இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற

தலைப்பிலேயே இப்போதைய ஹாட் டாபிக் எல்லாமே இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும். இருங்க... கொஞ்சம் தலைய சொறிஞ்சுக்கிறேன் .. இதுக்கு முன்னாலே பத்தாப்பு படிக்கிறப்ப , தமிழ் ஐயா வகுப்புல சொன்ன விஷயத்தை வச்சு , இந்திய சுதந்திரம்-மகாபாரதப்போருன்னு கலந்து கட்டி அடிச்சு, கவிதைப்போட்டியில் கலந்துகிட்டேன் ..என்னோட நல்ல நேரம் .. அந்த போட்டியில் , கவிதையை 'திருத்தினவர்' அதே தமிழ் ஐயா... அவர் சொன்ன விஷயம் கவிதையில பார்க்கவும் எனக்கு முதல் மார்க் போட்டுட்டார்ன்னு நினைக்கிறேன் .. அப்புறம் கவித கவிஜ எந்தப் பக்கமும் போறதே இல்லை ..திடீரென கல்லூரியில் படிக்கும்போது , நாமதான், இளவயசுலேயே, பரிசெல்லாம் வாங்கியிருக்கோமேன்னு கவிதைப்போட்டியில் கலந்துக்கப்போனேன் .. தலைப்புக்கொடுத்து, அரை மணிநேரமோ, ஒரு மணி நேரமோ.. மறந்துவிட்டது , இதுக்குள்ள கொடுத்த தலைப்புல கவிதை எழுதவேண்டும்.. ஒரு மண்ணும் எழுத முடியலை.. அத்த்தோட விட்டது ..

ஜடாயு பதிவுல , "நீங்கள் பிரச்சினைக்குறியதாய் சொல்லியுள்ளப் பகுதியில் எங்கே இந்திய தேசியத்துக்கு எதிராண கருத்து உள்ளது? எல்லா கட்சிகளும் பார்ப்பணீயத்தை கொள்கையாய் கொண்டுள்ளன் என்று சொல்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது . பார்ப்பணீயத்தை தாக்குவதால் உங்களுக்கு கோபம் வருவதைப் புரிந்துகொள்ளலாம். தேவையில்லாமல் இந்திய இறையாண்மை இழுத்து நீங்கள் வேஷம் போடுவது போல்தான் எனக்குத் தோன்றுகிறது ... 'எந்தக்கட்சியுமே சரியில்லப்பா.. எல்லோருமே கொள்ளையடிக்கிறாங்கப்பா' என்று யாராவது கூறினால், 'ஐயோ!! இவன் இந்திய தேசியத்திற்கு எதிராகப்பேசுகிறான்' என்று வீடுகட்டுவீர்கள் போலிருக்குதே . " என்று எழுதி, அப்புறம் காமெண்டு எதுவும் போடவேண்டாம் என விட்டுவிட்டேன் .. அப்புறம் இந்தக் கருத்து யாருக்கும் தெரியாமல் வீணாய் போய்விடுமே (?) என்று மிகவும் வருந்தி, சரி , குழலி ஒரு பதிவுல, இரண்டு, மூன்று பேர் பேசுவதாக (டயலாக் ஸ்டைலில்) பதிவு எழுதியிருப்பார். அதுபோல ஒரு பதிவு எழுதலாம் என்று யோசித்தால் , ஒரே ஒரு டயலாக்குக்கு மேல் யோசிக்கமுடியவில்லை .. அப்பத்தான் இந்த விபரீத ஆசை.. சரி, சொல்றதை இரண்டு , மூன்று வரியில மடிச்சு, மடிச்சு எழுதுனா, கவித, கவிஜ அப்படின்னு சொல்றாங்களே, இதையே மடிச்சு எழுதுவோம்னு , எழுதிட்ட்டேன் .. அப்படியே ஒன்னோட விட்டா எப்படி .. அப்படின்னு , தோணியதெல்லாம், மடிச்சு மடிச்சு எழுதியிருக்கேன்.. ஆச்சரியக்குறிதான் எங்கே வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு ;) ..இதுதான் கவுஜயான்னு சொல்லுங்க...இல்ல இது கவுஜ இல்லை கவுஸ அப்படின்னாலும் ஓகே.. இல்ல இந்த மாதிரியெல்லாம் இனிமே ட்ரை பண்ணாதேன்னாலும் சொல்லிடுங்க.. அப்புறம் இந்த கொடுமையை திருப்பி திருப்பி அனுபவிக்கிற கொடுமை உங்களுக்கு வந்துரும் , ஆமா சொல்லிட்டேன் .. ....பூங்கா, இந்திய தேசியம் , கிரிக்கெட் மற்றும் டாஸ்மாக் பற்றிய கவுஜைக்குப் போகலாமா?





'சோத்துக்கட்சி'
சொன்னது நான்,
தடியுடன் அவர்கள்
தேச பக்தர்களாம்!!

====================

பேச்சுரிமை
வழங்குவது இந்திய தேசியம்.
அம்மா.. தாயே..

====================




சட்டையில் ஓட்டை
நிர்வாணமானேன்
கிரிக்கெட் ரசிகன் நான் ..

====================

தேசிய விளையாட்டு,
வீதியில் மைதானம்,
வீரர்கள் நாங்கள்,
கொடும்பாவி கைகளில்.




டாஸ்மாக் பணம்
அரசு கருவூலத்தில்.
இலவசம்
வெள்ளைச் சேலை .

====================

மந்திரி மகிழ்ச்சி
கருவூலம்
கொழுத்துள்ளதாம்
மலம் தின்று ...

7 comments:

Anonymous said...

டாஸ்மாக் பணம்
அரசு கருவூலத்தில்.
இலவசம்
வெள்ளைச் சேலை

//

மிக அருமை...

said...

கவிஞர் லபக்குதாஸ்..... கவிதைகள் மிக நன்றாக உள்ளது....

//டாஸ்மாக் பணம்
அரசு கருவூலத்தில்.
இலவசம்
வெள்ளைச் சேலை .
//
====================

பேச்சுரிமை
வழங்குவது இந்திய தேசியம்.
அம்மா.. தாயே..

====================
மிகவும் கவர்ந்த வரிகள்

said...

ரவி, குழலிக்கு நன்றி!!

இதெல்லாம் கவுஜதானா?

said...

ஒரு மார்க்கமாத்தான் திரியறிங்க..:)

said...

மணி,

வருகைக்கு நன்றி.. கிரிக்'கெட்டு'ன்னா ஆஜராவீர்கள் போலிருக்குதே...;). கிரிக்கெட் வீரர்களை விட ரசிகர்கள் ரொம்ப மானத்தை கப்பலேற்றுகிறார்கள் போங்கள்.

ராகுல் கேரளாவில் ஓய்வெடுக்கும் போட்டோ பார்த்தீர்களா.. தென்னிந்தியர்கள் இந்த விஷயத்தில் பரவாயில்லை என நினைக்கிறேன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.