தீவிர அ.தி.மு.க ஆதரவாளர்!!

இவர் ஒரு தீவிர அ.தி.மு.க ஆதரவாளர் ..எம்.ஜி.ஆர் வழியும் ஜெயலலிதா வழியும் நடப்பதுதான் இவர் கொள்கை .. இவரது பேட்டி சமீபத்தில் குமுதத்தில் வந்துள்ளது . (பலமுறை பல பத்திரிகைகளில் இவர் பேட்டி வரும் .. அதில் அவர் அடிக்கடி கூறுவதுதான் இது !!).. Over to kumudam ..

சட்டசபைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன்’ என்பது போல, இன்று வரை எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவில்லை. கேட்டால், ‘அ.தி.மு.க.வினர் அராஜகத்தை ஏவி விடுவார்கள்’ என்கிறீர்கள். அப்படியென்றால், சட்டசபை உறுப்பினருக்குண்டான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாமே?

‘‘சட்டசபை செத்துவிட்டது’’ என்று கூறி, எம்.ஜி.ஆர். சட்டமன்றத்துக்கே வராமல் இருந்தார். சட்டமன்றத்தில் நான் ‘பட்ஜெட்’ படிக்க எழுந்தபோது, அதைத் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விட்டுப் பிடுங்கச் சொல்லி, கிழித்தெறிந்து என்னையும் தாக்கி விட்டு, பிறகு சபைக்கே ஜெயலலிதா வராமல் இருந்தார். உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிடும் ஆலோசனைகளை அவர்கள் கடைப்பிடித்து அதற்கு முன்மாதிரி இருந்தால் சொல்லுங்கள், அதன்படி நடக்கிறேன்.

3 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

நம்ம ஊரில் எல்ல அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் !!! இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை :-(

said...

ஆம் பாலா அவர்களே ..

அதே லாஜிக் படி, ஜெ. போன்று கருணாநிதி வழி நடப்பவர் யாருமிலர்