திருமாவும் கமல் மற்றும் கூத்தாடிகளும்...

கனடா வாழ் தமிழர்களின் தமிழுணர்வை பாராட்டியதற்காக பொங்கியெழுந்த முகமூடியின் பதிவிற்கான பின்னூட்டமாக இதனை எழுதுகிறேன் . ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் . கனடாவிலும் அவ்வாறே என எண்ணுகிறேன் .. அவ்வாறு இல்லாதபட்சத்தில் திருமாவின் அறியாமையை சுட்டிக்காட்டலாமே ஒழிய அதில் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை .. இதை கூறியதும் தமிழ்நாட்டு பத்திரிகையில்தான் என்பதால் 'இடம்' என்பதிலும் பிர்ச்சினையில்லை ..கமலின் சிங்கப்பூர் பேட்டிக்கும் , திருமாவின் குமுதம் பேட்டிக்கும் இடம் மிகப்பெரிய வேறுபாடு .. கமலின் புரிதலும் தவறு என்பது சிங்கப்பூரில் சில காலம் வாழ்பவன் என்ற முறையில் கூற முடியும் .

சிங்கப்பூரில் தமிழ் தேசிய மொழியாக இருத்தலும் , தமிழ் வளர்ச்சிக்காக அரசாங்கமும் தமிழார்வலர்களின் பணிகளும் தமிழ் ஊடகங்களின் உச்ச்ரிப்புகளும் பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும் , கமல் எண்ணியிருப்பது போலல்லாமல் பொது மக்களிடையே ஆங்கிலம் கலக்காத தமிழோ, தமிழரிடையே தமிழ் என்ற எண்ணமோ தமிழக தமிழரிடையும் குறைவாகத்தான் உள்ளது .. ஒப்பு நோக்கி தமிழகத்தை குறை கூற வேண்டுமென்றால் அவர் சார்ந்த ஊடகந்தான் மிகத்தகுதியானது . அவர் பினாத்தியது தான் உண்மையென்று அவர் எண்ணியிருந்தால் அதனை அவர் தமிழகத்திலே, குறைந்தபட்சம் அவருடைய விசிலடிச்சான் கும்பல்களிடம் கூறியிருக்கலாம் அல்லது சிங்கப்பூரை புகழ்ந்துமட்டும் பேசியிருக்கலாம். அவருடைய சிங்கப்பூர் பேச்சுக்காக குறைந்தபட்ச கண்டனம் கூட தமிழகத்திலிருந்து வராமல் , கமலுடைய தமிழ் ஆர்வம் பற்றிய ஜல்லியடிப்புகள் தான் வருகின்றன .

இதனை விட கொடுமையாக தமிழகமக்களை மாடு மேய்க்கும் கூட்டம் என சிங்கப்பூரில் நடந்த கூத்தாடிகளின் கூட்டத்தில் கூறிய ராதாரவி மற்றும் சத்யராஜ் (புரச்சி தமிழனாம்) போன்றொருக்குக்கூட தமிழகத்திலே ஒரு எதிர்ப்பு இல்லை(சன்னின் ஒளிபரப்பிற்கு பின்னும்) .
ராதாரவிக்கு ஓட்டளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது தான் தமிழன் செய்தது ..

அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..

30 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

தாஸ¤... இப்ப திருமாவ சொன்னதுதான் ஒரு ப்ரச்னையா போச்சி இல்ல...

// ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் // அப்படீன்னு சொல்றீரே அத பத்தி யாருக்கும் ஒரு ப்ரச்னையும் இல்லை... ஆனா நீர்

// ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழ்நாட்டை விட தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் // அப்படீன்னு சொன்னா கேள்வி வரத்தான் செய்யும்... எப்படி கண்டுபிடிக்கறீங்க... அளவுகோல் என்னன்னு கேக்க கூடாதா...

கூடாது, எங்க இஷ்டம்.. அப்படித்தான் பேசுவோம்னா ரொம்ப சந்தோஷம்... அப்படியே இதயும் போட்டுக்குங்க...

நியூயார்க்கில் இருந்து பார்த்தால் தமிழ்நாட்டில் இருந்து பார்ப்பதை விட நிலா அழகாக இருக்கிறது

சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை விட அழகாக இருக்கிறார்கள்

ஆஸ்திரேலியாவில் பிச்சை எடுக்கும் ஒரு தமிழனை பார்த்தேன்.. அவன் தமிழ்நாட்டு பிச்சைகாரனை விட கல்வியறிவில் சிறந்து விளங்குகிறான்.. ஏனெனில் அவன் ஆங்கிலத்தில் பிச்சை எடுக்கிறான்...

அட போங்கய்யா...

Anonymous said...

சிங்கையில் யார் தமிழில் பேசுகிறார்கள் என கமலுக்கும், சத்யாராஜ், ராதாரவிக்குத் தெரியாது. நாங்கள் நண்பர்களுக்குள்ளும் காதலரிடமும் பள்ளியிலும் ஆங்கிலம்தான் பேசுகிறோம். அது தூய ஆங்கிலம் அல்ல, புரோக்கன் இங்கிலீஷ் என்று சொல்லக் கூடிய சிங்கிலீஷ். எங்கள் மதியுரை அமைச்சர் தூய ஆங்கிலம் படிக்கச் சொல்லியும் இன்னமும் அரைகுறை ஆங்கிலத்திலேயே பேசுகிறோம். நாங்கள் தமிழ் பேவது பள்ளியில் தமிழ் வகுப்பிலும், டிவியில் தமிழ் பாட்டுக்கு டப்பாங்குத்து ஆடும்போதும் ஊரில் இருந்து கவனிக்க ஊர்க்காரனுங்க இங்க வந்து கூத்து கட்டும்போது மட்டுமே தமிழில் பேசுவோம். காரணம் ஊர்க்காரனுங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால்! ஆனால் இங்கு எங்களைவிட ஊர்க்காரன்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதால் எங்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு.

கமலுக்கும் ராதாரவிக்கும் சத்யராஜ்க்கும் மது, மாது போன்ற ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவதால் எங்களைப் புகழுகின்றனர்.

said...

//மேய்க்கும் கூட்டம் என சிங்கப்பூரில் நடந்த கூத்தாடிகளின் கூட்டத்தில் கூறிய ராதாரவி மற்றும் சத்யராஜ் (புரச்சி தமிழனாம்) போன்றொருக்குக்கூட தமிழகத்திலே ஒரு எதிர்ப்பு இல்லை(சன்னின் ஒளிபரப்பிற்கு பின்னும்) .
//
ராதாரவி பேசியபோது கடும் எதிர்ப்பும் கூக்குரலும் எழுந்தது அரங்கத்தில் என்ன கொடுமையென்றால் அதை ராதாராவி பாராட்டு என நினைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினார்

said...

ஒரு இடத்தில் ஒன்று எளிதாக கிடைக்கும் போது அதன் இனிமை தெரியாது, கிடைக்காதபோதுதான் போற்றி புகழத்தோன்றும் இதே தான் தமிழ் உணர்வு பற்றியும்

தமிழ்நாட்டில் இருக்கும் போது சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, இன்னும் பல வழிகளில் ஏதோ ஒன்றின் வழியாக அடையாளம் (ஐடென்டிட்டி) கிடைக்கின்றது ஆனால் வெளிநாட்டில் தமிழ் மொழியின் வழியாகத்தான் அடையாளம் கிடைக்கின்றது, இது வரை தமிழகத்தில் மொழியினால் எனக்கு நட்பு கிடைத்ததில்லை, இங்கே தமிழ் மொழியால் பலரின் நட்பு கிடைத்துள்ளது...
இது போன்ற செய்திகள் ஒரு வேளை திருமா வெளிநாட்டில் மொழியுணர்வு அதிகமாக இருக்கும் என்பதற்கான காரணிகளாக இருக்கலாம்

said...

தமிழர்களாகிய நமக்கு ஒரு வழக்கம். அதாவது ஒன்றைப் புகழ வேண்டுமானால் மற்றொன்றை இகழ வேண்டும் என்று உந்துதல் நமக்கு உண்டு. நம்மவரில் ஒருவர்தானே திருமா அவர்களும்.

அவர் கனேடியத் தமிழர்களைப் புகழும்போது தமிழகத் தமிழர்களை மட்டம் தட்டியிருக்கிறார். அவ்வளவே. இது எல்லோரும் செய்வதுதான். ஒன்றுக்கு +5 என்று மதிப்பெண் கொடுக்கும் போது இன்னொன்றுக்கு -2 என்று கொடுத்தால் வித்தியாசம் ஏழாகிறதல்லவா.

இவ்வாறு நடப்பது சரி இல்லைதான். இருந்தாலும் ஆளாளுக்கு திருமாவை தாக்குவதையும் நிறுத்தி விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

தாஸ்,
கமலின் பேச்சை உங்களோடு சேர்ந்து நானும் கண்டித்திருக்கிறேன் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன் .அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் ..சிங்கை வருவதற்கு முன்னர் நானும் கூட கமல் போலத்தான் நினைத்திருந்தேன் (நீங்கள் கூட இருக்கலாம்)..ஏதோ சிங்கப்பூர் தமிழர்கள் தெள்ளுத்தமிழில் துள்ளி விளையாடுவார்கள் என்று ..ஆனால் இங்கு வந்து சில காலங்களுக்கு பின்னர் தான் புரிந்தது..ஊடகங்களில் பணியாற்றும் ஒரு சிலர் ,சில தமிழார்வலர்கள் ,வெகு சில நல்ல உள்ளங்கள் தமிழை பேணிக்காக்கும் அதே நேரத்தில் ,அடுத்த தலை முறை தமிழை கைகழுவும் நிலை தான் இருக்கிறது என்று ..

கமல் போன்ற பிரபலங்களை இங்கு அழைத்து வருபவர்கள் ,அவரோடு அளவளாவ வாய்ப்பு கிடைத்தவர்கள் கண்டிப்பாக தமிழார்வம் மிக்கவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் .கமல் அதை சிங்கப்பூருக்கே பொது என்று நினைத்துக்கொண்டதாகவே படுகிறது ..சிங்கையில் உள்ள இளைய தலைமுறையின் தமிழ் அக்கறையை ஒப்பிடும் போது தமிழகம் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை (கவனிக்க : தமிழகம் என்பது சென்னை மட்டுமல்ல)..

ஆனால் இதை வைத்துக்கொண்டு கமலின் தமிழார்வத்தை குறை சொல்லி ஜல்லியடிப்பது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல .அவர் தமிழ் நாட்டில் சொல்லட்டும் என்று பல முறை கூறுகிறீர்கள் ..பல முறை தன்னுடைய பேட்டிகளிலும் ,திரைப்படங்களிலும் சொல்லியிருக்கிறார்.ஆனால் சிங்கப்பூரில் அவர் உண்மை தெரியாமல் உளறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன்

said...

// இப்ப திருமாவ சொன்னதுதான் ஒரு ப்ரச்னையா போச்சி இல்ல... //

முகமூடி ...

திருமாவோ ராமதாஸோ கமலோ ஓ.பன்னீர்செல்வமோ இங்கு பிரச்சினையில்லை ...அவர்கள் கருத்துகளின் இடமும் பொருளும்தான் ..

ஜோ...

கமலுக்கும் திருமாவுக்கும் ஒரு கருத்து உள்ளது(தவறோ சரியோ) , கமல் அதனை தேவையில்லாத இடத்தில் கூறியதால் அவர்க்கு கண்டனம்... அவர்க்கு தமிழ் பற்று உள்ளதா , வேண்டுமா என்பதை அவரின் மேல் திணிக்க நான் அரசியல்வியாதி இல்லை .. வெளிநாட்டில் நம்மைப்பற்றி குறைகூற(உண்மையேயானாலும்) கமலுக்கு உரிமையில்லை ..

//திருமாவை தாக்குவதையும் நிறுத்தி விடுங்கள்.//

டோண்டு ஐயா..

நான் திருமாவை எங்கே(இந்தப் பதிவில்) எங்கே தாக்கினேன் ?

//ராதாராவி பாராட்டு என நினைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினார் //

குழலி ..

ஆனால் அதைவிட கொடுமை அவர் ஓட்டு வாங்கி சட்டமன்றம் செனறது .

//உணவு பத்திப் பேசுங்கப்பா.//

புல்லட் புஷ்பா .. உணவை குப்பக்கூடெயிலே தேடுகிறீர்கள் ...இங்கே இருக்கு ;)..

said...

//அவர்க்கு தமிழ் பற்று உள்ளதா , வேண்டுமா என்பதை அவரின் மேல் திணிக்க நான் அரசியல்வியாதி இல்லை//
என்ன சார் சொல்ல் வருகிறீர் .தீவிர இலக்கியவாதி ஆயிட்டீர் போல! வேண்டுமா என்பதை விடுங்கள்.ஒருவருக்கு தமிழ் பற்று உள்ளதா என்பதை அரசியல்வாதி தான் கண்டுபிடிக்க வேண்டுமா என்ன?
//வெளிநாட்டில் நம்மைப்பற்றி குறைகூற(உண்மையேயானாலும்) கமலுக்கு உரிமையில்லை ..//
வேற யாருக்கெல்லாம் உரிமையிருக்குன்னு நினைக்குறீங்க?
//ஆனால் அதைவிட கொடுமை அவர் ஓட்டு வாங்கி சட்டமன்றம் செனறது .//
சட்டமன்றத்துக்கு தேர்ந்த்தெடுக்கப்பட்ட பின்பு தான் இங்கு வந்து உளறினார்.அவங்க அப்பா எம்.ஆர்.ராதா இதே மாதிரி மலேசியாவில் உளறியதின் ஒலிப்பதிவு என்னிடம் இருக்கிறது .அதையே ராதாரவி மீண்டும் வாந்தி எடுத்தார்.

said...

தாஸ்,
வழக்கம் போல் அவலங்களை(!) தோலுரிக்கும் பதிவு :) நல்லாருக்கு. நீங்கள் திரும்பி வலை பதிய வந்ததில் மகிழ்ச்சி!

//அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..
//
இது, இதான், "LL தாஸ¤ பாயிண்டு" ;-)

//அவருடைய சிங்கப்பூர் பேச்சுக்காக குறைந்தபட்ச கண்டனம் கூட தமிழகத்திலிருந்து வராமல் , கமலுடைய தமிழ் ஆர்வம் பற்றிய ஜல்லியடிப்புகள் தான் வருகின்றன .
//
இது போன வருடம் நடந்தது தானே ? அப்பேச்சு குறித்து அப்போதே பாலா என்பவர் கொதித்தெழுந்து தகுந்த கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதை தாழ்மையுடனும், தன்னடகத்துடனும் கூற விழைகிறேன் :))))))))

ஜோ,
//சிங்கையில் உள்ள இளைய தலைமுறையின் தமிழ் அக்கறையை ஒப்பிடும் போது தமிழகம் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை (கவனிக்க : தமிழகம் என்பது சென்னை மட்டுமல்ல)..
//
இக்கருத்துக்கு நன்றி.
//ஆனால் இதை வைத்துக்கொண்டு கமலின் தமிழார்வத்தை குறை சொல்லி ஜல்லியடிப்பது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல .
//
சொல்பவரின் தகுதியை வைத்தே அவர் தம் கருத்துக்கள் மதிப்பிடப் படுகின்றன என்பதே யதார்த்தம். மேற்குறிப்பிட்ட என் பதிவைப் படித்து விட்டு அது "ஜல்லியா, இல்லியா ?" என்று சொல்லுங்கள் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

//பல முறை தன்னுடைய பேட்டிகளிலும் ,திரைப்படங்களிலும் சொல்லியிருக்கிறார்.//

எந்த திரைப்படத்தில் கூறியுள்ளார் என நான் கேட்கப்போவதில்லை .. திரைப்படத்தில் வரும் வசனங்கள் கமலின் சொந்த கோட்பாடுகள் என்ற எண்ணம் கொண்டவர் நீரில்லை என எண்ணுகிறேன் .
//சிங்கப்பூரில் அவர் உண்மை தெரியாமல் உளறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன்//

சிங்கப்பூரில் நல்ல தமிழ் பேசினாலும் , தமிழகத்தைப் பற்றி குறை பேச அவசியமில்லை ..

//ஆனால் இதை வைத்துக்கொண்டு கமலின் தமிழார்வத்தை குறை சொல்லி ஜல்லியடிப்பது ஏற்றுக்கொள்ளகூடியதல்ல //

அவரது தமிழார்வத்தை நான் குறைகூறவில்லை .. ஏனெனில் அதில் எனக்கு அக்கரை இல்லை .

அவர் *வெளிநாட்டில்* குறை கூறியவற்றையே தவறென்கிறேன் .

பாலா சொல்வது போல் ஐயா! நீங்கள் உண்மையும் கூற வேண்டாம். பொய்யும் பேச வேண்டாம்! உங்களைப் பற்றியும், தமிழ் சினிமாவைப் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் நிறைய பேசுங்கள்! எங்களை பழிக்காதீர்" "வேண்டுமென்றால் கௌதமி, சிம்ரன் பற்றி பேசுங்கள் .. எங்களுக்கு பொது அறிவாவது வளரும் "

நன்றி பாலா ..உங்கள் பதிவை வாசித்தேன்.. 100% வழிமொழிகிறேன் ..

said...

கமல் தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்களிடம் பேசிப் பழகுகிறாரா என்ன? அவர் தமிழகத்தில் பழகும் சினிமாக்காரர்களைவிட அவரை சிங்கப்பூர் அழைத்தவர்கள் நல்ல தமிழில் பேசியிருப்பார்கள் போலும்!அவ்வளவுதானே..தமிழகத்தைவிட சிங்கப்பூர் சிறப்புதானே!சிங்கப்பூர்ல கிடைக்கறதுல்லாம் தமிழ்நாட்டுல கிடைக்குமா என்ன? (சிங்கபீரியன் ஏதோ சொல்லியிருக்காரே ஒண்ணும் விளங்கலியே)

said...

பாலா,
//அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..
//
இது, இதான், "LL தாஸ¤ பாயிண்டு" ;-)

என்ன ஜோக்கா! மூச்சுக்கு முன்னூறு தடவை ஒரு நடிகரை 'தலைவர்' 'தலைவர்' -ன்னு சொல்லிட்டு ,பாதி பதிவுகள் அவர பத்தியே புகழ் பாடிட்டு ,இங்க வந்து சேம் சைடு கோலா!

//சொல்பவரின் தகுதியை வைத்தே அவர் தம் கருத்துக்கள் மதிப்பிடப் படுகின்றன என்பதே யதார்த்தம். //

தமிழ் பற்றி பேச இன்றைய நடிகர்களில் தகுதி அதிகமுள்ளது யார் ஐயா?

தாஸ்,

//எந்த திரைப்படத்தில் கூறியுள்ளார் என நான் கேட்கப்போவதில்லை .. திரைப்படத்தில் வரும் வசனங்கள் கமலின் சொந்த கோட்பாடுகள் என்ற எண்ணம் கொண்டவர் நீரில்லை என எண்ணுகிறேன் . //

உண்மை .ஆனால் 'தெனாலி' படத்தில் தமிழக தொலைக்காட்சி அறிவிப்பாளர்களின் தமிங்கிழிசை கிண்டல் பண்ணியது கமலுடைய சொந்த அங்கலாய்ப்பு என நம்புகிறேன் (k.s.ரவி குமார் கருத்து என்று நீங்கள் வாதிட்டால் ..நான் இந்த ஆட்டத்துக்கே வரல..விடு ஜூட்)

//அவர் *வெளிநாட்டில்* குறை கூறியவற்றையே தவறென்கிறேன் . //

மாற்றுகருத்து இல்லை.

Anonymous said...

Good Post

said...

ஜோ,
//என்ன ஜோக்கா! மூச்சுக்கு முன்னூறு தடவை ஒரு நடிகரை 'தலைவர்' 'தலைவர்' -ன்னு சொல்லிட்டு ,பாதி பதிவுகள் அவர பத்தியே புகழ் பாடிட்டு ,இங்க வந்து சேம் சைடு கோலா!
//
அந்தக் காலத்திலேயே(!) சொல்லி விட்டேன், தலைவர் என்பது ஒரு குறியீடு என்று !!!!! ரஜினி பற்றி "பாதி" பதிவுகளா, இதெல்லாம் TOO MUCH, இரண்டே பதிவுகள் தான் போட்டிருக்கிறேன் (out of 150 பதிவுகள்!). ஒங்களையெல்லாம் ...... :))))

I simply like Rajini because he is a GREAT entertainer and I get immense pleasure watching him on screen !!!!

Is it CLEAR ? ;-)

மேலும், "இது, இதான், "LL தாஸ¤ பாயிண்டு"" என்று தான் கூறினேன், "என் பாயிண்டு" என்று சொல்லவில்லை :)))))

Is it CLEAR ? ;-)

//தமிழ் பற்றி பேச இன்றைய நடிகர்களில் தகுதி அதிகமுள்ளது யார் ஐயா?
//
யாருமில்லை, ஜோ !!!!! ஆனால், 'பாலா'வுக்கு உள்ளது (ஒரு வருடம் வெற்றிகரமாக தமிழில் வலை பதிந்ததால்!) :-))))))

Pl. check http://balaji_ammu.blogspot.com/2005/07/i-birthday-flashback.html

****************************************

தாஸ்,
//நன்றி பாலா ..உங்கள் பதிவை வாசித்தேன்.. 100% வழிமொழிகிறேன் ..
//
ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி :)
*********************************
எ.அ. பாலா

Anonymous said...

//தமிழ் பற்றி பேச இன்றைய நடிகர்களில் தகுதி அதிகமுள்ளது யார் ஐயா?
//
யாருமில்லை, ஜோ !!!!! ஆனால், 'பாலா'வுக்கு உள்ளது (ஒரு வருடம் வெற்றிகரமாக தமிழில் வலை பதிந்ததால்!) :-))))))

said...

தாஸ்,
என்னமோ நடக்குது ..மர்மமா இருக்குது!

said...

புஷ்பா said...
தமிழுணர்வு தமிழுணர்வுன்னு ஏன் எல்லாரும் இப்படி அடிச்சிக்கிறாங்கன்னு புரிலயே. அடுத்த வேளை சாப்பாடு எப்படிக் கிடைக்குதுன்ற உணர்வைப்பத்தி யாராவது யோசிக்கறாங்களா? அது கிடைக்காம டெய்லி செத்துப் போறாங்க... அதுங்க உணர்வைப் பத்தி யாராவது யோசிக்கறாங்களா?வெளிநாட்டுக்கு ஓடி ஓடிப் போய் இந்த உணர்வைப் பத்திப் பேசறவங்க எல்லாம் கார் மவுண்ட் ரோடு சிக்னல்ல நிக்கிறப்போ அம்மா தாயேன்னு கையேந்தற அழுக்கான தமிழர்களைப் பத்தி யோசிக்கறாங்களா? உணர்வுகளைப் பத்தி பேசறதுக்கு பதிலா உணவு பத்திப் பேசுங்கப்பா.

>> வழிமொழிகிரேன்<<

said...

வழிமொழிகிறேன்

said...

//ஜோ said...
தாஸ்,
என்னமோ நடக்குது ..மர்மமா இருக்குது!
//
oNNumE puriyalaiyE !!!
appuRam, en kELvikku enna pathil ? :)

said...

பாலா,
உங்களுக்கு காட்டமாக பதிலிறுக்க வேண்டும்..ஆனால் அடிப்படையில் நல்ல மனிதராக தெரியும் உங்களிடம் அவ்வளவு கடுமையாக விவாதிக்க மனமில்லை.புரிந்து கொள்ளுவீர்கள் என நம்புகிறேன்.

Anonymous said...

Nalla Padhivu.
Adhai vida nalla comments.
Singaporean annachi stomach burn aahi aedho solrare...sambalam(salary) pathi.
Yaarum adhai pathi moochu vidaliyae yean?????

said...

ஜோ..
//உங்களுக்கு காட்டமாக பதிலிறுக்க வேண்டும்..ஆனால் அடிப்படையில் நல்ல மனிதராக தெரியும் உங்களிடம் அவ்வளவு கடுமையாக விவாதிக்க மனமில்லை//

என்னைப் பொறுத்தவரையில் கருத்துகளில் கடுமை இருப்பதில் தவறில்லை ..கருத்து மோதலில் நண்பரோ, நல்லவரோ என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை ..ஆனால் தனிப்பட்ட முறையிலான தாக்குதல் கூடாது ..இது பொதுவான எனது எண்ணம் .. சண்டை போட உங்கள் இருவரையும் அழைக்கவில்லை ..

புஷ்பா..
//பாருங்கள், தமிழரின் நிலைமையை பட்டவர்த்தனமாய் நீங்களே சொல்லி விட்டீர்கள் //
வார்த்தை விளையாட்டை ரசித்தேன் .. நீங்கள் சொல்வது சரியான விடயம்தான் ..பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை ..

அண்ணாச்சி ..

சம்பளம் பற்றியெல்லாம் தனியா ஒரு பதிவு எழுதலாம் .. விவாதம் திசை மாறும் என்பதால் அதனை பற்றி யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன் ..

said...

ஜோ,

//அடிப்படையில் நல்ல மனிதராக தெரியும் உங்களிடம்
//
நன்றி.

தாஸ் "கருத்து மோதலில் நண்பரோ, நல்லவரோ என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை ..ஆனால் தனிப்பட்ட முறையிலான தாக்குதல் கூடாது" என்று சொன்னது போல், உங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைக்கலாம்.

மேலும்,
1. எனது 'பாதி' பதிவுகள் ரஜினியைப் பற்றி உள்ளது என்று நீங்கள் சொன்னதற்கு, "இல்லை, 2 பதிவுகள் தான்" என்றேன் !

2. "தலைவர்" என்பது ஒரு குறியீடாக எழுதியது என்று முன்னர் ஒரு முறை நான் கூறியதை, நீங்களும் ஒப்புக் கொண்டு, அவ்விஷயம் அத்தோடு நின்றது !!

3. ***
மேலும், "இது, இதான், "LL தாஸத பாயிண்டு"" என்று தான் கூறினேன், "என் பாயிண்டு" என்று சொல்லவில்லை :)))))

Is it CLEAR ? ;-)

//தமிழ் பற்றி பேச இன்றைய நடிகர்களில் தகுதி அதிகமுள்ளது யார் ஐயா?
//
யாருமில்லை, ஜோ !!!!! ஆனால், 'பாலா'வுக்கு உள்ளது (ஒரு வருடம் வெற்றிகரமாக தமிழில் வலை பதிந்ததால்!) :-))))))
***
மேலே உள்ளது, நகைச்சுவையாக சொல்லப்பட்ட ஒன்று என்பதை மீண்டும் வலியுறுத்த விழைகிறேன்.

இந்த விளக்கங்களுக்குப் பிறகும், நீங்கள் 'காட்டமாக' கூற நினைத்ததைக் கூறலாம் (விருப்பமிருந்தால் மட்டுமே!)
எப்படியிருந்தாலும், நீங்கள் என் நண்பர் தான், ஜோ !!!!!

-----எ.அ.பாலா

Anonymous said...

//ஆனால் இங்கு எங்களைவிட ஊர்க்காரன்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதால் எங்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு.
//
சிங்கப்பூர் உள்ளூர்வாசிகளுக்கும் , இந்திய தமிழர்களுக்கும் ஒரு இடைவெளி உள்ளது உண்மை ..

Anonymous said...

LLdas,

Why don't you start a separate thread to have a broad discussion on the issues and all comets of problems and similarities between the Singaporean Indians and Immigrant Indians(NRIs). Think it should be quite interesting. I don't see any blogs on this subject.

said...

ஜோ,
Still Waiting for your RESPONSE !!!

said...

//இந்த விளக்கங்களுக்குப் பிறகும், நீங்கள் 'காட்டமாக' கூற நினைத்ததைக் கூறலாம் (விருப்பமிருந்தால் மட்டுமே!)//
இங்கே கூற விருப்பமில்லை.அதனால் தான் பதிலிறுக்கவில்லை ..கண்டிப்பாக கூற வேண்டுமென்றால் நீங்கள் விரும்பினால் தனிமடலில் பதில் சொல்லுகிறேன்.

said...

//இந்த விளக்கங்களுக்குப் பிறகும், நீங்கள் 'காட்டமாக' கூற நினைத்ததைக் கூறலாம் (விருப்பமிருந்தால் மட்டுமே!)//
இங்கே கூற விருப்பமில்லை.அதனால் தான் பதிலிறுக்கவில்லை ..கண்டிப்பாக கூற வேண்டுமென்றால் நீங்கள் விரும்பினால் தனிமடலில் பதில் சொல்லுகிறேன்.

said...

ஜோ,
//கண்டிப்பாக கூற வேண்டுமென்றால் நீங்கள் விரும்பினால் தனிமடலில் பதில் சொல்லுகிறேன்.
//
'கண்டிப்பெல்லாம்' ஒன்றுமில்லை !!! நான் கூறியவற்றுக்கும் (மேலும் அவற்றை விளக்கியதற்கும்) நீங்கள் காட்டமாக பதிலிறுக்க அப்படி என்ன தான் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்டேன். தனிமடல் அனுப்பவும்
(balaji_ammu@yahoo.com). நன்றி.

http://balaji_ammu.blogspot.com/2005/08/1981-love-story.html ---- சமயம் கிடைக்கும்போது பாருங்கள்.

எ.அ.பாலா