இளையராஜாவை இனிமேல் 'இசைஞானி' என அழைக்கவேண்டுமென்று சொன்னேன் . அந்த சிறப்புப் பட்டம் , அவருடன் ஒட்டிக்கொண்டது . ஊரில் - நாட்டில் - உலகத்தின் மூலை முடுக்குகளில் வாழ்கிற தமிழ் மக்கள் அனைவருக்கும், அவர் அன்று முதல் 'இசைஞானி'யாகவே ஆகிவிட்டார் .
அந்த எழுச்சிமிகுந்த விழாவில்தான் நான் கமலுக்குக் 'கலைஞானி' என்ற பட்டமும் சூட்டி மகிழ்ந்தேன் .
இனிமேல் இவர் கவிஞர்(!) கண்ணதாசன் என்றேன் . அன்று அவருக்குக் 'கவிஞர்' என்று நான் சூட்டிய பட்டம்தான் , அவர் மறைகின்ற வரையில் , கவிஞர் என்றாலே. அது கண்ணதாசன் தான் என்கிற அளவுக்கு நிலைத்து நின்றது .
கவிஞர் வாலிக்கு 'காவியக் கவிஞர்' என்ற பட்டத்தைச் சூட்டியதும் நான் தான் .
தம்பி வைரமுத்துவை நான் 'கவிப் பேரரசு' என்று அழைத்ததுதான் , இன்றைக்கும் என்றைக்கும் தமிழர் வாழும் பகுதிகள் எங்கும் நின்று நிலைத்துவிட்ட பெயராக ஆகியுள்ளது .
தமிழுக்கு செந்தமிழ் என்று பட்டம் சூட்டியதும் நான் தான்.
....தொடரும் ....
என்னை கரு...தி என்று அழைக்கும் அளவுக்குத் தமிழினம் தரம் தாழ்ந்துவிட்டது .
பட்டத்து ராசா
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
but there is only one Kalaignar
//என்னை கரு...தி என்று அழைக்கும் அளவுக்குத் தமிழினம் தரம் தாழ்ந்துவிட்டது .
:-)
ஒரே ஒரு புரச்சி தலவிதான் ..ஒரே ஒரு சந்தன கடத்தல் வீரப்பன் தான் .
வாங்க ராம்கி ..
ராம்கியை பாத்தவுடன் ஞாபகம் வருது .. 'கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள்' .. அப்படி இப்படின்னு பேசுராங்களே, அதெல்லாம் அந்த ஒரே ஒரு கலைஞரைத்தானா?
உங்கள் 'கோபம்' 'திராவிடத்தலைவரின்'மீதுதான், "சிவாஜி" மேல் அல்ல என்று தெரிந்ததில் சந்தோஷமே!
வருகைக்கு நன்றி தருமி அவர்களே .. பட்டப்பெயர் வைத்து அவர் மகிழ்வதிலெல்லாம் அவர் மேல் எனக்கு ஒன்றும் கோபம் இல்லை .. இது ஒரு சிறுபிள்ளை விளையாட்டு போலதான் உள்ளது . ஆனால் இதை எல்லாம் சாதனை போல் சொல்வதும், இதற்கு நம் தமிழ் சொந்தங்கள் விசிலடித்து உற்சாகம் கொளவ்தும்தான் வேதனையளிக்கிறது .
எம் .ஜி. ஆருக்குள்ள பட்டத்தையும் , விஜய்க்குள்ள பட்டத்தையும் , வி.சி.கணேசனுக்குள்ள பட்டத்தையும் ஒரே தராசில் வைக்கும்போது , நீங்கள் அதை வி.சி.கணெசனுக்கெதிரான வாதம் என ஏன் நினைத்தீர்கள்?
மூவரில் ஒருவருக்குப் பொருத்தமான பட்டம் என்பது என் கருத்து. அதனாலேயே, நீங்கள் கொடுத்தவரையா,பெற்றவரையா, யாரை 'வாங்குகிறீர்கள்' என்ற ஐயமே காரணம்.
இதை எல்லாம் சாதனை போல் சொல்வதும், இதற்கு நம் தமிழ் சொந்தங்கள் விசிலடித்து உற்சாகம் கொளவ்தும்தான் வேதனையளிக்கிறது .// நான் இதை இதுவரை கண்டு கொண்டதே இல்லை. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் லிஸ்ட் எல்லையில்லாமல் போய்விடும்.
அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
"இவர்களையெல்லாம் நான் வைத்த பட்டப் பெயர் சொல்லி கூப்பிடும் மானங்கெட்ட தம்ழினமே, எம்.ஜி.யாரை நான் மலையாளி என்றும் ஊமை என்றும் சொன்னதை ஏன் சொல்லி கூப்பிட மாட்டேன் என்கிறீர்கள்? இப்படி ஜெயலலிதா, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மூப்பனார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நெடுஞ்செழியன், அன்பழகன் உள்ளிட்ட அனைவரையும் நான் சொல்லி கூப்பிட்ட பெயரை கூறாமல், வேறு வேறு பட்டப் பெயர்களில் அழைப்பது நியாயமா? தமிழுக்கு அடுக்குமா?!"
ஹி ..ஹி.. (உங்க காமெண்ட்டுக்கு)
மன்னிச்சுக்கோங்க உங்க காமெண்டு வந்தாலே அவரு ஞாபகம்தான் வருது.. அவருக்கு சூ.. ஸ்.. பட்டத்தை குடுத்தது யாருங்க ?.. மக்கள் எல்லாம் சேர்ந்து கொடுத்தாங்கன்னு யாஹு குழுமத்தில கைதட்டல் வாங்க சொல்ற மாதிரி சொல்லிப்புடாதீங்க !!!
Post a Comment