தங்கர் வாங்கலையோ.. தங்கர் ..

என்னுள் முன்னரே எழுந்த கேள்வியை திருமாவும் இந்த வார ஆனந்த விகடனில் கேட்டுள்ளார் ..

1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?

2) ஓட விட்டு, டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?

3) ஏணியில் ஏற்றிவிட்டு, தோதான ஆங்கிலில் , கேமிராவை கொண்டு சென்ற இயக்குனரை , யாரது, ம்..ம் ஆங்.. விந்தியா, கண்டித்ததுண்டா?

ஓ...பணம் வாங்கியதால் இது எல்லாம் பிரச்சினையில்லை.. தங்கரும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!

டிஸ்க்ளைமர் ...

டிஸ்க்ளைமர் ...

அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை ..
ஆ) தங்கர் நடிகைகளை திட்டினதில் எனக்கு ஒரு வருத்தமுமில்லை .
இ) தஙகர் மன்னிப்பு கேட்டதும் என்னை பாதிக்கவுமில்லை ..
ஈ) பாலியல் தொழிலாளிகளின் மேல் மரியாதை வைத்திருப்போர் , நடிகைகளை அவர் பாலியல் தொழிலாளிகளோடு ஒப்பிட்டதை கண்டித்து கொதித்து எழுந்ததை கண்டு சிரிப்புதான் வந்தது .. அவர்கள் தங்கர் பாலியல் தொழிலாளிகளிடமல்லவா மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கவேண்டும் .


எனக்குள்ள ஒரே வருத்தம்.. இந்த கேவலமான ஆட்களையல்லவா நம் தமிழர், தலைவர் என்றும், முதல்வர் என்றும் தெய்வம் என்று கூறி களிக்கின்றனர் ..

15 comments:

said...

"அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை .."

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா !!!!! அற்புத டிஸ்க்ளைமர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

என்ன ஓர் அருமையான, சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் !!! பாராட்டுக்கள், தாஸ்!

Anonymous said...

இதப்படிச்சதும் என்னுள் தோன்றியதை எழுதுறேன்..

//1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?//

தப்புதான் தாஸு... தப்புதான்... படம் வந்தபோது யார்னா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பின்னது நடந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது(வாய்ப்புதான்... நடந்திருக்கும் என்று சொல்லவில்லை) அப்படி கடும் எதிர்ப்பு வந்ததா? எனக்கு தெரியவில்லை.. pardon me for lack of such important knowledge ;)

//2) ஓட விட்டு, டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?//
"கோலங்கள் என்ற படத்தில் அந்த வேடத்தில் நடித்தேன் ... அதனால் தங்கர் சொன்னது எனக்கு 100% சரி" அப்பிடின்னு அமுங்கி போயிருக்கனுமோ???

//3) ஏணியில் ஏற்றிவிட்டு, தோதான ஆங்கிலில் , கேமிராவை கொண்டு சென்ற இயக்குனரை , யாரது, ம்..ம் ஆங்.. விந்தியா, கண்டித்ததுண்டா?//
நாளைக்கே தங்கர் ஒரு படம் எடுத்து அதில் அந்த வேடத்தை அவர் சொன்னபடி திட்டுறமாதிரி காட்சி வச்சா இவங்க எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க!!!

//ஓ...பணம் வாங்கியதால் இது எல்லாம் பிரச்சினையில்லை.. தங்கரும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!//

ஒரு சின்ன திருத்தம்... பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு "கேமரா"வின் முன் 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!... ஆனால் உத்தரவாதம் இல்லை... பிரச்சினை வேறு பக்கமிருந்து வரலாம்!

டிஸ்க்ளைமர் ...

டிஸ்க்ளைமர் ...

அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை ..
ஆ) எனக்கு நடிகர்/நடிகைகளை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் அவர்கள் ஜாதியில்லை .. உறவுமில்லை.

இ) நான் தாஸை எதிர்க்க/ஆதரிக்க அவசியமில்லை. நான் அவரை நேரில் பார்த்ததுமில்லை, பேசியதுமில்லை... அவ்வ்ளொ ஏன் ஈமயில் தொடர்பு கூட இல்லை(ஆனா melody song கலக்சன் நிறய்ய வச்சிருக்கார்னு மட்டும் தெரியும்..சரியா தாஸு?)

ஈ)தங்கர் பாலியல் தொழிலாளிகளிடமல்லவா மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கவேண்டும் .ஆமாம் ... அவர்களை நடிகைகளோடு ஒப்பிட்டதற்கு மற்றும் அவர்களது தொழிலை "திட்டுவதற்கு" பயன்படுத்தியதற்கு.நடிகைகளும் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


எனக்குள்ள 2 வருத்தம்..
1. இந்த கேவலமான ஆட்களையல்லவா நம் தமிழர், தலைவர் என்றும், முதல்வர் என்றும் தெய்வம் என்று கூறி களிக்கின்றனர் ..
2. கண்டுகளிக்கிறதோட நிறுத்திக்கிறார்கள் நம்தமிழர். இருக்கின்ற ஒரு சில நல்ல நல்ல தலைவர்கள்தான் அதுக்குமேல இதுக்கு முக்கியத்துவம் குடுக்கிறாங்கள் :(

:-))))))))

Anonymous said...

இன்றிலிருந்து பாப்பாரப்பட்டி தலித்துகள் வீட்டில் பாலும் தெளிதேனும்தான்.

said...

ஆமாம் டோண்டு ஐயா... யாருக்கு ஜாதி முத்திரை குத்துவது என ஒரு கூட்டம் அலைந்து கொண்டுள்ளது .. தங்கரைப்பற்றி எழுதியதால், குழலிக்கு கிடைத்த முத்திரையை படித்தீர்கள்தானே.. உங்கள் மேல் விழுந்த முத்திரை பார்த்தும் கொஞ்சம்பயந்து டிஸ்கலைமரோடு எழுத வேண்டியுள்ளது ..
;) ;)

பாலா..உங்கள் பாராட்டுக்கு!!! நன்றி!!!!!!! ;) ;)

அனானிமஸ் அவர்களே...

பாலியல் உறுப்புகள் மூலம் (உடம்பை காட்டி) சம்பாரிக்கும் பெண்களும், ஆண்களும் பாலியல் தொழிலாளிகள்தான். (அதனால் அவர்களை கேவலமாக சொல்லவில்லை..)..

(அதுசரி, என்னிடம் உள்ள மெலடி பாடல்கள் உங்களுக்கு எப்படித் தெரியும்?)

மற்றோரு அனானிமஸ்,

பதிவுகள் மூலம் பிரச்சனை தீருமென்று எதிர்பார்த்தீர்களென்றால், இந்நேரம் பாப்பாரப்பட்டி தலித்துகள் பிரச்சனை மட்டுமல்ல காவிரி பிரச்சினை. ஈழப்பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை , ஈராக் பிரச்சினை எல்லாம் தீர்ந்திருக்கும் .

said...

யாராவது வாயு விடும்போது, பாவம்.. வாயுத்தொந்தரவு போலிருக்கிறது என்று பரிதாபப்படத்தான் எனக்குத்தோன்றும். ஒரு கிறுக்கன் இன்று விட்ட வாயுவால், முதலில் குமட்டலும் , அதனைத் தொடர்ந்து பரிதாபமும் வந்தது..

தன்னை அறிவுஜீவியாக காட்ட உபயோகக்கப்படும் வாக்கியம் மற்றவரின் மேதாவித்தனமென நினைக்கும் ஒருவன், தான் ஆதிக்க சக்திக்கெதிரானவன் என உருவகப்படுத்திக்கொண்டுள்ளானே என நினைக்கும்போது குமட்டலும், அதற்கு பின்னுள்ள உளவியலை நினைக்கும்போது, கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது ..

Anonymous said...

dhaasu,

padhivugal moolam prachinaigal theeradhudhaan.

thiruma pondravargal evvalavu mukkiyamana vishayaththai kaiyileduthu thangal ponnaana nerathai selavidugirargal endru viyakkamal iruka mudiyavillai.

said...

//தங்கரைப்பற்றி எழுதியதால், குழலிக்கு கிடைத்த முத்திரையை படித்தீர்கள்தானே..
//

தாசு உங்க டிஸ்க்ளெய்மரையும் திரிக்கும் வேலையை இப்படி முறியடித்துவிட்டீர்களே உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு பட்டம் காத்திருக்கின்றது. பட்டம் பெற வாழ்த்துக்கள்.

நன்றி

said...

குழலி,

எனக்கு நேற்று இரவு தூக்கம் வரவில்லை ... சந்தோஷத்தில்..;) .. நன்றி..

said...

அட அட அட குப்பகூட ல கூட கோமேதகம் இருக்குப்பா.. :)

தாஸீ : உங்களுக்கு "குப்பை குசும்பன்" எல் எல் தாஸீ னு ஒரு பட்டம் வழங்குகிறேன்! :)

Anonymous said...

கத்தரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும்.....

அது சரி....இதுல யார் கத்திரிக்கா.....குஷ்புவா.....தங்கரா....விசய காந்தா....வலைப்பதிவாளர்களா....

என்னவோ போங்கப்பா.....யாருக்கு பேசினாலும் உதை விழுது.....

Anonymous said...

இந்த வாரம் நக்கீரன் பார்த்தீர்களா? அறிவுமதியும் இதே கேள்விகளை கேட்டுள்ளார்?

கேள்வி- தொடையைக் காட்டி , தொப்புளைக் காட்டி , மார்பைக்குலுக்கி நடிப்பதற்கு இனி எந்த நடிகையும் சம்மதிக்கமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு விட்டு, .. நீங்கள் ஆத்திரப்பட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் .

Anonymous said...

"ஒரு கிறுக்கன் இன்று விட்ட வாயுவால், முதலில் குமட்டலும் , அதனைத் தொடர்ந்து பரிதாபமும் வந்தது. "

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா !!!!!

Anonymous said...

என்னுள் முன்னரே எழுந்த கேள்வியை திருமாவும் இந்த வார ஆனந்த விகடனில் கேட்டுள்ளார் ..

1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?

2) ஓட விட்டு, டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?

3) ஏணியில் ஏற்றிவிட்டு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.