டாப்லெஸ் பயணம்- படங்களுடன்

சிங்கப்பூர்வாசிகளுக்கு சமீபகாலமாக இது பரிச்சயமாயிருக்கும் . முதலில் ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் கூட இப்பொது பெரியதாகக் கவனித்துப் பார்ப்பதில்லை . நானும் பலமுறை சிங்கப்பூர் முஸ்தபா செண்டர் , சிராங்கூன் சாலை மற்றும் ஒர்ச்சட் பகுதிகளில் இதை பார்ப்பதுண்டு . பொதுவாக வெள்ளைக்காரப் பயணிகளைத்தான் இதில் பார்க்கமுடியும். ஒருநாளாவது நானும் இந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என நினைத்ததுண்டு . ஆனால் என்னவென்று தெரியவில்லை , இதில் ஒருதடவை கூட பயணிக்க நான் முயற்சி செய்யவில்லை . சிங்கப்பூர் வெயிலில் , இந்த டாப்லெஸ் பஸ்ஸில் பயணம் குளிர் பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம் . ஆனால், வெயில் வீணாகாமல் , கிராமத்து வீதிகளை சுற்றித் திரிந்த எனக்கு இது ஒன்றும் புதிய அனுபவமாக இருக்காது என்றே நினைக்கிறேன் .


இந்த டாப்லெஸ் பஸ்கள், சிங்கப்பூர் சன் டெக் சிட்டியிலிருந்து புறப்பட்டு , ஒர்ச்சட் வழியாக குட்டி இந்தியா, சைனா டௌன் போன்ற கலாச்சார மையங்களைத் தாண்டி , செந்தோசா தீவுகளுக்கும் செல்கிறது . இதில் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் ஒருதடவை பயணச்சீட்டு வாங்கினால், பயணவழிகளில் எங்கு வேண்டுமானாலும் இறங்கி , எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறலாம் . வெயிலை, மழையை அனுபவிப்பவர்கள், எந்த இடையூறும் இல்லாது , கட்டிடங்களையும் , இரவு நேர முக்கியமாக தீபாவளி காலத்தில் குட்டி இந்தியாவிலும் , கிறிஸ்துமஸ் காலங்களில் ஒர்ச்சட் சாலையிலும் கலக்கும் வண்ண விளக்குக்காட்சிகளை படம் பிடிக்கவிரும்புவோருக்கும் இந்தப் பயணம் பெரும் உதவியாக இருக்கும் .இந்த பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் : ஒருநாளுக்கு - S$23 . இருநாட்களுக்கு - S$33 .படகு என MPA (Maritime Port and Authority)யாலும், பேருந்து என LTA(Land Tranport Authority)யாலும் அழைக்கப்படும் இந்த வாகணம் , வாத்து/DUCK என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது . சிங்கப்பூர் சாலைகளை சுற்றும் இந்த வாத்து வாகணம் , அந்தக்கால ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதைப்போல, கடலிலும் பயணம் செய்யும் . இது ஒருமணிநேரப் பயணம்தான் . பயணச்சீட்டு அதே சன் டெக் சிட்டியில் கிடைக்கும் . கட்டணம் : S$33 .
இது ஏப்ரல் மாதமாகினும், பொறுமையாக இந்த கடைசிப்பத்தி வரையிலும் வாசித்து வருபவர்களை ஏமாற்ற விரும்பவில்லை .. காதைக் கொடுங்கள் ..ஸ்டார் க்ரூஸ்ஸில் டான்ஸ் இருக்காம் ..

9 comments:

said...

//"டாப்லெஸ் பயணம்- படங்களுடன்"//

:)))))))))))

said...

சிங்கப்பூர்லே இன்னும் இதுலே போனதில்லை. ஆனா ஸ்காட்லாந்துலே
போனது நல்லா இருந்துச்சு.
அன்லிமிட்டட் சவாரிதான் ஒரு நாள் டிக்கெட் வாங்குனா.

said...

Periyavangale Welcome..

said...

ஒரு வருஷம் சிங்கப்பூர்ல வேல பாத்துருக்கேன்.

நல்ல ஊரு. டாப்லெஸ் மேட்டர் புதுசா இருக்கு. ஆனா, அந்த வெயிலுக்கு அதுல போறது நமக்கு தாங்காது.

போன முறை (sep 2006) சிங்கை வந்த போது ஒரு வித்யாச அனுபவம் கிட்டியது. டாக்ஸி ட்ரைவர் (லோக்கல்) $10 அல்வா கொடுத்துட்டாரு.
$16 ஆச்சு மொத்தம், ரெண்டு $10 கொடுத்தேன்.
வாங்கிட்டு, கார விட்டு எறங்கி என் கதவ தொறந்து விட்டாரு.
ஆஹா, இவ்ளோ மரியாத செய்றாங்களேன்னு புளகாங்கிதம் அடஞ்சேன்.

மிச்சம் கொடுய்யான்னு கேட்டா, $10 தான் கொடுத்திருக்கே, மீதி $6 கொடுங்கறாரு. கார விட்டு ஏறங்கற்ற்துக்குள்ள ரெண்டு பத்துல ஒரு $10 எங்கயோ சொறுகிட்டாரு.

அவரு கிட்ட சண்ட போட்டு, வேற ஏதாவது ப்ரச்சனை ஆயிடப்போவுதுன்னு பயந்து, மீ த எஸ்கேப்.

அப்பறம், சக பயணி கிட்ட புலம்பும்போது, இப்பெல்லாம் மார்க்கெட் ரொம்பா டல்லு, டாக்ஸி காரங்களுக்கு வருவாய் கம்மி ஆயிடுச்சு, சில பேர் வேற வழியில்லாம இப்படி பண்றாங்க என்றார்.

அன்றைய straight-timesல் ப்ரதமரும், அடுத்த சில வருடங்கள் கஷ்டம்தான்னு எழுதீயிருந்தாரு.

everything alright now?

:(

said...

நீங்கள் சொல்லும் விஷயம் ரொம்ப புதிராக உள்ளது $10, கீழே ஏதும் விழுந்துவிட்டதா.. தேடீனீர்களா?..பொதுவாக டாக்ஸி ஓட்டுநர்கள் நேர்மையாகத்தான் நடந்துகொள்வார்கள். ஏதாவது பிரச்சினையென்றால், அதுவும், சுற்றுலாப்பயணிகள் , கார் நிறுவனத்திற்கு புகார் கொடுக்கலாம்.

said...

சிங்கப்பூர் வரணும். லண்டன்ல டாப்லெஸ் ரொம்ப னல்லா இருக்கும். எங்க வேணா ஏறி எங்க வேணா இறங்கிக்கலாம். இந்த போட் சாமாச்சாரம் நல்லா இருக்கு.

சர்வேசன் சொன்னத ஞாபகம் வச்சுக்கிறேன்.

said...

வருகைக்கு நன்றி காட்டாறு அவர்களே!!

நீங்கள் ரொம்ப பயப்படவேண்டாம் .. பல நேரங்களில் , கார் சவாரி மிகவும் இனிமையான அனுபவமாகவே அமையும். இங்குள்ள பல காரோட்டிகள் பல உலக விஷயங்கள், பொருளாதாரம், அரசியல் , உணவு என பலதரப்பட்ட விஷயஞானமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் . நல்ல மூடில் அவரும் நீங்களும் இருந்து , பேச ஆரம்பித்தீர்களென்றால் , நன்றாக பொழுதுபோகும் . சில சமயம் 'இந்திய காரோட்டிகள் போல நாங்கள் ஊர் சுற்றமாட்டோம். நாங்கள் நேர்மையானவர்கள்' என்று , அவர்களுக்கு ஏற்பட்ட இந்திய அனுபவத்தைப் பற்றிக்கூறும்போது ம்ட்டும் கொஞ்சம் கூணிகுறுக வேண்டியிருக்கும் . பொதுவாக சிங்கப்பூரர்களுக்கு தங்கள் நேர்மையைப் பற்றிய கர்வம் உண்டு . ஆனால் , எங்கும் விதிவிலக்குகள் உண்டு . சிங்கையில் விதிவிலக்குகள் சதவீதம் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன்

said...

Dasu,

This is 3-MUCH :)))

said...

நான் 100% ரெண்டு $10 தான் கொடுத்தேன். அவரு ஒரு $10 லவுட்டிட்டாரு.
எனக்கும் இது புது அனுபவம். ஒரு வருஷம் அங்க இருந்ததுல ஒரு தடவை கூட இந்த மாதிரி நடந்ததில்லை.
என்ன கஷ்டமோ அவருக்கு. இல்ல உண்மையிலேயே அம்னீஷியாவோ என்னவோ :)