிங்கப்பூருக்கான இந்திய பாஸ்ப்போர்ட்

இது நடந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது .. நடந்த நாளும் கொஞ்சம் வித்தியாசமான நாள் தான். 1999 வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி .9/9/99 .. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தான் மலேஷியா கம்பனி ஒன்றில் வேலை கிடைத்திருந்தது . விசா எடுக்க மலேஷிய ஹைகமிஷன் செல்ல ஆட்டோ எடுத்தேன் . பொதுவாக சென்னையில் , பஸ்ஸில் செல்ல பிடிக்காமல் , ஆட்டோ எடுக்க வசதியுமில்லாமல் , சைக்கிளில் செல்வதுதான் என் வழக்கம் . ஆனால் பாஸ்ப்போர்ட் மற்றும் சில முக்கியமான படிவங்கள் இருந்த நிலையில் ஆட்டோவில் செல்வதே பாதுகாப்பாக தோன்றியது ..

பத்திரிகைகளில் ஆட்டோ சூடு என்றால் என்ன என்று படித்திருந்ததும் , மிடில் க்ளாஸ் புத்தி என்று ஏதோ சொல்வார்களே அதுவும் சேர்ந்து , ஒரு இருபது பைசாவுக்கும் அடுத்த இருபது பைசாவிற்கும் உள்ள கால இடைவெளியை கணக்கிட்டு கொண்டே வந்ததில் , ஆட்டோவில் சூடு வைத்திருந்தது உறுதியாய் தெரிந்தது .. தேர்தல் பிரச்சார காலம் என்பதால் , ஆட்டோ சென்னையை சுற்றியதில் வேறு, மீட்டர் போன்றே B.P யும் எகிற , மலேஷிய ஹைகமிஷனை விசாரித்து சென்றுவிடலாம் என்று எண்ணி , அதன் அருகிலிருக்கும் கல்லூரி வாசலில் (கல்லூரி பெயர் நியாபகம் இல்லை) இறங்கினதும் ஏதோ தோன்ற, என்னுடைய ஃபைலை சோதனை செய்ததில் பாஸ்ப்போர்ட் அங்கே இல்லை ..

அடுத்த வந்த ஆட்டோவை பிடித்து , நான் வந்த ஆட்டோவை பிடிக்கலாம் என்றெண்ணி பார்த்தால் முன்னால் செல்வதோ மூன்று ஆட்டோக்கள் .. மூன்றும் திரும்புவது மூன்று திசைகளில் .. நான் எங்கே ஆட்டோ நம்பரை பார்த்தேன், பார்த்ததெல்லாம் ரேட்டுதான் .

புது பாஸ்ப்போர்ட்டுக்கு அலைந்தது எல்லாம் தனிக்கதை .. இடையில் சிங்கப்பூரிலும் வேலை கிடைத்து , பாஸ்ப்போர்ட் ஆஃபிசரின் நேர்முக விசாரனையின்போது , தெரிவு சிங்கப்பூர் வேலையாகவே இருந்தது .. ஒரு வருட 'validity' மற்றும் சிங்கப்பூர் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் மட்டுமே பாஸ்ப்போர்ட் தரமுடியும் என்ற கண்டிஷனோடு எனக்கு பாஸ்ப்போர்ட் வழங்கப்பட்டது . பார்க்க படம் ..

Image hosted by Photobucket.com

என்னுடைய கேள்வி இதுதான் ? கடவுச்சீட்டு 'இந்திய குடிமகன்' என்ற அடையாள அட்டை இல்லையா? , அது ஒரு பயணப்பத்திரம் மட்டும்தானா? 'சிங்கப்பூர் மட்டுமே எனக்குறிப்பிட்டுள்ளதால் இந்த கேள்வி.. தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் ..

6 comments:

said...

// கடவுச்சீட்டு 'இந்திய குடிமகன்' என்ற அடையாள அட்டை இல்லையா? //

இல்லை.

// அது ஒரு பயணப்பத்திரம் மட்டும்தானா? //

ஆம்

பயணத்திற்கு மட்டும்தான் அது தேவை. வெளிநாடுகளில் அதை அடையாளத்திற்காக கேட்பதால் அப்படி ஒரு தோற்றம் வருகிறது என்று நினைக்கிறேன். இந்தியக்குடிமகன் கடைசி வரை பாஸ்போர்ட் இல்லாமலேயே வாழ முடியும். அடையாளம் தேவைப்படும் போது ரேஷன் கார்து, ட்ரைவிங்க் லைசன்ஸ், தாசில்தார் (அ) கிராம நிர்வாக அலுவலர் அஃபிடவிட் போன்ற எதையாவது காண்பிக்கலாம்.

***

ஆமா ரொம்ப ஆக்டிவா இருந்த லாடு, என்னாச்சிப்பா இப்போ... ரொம்பத்தான் அமைதியா இருக்கீரு...

said...

உங்கள் விளக்கத்திற்கு நன்றி முகமூடி..

ரம்யா அவர்களின் ஆலோசனையை செயல்படுத்தவேண்டியிருந்ததால் அடிக்கடி இங்கு உலாவ முடியவில்லை .. உங்கள் விசாரிப்பிற்கும் நன்றி ..

said...

தாஸ், இப்படி ஒரு கண்டிஷனோட கொடுத்தாங்க அப்படிங்கிறதை இப்பத்தான் கேள்விப்படறேன். ஆச்சர்யமா இருக்கு

//ரம்யா அவர்களின் ஆலோசனையை// எத்தனை மாதங்கள் மனைவிக்கு?? வாழ்த்துகள்!!!! :-)

said...

// ரம்யா அவர்களின் ஆலோசனையை செயல்படுத்தவேண்டி //

என்ன ஆலோசனை ??

(அந்த ஆலோசனைய நிறைய பேருக்கு தாங்க ரம்யா... புண்ணியமா போகும்.. கொசுக்கடி தாங்க முடியல)

said...

அதெல்லாம் சரி பாஸ்போர்ட்ன்னா என்னா தாஸூ? :-)))

நல்லாயிருக்கீங்களா? குழலி, இந்தியா வந்திருக்கிறாராமே? தொலைப்பேசி எண் ஏதாச்சி உங்கக்கிட்ட கொடுத்தாரா? இருந்தா அப்படியே ஒரு தனிமின்னஞ்சல் ப்ளீஸ்.

said...
This comment has been removed by a blog administrator.