மதுசூதனின் சூதுவாதம்

இந்த வாரத்தில் விழுந்த இரண்டாவது விக்கெட் விழுந்தது கொஞ்சம் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது . முதலில் விழுந்த வலையுலக டெண்டுல்கர் , க்ளீன் போல்ட் என்பதால் , இந்த விக்கெட் ஒரு சாதாரண எல் பி டபிள்யூவே என்பதால் இது கவனிக்கப்படவில்லை என நினைக்கிறேன் .

இதே மாதிரியான பொய்களும் புரட்டுக்களையும் கடந்தே பல தடவை சென்றிருக்கிறேன் . பலமுறை மற்ற பதிவர்கள் தோலுரித்திருந்திருப்பார்கள் . இந்த விசயம் , கிறித்துவ மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்தவர்களுக்குதான் தெரியும் என்பதால் இதை எழுதுகிறேன் .

மதுசூதனின் போப் பற்றிய கேள்வியும் அதில் தன் முதுகை தட்டிக்கொண்டதுமான பற்றிய பதிவைப்பற்றிய எதிர்வினையே இந்தப்பதிவு . இதில் ஒரு கிறிஸ்தவர் இவரிடம் வந்து மத மாற்ற முயற்சி மேற்கொண்டாராம் . அதில் அவர் போப் பற்றிய கேள்வி கேட்டு அவரின் மூக்கை உடைத்தாராம் . மதமாற்ற முயற்சியை மேற்கொண்டார் . பஸ்ஸில் என்னை ப்ளேடு போட்டார் என்பதோடு நிறுத்தியிருந்தால் அதில் பொய் இருந்திருக்க வாய்ப்பில்லை . போப் பற்றி கேள்வி என்று சொல்லி தன்னுடைய அறியாமையையும் கற்பனாசக்தியையும் காட்டிக்கொண்டுள்ளார் .இதனை நண்பர் ஜோ அந்தப் பதிவிலேயே தோலுரித்தும்விட்டார் .

போப்பை தலைவராகக்கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தினர் , தீவிர மதப்பிடிப்பாளர்கள் கூட, பஸ்ஸில் தெரியாதவர்களிடம் மதமாற்றப்பிரச்சாரத்தை செய்வதில்லை . அவர்கள் தான் அடிக்கடி கோயிலுக்கு போவது பற்றியும் , ஜெபமாலை செய்வது பற்றியும், வேளாங்கண்ணி வருடாவருடம் செல்வது பற்றியும் நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லி 'புனிதப்பசு'வாக காண்பிப்பதோடு அவர்கள் தன் 'ஆண்மீக' அரிப்பை தீர்த்துக்கொண்டு, தன் ஜாதி செல்வாக்கைப்பற்றிய இறுமாப்புடன் இருக்கும் சராசரி இந்தியனாகவே இருக்கிறார்கள் . பஸ்ஸில், ரயிலில் இதனை செய்வது ப்ரட்டஸ்டாண்ட்டில் உள்ள எல்லாப் பிரிவினரும்கூட இல்லை , 'இயேசு அழைக்கிறார்' , 'இயேசு இருக்கிறார்' என்றெல்லாம் பெயரை வைத்துக்கொண்டுள்ள தினகரன் வகையராக்களே .

மதுசூதன் அவர்கள் கத்தோலிக்கர் தான் செய்தார் என்பதற்கு சான்றாக தனக்குத் தெரிந்த கத்தோலிக்கர் செய்தார் என்று சொல்லியிருந்தால் அதனை நம்பியிருக்கலாம் . சில கத்தோலிக்கர் இந்த மாதிரி சபைகளுக்கு மதம் மாறி(?) இந்த கொடும்பணியை செய்வதுண்டு . அதனால் அவர் மதம் மாறினது மதுசூதனுக்குத்தெரியாமல் அவர் கத்தோலிக்கர் என சொன்னதாக நம்பலாம். ஆனால் அவர் சொன்னது ஒரு கத்தோலிக்க கோவில் பெயரை . இந்த மாதிரியான செயல்களில் கத்தோலிக்க சர்ச் ஈடுபடுவதில்லை . கோவிலில் மக்கள் முன்னால் செய்யும் பிரசங்களைத்தவிர வேறு ரயிலிலோ பஸ்ஸிலோ செய்வதை கத்தோலிக்கப் பாதிரியார்கள் கௌரவக்குறைச்சலாகவே எடுத்துக்கொள்வார்கள் .

பைபிள் என்று பொதுவாகச் சொன்னாலும் , கத்தோலிக்க பைபிளில் உள்ள எல்லாமும், மற்ற பிரிவினர் பயன்படுத்தும் பைபிளில் இருப்பதில்லை (அடுத்து பொய் சொல்லும்போது, இதை கவனத்தில் கொள்ளவும்) . தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் வித்தியாசம் . கத்தோலிக்க பைபிளின் மொழிபெயர்ப்பு அழகு தமிழில், வடமொழி கலப்பு தவிர்க்கப்பட்டு இருக்கும் . மற்ற சபையினரின் பைபிள் வடமொழி கலப்போடு , கொஞ்சம் வித்தியாசமான நடையிலே இருக்கும் . உதாரணமாக 'வாழ்வு' என்ற வார்த்தை 'ஜீவன்' என்ற வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் . வாக்கிய நடையும் கொஞ்சம் அந்நியமாக இருக்கும் . சிலபேர் ஆத்து, அவாள் எனக்கூறி தன் அடையாளத்தைக் காட்ட முனைவது போல , தன் மொழி நடையை மாற்றி, தான் சபையினரை சார்ந்தவன் என அடையாளத்தை காட்ட முனையும் அரசியல்தான் இது . ஒரு கத்தோலிக்க கோவிலால் அனுப்பபட்ட ஒரு கத்தோலிக்கர் , நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்பே இல்லை . ஆனால் உங்களுக்கு , உங்கள் போப் பற்றிய அறிவை காண்பிக்க , அவரை 'கத்தோலிக்கர்' எனக்கூறுவது அவசியம் . நான் இங்கே எழுதுவது , கத்தோலிக்க மற்றும் பிறசபையினர் சண்டையாக திசை திருப்பப்படும். ஆனால் என்னுடைய ஒரே நோக்கம் மதுசூதனனின் பொய்யை அம்பலப்படுத்துவதுதான் .

இங்கே எனது அனுமானங்கள் .

மதுசூதனன் போப் இயற்பெயர் மற்றும் சில விபரங்களை படித்திருக்கிறார் . அப்போது இந்த விபரம் எல்லா கிறிஸ்தவர்களுக்கு தெரியுமா என்ற சந்தேகத்தில் , ஒரு கதையை எழுதியிருக்கிறார் .
(அல்லது)

மதுசூதனன் ரயிலில் சென்றபோது , ஒருவர் பிரச்சாரம் பண்ணியுள்ளார் . அவரிடம் போப் பற்றிய கேள்வி கேட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையை இங்கே அவிழ்த்துவிட்டுள்ளார் .
(அல்லது)

மதுசூதனன் ரயிலில் பிரச்சாரம் பண்ணியவரிடம், இந்த கேள்வியை கேட்டிருந்திருப்பார் . அவர் 'போப்பையும்' இரட்சிக்க அவரைத்தான் தேவன்(இறைவன்) தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற தொனியில் பேசி , மதுசூதனனை ஒரு வழி பண்ணியிருப்பார் . உனக்குத்தேவையா இது என வடிவேலு பாணியில் மதுசூதனன் நொந்துகொண்டிருந்திருப்பார்.

இதைத் தவிர வேறு எதுவும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை . இது மதுசூதனனின் பொய்யான கற்பனை .


பின்னூட்டத்தில் ஒரு அருமையான கருத்தைச் சொல்லியுள்ளார் , ஒரு கிறிஸ்தவன் , மற்ற சபையில் இருந்தால் கூட , போப் பற்றிய அறிவு இருந்திருக்கவேண்டாமா என்று .. ஒரு கிறிஸ்தவனுக்கு , அவன் கத்தோலிக்கனாய் இருந்தால்கூட, போப் பற்றிய அறிவு தேவையில்லாதது .
'ஜெய் ஹிந்த்' என சொல்லுபவர்கள் எல்லோருக்கும் , மன்மோகன் சிங் எங்கு பிறந்தார், அவர் எத்தனையாவது பிரதமர் , அவருடைய மனைவி பெயர் போன்ற விபரங்கள் தெரியவேண்டும் எனக் கூறுவது போல் . அதுவும் நீங்கள் கேள்வி கேட்டதாக கூறுவது ஒரு கத்தோலிக்கர் அல்லாதவரிடம் . இது ஒரு பாகிஸ்தானியிடம் 'மன்மோகன் சிங்' பற்றிய கேள்வியை கேட்டுவிட்டு , அவனுக்கு தெரிந்திருக்கவில்லையென்றால் ,கேலி பேசுவதற்கு ஒப்பான அறிவீனம் .

மதுசூதனன் பதிவின் பின்னூட்டத்தில் , Ven. Shravasti Dhammika அவர்களின் அனுபவம் நம்பும்படியாகவும் ,சுவையாகவும் , புத்திசாலித்தனமாகவும் இருந்தது . என்னிடம் யாரும் பிரச்சாரத்திற்கு வரும்போது இதே கேள்வியை கேட்க இதனை சேமித்துள்ளேன் . 1999 ஆண்டு , என்னுடைய ரூம் மேட் ஒருவன் , 2000 ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லிக்கொண்டே , H1Bக்காக அலைந்துகொண்டிருந்தான் . ;) ;)

8 comments:

said...

LLDasu,
மதுசூதனன் பதிவில் நடந்த விவாதத்தில் நான் இன்னும் விவாதத்தை தொடர்ந்திருக்க முடியும் .ஆனால் கத்தோலிக்கம் ஒரு தனி திருச்சபை ,மற்றவர்க்கும் போப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று கூட தெரியாத ஒருவரிடம் மாரடிக்க முடியாது என்று விட்டு விட்டேன் .ஆனால் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை இங்கே தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் .மிக்க நன்றி!

said...

-L-L-D-a-s-u

புத்திசாலித் தனமான வெட்டி ஆராய்ச்சி..... என்ன பிரயோஜனம்? நடந்தது நடந்தது தான் ஐயா. நான் ஏர்கென்னவே சொன்ன பதில தான் இங்கேயும்.

என்னுடைய ஒரு கிறித்தவ நண்பனிடம் கேட்டேன் இதைப் பற்றி. அவன் கூறியது: ஒருவேளை அது வேண்டுமென்றே கத்தோலிக்கர்களை வேறு விதமாய் சித்தரிக்க நடந்த முயற்சியாகவும் இருக்கலாம். இந்த மிஸ்டர் பாரத் படத்துல நம்ம கவுண்ட பெல் லஞ்சம் குடுப்பாரே அந்த மாதிரி.

said...

//என்னுடைய ஒரு கிறித்தவ நண்பனிடம் கேட்டேன் இதைப் பற்றி. அவன் கூறியது: ஒருவேளை அது வேண்டுமென்றே கத்தோலிக்கர்களை வேறு விதமாய் சித்தரிக்க நடந்த முயற்சியாகவும் இருக்கலாம். இந்த மிஸ்டர் பாரத் படத்துல நம்ம கவுண்ட பெல் லஞ்சம் குடுப்பாரே அந்த மாதிரி.//

அப்படிப் போடு அருவாளை.

said...

தொடர்ந்து விவாதம் செய்ய விருப்பம் இல்லையா இல்லை விஷயம் கிடைக்கவில்லையோ ஜோ?

said...

//ஒருவேளை அது வேண்டுமென்றே கத்தோலிக்கர்களை வேறு விதமாய் சித்தரிக்க நடந்த முயற்சியாகவும் இருக்கலாம்//
இப்படியும் இருக்கலாமோ... கத்தோலிக்கர்களை கேவலப்படுத்துவதற்கான முயற்சியோ.. சரி.. இதை யார் செய்திருக்கலாம் . ஒருவேளை சபையினராய் இருக்கலாம்.. ஆனால் அங்கே லாஜிக் இடிக்கிறது .. ஏனென்றால் , பஸ்ஸில் , ரயிலில் பிரசங்கம் செய்வதை அந்த சபையினர் மிகவும் கௌரமாக நினைக்கின்றனர் .. கத்தோலிக்கர் செய்வதில்லை என குறையும் கூறுகின்றனர் .. தாங்கள் கௌரவமாக நினைக்கும் ஒன்றை , மற்றவர்கள் கேவலப்படுத்த செய்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?
இந்த செயலை கேவலமாக நினைப்பது கத்தோலிக்கரும் , பிற மதத்தினரும்தான். கத்தோலிக்கர் தன்னைத்தானே கேவலப்படுத்துவது அவசியமில்லாதது .. மற்ற இந்துக்கள் இதை எரிச்சலோடு பார்ப்பதோடு சரி.. யாரும் வேண்டுமென்றே நாடகம் நடத்த அவசியமில்லை. ஒரு குழுவினரைத்தவிர, அது இந்துத்துவா குழுக்கள் . இது நாடகம் என்றால் , இந்த நாடகத்தை நடத்த இந்த குழுக்களைத் தவிர வேறு யாருக்கும் அவசியமில்லை . நான் இதை நாடகம் என்று நம்பவில்லை .. மதுசூதனன் சொல்லும் பொய் என்றே கூறுகிறேன்..

said...

நன்றி ஜோ..

மதுசூதனின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்களைக்கூறுகிறீர்கள். விளக்கம் மேலே.

வருகைக்கு நன்றி டோண்டு அவர்களே . "நான் இங்கே எழுதுவது , கத்தோலிக்க மற்றும் பிறசபையினர் சண்டையாக திசை திருப்பப்படும்" என்று பதிவில் எழுதினேன். அதை உண்மையாக்கும் மூயற்சி உங்களிடம் தெரிகிறது .

said...

//அதை உண்மையாக்கும் மூயற்சி உங்களிடம் தெரிகிறது .
//

:-))))

said...

//தொடர்ந்து விவாதம் செய்ய விருப்பம் இல்லையா இல்லை விஷயம் கிடைக்கவில்லையோ ஜோ?//

உம்ம கிட்ட இருக்கிற விஷய ஞானம் தான் பார்த்தேனே! மேல்மாடி காலியான உம்மிடம் இம்மட்டில் விவாதம் பண்ணி நேரத்தை விரயமாக்கி விட்டேனே என ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன் .நீர் வேற!

டோண்டு,
மது சூதனனுக்கு வக்காலத்து நீர் பண்ணுவது ஆச்சரியம் ஒன்றுமில்லை .நீங்கள்ளாம் சேர்ந்து 'கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதார் சங்கம்' ஒண்ணு ஆரம்பியுங்கள்.