சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்குடிதாங்கி பாராட்டு!

இந்த தலைப்புதான் இந்த செய்தியை படிக்கத்தூண்டியது ..அடுத்த தேர்தலுக்குள் பல வாய்ப்புகளையும் எடை போடும் கட்டத்திற்குள் ஐயா உள்ளதால் , ரஜினியையும் கட்டிப்பிடிக்க ஆயத்தமாகிறார் என்ற எண்ணத்தோடு படிக்கும்போது , ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வாசிக்க நேர்ந்தது .( சுகாதாரத்துறை அமைச்சரை பாராட்டியது அதிர்ச்சி இல்லை!!) .

நுழைவுத்தேர்வை தடை செய்ததால்( இது சரியா என்பது தனி), ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசையை குலுக்கல் முறையில் தெரிவு செய்ய போகிறார்களாம் .. இந்த யோசனையை சொன்ன அதிகாரியை 'தமிழின(?) துரோகி' என ராமதாஸ் சொன்னாலும், 'முட்டாள் அதிகாரி' என்பதே சரி என நினைக்கிறேன் ..

மருத்துவ , பொறியர்துறை மேற்படிப்பு காரணீயாக தமிழ் இல்லாத காரணத்தால் , தமிழை கவனமெடுத்து படிக்கும் உந்துதல் தமிழை முதற்பாடமாக படிக்கும் மாணவர்களுக்கே இருப்பதில்லை ..பலர் தமிழை ஒரு பாடமாகவே கூட தேர்வு செய்வதில்லை . தமிழையும் காரணீ பாடமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில், குலுக்கல் முறையை தேர்வு செய்த தமிழக அரசை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக கோரிக்கை விடுத்த முனைவர் ராமதாஸை இந்த விடயத்தில் பாராட்டுகிறேன்.

7 comments:

said...

இது ஓ.ப த்தனமான பதிவு இல்லை என்பதையும் disclaiamer -ஆக பதிவு செய்கிறேன்

said...

//Atleast they can add 10 marks with +2 total So it helps students to study tamil with more interest.//

அது சரி.. 'தமிழ் பற்று'... தூய தமிழிலே பின்னோட்டம்!!!!

Anonymous said...

தமிழ்மேன்,


உங்களின் தமிழ்பற்றை மெச்சுகிறேன். தமிழை வாழவைக்க இதுபோன்ற சில வழிமுறைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக ஆங்கிலம் படிப்பவர்களை வீட்டுக்கு அன்னுப்ப மாட்டார்கள். கவலை வேண்டாம். சில விசயங்களில் இராமதாசை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

சில பார்ப்பனர்கள் தமிழ் பேசிக்கொண்டே சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் வாழ்த்துவார்கள். தமிழில் பதியத் தெரியவில்லை என்று சொன்ன தாங்கள் அவர்களைவிட எவ்வளவோ மேல்!

said...

ஆகா ஆளைவைத்து ஆதரிக்காமல் பிரச்சினைகளை வைத்து ஆதரிக்கும் அண்ணன் தாஸீ வாழ்க... முதலில் படித்தவுடன் ஓ.பி.எஸ் பதிவுபோல நக்கல் செய்துள்ளீரோ என எண்ணினேன், பிறகு உங்கள் disclaiamer படித்துத்தான் தெளிந்தேன்

said...

தமிழ்மேன்,
நீங்கள் சொல்வது சரி ..


நீங்கள் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm உபயோகிக்கலாம் ..

அப்படியே http://www.thamizmanam.com பதிந்துகொண்டால் நல்லது ..

//அது சரி.. 'தமிழ் பற்று'... தூய தமிழிலே பின்னோட்டம்!!!!//

மாயவரத்தான் ,
ராமதாசு கொள்கையை நீங்கள் கடைபிடிப்பது மாதிரி இருக்கே..

//சில பார்ப்பனர்கள் தமிழ் பேசிக்கொண்டே சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் வாழ்த்துவார்கள்//

ஆரம்பச்சிட்டாங்கப்பா.. ஆரம்பச்சிட்டாங்க..

இப்பவாவது புரிஞ்சா சரி குழலி...

பின்னூட்டமிட்ட சம்மி அண்ணாச்சி (முத முதல்ல வந்திருக்கீங்க..) ,தமிழ்மேன் , இலங்காபுரன் ,மாயவரத்தான் குழலி எல்லோர்க்கும் நன்றி..என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்.

said...

ஹி ஹி முனைவர் இல்லை.. மருத்துவர் ராமதாஸு ..

பதிவை திருத்தினால், பொன்னான கருத்துகளும் , வாக்குகளும் றெசெட் ஆகிவிடுமோ என்று அஞ்சியதால் இந்த பின்னூட்டம் .

said...

றெசெட் -Reset