சிங்கப்பூரில் தமிழ் பட்டப்படிப்பு

இன்றைய வசந்தம் சென்ட்ரலில் வந்த செய்தி தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.. சிங்கப்பூர் மேலான்மை-திறந்தவெளி பல்கலைக்கழகம் (SIM-OUC ) , மதுரை காமராஜர் பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பத்திருக்கிறது. தமிழ் வளர இந்த மாதிரியான ஆக்கபூர்வமான செயல்களில் சிந்திக்காமல் தியேட்டர்களில் தமிழை தேடும் கும்பலை என்னவென்று சொல்வது ?

எந்தவொரு நல்ல நிகழ்ச்சியிலும் நம்மையும் தொடர்பு படுத்திப்பார்ப்பதும் ஒரு சந்தோஷம்தானே .. நான் படித்த பல்கலைக்கழகமும் , நான் சில வருடங்கள் முன்பு வேலை பார்த்த SIM-OUC ம் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பித்திருப்பதும் என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது ... மல்ட்டி லின்குவல் வெப்சைட் என்பதால் பூச்சி பூச்சியான சீன எழுத்துகளோடு போராடிக்கொண்டிருந்த எனக்கு தமிழை கையாலும் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தமாகவும் உள்ளது .

5 comments:

said...

ஐயையோ தாஸு...என்னா சார் இப்படி கெட்டுப் போயிட்டீங்க?! திடீர்ன்னு படிப்பு, அது இதுன்னு எறங்கிட்டீரு?!

said...

தாஸூ, நானும் ஒலி 96.8 செய்தியில் கேட்டேன். நல்லதொரு விசயம்.எனக்கு சிங்கப்பூரில் ரொம்ப ரொம்ப பிடித்த விசயம் தமிழ் தான்.

// தமிழ் வளர இந்த மாதிரியான ஆக்கபூர்வமான செயல்களில் சிந்திக்காமல் தியேட்டர்களில் தமிழை தேடும் கும்பலை என்னவென்று சொல்வது ? //

சினிமா பார்க்குறவங்கள் மீது தாக்குதலை நிப்பாட்டுற மாதிரி இல்லை போல. உங்கள் ஆதங்கம் புரிகிறது.

said...

நன்றி விஜய், மாயவரத்தான்..

//சினிமா பார்க்குறவங்கள் மீது தாக்குதலை நிப்பாட்டுற மாதிரி இல்லை போல.//

ஐயோ...சினிமா பார்க்குறவங்களை தாக்கனும்னா நான் என்னையே தாக்கி நான் குற்றுயிரா இருந்திருக்கனும் . தமிழ்நாடு என்னமோ திரைப்பட கல்லூரி மாதிரி , சினிமா வசனகர்த்தாக்களும், நடிகர், நடிகையினருமே முதல்வராக ஆக்குகிறோமே எனும் ஆதங்கம் தான் . சினிமாக்காரரும் முத்ல்வராவதில் எனக்கு கவலையில்லை .. ஆனால் சினிமாக்காரர் மட்டுமே முதல்வராக முடியும் என்பதை எப்பொது மாற்ற போகிறோம்

said...

பதிவுக்கு நன்றிங்க தாஸு...

சிங்கப்பூரில் தமிழ் பட்டபடிப்பு
அல்ல
பட்டப்படிப்பு.

பட்டயம் என்றால் Diploma
பட்டம் என்றால்தான் Degree
திரு. தர்மன் சண்முகரத்தினம் அறிவித்தது பட்டம் என்று நினைக்கிறேன்.

said...

தவறுக்கு வருந்துகிறேன் .. செய்தியை பார்த்தவுடன் ஆர்வ(கோளாறு)த்தில் எழுதியதால் வந்த தவறு . சுட்டிக்காட்டிய அன்புக்கு நன்றி ..