கல்வெட்டு அவர்களின் ஹலோவின் மற்றும் பொங்கல் பதிவுகளை தொடர்ந்து தமிழ் கிறிஸ்தவர்களின் திருவிழாக்களை பற்றி தெரிந்த சிலவற்றை எழுதலாம் என உத்தேசித்து எழுதியுள்ளேன் .
கிறிஸ்துவர்களின் திருவிழாக்களில் கிறிஸ்துமஸ் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில், சான்டா க்ளாசும்,. கிறிஸ்துமஸ் மரமும் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன் என்பது ஒரு புரியாத புதிர்தான் .
ஆனாலும், கிறிஸ்துவ நம்பிக்கையின்படி, கிறிஸ்துமஸைக் காட்டிலும் விசேடமான நாள் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்த நாள். எல்லோருமே பிறக்கிறோம் .. ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி , உயிர்த்த ஒரே ஒருவர் இயேசுதான்..ஆதாலால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி ஈஸ்டர்தான் கிறிஸ்துமஸை விட முக்கியமான நாள்.. இது பொதுவாக ஞாயிறன்று வருவதனாலும் , பல நாடுகளில் பொது விடுமுறை அட்டவணையில் இது இடம் பெறாததாலும், பலருக்கும் ஈஸ்டர் பற்றி தெரிவதில்லை . ஆனால் ஈஸ்டர் ஞாயிருக்கு முன் வரும் வெள்ளியன்று வரும் 'புனித வெள்ளி', பொது விடுமுறை நாள் என்பதால் பலருக்கும் தெரிந்த விழா.. தெரியாதது அது இயேசு இறந்த தினம் என்பது . பல நண்பர்களிடமிருந்து அன்று எனக்கு வாழ்த்து வருவதும் உண்டு .
மற்ற பண்டிகைகள் எல்லாம் ஒரு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்து விடும் . அன்றைய தினங்களில் கண்டிப்பாக வழிபாட்டுக்கு வரவேண்டும் . அந்த நாட்களை 'கடன்(?)திருநாட்கள்' ' என்று சொல்வதுண்டு . பெறும்பாலும் கத்தோலிக்கர் அன்றைய தினம் திருப்பலியில் கலந்துக்கொள்வர் . அதில் முக்கியமான நாள் ஆகஸ்டு 15 அன்று வரும் 'மாதா விண்ணேற்பு' அடைந்த நாள். இயேசுவின் தாய் மேரி , உடலோடும் ஆன்மாவோடும், விண்ணுலகம் சென்றதாக 'கத்தோலிக்கர்'களால் மட்டும் நம்பப்படும் நாள். அன்று இந்திய சுதந்திர தினமென்பதால் . வழிபாட்டில் கன்னிமேரியும், தாய்த்திருநாடும் நினைவுகூறப்படுவர் .
நவம்பர் முதல்தேதியன்று 'புனிதர் நாள்' கொண்டாடப்படும் . இதுவும் ஒரு கடன் திருநாள்தான் . ஒரு நீண்ட வழிபாடு இருக்கும். என்னை போன்றவர்களால் சுரத்தேயின்றி கொண்டாடப்படும் நாள் அது . அமெரிக்காவில் ஹலோவியன் பண்டிகையாக மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைதான் இது என்று நினைக்கிறேன்.
மற்றும் தமிழரின் நன்றித்திருவிழாவான் பொங்கல் பண்டிகை , கத்தோலிக்க தேவாலயங்களில் , முக்கியமாக கிராமப்புறங்களில் , பொங்கல் , மஞ்சு விரட்டு என மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது . இதற்கு 'கடன் திருவிழா' என்ற tag இல்லாவிடினும் உற்சாகத்தோடும், உண்மையான மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விழாவாக 'பொங்கல்' உள்ளது.
தீபாவளி - தீபத்திருநாளாய்' - 'உலகின் ஒளி இயேசு' என பாவித்து கொண்டாடப்படுவதும் உண்டு .
தமிழ் கிறிஸ்தவ திருவிழாக்கள்
Labels: பொது
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
தாஸ்,
நல்ல பதிவு.
//மற்ற பண்டிகைகள் எல்லாம் ஒரு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்து விடும் . அன்றைய தினங்களில் கண்டிப்பாக வழிபாட்டுக்கு வரவேண்டும் . அந்த நாட்களை 'கடன்(?)திருநாட்கள்' ' என்று சொல்வதுண்டு . //
எல்லா ஞாயிறும் கடன் திருநாள் தான் என்றே நினைக்கிறேன் .ஆனால் ஞாயிறு வழிபாடு தனியாக சொல்ல வேண்டியில்லாததால் மற்ற நாட்களை விசேசமாக 'கடன்' திருநாட்கள் என குறிக்கிறார்கள். அப்புறம் கடன்(?) -ன்னு நீங்க ஆச்சர்யபடுறதுக்கு அது ஏதோ வங்கிக்கடன் வழங்கும் திருவிழாவல்ல .கத்தோலிக்கர்கள் தவறாது வழிபாடுகளில் கலந்து கொள்ள கடமைப் (கடன்) பட்டிருக்கிற நாட்கள்.
தாஸ்,
நல்ல பதிவு.
கிறிஸ்துமஸில் சான்டா க்ளாசும், கிறிஸ்துமஸ் மரமும் எப்படி முக்கிய இடம் பிடிக்கிறதோ அது போல் அமெரிக்காவில் ஈஸ்டர் பண்டிகையில் முட்டையும், முயலும் பெரிய இடம் பிடிக்கிறது.
தமிழ் நாடு (அல்லது இந்தியாவில்) அவ்வாறு கொண்டாடப்ப்டுவது உண்டா?
Easter Egg Hunting என்பது இங்கு குழந்தைகளுக்கு ஈஸ்டர் நாளில் ஒரு பெரிய விளையாட்டு.
http://www.holidays.net/easter/bunny1.htm
http://www.rabbit.org/easter/
The Traditions of Easter
http://wilstar.com/holidays/easter.htm
ஜோ,
//அது ஏதோ வங்கிக்கடன் வழங்கும் திருவிழாவல்ல //
:-)))
நல்ல பதிவு நண்பரே. கிறிஸ்தவர்களின் திருவிழாக்களைப் பற்றி தெரிந்துகொண்டேன்.
ஜோ , கல்வெட்டு, குமரன் மற்றும் போலியன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி .
ஜோ..
கடன் பக்கத்தில் உள்ள கேள்விக்குறிக்கு இப்படி ஒரு அர்த்தம் வந்துவிட்டதா? ;) நானும் கடமை என்ற அர்த்தத்தில் தான் எழுதியிருந்தேன் .. ஆனால் இறைவனை வணங்க , கடமை என்றும் கடன் என்றும் நாட்கள் வேண்டுமா? பைபிலிலோ , இயேசுவோ கட்டாயம் செய்யவேண்டும் என்று சொல்லாத பழக்கத்தை , ஆதி கிறிஸ்தவர்கள் தானாகக்கூடி ஜெபித்த காரணத்தால் , கட்டாயம் செய்யவேண்டுமென்றும் , அதனை செய்யாவிடில் அது பாவம் என்றும் சொல்லும் திருச்சபையை குறிக்கும் விதமாகத்தான் ஒரு ? . கிறிஸ்தவம் என்பது அன்பின் வழிதான் .. அதனைத்தவிர்த்த மற்ற எல்லா வழிமுறைகளும் சடங்குகளும் மேலோட்டமான சிந்தனையேயன்றி அது கிறிஸ்துவம் ஆகாது என்று நினைக்கிறேன் .
கல்வெட்டு ,
ஈஸ்டர் முட்டை என்ற சொல்லே எனக்கு இரு வருடங்களுக்கு முன் தான் அறிமுகம் .. அது என்ன , ஏன் அவ்வாறு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை .
தாஸ்,
//ஆனால் இறைவனை வணங்க , கடமை என்றும் கடன் என்றும் நாட்கள் வேண்டுமா?//
இறைவனை வணங்குவதற்கு நேரம் காலம் இல்லை .ஆனால் 'திருச்சபை' என்பதே இறைவனை கூட்டமாக கூடி வணங்குவதற்கு ஏற்படுத்தபட்ட அமைப்பு .நீங்கள் தனியாக பிராத்தனை செய்வது வேறு .ஒரு ச்மூகமாக இணைந்து இறைவனை வணங்க தானே திருச்சபையே இருக்கிறது .நீங்கள் திருச்சபையோடு இணைவதும் இணையாமல் தனியாக வணங்குவதும் உங்கள் விருப்பம்..ஆனால் கூட்டமாக வரும் போது அதற்கு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாதது.
//அதனைத்தவிர்த்த மற்ற எல்லா வழிமுறைகளும் சடங்குகளும் மேலோட்டமான சிந்தனையேயன்றி அது கிறிஸ்துவம் ஆகாது என்று நினைக்கிறேன் .//
அது சரி தான்.கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவின் கருத்துக்களைத்தான் குறிக்க வேண்டும் .திருச்சபையை அல்ல.திருச்சபை கிறிஸ்துவால் நிறுவப்பட்டதும் அல்ல.
நேரம் குறிப்பது பிரச்சினையென்று நான் கூறவில்லை ஜோ.. 'கடன் ' என்பதுதான் விவாதத்துக்குறியது .
டேய்,
நீங்கள் எல்லாம் ஆதிக்காலத்தில் இந்துக்கள் தான். மறந்து போச்சா?
தாஸ்,
பொங்கல் நாள் வந்துருச்சு.
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
நான் உங்களை 'நன்நான்கு' சங்கிலிக்கு அழைத்திருக்கிறேன்.
இங்கே
விருப்பமிருந்தால் தொடரவும்.
Post a Comment