பெரியார் திரைப்படம் சில சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது .. பெரியார் படம் வருவேண்டிய ஒன்றுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 'பாரதி' படத்தை இயக்கியவரே இதனையும் இயக்குகிறார் . அப்போது கூட சில சர்ச்சைகள்.. பாரதியில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் திரிக்கப்பட்டண, அழுத்தமாக இல்லை என ஆங்காங்கே சில கண்டங்கள் எழுந்தன..
ஆனால் பெரியார் திரைப்படத்தில் , திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடந்த சில சம்பவங்கள் , முக்கியமாக முதல்வர் கருணாநிதிக்கு சாதகமாக , அமைந்துள்ளது என்றும் , திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதாவின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும்., ஏன் , பெரியாரின் முதல் மனைவி, மக்கள் ஆகியோரை இருட்டடிப்பு செய்துள்ளதாகவுமே பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன . வரலாற்று நாயகர்களின் திரைப்படத்தை எடுக்கும் சூழலில் , பார்க்கப்போகும் மக்களுக்கு போர் அடிக்காமல் . வரலாற்றுக் குறிப்புகள் எல்லாவற்றையுமே பதிவு செய்வது மிகவும் கடினமான விஷயம். இப்போதைய சூழலில் , அதிகாரத்தில் இருக்கும் பலரும் , முக்கியமாக முதல்வர் , பெரியாரோடு பழகியவர் என்பதால் , இயக்குநருக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு . மேலும் , தமிழக அரசு, இந்தப் படத்திற்கு கொடுக்கும் பணம் .... அரசாங்கம் செய்யும் எந்த உதவியும், அன்றைய முதல்வரே , தன் சட்டைப்பையிலிருந்து வழங்குவதாக அர்த்தப்படுத்தும் இந்த சூழலில் , இந்த படத்திற்கான உதவி, முதல்வர் கருணாநிதி வழங்குவதாகக் கொண்டுள்ளதால் , முதல்வரை சங்கடப்ப்டுத்தும் எந்த நிகழ்வும் பதிவு செய்யப்போவதில்லை என்பது உறுதி. அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே .
ஆனால் , அரசு கொடுத்துள்ள நிதியால் பயனடையப் போகிறார்கள் யார் என்பதே என் கேள்வி . அது ஒரு முதலீடாக கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படியென்றால் இலாபம், தமிழக அரசுக்கு பகிர்ந்துகொடுக்கப்படுமா? இல்லையெனில் , அந்தப் பணம் படத்தயாரிப்பாளருக்கு சென்றால் , பெரியார் பெயரை சொல்லி, இன்னும் ஒருவர்/சிலர் இலாபம் பார்க்கிறார்/கள் என்பதை தவிர வேறு என்ன சாதனை? அந்த படத்திற்கு பணம் கொடுத்து என்ன பயன்.. அல்லது இந்த 95 இலட்சத்தை ஈடு செய்ய , மேலும், பலரும் இத்திரைப்படத்தை பார்க்கும் வண்ணம் திரையரங்க நுழைவுச்சீட்டின் விலை குறைக்கப்பட ஆவணசெய்வார்களா ?
இன்னும் ஒரு கேள்வி .. இன்றைய சூழலில் , எந்தளவு பெரியார் பெயர் தி மு க வின் வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளது என்பது தெரியவில்லை . ஆனால் , தி மு கவின் அடித்தளமாக, அவர்கள் கூறிக்கொள்ளும் பல கொள்கைகள் , பெரியாரின் கொள்கைகளே. எனவே பெரியாரின் புகழ் பரப்ப தி.மு.கவுக்கென்று ஒரு தார்மீக கடமை உண்டு . சன் தொலைக்காட்சி , ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ , தி.மு.கவின் பிரச்சார பீரங்கியாக இருப்பதால் , இந்த கேள்வி எழுகிறது .. ராசி பலன்கள் , மாந்தீரிக நாடகத்தொடர்கள் என்று வியாபார நோக்கத்திற்காக , வேட்டியென அவர்கள் உருவகப்படுத்தும் , தங்கள் கொள்கைகளை தூக்கி எறிந்துகொள்ளட்டும். ஒரு பிராயசித்தமாக, எந்த வியாபார நோக்கமின்றி , டி ஆர் பி ரேட்டிங் கவலையின்றி , பெரியார் வாழ்க்கைத் தொடர் எடுத்து சன் தொலைக்காட்சி ஒளிபரப்பலாமே!! இன்னும் பலரின் வீடுகளுக்கு பெரியார் பற்றிய செய்தி/விழிப்புணர்வு போய் சேர்ந்திருக்குமே?
அந்த 95 இலட்சத்தை , அரசு பணத்திலிருந்து இல்லாமல். தி.மு.க தன் நன்றிக்கடனாக அதன் நிதியிலிருந்து கொடுத்திருந்தால் பொறுத்தமாய் இருந்திருக்கும் . தமிழக அரசு வழங்கிய பண உதவி , தயாரிப்பாளர்/களுக்கான உதவியாக இல்லாமல் , இந்த திரைப்படத்தை பார்க்கும் எல்லோருக்குமான உதவியாக இருந்தால் நலம் .
பி.கு : பல விஷயங்கள் என் பத்திரிகைகளில் வந்த செய்தியினடிப்படையில், என் அனுமானத்தை ஒத்த கருத்துகளே. இதில் ஏதாவது, தகவல் பிழை (உதா: திமுக தான் பண உதவி தருகிறது. அரசு இல்லை போன்ற) இருந்தால், சொல்லுங்கள். மாற்றியோ/அழித்தோவிடுகிறேன் . இப்போதெல்லாம் பத்திரிகைகளையும் முழுதாக நம்பமுடிவதில்லை .;)
பெரியார் திரைப்படம்- சில கேள்விகள்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அரசு அறிவித்த பந்த் அன்றே அவர்கள் பிச்சாரா பீரங்கி முழங்கிக் கொண்டு தான் இருந்தது. இவர்களா பெரியாரின் கொளுகைகளைப் பரப்ப இலாப நோக்கமின்றி வாழ்க்கைவரலாரை படம் எடுத்து ஒளிபரப்புவார்கள் ?
அந்த விஷயத்துக்குத் தான் scape goat தூர்தர்ஷன் இருக்குல்ல!
கேட்டால் "ரீச் அதிகம்" என்று புழுகுவார்கள்.
பெரியார் படத்தில், அரசு கஜானாப் பணத்தில் கொள்கைப் பரப்பு "முதலீடு" செய்து தவறான எடுத்துக்காட்டாக முதல்வர் அமைந்துவிட்டார்.
இனி, ராஜஸ்தான், குஜராத் மானிலங்களில் அரசு பணத்தில் ப.ஜ.க, தன் பங்கிற்கு அவர்கள் சரித்திர புருஷர்களின் வாழ்க்கைவரலாறை படமெடுத்தால் கேட்பதற்கு எந்தத் தி.மு.க கரைவேட்டிக்கும் அதிகாரம் இல்லை.
இதெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் நம் உள்ளூர் chinese citizen கள் எதுக்காக உயிருடன் இருக்கிறார்கள் என்று ஒரு முறை யோசிக்கலாம்.
அருமை நண்பரே.. இது ஒரு மாதிரியான கொடுக்கல் வாங்கல்தான்.. நான் கொடுக்கிறேன். வைத்துப் பிழைத்துக்கொள். கூடவே இனி எப்போதும் என் கூடவே இரு. நான் திருடுவதாக புகார் வந்தால் நல்லவன் என்று சர்டிபிகேட் கொடு. கொலைகாரன் என்று பழி வந்தால் சொல்பவனின் கண் குருடு என்று உதவிக்கு வா.. கொள்ளைக்காரன் என்று ஓலமிட்டால்.. காட்டுக்குள் இருக்க வேண்டிய சில இதுகள் என்று பேட்டி கொடு என்று தங்களுக்குள் பேசி வைத்து கொடுத்துள்ள கணக்கு இது? இதில் எங்கே போய் லாபம் பார்ப்பது? யாரிடம் போய் கணக்குக் கேட்கிறீர்கள்? மக்கள் பணம் நம் பணமே.. அரசு பணம் நம் குடும்பத்திற்கே என்று திராவிட இயக்கங்கள் முடிவு கட்டி முப்பதாண்டுகளாச்சு நண்பரே.. தயவு செய்து இவர்களைப் பற்றி புலம்பி உங்கள் உடல்நலனை கெடுத்துக் கொள்ளாதீர்கள். படம் வரும்.. டிக்கெட் ஈஸியாக கிடைக்கும்.. சென்று பார்த்துவிட்டு வழக்கம்போல அதற்கு ஒரு அழுகை அழுதுவிட்டு வீடு போய்ச் சேருங்கள்.. நம்மால் முடிந்தது அவ்வளவுதான்..
லபக்கு பத்த வச்சிட்டியேயா...!
:)
என்ன? யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறாய்?.....எதனைப்பற்றி கேள்வி கேட்கிறாய்?....அறிவிருகிறதா?...நீ ஒரு பாப்பான், பன்னாடை, எக்ஸட்ரா...
மன்னிக்கவும், இப்படித்தான் இங்கு உங்களின் இந்த பதிவிற்கு பின்னூட்டம் கிடைக்கும், பாருங்கள்.
இந்த ப்ளாக் உங்களுக்கு பிடிச்சிருக்கா?
http://giyengar.blogspot.com/
தாஸ்,
நல்லாத்தான் கேள்வி கேட்டு இருக்கீங்க. ஆனா கேள்வி கேட்டா தான் புடிக்காதே. அதுவும் நியாயமான கேள்வின்னா இவங்களுக்கு புடிக்கவே புடிக்காதே
எல்லாஞ்சரி, இந்த டப்பா படம் மரண அடி வாங்கிடுச்சே. அது குறித்து வலையுலகத்துலே சத்தமே காணுமே. படத்தோட இயக்குநரே நொந்து நூடுல்ஸ் ஆகி பெட்டி கொடுத்திருக்காரே படிச்சீரா? அரை டிக்கெட்டெல்லாம் வித்து தான் பெரு மூச்சு விடணுமாம்.
Post a Comment