எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . நான் நினைத்திருக்கும் கடவுள் அய்யப்பனாக இருக்கலாம் .ஆனால் அக்கடவுள் மனத்தையன்றி , குறி உட்பட வேறெதும் பார்க்கமாட்டான் என்ற எண்ணம் எனக்குண்டு . தன்னை பார்க்கத்தகுதி ஆண்குறிதான் என ஒருவன் நினைத்தால் அவன் இறைவன் இல்லை , இழிபிறவி ... நான் நினைத்திருக்கும் கடவுள் இவற்றைவிட மேலானவன் .
நான் நினைத்திருக்கும் கடவுள் இயேசுவாக இருக்கலாம் . பிறந்த குழந்தை கூட , திருமுழுக்கு பெற்றால்தான் மோட்சம் என்று சொல்லும் மூடனாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .
நான் நினைத்திருக்கும் கடவுள் அல்லாவாக இருக்கலாம் . ஆனால் தீயவனைக்கூட கொன்றால்தான் மோட்சம் என்று சொல்லும் கொடியவனாக கண்டிப்பாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .
கடவுள் என்பவன் , அவனி(ளி)ன் பெயர் என்னவாக இருந்தாலும் கருணை உருவானவாகவே இருக்கமுடியுமேயன்றி , யூதர்களின் கடவுள் என்றோ , சில ஜாதியினர் மட்டுமே தொட முடியும் என்ற எண்ணம் கொண்டவனாகவோ , தெய்வ பாஷை என்று ஒன்றை கொண்டவனாகவோ , ஆண்/பெண் என்றோ , வி.ஐ.பி என்றோ , ஏன் குளித்து வருபவன்/வராதவன் என்றோ பேதம் பார்ப்பவனாகவோ எப்படி இருக்கமுடியும் . அவ்வாறு ஒரு கடவுள் இருக்கிறான் என்று சொல்லுவது ஏமாற்று வேலை அன்றி வேறென்ன? எளியோரை, ஜாதியின் பெயரால் , இனத்தின் பெயரால் , அடக்குவது தானே மதம் உருவாக்கியவர்களின் குறிக்கோள் . அது மிகவும் வெற்றிகரமான யுக்தி என மீண்டும் மீண்டும் நிருபனமாகி வருகிறதே .
உண்மையான கடவுள் எங்கும் இருக்கிறான் .. தூணிலும் இருக்கிறான் , துரும்பிலும் இருக்கிறான் .. ஆனால் அவன் வர அருவருப்படையும் ஒரு இடம் கோயிலாகத்தான் இருக்கமுடியும் . எல்லோரையும் வித்தியாசமினறி அனுமதிக்கும் ஒரு வியாபாரகூடத்திலோ, திரையரங்கிலோ இறைவன் இன்பமாக வருவானெயன்றி , சில சாதியினரை கருவரையில் அனுமதிக்கும் கோயிலுக்குள் எப்படி இறைவன் குடியிருப்பான் ? பெண்களை திருப்பீடத்தில் பூஜை செய்ய அனுமதிக்காத மாதா கோவிலுக்குள் எப்படி வருவான் ?
'பெண்கள் உள்ளே வந்தால் ஆண்களின் மனக்கட்டுப்பாடு தவறிவிடும் என்பதற்காக இப்படியொரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் பெண்களும் தைரியமாக கோயிலுக்குள் வரலாம்' ..இது நம்ம குருசாமி நம்பியார் கூறியது . அடக்கடவுளே மதவாதிகளுக்கு மட்டுமே இப்படி ஒரு லாஜிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை . ஏன் பர்தா போடுகிறார்கள் என்றாலும் , ஏன் பெண்களை திருப்பலி செய்ய அனுமதிப்பதில்லை என்றாலும் இதே மாதிரியான பதில்கள்தான் மதவாதிகளிடமிருந்து வருகிறது . ஆண் தவறு செய்வானென்றால் அவனைத்தானே கொவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது . ஆண் கண்ணைத்தானே கட்டவேண்டும். எதற்கு பெண்ணுக்குத் தணடனை ? மதங்கள் மாறினாலும், மதவாதிகளின் எண்ணங்கள் ஏன் ஒரே மாதிரியாய் உள்ளது?
Related Links :
http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_29.html
http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post.html
ச்ச்சீ .. நீயெல்லாம் ஒரு தெய்வமா..??
Labels: மத அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
ஒரு +.
இதை மறுப்பதற்கு படைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வரும்.
ஊஊஊப்ஸ்...பாராட்ட மறந்துட்டேன். நல்ல கருத்துகள்.
Excellent article.indians should come out from the age old thinking and practice which is not applicable in this generation.
LL Dasu,
nalla pathivu !
Where were you ? Missing for sometime !!!
Do visit my Blog when you have the time.
enRenRum anbudan
BALA
அனைத்து தெய்வங்களும் அந்த அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை.. இனம், மொழி, முறை ஆகியவற்றில்
எவ்வளவு வேறுபாடுகள்?
இன்று இத்தகைய வழிப்பாட்டு முறைகளில் மாற்றம் வேண்டும் என்று சொல்பவர்களிடம் சில கேள்விகள்.
1- எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஐயப்பனை தரிசிக்க விருப்பப்படுகிறேன் என்று வைத்துக் கொண்டால், உண்மையான
நம்பிக்கையுள்ளவளுக்கு, சாஸ்திர சம்பிரதாயங்களை மீற மனம் ஒத்துக் கொள்ளாது. கடவுள் நம்பிக்கையின் அடிப்படை ஆதாரம் பயம். ஐயப்பன் கோவிலுக்கு சாதாரணமாய் போய்விட முடியாது. நாற்பது நாள் விரதம் இருக்க வேண்டும். மாதாந்திர
சுழற்சி, இருபத்தி எட்டு- முப்பது நாளில் என்றால் அதில் முதல் தடை. அடுத்து கோவிலுக்கு நடந்து செல்லும் நாட்கள், கோவில் தரிசனத்தில் தடை வந்தால், சென்றவளுக்கே மனம் உறுத்தும்.
2- அடுத்து எனக்கு சாமீ, பூதம் இதில் நம்பிக்கையில்லை. வேடிக்கைப் பார்க்க கோவிலுக்குப் போகிறேன் என்றால்....
நம்பிக்கையே இல்லாதவள், அடுத்தவர் நம்பிக்கையை ஏன் குலைக்க வேண்டும்?
இதில் நம்பர்- 2, என்னுடைய நிலைப்பாடு. எத்தனை நாளுக்கு இத்தகைய மனித கண்டுப்பிடிப்புகளை வைத்து அழும்பு செய்துக் கொண்டு இருப்பார்களோ? இதில் பதினெட்டு வருடம் முன்பு போனாளாம், இப்ப கண்டுப்பிடிச்சாராம்.
திரும்ப அதே கேள்வி, ஐயப்பன் கோவிலுக்கு சாதாரணமாய் யாரும் போக முடியாது என்பது அந்த நடிகைக்கு தெரியாதா?
தொட்டு கும்பிட்ட உடனே, ஐயப்பனும் இடத்தைவிட்டு எந்திருச்சி ஒரு உதை விட்டிருக்கலாம் :-)
வாக்களிக்க முடியவில்லை, script error அடிக்கின்றது, ஆனாலும் நான் வாக்களித்துவிட்டேன்... இப்போதைக்கு ஒரே ஒரு வாக்குதான் அதுவும் +
தேவையில்லாத ஒரு பதிவு, நேர விரயம்!
அருமையான பதிவு.
// எளியோரை, ஜாதியின் பெயரால் , இனத்தின் பெயரால் , அடக்குவது தானே மதம் உருவாக்கியவர்களின் குறிக்கோள் //
உண்மை.........
//
//பதினெட்டு வருடம் முன்பு போனாளாம், இப்ப கண்டுப்பிடிச்சாராம்.
திரும்ப அதே கேள்வி, ஐயப்பன் கோவிலுக்கு சாதாரணமாய் யாரும் போக முடியாது என்பது அந்த நடிகைக்கு தெரியாதா?
தொட்டு கும்பிட்ட உடனே,
ஐயப்பனும் இடத்தைவிட்டு எந்திருச்சி ஒரு உதை விட்டிருக்கலாம் :-) //
அரசு அரசு அன்று கொல்லும்;
தெய்வம் நின்று கொல்லும்
என்று படித்திருப்பீர்கள்
என நம்புகிறேன் உஷா!
நின்று கொல்லும் என்பதை நம்பினால்,
பதினெட்டு வருஷம் பெருசல்ல!
இன்று விழுந்த உதையை நம்புங்கள்!
தாஸ்,
நல்ல வந்திருக்கிறது. இன்னும் விபரமாக இட்டத்திற்கு மிக்க நன்றி. என்னுடையெ பதிவின் சுட்டியையும் இணைத்தற்கும் சேர்த்து.
அரசியலின்றி இதில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. பெண்களே ஒத்துக் கொள்கிறார்கள், ஆன்மாவிற்கு ஆண்-பெண் பால் வித்தியாசம் இருப்பதைப் போல... மனச் சுத்தத்திற்கும் உடல் சுத்ததிற்கும் இடையே கடவுள்... குற்ற உணர்ச்சி?!
ராகவனை இப்பொழுதுதான் எனக்கு முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. மனிதருள் மாணிக்கம் என்பார்களே, அது ராகவனுக்கு ரொம்பப் பொருந்துகிறது... நன்றி ராகவன்.
நல்ல பதிவு. நல்ல கருத்துக்கள்.
நன்றி
அரசு அன்று கொல்லும்;
தெய்வம் நின்று கொல்லும்
என்று படித்திருப்பீர்கள்
என நம்புகிறேன் உஷா!
நின்று கொல்லும் என்பதை நம்பினால்,
பதினெட்டு வருஷம் பெருசல்ல!
இன்று விழுந்த உதையை நம்புங்கள்!
நல்ல பதிவு.
குப்பையில் கிடைத்த கோமேதகம்
(ச்சும்மா ஜோக்குங்க)..
நன்றாக எழுதி உள்ளீர்கள்.
எஸ்.கே தெய்வம் என்று எவைகளை எல்லாம் சொல்லுவீர்கள்? நீங்கள் வணங்கும் இந்து கடவுளை மட்டுமா அல்லது உலகில் இருக்கும் முப்பது முக்கோடி தெய்வங்களையும் சேர்த்தா?
தன்னை வணங்கிய பெண்ணை தண்டித்தால் அது தெய்வமே இல்லை. மற்றும் இங்கு எங்கு தண்டித்தது. இந்த மேட்டரால் ஜெயமாலா பழைய புகழை தூசு தட்டியிருக்கிறார். இதனால் மறந்துப் போன அவருக்கு திரைப்பட, தொலைக்காட்சி மற்றும்
அரசியலில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்திய அரசியல் வட்டாரத்தில் பணிக்கரின் ஆளுமையும் புகழும் எல்லாரும் அறிந்ததே. ஆக அவருக்கு இன்னும் இவைகளை சாதகமாகவே போகும்.
உங்கள் பதிலை எதிர்நோக்கி,
உஷா
உங்களுக்கு விருப்பப்பட்டால், விவரமாய் ஒரு பதிவு போடுங்கள். பக்தி, மதம் போன்ற விஷயத்தில் யாருடைய மனதை புண் படுத்தி
எழுதியதில்லை இன்னும் எழுத மாட்டேன் என்று நம்புகிறேன் இவை கருத்து பரிமாற்றங்கள் மட்டுமே
பின்னூட்டமிட்ட ராகவன் , குருவி , அன்பு பாலா , உஷா, சிவா, தல குழலி, வசந்த் , ஜோ, எஸ் கே, தெக்கிகாட்டான் , வெற்றி , தமிழினி எல்லோருக்கும் நன்றி .
//மாதாந்திர சுழற்சி, இருபத்தி எட்டு- முப்பது நாளில் என்றால் அதில் முதல் தடை//
மாதாந்திர சுழற்சி இயற்கையான ஒன்றுதானே. இதை தடை என்று சொன்னது யார்? அய்யப்பனா? அல்லது மதவாதிகளா? பின்னவர்கள் என்றால அதன் காரணம் பதிவிலே உள்ளது. அய்யப்பன் என்றால் தன்னை சந்திக்க தடையான ஒன்றை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கவேண்டும் . தன் சக்தியால் சுழற்சியை 40 நாட்களுக்கு ஒன்றாகவோ அதுவே இல்லாததவாகவோ மாற்றவேண்டியதுதானே.
//இன்று விழுந்த உதையை நம்புங்கள்!//
மதவாதிகளின் சிந்தனை!!!
தாஸூ, அய்யப்பனோ இல்லாட்டி அத்தினி தெய்வங்களோ, டொய் என்று எதிரில் உதயமாகி எல்லா சந்தேகங்களையும்
தீர்த்து வைத்தால் இவ்வளவு பிரச்சனையே இல்லையே :-)) இந்துமத அனைத்து சாங்கியங்களிலும் "தடை- தீட்டு" என்றுதானே சொல்கிறார்கள். அப்புறம் அர்ச்சகர் வேலைக்கு இட ஒதுக்கீடு உண்டா எங்களுக்கு ;-))))))
எனக்கு மிகவும் மனவருத்தம் தந்த ஒரு பதிவு.
கருத்தின் தாக்கம் வருத்தப்படவைக்கவில்லை. ஆனால், இந்த இழி, வசை சொற்கள் கொண்ட பதிவு! இறைவா! ஏன் படிக்க நேர்ந்தது என்று தெரியவில்லை.
மிகவும் விகாரமாகிப்போன பல எண்ணங்களை எவ்வாறு எதிர்கொள்வது. மிகவும் சிடுக்காகிப்போவதால் வார்த்தைகளும் வாதங்களும் ஒரு நிலையில் சரிசெய்ய இயலாமல் துறந்துவிட தேவையாகின்றன.
கல்லென்றால் கல். எங்கே காட்டு என்பவன் எங்கும் காணான். எங்கே என்று கேட்காதவன் எங்கும் காண்கிறான். இவர்கள் தன் மன விகாரங்களை புறத்தே பிரதிபலித்து இறையாண்மைக்கு இலக்கணம் கேட்கிறார்கள். இவர்கள் இறைவனையும் உணர்ந்திலர்; இலக்கணத்தையும் அறிந்திலர்.
நன்றி
உஷா அவர்களுக்கு,
சில உண்மைகள் நகைச்சுவைக்கு ஒப்பவில்லை. அதனால், அந்த உண்மைகள் தங்களைப் போன்றோரிடம் பரிமளிப்பதில்லை. வாயை மெல்ல அவல்தான் நன்றாக இருக்கிறது. விளக்கெண்ணெயா மெல்ல முடியும்.
பெண்ணை தெய்வமாக சித்தரித்த ஒரே மதம் இந்து மதம். தெய்வத்தை பெண்ணாக சித்தரித்திருக்கிறார்கள். பெண் இறையாண்மையில் எல்லா இடங்களிலும் சமமான சிம்மாசனத்தில் இருக்கிறாள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிறது இந்து மதம். சிவன் அம்மையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான் என்கிறது சௌந்தர்ய லஹரி. ராமனை விட சீதையே உயர்ந்தவள் என்று ராமாயணம் சொல்கிறது.
வைதீக கர்மாக்களில் மனைவி இன்றி செய்யும் கர்மாக்கள் பலனிப்பதில்லை. யாகங்களும் பிற செயல்களும் பெண்ணின்றி செய்ய இயலாது என்கிறது சாத்திரம். பெண் ஒப்புதல் வழங்கி நீர் ஊற்றாமல் எந்த தானத்தையும் வீட்டுமகன் செய்ய முடியாது.
வேதங்களின் ரத்தினமான உபநிஷத்துக்களின் ரத்தினமான ப்ருஹதாரண்ய உபநிஷதம் மைத்திரேயின் பெருமையை அவன் கணவனை விட மேலாக பேசி அவனுக்கு உபதேசிக்கிறது. இன்னும் எத்தனையோ ஆன்மீக நாச்சியார்கள் பாரதம் எங்கும் பரவிக்கிடக்கிறார்கள்.
இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். தாங்கள் தீட்டு என்று சொல்லி கேலி செய்கிறீர்கள்.
ஆகவே, அடிப்படை தத்துவத்திலாகட்டும், நடைமுறையிலாகட்டும் எங்கும் குழப்பமில்லை. எனக்கு இதில் யாதொரு வெட்கமில்லை. விகாரமில்லாத மனம் விளக்கம் பெறும்.
என் பின்னூட்டமும் தங்கள் போன்ற 'புரட்சியாளர்களுக்கு' காமிக் ஆக படும் என்று உணர்கிறேன்.
இம்மாதிரி நம்பிக்கைகளை மதவாதி என்று பிறர் சொல்கிறார்கள்.
ஆனால், என் ஆத்ம திருப்திக்கு இங்கு பதிந்தேன்.
நன்றி
ஒரு காரைத் துரத்தும் நாய் போல கிருத்துவ மதம் இந்து தலித்துக்களை துரத்தி ‘அறுவடை’ செய்கிறது (போப்பின் வார்த்தையில்). ஆனால், காரை நெருங்கி விட்ட நாய் போல, பின்னால் இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் நடுவில் விட்டு விடுகிறது. (இந்த பாரா வேறு மசாலா. பிரான்சிஸ் சொன்னது இல்லை!)
மதங்களை ஏதும் சொன்னால் தாங்கமுடியாத மென்மையான மனம் கொண்ட ஆத்திகர் ஜயராமன் தன் பதிவில் சொன்னது மேலே. இங்கே தாஸ் போன்றவர்கள் கடவுளை விமர்சிப்பதைவிட, மதங்களில் கடவுளைச் சுற்றியிருக்கும் அடியாட்களைத்தான் விமர்சிக்கிறார்கள் என்பது மட்டும் இங்கே ஜயராமன் போன்றவர்களுக்குக் கண்ணில் படாது. இங்கே பெண்களையும் பிற ஜாதியினரையும் கோவிலுக்குள் கர்ப்பக்கிரகத்துள் அனுமதிக்காமல் நாயை நசுக்கத் துரத்தும் கார் போலத் துரத்தும் தனது மதத்தைப் பற்றி மட்டும் குறைசொல்லிவிடக் கூடாது. இவர்களைப் போன்ற கிணற்றுத் தவளைகளுக்கெல்லாம் மாதா மாதம் ரிஃப்ரெஷ்ஷர் கோர்ஸ் எடுத்தாலும் உபயோகமில்லை. சபையில் ஏதாவது பெண்கள் பேசவந்தாலேகூட புரட்சிக்காரர் காமிக் என்று ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் புலம்பும் பத்தாம்பசலித்தனத்துக்கு ஒரு ஆத்திகப் போர்வை வேறு. தலையெழுத்து. கேள்வி கேட்காதவனுக்குத்தான் எல்லாம் துலங்கும் என்னும் இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்.
தாஸ் - நியாயமான கருத்துக்கள்.
ஜெயராமன் சார்,
முதலில் நான் எஸ்.கேவிற்கு முதலில் எழுதியதைப் படித்துப்பாருங்கள். மக்களின் நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கிறார்கள் என்பதே என் குற்றசாட்டு. மற்றப்படி இந்து மதத்தில் சொல்லப்படுபவை, வழக்கங்கள், சடங்குகள் அனைத்தும் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இந்துமதத்தில் மட்டுமல்ல, அனைத்து மதத்திலும் நம்பிக்கைகள் பலவகையாய் உண்டு. இதில் என்னுடையது
சிறந்தவை, அவனுடையது தவறானது என்று சொல்வது மிக தவறு. அந்த அந்த காலக்கட்டத்தில், இடம், இனம், மொழி சார்ந்து கடவுள்களும், சடங்குகளும் உருவாகின.
இவைகளை குறித்து இன்று கேள்வி கேட்பதே அபத்தம் என்பது என் எண்ணம்.
மனிதன் உருவாக்கிய கடவுள் என்ற பிம்பங்களில்/உருவங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. நம் எண்ணமும் செயலுமே நம் வாழ்க்கையை நடத்துகின்றன என்பது என் தீர்மானமான கொள்கை. வாழ்க்கை என்றால் நல்லதும் தீயதும் சேர்ந்தே
வரும். நம் வேலையை ஒழுங்காய், நேர்மையாய் செய்துக் கொண்டுப் போனாலும் கடவுள் என்ற
கான்செப்டுக்கே வாழ்க்கையில் இடமில்லை. இதைத்தான் சமஸ்கிருதத்தில் கர்ம யோகம் என்பார்கள் என்று நினைக்கிறேன்.
புனித பிம்பங்கள் இப்படித்தான் சொல்வார்கள். நீங்கள் தொடருங்கள் தாஸ் .
அன்பு உஷா,
//மனிதன் உருவாக்கிய கடவுள் என்ற பிம்பங்களில்/உருவங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. நம் எண்ணமும் செயலுமே நம் வாழ்க்கையை நடத்துகின்றன என்பது என் தீர்மானமான கொள்கை. வாழ்க்கை என்றால் நல்லதும் தீயதும் சேர்ந்தே
வரும். நம் வேலையை ஒழுங்காய், நேர்மையாய் செய்துக் கொண்டுப் போனாலும் கடவுள் என்ற
கான்செப்டுக்கே வாழ்க்கையில் இடமில்லை. //
மிக அருமையான புரிதல்கள்.
முடிந்தது.
இதைவிட எளிமையாக எப்படி நமது வாழ்வியலுக்கு விளக்கம் அளிக்க முடியுமென்று எனக்குப் பிடிபடவில்லை. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக கண் திறக்க ஆரம்பித்து இருக்கிறது. இது போன்ற விசயங்களைப் பற்றி பேசப் பேச, எந்த மனிதக் கூட்டுக்குள் எது போன்ற "thoughts=consciousness" மறைந்து இருக்கிறது என்பதனை விளங்கிக் கொள்ள.
ஐயப்பனுக்கு நன்றி!
ஹூம்... ஐயா ஐயராமன், கூறிய அனைத்து விசயங்களும் வெறும் "தியரிகளுடன்" புத்தகப் பக்கங்களில் அடைப் பட்டுப் போனது என்பதே பிரட்சினை. நடைமுறையில் நடப்பதெ நிசர்சனம்.
ஒரு "விடை," கேள்வியில் தான் தொடங்கிறது.
//பெண் இறையாண்மையில் எல்லா இடங்களிலும் சமமான சிம்மாசனத்தில் இருக்கிறாள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிறது இந்து மதம். சிவன் அம்மையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான் என்கிறது சௌந்தர்ய லஹரி. ராமனை விட சீதையே உயர்ந்தவள் என்று ராமாயணம் சொல்கிறது.//
அதே பெண் தெய்வங்களைப் பார்க்க பெண்களுக்கு எல்லா நாளும் அனுமதி இல்லை..
சரி சரி.. பழைய பதிவு...இப்போ தான் கண்ணுல பட்டுது.. பேசி என்னாகப் போகுது..
ஒரு ஆட்டோ டிரைவர் அய்யப்பசாமியாக் ஐருக்கிறார். அந்த
ஆட்டோபவில் பெண்களையே ஏற்றுவதில்லையா?
ரோட்டில் 40 நாட்கள் பெண்கள் நடப்பதில்லையா? 40 நாட்கள் அய்யப்ப
சாமிகள் பெண்கள் சமைத்த சோற்றை பிச்சை எடுத்து
சாப்பிடுவதில்லையா? இங்கேயெல்லாம் போகாத விரதம்
பெண்கள் பதினெட்டு படியில் பார்த்தால் மட்டும் விரதம்
கலைந்துவிடுமா?
இவர்களால் மனதை கட்டுப்படுத்த முடியாதென்றால் இவர்களுக்கு
எதற்கு இந்த விரதம்?
சீதாபிராட்டி நெருப்பில் புகுந்தபின்னர் இராமனும்ஆதே நெருப்பில் புகுந்து
அவ்வளவு நாள் மனைவியை பிரிந்து கர்புக்கரசனாக இருந்தேனென்று
நிரூபித்திருக்கலாமே!
இந்துமதம் பெண்களை எவ்வளவு உயர் நிலையில்
வைத்திருந்தது என்றுதாறிந்துக்கொள்ள 'வாட்டர்' படம்
பார்க்கவும்
வயித்துக்குள்ள மலத்தை வச்சிக்கிட்டுத்தான் எல்லாரும் கோவிலுக்குப் போறோம்.யாரும் சுத்தமா உறிஞ்சி எடுத்திட்டு போறதில்லை.
அப்படின்னா,பெண்களிடம் மட்டும் எப்படித்தான் தீட்டு வருமோ?
கோவில் சடங்குகள்,சம்பிரதயங்கள் மற்றும் ஆகமங்கள் அனைத்தும் ஆணாதிக்கம்,அதிகார வர்க்கம்,செல்வந்தர்கள் மற்றும் உயர் ஜாதியினரை முன்வைத்தே புனையப்பட்ட புரட்டுக்களாகும்.
அடிப்படையிலே தவறு இருக்கும்போது எதை மாற்றுவது?எவர் மாற்றுவார்?
அருமையான கருத்துக்களைச் சொன்ன அனாமதேய நண்பர்களுக்கும் , பொன்ஸ் மற்றும் தெக்கிகாட்டான் அவர்களுக்கும் நன்றி . பேசி என்னாகப் போகுது? தெரியவில்லை .. மாறுதல் வரும் .
//வயித்துக்குள்ள மலத்தை வச்சிக்கிட்டுத்தான் எல்லாரும் கோவிலுக்குப் போறோம்.யாரும் சுத்தமா உறிஞ்சி எடுத்திட்டு போறதில்லை.
//
இனி வாசலில் செருப்பு விடும் இடத்தில் இங்கு எனீமா கொடுக்கப்படும்
என்று போர்டு வைத்துவிட போகிறார்கள். :)
பாவி மனுஷா(! -தப்பா எடுத்துக்காதீங்க, சரியா?) ஏழு மாசமா எங்கே அய்யா போனீங்க? ஏதும் மோன நிலையில் இருந்து தவம் பண்ணிட்டு வந்து, விளாசுறீங்களா? நீட்டி முழக்கி (என்னை மாதிரி) சில கேசுகள் சொல்ல முயன்றதை எப்படி இவ்வளவு அழகா, ரத்தினச் சுருக்கமா சொல்றீங்க. you have come back in full form, i suppose. WELCOME BACK.
//ஆண் தவறு செய்வானென்றால் அவனைத்தானே கொவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது . ஆண் கண்ணைத்தானே கட்டவேண்டும்.//
:) --ம்ம்ம் ... இது மாதிரி நிறைய..
ஒரு வாசகரின் வாதத்திற்கு மதிப்பளித்து (!!) விகடன் ஒதுக்கியுள்ள ஒரு பக்கக்கட்டுரை கீழே ...
கோயில், கடவுள் என்பதெல்லாம் நம்பிக்கை தொடர்பான விஷயங்கள். சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு கோயில்களையும், ஆன்மிக அமைப்புகளையும் உருவாக்கிய நம் முன்னோர், ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான சட்ட திட்டங்களையும், சம்பிரதாயங்களையும் வகுத்திருக்கி-றார்கள். அவை காலங்காலமாகக் கடைப் பிடிக்கப்பட்டும் வருகின்றன. சம உரிமை, மனித உரிமை, பெண்-ணுரிமை என்றெல்லாம் கேள்விகளை எழுப்பும் முன், சில யதார்த்தங்களைப் பார்ப்போம்...
நாடெங்கும் இருக்கும் பல லட்சக்-கணக்கான கோயில்களில் எங்குமே பெண்களுக்குத் தடை இல்லை. சபரி-மலை அமைந்திருக்கும் அதே கேரள மாநிலத்திலேயே, பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, ஆண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் கோயில்களும் உண்டு. அதை எதிர்த்து ஆண்கள் யாரும் கோபித்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு ஐயப்பன் கோயிலில் மட்டும் பெண்களுக்குத் தடை என்ப தற்காக, அதைப் பற்றி விவாதம் எழுப்புவது நியாயமற்றது.
மேல்மருவத்தூரில் பெண்களை மாத விலக்கின்போதும் அனுமதிக்கிறார்கள் என்றால், அது அந்த ஆலயத்தை உருவாக்கியவர்கள் உண்டாக்கிய சம்பிரதாயம். அதில் உடன்பாடும் விருப்பமும் உள்ளவர்கள் அங்கே போய் மனமார வழிபடுகிறார்கள். அதற்காக எல்லாக் கோயில்களிலும் அப்படி அனுமதிக்க வேண்டுமா என்ன?
குறிப்பிட்ட ஒரு நிறுவனத் தில் வேலை பார்த்து, அதன் பலனாகச் சம்பளம் கிடைக்க வேண்டும் என்று விரும்பு கிறவர்கள், அந்த நிறுவனம் சொல்கிற விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுதானே பணிபுரிய வேண்டும்? கோயில்களும் அப்படித்தான்! அங்கே பலன் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் மட்டுமே அங்கு சென்றால் போதுமானது. அப்படிச் செல்கிறவர்களுக்கு மட்டும் அதன் ஆகம விதிகள் உள்ளிட்ட எல்லா நியமங்களையும் கடைப்பிடிக்கிற பக்குவம் இருந்தால் போதும். மற்றவர்கள் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை!
‘மகளிர் மட்டும்’ என்று சில நிகழ்ச்சிகளை ஆங்காங்கே நடத்திவருகிறார்கள் கலைக் குழுவினர் சிலர். ஆண்களுக்கும், பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அதில் அனுமதி இல்லை என்று சில காரணங்களுக்காக விதிமுறை வைத்திருக்கிறார்கள். பொது நிகழ்ச்சியில் எப்படி ஆண்களை நுழையக்கூடாது என்று அவமானப்படுத்தலாம் என்று கேட்டு வம்பு செய்தால் எப்படி? அது போலவேதான் சில இடங்களுக் கென சில வரையறைகள் உண்டு. அந்தந்த நியதிகளைக் கடைப் பிடிக்கத்தான் வேண்டும்.
ஜனாதிபதியே ஆனாலும், குருவாயூர் கோயிலில் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் போக வேண்டும். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவரே, பொற்கோயில் சொன்னபடி செருப்பைச் சுத்தம் செய்யும் பரிகாரத்தைச் செய்யவில் லையா?
காசிக்குப் போனால், யாரும் எந்தக் கோயிலுக்கும் போகலாம். கடவுளைத் தொட்டு அபிஷேகம் செய்து வணங்கலாம். அந்தச் சந்தோஷத்தை ஏற்றுக்கொள் பவர்கள், திருப்பதியில் இரண்டு விநாடிக்கு -மேல் நின்றால் சொல்லப்படும் ‘ஜரகண்டி’யையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
விரதம் இருந்து, அடர்ந்த காட்டு வழியில் நெடுந்தூரம் பயணித்துச் செல்லவேண்டிய ஒரு கோயில் சபரிமலைக் கோயில். காட்டுப் பகுதியில் பெண்களின் உதிரத்தின் வாடை, கொடிய விலங்குகளை ஈர்க்க வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை. சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். மாத விலக்கின்போது வெளியேறும் உதிரம் கழிவுப் பொருள்தானே? அவர்களே நினைத்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியாதே! அதற்காக, பெண்ணே அசுத்தமானவள் என்று யார் சொன்னது?
மாற்று மதத்தவரை இந்துக் கோயில்களில் அனுமதிப்பது இல்லை என்று ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. சாதி, மத, இன, மொழி வேற்றுமை பாராட்டாத ஸ்தலம் சபரிமலை. பிரபல கிறிஸ்துவப் பாடகர் இருமுடி ஏந்தி சபரிமலை வந்து வழிபட்டதும், அதற்காக அவரது மகன்களுக்கே ஞானஸ்நானம் செய்விக்க தேவாலயம் மறுத்துவிட்டதும் நாடறிந்த விஷயங் கள். அப்படியே அந்தக் குற்றச்சாட்டை ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும், ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்கென ஒவ்வொரு மார்க்கத்தை நம்பிக் கடைப்பிடிப்பவர்கள். அவர்கள் வேறு ஒரு மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாமல், வெறுமனே எட்டிப் பார்த்துவிட்டுப் போக, கோயில் என்ன எக்ஸிபிஷனா?
வேளாங்கண்ணியிலும், நாகூரிலும் யாரை வேண்டுமானாலும் அனுமதிக்கிறார்களே என்றால்... மெக்கா, மதீனாவில் நுழையக்கூட பிற மதத்தினரை அனுமதிப்பது இல்லையே, அது ஏன் என்று பதில் கேள்வி எழுப்ப முடியும். வாடிகனில் பெண் துறவியர்க்கு இடமில்லை. மற்ற மதத்தவரையும், பெண்களையும், ஏன்... தங்கள் மதத்தின் ஒரு பிரிவினரையேகூட அனுமதிக்காத சர்ச்சுகளும், மசூதிகளும் உண்டு.
நாத்திகர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகு, கோயில்களின் மீது நம்பிக்கை-கொண்டு அங்கே வழிபடச் செல்பவர்களின் நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிப்பதும், நியதிகளை மாற்றச் சொல்லிப் பரிந்துரைப்பதும் வேண்டாத வேலை
- இள.மகேந்திரன், திருச்சி &2.
நன்றி விகடன்
பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடத்தான் வந்தேன்,பின்னூட்டங்களை படித்தபின் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
விகடன் வாசகரின் வாத்திலும் அர்த்தமுள்ளது.
தருமி நன்றி ..பாவி மனுஷா என்று உரிமையோட அழைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தேன் .
மேலும் ஒரு காமெடி. தேவப்பிரச்னத்தை கேன்சல் செய்து விட்டு
மீண்டும் புதிதாக ப்ரச்னம் பார்க்க வேண்டுமாம்.
அடுத்த முறை சாமி, "இல்லை. இல்லை. என்னை யாரும்
தொடவில்லை" என்று சொல்லுமோ?
இரண்டு ப்ரச்னத்தில் எது உண்மை, எது பொய் என்று
எப்படி கண்டுபிடிப்பார்களோ ?
//ஆண் கண்ணைத்தானே கட்டவேண்டும். எதற்கு பெண்ணுக்குத் தணடனை ? //
Super
எல்லா மதங்களையும் கடிந்தும் கடந்தும் செல்ல முயற்சிப்பது போலத் தோன்றினாலும் உங்கள் கட்டுரை இன்னொரு புதிய மதத்தை நொக்கித்தான் செல்கிறது.
புத்த சமண மதங்களை ஏன் விட்டுவிட்டீர்கள்?
விகடன் வாசகரின் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி. மிகத் தெளிவாகவும் அழகாகவும் அவர் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.
உஷா,
"...ஐயப்பனும் இடத்தைவிட்டு எந்திருச்சி ஒரு உதை விட்டிருக்கலாம்"- விட்டிருந்தால் கோவிலா பாராளுமன்றமா, கடவுளா எம்.பியா என பக்தர்கள் குழம்பிப்போய் விடுவர் என்பதால் செய்யாது விட்டிருக்கலாம். என்ன செய்வது, உதைத்தாலொழிய வேறு வகையில் இவர்களுக்கு உறைக்காது என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை போலிருக்கிறது. :)
lldasu,
என் மனதுக்கு ஒவ்வாதவை என நான் எண்ணும் விஷயங்களை விலக்கும் சுதந்திரம் என் மதத்தில் எனக்கு உண்டு. சட்டையைக் கழற்றி விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என சொல்லும் சில கேரளக் கோவில்களுக்குள் நான் போகாமலே இருந்திருக்கிறேன். என் மதத்தைப்பொறுத்தவரை, அய்யப்பன் கோவிலுக்குப் போகாததாலோ, அல்லது வேறு கோவிலுக்குப்போவதாலோ எனக்கு மோஷ சாம்ராஜ்யத்தில் இடம் கிடைக்காமல் போய் விடாது. எந்தக் கோவிலுக்கும் போகாமாலே கூட ஆன்மீக விடுதலை அடைய வழி சொல்வது இந்து தர்மம். தத்வமஸி. உண்மையான கடவுளை உனக்குள்ளே தேடு எனச்சொன்னது உபநிடதம்.
எனவே இது ஆன்மீகத்தேடல் பற்றிய பிரச்னையோ, கடவுள் யார் என்பது பற்றிய சர்ச்சையோ இல்லை; மாறாக ஒரு கோவிலின் நம்பிக்கைகள் மற்றும் விதி முறைகள் சார்ந்த விஷயம்.
சபரிமலைக்குப்போவதை நான் முதன்மையாகக் கொள்ளும் வேளையில், அவற்றின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டும்தான். செருப்பை வீட்டின் வெளியே விடவேண்டும் என்ற வழக்கம் உள்ள உங்கள் வீட்டிற்கு வருகையில், "எங்கள் கோவிலுக்குள்ளேயே செருப்பணிந்துதான் போகிறோம்; உங்கள் வீட்டிற்குள் செருப்புடன் வந்தால் என்ன?" என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? அல்லது செருப்புடன் வீட்டிற்குள் வரக்கூடாது என்பது சிலரை அவமானப்படுத்துவதாகி விடுமா?
இதனை வேறு விதமாகவும் பார்க்கலாம். எத்தனையோ இந்து மதக்கோவில்களில் பெண்களுக்கு அனுமதி உண்டு. பெண்களே பூசாரிகளாகவும் உள்ளனர். ஆனால் எத்தனை சர்ச்களில் பெண்கள் திருப்பீட பூஜை செய்கிறார்கள்? எத்தனை மசூதிகளில் தமிழில் ஓதுகிறார்கள்? இன்று பொங்கி எழுந்து குரலெழுப்பும் முற்போக்கு வயிற்றுப்போக்குகள் இவற்றை எதிர்த்து போரிடுவதுதானே? அரசாணை போடுவதுதானே? இந்துக்களின் மத நம்பிக்கை அல்லாத பிற விஷயங்களில் இதுவரை இவர்கள் எழுப்பியதெல்லாம் இடி போன்ற மவுனத்தைத்தானே.
இந்துமதத்திலாவது ஒரு வழி சரிப்படவில்லையென்றால் அதற்கு மாறாக, இன்னொரு வழியைத்தேர்ந்தெடுக்கும் ஆன்மீக சுதந்திரம் உண்டு. கிறித்துவத்தில்? இஸ்லாத்தில்?
ஓரிடத்து தெய்வங்களும், அவ்விடத்து பழக்கவழக்கங்களும் அம்மண்ணின் வரலாற்றோடும் அங்குள்ள மக்களின் காலகால நம்பிக்கைகளோடும் நெருங்கிய தொடர்புடையவை. ( இதுபோலத்தான் நாட்டார் தெய்வ வழிபாட்டுமுறைகளை மாற்ற வேண்டும் என வரும் அரசு ஆணைகளையும் நான் எதிர்க்கிறேன்). நமக்கு விருப்பம் இல்லையென்றால் விலகிச்செல்லலாமே தவிர, நமது விருப்பங்களை அவற்றின்மீது திணிப்பது பன்முகத்தன்மையை மறுக்கும் காட்டுமிராண்டித்தனம். அடுத்தவர் நம்பிக்கையை வைத்து அரசியல் பகடையாடும் ஆபாசம். முற்போக்கு முகமூடியில் வரும் கருத்து வன்முறை.
Post a Comment